Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   12 JAN, 2024 | 11:32 AM

image

வினோத் மூனசிங்க

நவம்பர் 2, 1917 இல், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர் ரோத்ஸ்சைல்ட் அரசருக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து ஓர் கடிதத்தை எழுதினார்.

ஒரு வாரம் கழித்து, அரசாங்கம் இந்த பால்ஃபோர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியதுடன், இது சியோனிச நோக்கத்திற்கான ஆதரவின் முதலாவது பொது வெளிப்பாடாக அமைந்தது. இது குறிப்பாக பால்ஃபோர் ஒரு யூத-விரோதியாக அறியப்பட்டதால், பாலஸ்தீனியர்களிடையே மட்டுமல்லாது, பிரிட்டிஷ் யூத சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியது.

செப்ரெம்பர் 5, 1918 அன்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அமெரிக்க சியோனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவரான ரப்பி ஸ்டீபன் S.வைஸுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதுடன், அதில் அவர் சியோனிச திட்டத்தை வலியுறுத்தி பால்ஃபோர் பிரகடனத்தை முனைப்பாக ஆதரித்தார். உண்மையில், அவர் பால்ஃபோர் பிரகடனத்திற்கு தனது முன் அனுமதியை வழங்கியிருந்ததுடன், ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதனை ரகசியமாக வைத்திருந்தார்.

பால்ஃபோர் பிரகடனத்திற்கு, வெளியுறவுத் திணைக்களங்கள் மற்றும் அமெரிக்க யூத சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ராபர்ட் லான்சிங் வில்சனிடம் அமெரிக்கா ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது ஆனால் பாலஸ்தீனத்தை ஆண்ட ஒட்டோமான் பேரரசுடன் அல்ல என்றும் பல யூதர்கள் அதை எதிர்த்தனர்; மேலும் பல கிறிஸ்தவர்களும் அதனை எதிர்ப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

ஓர் பிரதான யூத வில்சன் ஆதரவாளரும், ஒட்டோமான் பேரரசின் முன்னாள் தூதுவருமான ஹென்றி மோர்கெந்தாவ் பால்ஃபோர் பிரகடனத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:

"யூத மக்களின் உலகிற்கும் அவர்களின் மதத்திற்கும் முதன்மையான செய்தி சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சர்வதேச மனப்பான்மையாக இருக்கும்போது, ஒரு வரையறுக்கப்பட்ட தேசியவாத அரசை அமைத்து அதன் மூலம் அவர்களின் மதச் செல்வாக்கிற்கு ஒரு பௌதீக எல்லையை உருவாக்குவது போல் தோன்றுவதில் என்ன தவறு இருக்கின்றது”.

அமெரிக்க யூத மதத்தலைவர்களின் மத்திய மாநாடு தீர்மானத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், யூத இலட்சியம் "யூத அரசை நிறுவுவது அல்ல - நீண்டகாலமாக வளர்ந்த யூத தேசியத்தை மீண்டும் வலியுறுத்துவது அல்ல" என்று உறுதியாக கூறியது.

பல யூத மதத்தலைவர்கள் "சியோனிசத்தை எதிர்க்கும் யூத மதத்தலைவர்களின் தேசியக் குழுவை" உருவாக்கியதுடன், அவர்களில் ஒருவரான ரபி சாமுவேல் ஷுல்மேன், "யூதர்களின் விதி பாலஸ்தீனத்தில் சிறிய மக்களாக உருமாறக்கூடாது" என்று கூறினார். 

இந்த உணர்வானது, பாலஸ்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை நிறுவுவதற்கான முயற்சியானது, "விரும்பத்தகாத" குடித்தொகையிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வதற்கான யூத-விரோதவாதிகளின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்ற அவர்களின் (சரியான) பகுப்பாய்வை பிரதிபலித்தது. 1921 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் அவசரகால ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியதுடன், இது யூத குடியேற்றத்தை (மற்றும் பொதுவாக கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய குடியேற்றம்) கணிசமாகக் குறைத்ததுடன், 1924 குடியேற்றச் சட்டத்தின் மூலம் அதை மேலும் குறைத்தது.

