Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

December 27, 2023
Maho-train.jpg?fit=650%2C433&ssl=1

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://globaltamilnews.net/2023/199101/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் - புகையிரத திணைக்களம்

29 DEC, 2023 | 08:16 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை  முதல்  காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும்.

கொழும்பில் இருந்து செல்லும் யாழ் நிலா புகையிரதம் திருகோணமலைக்கு செல்லும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். 

அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதியில் அநுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ் நிலா புகையிரதம் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று,திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத   நிலையம் நோக்கி  புறப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/172724

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.கொழும்பு ரயில் சேவை எப்பொழுது?; வெளியானது அறிவிப்பு

வடக்கு ரயில் பாதையின் மாஹோ – அநுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது கல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்படும் யானை சுரங்கப்பாதையின் நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், அதன் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறை – கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பிக்கும் என தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/309163

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கிற்கான மாஹேவில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையான தொடருந்து பாதையில் நேற்று (12) நடைபெற்ற பரீட்சார்த்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து பாதையில் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து தொடருந்து பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.  

குறித்த விடயத்தை திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் தொடருந்து திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

தொடருந்துகளின் இயக்கம் பாதுகாப்பற்றது

யானைகள் சுரங்கப்பாதை மற்றும் மாஹோவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ஆறு புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு | Trains Between Colombo And Jaffna To Posponted

அத்துடன் மாஹோவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான வண்ண சமிக்ஞை அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றும், இந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு தொடருந்துகளின் இயக்கம் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே குறித்த காரணங்களை கருத்தில் கொண்டு தொடருந்து பயணம் காலவரையின்றி நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://ibctamil.com/article/trains-between-colombo-and-jaffna-to-posponted-1726134638#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - திணைக்களம் வெளியிட்ட தகவல்

கொழும்பிலிருந்து (colombo) யாழ். காங்கேசன்துறைக்கு ஐந்தரை மணித்தியாலங்களில் செல்ல முடியும் என திட்ட பணிப்பாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – மஹவ பகுதியின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குறித்த பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிக்குமென திட்டப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

3,000 கோடி ரூபா (92 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் புனரமைக்கப்பட்ட அநுராதபுரம் – மஹவ தொடருந்து பாதை கடந்த (12) தொடருந்து திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள்

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடருந்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென தொடருந்து திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - திணைக்களம் வெளியிட்ட தகவல் | Train Service Between Jaffna To Colombo

இந்நிலையில், மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் செல்லும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராகம ஊடாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் காலதாமதமாக இயங்குவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://ibctamil.com/article/train-service-between-jaffna-to-colombo-1726379514#google_vignette

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக்கு ரயில் சேவை எப்போது? வெளியானது அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

அதன்படி கடந்த 19, 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பல விசேட ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த மார்க்கத்தில் வழமையாக ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 ரயில்வே கடவைகள் உள்ளதுடன், 15 ரயில்வே கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 09 ரயில்வே கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன.

பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதைகளில் ரயில் அந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கினால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய ரயில்வே கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக ரயில்வே சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி ரயில் சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி  மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309918

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.