கிங்-கிரேன் ஆணைக்குழு

ஆயினும்கூட, காஸ்மோபாலிட்டன் ரோத்ஸ்சைல்ட் வங்கிக் குடும்பம் மற்றும் பிற யூத வங்கியாளர்களிடமிருந்தும், உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் டி. பிராண்டீஸ் போன்ற முக்கிய யூத தாராளவாதிகள் மற்றும் தொழிலதிபர் வில்லியம் இ பிளாக்ஸ்டோன் போன்ற கிறிஸ்தவ சியோனிஸ்டுகளிடமிருந்தும் பெற்ற ஆதரவின் காரணமாக சியோனிச சிறுபான்மையினர் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதன் விளைவாக, கிங்-கிரேன் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சியோனிச சார்பு யோசனைகளுடன் ஆரம்பித்தார்கள். 1919வது பாரிஸ் சமாதான மாநாட்டிலிருந்து உருவான உத்தியோகபூர்வமாக "துருக்கியில் உள்ள ஆணைகளுக்கான 1919 நேச நாடுகளுக்கிடையிலான ஆணைக்குழு" எனப்படும் இந்த ஆணைக்குழுவானது, முன்னாள் ஒட்டோமான் மாகாணங்களுக்குள் தங்களது பேரரசுகளை விரிவுபடுத்த முயன்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மற்றும் அவர்களின் நோக்கங்களில் சந்தேகம் கொண்ட அமெரிக்காவின் நிலைகளை சமரசம் செய்யும் முயற்சியாகும்.

ஜனாதிபதி வில்சன் இறையியலாளரான ஹென்றி சர்ச்சில் கிங் மற்றும் தொழிலதிபர் சார்லஸ் ரிச்சர்ட் கிரேனை ஆணைக்குழுவுக்கு நியமித்ததுடன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆணையாளர்களை நியமிக்க மறுத்ததுடன் அவர்களை மட்டுமே உறுப்பினர்களாக விட்டுவிட்டனர்.

அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஆணைக்குழு, "பாலஸ்தீனத்தின் தற்போதைய யூதர்கள் அல்லாத குடிமக்களை நடைமுறையில் முழுமையாக அகற்றுவதை சியோனிஸ்டுகள் எதிர்பர்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டதுடன், "யூத நோக்கத்திற்கான ஆழ்ந்த அனுதாப உணர்வு" இருந்தபோதிலும், பின்வருமாறு பரிந்துரைத்தது:

"... பாரியளவில் குறைக்கப்பட்ட சியோனிச நிகழ்ச்சித் திட்டம் மட்டுமே சமாதான மாநாட்டின் மூலம் முயற்சிக்கப்படுவதுடன், அதுவும் கூட, மிக படிப்படியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இது யூதர்களின் குடியேற்றம் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட வேண்டியதுடன், பாலஸ்தீனத்தை யூதர்களின் பொதுநலவாய நாடாக மாற்றும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படுத்துகிறது.

ஆணைக்குழுவின் கண்டறிவுகள் பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டன, அத்துடன் துருக்கிய கொள்ளைகளை அவர்களுக்கு இடையே பிரிப்பதற்கான ஆங்கில-பிரெஞ்சு திட்டங்களுடன் முன்னேறிய பாரிஸ் சமாதான மாநாட்டால் புறக்கணிக்கப்பட்டன. அமெரிக்காவில், 1922ல் பாலஸ்தீனத்தில் யூத தாயகம் அமைப்பதற்கு ஆதரவாக காங்கிரசு வாக்களித்த பிறகுதான் இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு வந்தது.

சியோனிஸ்டுகளின் தீவிர பரப்புரையைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் மாசசூசெட்ஸ் செனட்டர் ஹென்றி கபோட் லாட்ஜ் மற்றும் குடியரசுக் கட்சியின் நியூயோர்க் பிரதிநிதி ஹாமில்டன் ஃபிஷ் III அமெரிக்க காங்கிரஸின் கூட்டுத் தீர்மானத்தை "யூத இனத்தின் தேசிய வீடாக பாலஸ்தீனத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஆதரவாக" அறிமுகப்படுத்தினர்.

அதன் நிறைவேற்றம் முன்கூட்டியே நிறைவடைந்திருந்தாலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழு இந்த விடயத்தில் ஒரு விசாரணையைக் கூட்டியது. தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் பாலஸ்தீனியர்களை நாகரிகமற்றவர்கள் என்று இழிவுபடுத்தியதுடன் பாலஸ்தீனத்தை "அபிவிருத்தியற்ற மற்றும் குறைந்த குடித்தொகை கொண்ட" "பாலைவனமான நாடு" என்று அழைக்கிற காலனித்துவ வாதத்தை பயன்படுத்தினர். சில அரசியல்வாதிகள் யூத குடியேற்றவாதிகளை வட அமெரிக்காவின் வெள்ளையின குடியேற்றக்காரர்களுக்கும், "நாடோடி" பாலஸ்தீனியர்களை அமெரிக்க இந்தியர்களுடனும் ஒப்பிட்டு “Manifest Destiny” என்று அழைத்தனர்.

இருப்பினும், சீர்திருத்தப்பட்ட யூத மதத்தின் உலகளாவிய மனிதநேயக் கண்ணோட்டத்தில் நீள் தீவின் ரப்பிஸ் ஐசக் லேண்ட்மேன் மற்றும் சின்சினாட்டியின் டேவிட் பிலிப்சன் ஆகியோர் சியோனிசத்தை எதிர்த்தனர். யூத சமூகம் இவ்விடயத்தில் ஆழமாகப் பிளவுபட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள் ((லாபி சூழ்ச்சியைப் போல தேர்தல் அரசியல் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான மேலதிக சான்றாகும்).

இரண்டு பாலஸ்தீனிய பிரதிநிதிகளும் முன்னாள் யூதரான ஆங்கில இலக்கியப் பேராசிரியர் எட்வர்ட் பிளிஸ் ரீட்டும், பாலஸ்தீனியர்களைப் பற்றிய எதிர்மறையான பிரச்சாரத்தை மறுத்து, உண்மையான களமட்ட நிலைமையை முன்வைத்தனர். பாலஸ்தீனத்தில் இருந்த ரீட், கிங்-கிரேன் ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் பாலஸ்தீனியர்களின் எண்ணங்களை குறிப்பிட்டார். அவர்களின் முயற்சிகள் சியோனிச சார்பு உணர்வை சமாளிக்க போதுமானதாக இருக்கவில்லை, ஆனால் "யூத மக்களுக்கான ஓர் தேசிய இல்லத்தை பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கு ஆதரவானதாக" தீர்மானத்தை மாற்ற முடிந்தது.

எண்ணெய் மற்றும் கொள்கை

கிங்-கிரேன் ஆணைக்குழுவும் (ஆச்சரியமற்ற வகையில்) "முழு சிரியாவிற்கும் ஒரே ஆணையை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் கேட்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது. ஆணையாளர்கள் நேர்மையானவர்களாகவும் அவர்கள் தீர்மானங்களை எடுப்பதில் தார்மீகக் கண்ணோட்டத்தை எடுத்ததாகவும் தெரிகிறது, ஆனால் புவிசார் அரசியல் பரிசீலனைகள் அவர்களின் மனசாட்சியின் மீது தடையாக இருக்கவில்லையா என்று ஆச்சரியப்படுத்துகின்றது.

1919 ஆம் ஆண்டில், நியூயோர்க் ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகோனி, பின்னர் மொபில்) மற்றும் நியூ ஜெர்சி ஸ்டாண்டர்ட் ஆயில் (எஸ்ஸோ, பின்னர் எக்ஸான்) ஆகிய நிறுவனங்கள் "மெசப்பதேமியா-பாலஸ்தீனம்" பகுதியில் பெட்ரோலிய சலுகைகளுக்கு உரிமை கோர முயன்றன, ஆனால் பிரிட்டன், மத்திய கிழக்கில் முக்கிய சக்தியாக இருந்ததுடன், இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை அவர்களைத் தடுத்தது. சோகோனி, எஸ்ஸோ, கல்வ் ஆயில் மற்றும் கலிபோர்னியா ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகல்) ஆகிய நிறுவனங்கள் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் களங்களை சுரண்ட ஆரம்பித்தமையால், 1928 வரை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கில் ஊடுருவத் தொடங்கவில்லை.

பல்வேறு அரபு நாடுகளின் ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் தங்கியிருந்த இந்த பெட்ரோலிய நலன்கள், இப்பகுதிக்கான வெளியுறவுத்துறையின் நிகழ்ச்சி நிரலை வகுத்தன. எனவே, யூத தாயகம் அமைப்பதற்கு எதிராக வெளியுறவுத் திணைக்களம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலைப்பாடு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ஆணை முடியும் வரை காணப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், மிகவும் பலவீனமடைந்து, போர்க் கடன்களின் சுமையால், வெளிநாட்டு இராணுவப் பிரசன்னத்தைத் தக்கவைக்க முடியாமல், மத்திய கிழக்கில் தனது "பொறுப்புகளை" அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஆரம்பித்தது.

1939 காலப்பகுதியில், பாலஸ்தீனிய புரட்சியைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் பாலஸ்தீனியர்களின் நியாயமான கரிசனங்களை ஆராயத் தொடங்கியதுடன், யூத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதிகரித்த நாஜி பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொண்டாலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றச் சட்டங்களால் விலக்கப்பட்ட யூத அகதிகள் பாலஸ்தீனத்திற்குள் வெள்ளமாக புகுந்ததுடன், 1946 ஆம் ஆண்டில் யூத குடித்தொகையை 500,000 ஆக உயர்த்தியது.

இர்குன் த்ஸ்வாய் லியூமி (Etzel) மற்றும் லெஹுமெய் ஹெருட் யிஸ்ரேல் (Lehi) போன்ற சியோனிச போராளிக் குழுக்கள் பாலஸ்தீனியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் எதிராக பயங்கரவாத பிரச்சாரங்களை  ஆரம்பித்ததுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பான்மையான ஹகனா பிரிவினர் இணைந்தனர். பயங்கரவாதிகள் அமெரிக்கப் போர் உபரிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதால் (அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும்), பிரித்தானியர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும், பிராந்தியத்தைக் கைவிடுவதற்கு அவர்களை உந்துவதற்கும் இயலுமாகவிருந்தது.

இது பிரிட்டிஷ் மூலோபாய நலன்களுக்கு இன்றியமையாத அரபு நாடுகளின் மக்களுடன் மோதலை ஏற்படுத்தாது என்பதால், ஒன்றிணைந்த ஒரே பாலஸ்தீனிய-யூத அரசை நிறுவுவதற்கு பிரித்தானியர்கள் விரும்பினர். அவர்கள் அரபு-யூத சகவாழ்வில் செல்வாக்கு செலுத்தும் நம்பிக்கையில், பாலஸ்தீனத்தை மேற்பார்வையிடுவதற்கு அமெரிக்க நிதி மற்றும் இராணுவ ஆதரவு அவசியம் என்று நம்பினர்.

எவ்வாறாயினும், யூத அகதிகள் பிரச்சினையை ஆராய்ந்த அமெரிக்க வழக்கறிஞர் ஏர்ல் G. ஹாரிசனின் பரிந்துரைகளை பின்பற்றி அமெரிக்க அரசாங்கம், மேலும் 100,000 நாஜி இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்த யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்குமாறு பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. 

இந்த அகதிகளில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவை வற்புறுத்த பிரிட்டிஷ் முயற்சித்தாலும் ஆனால் பலனளிக்கவில்லை. யூத தாயகத்தை நிறுவுவதற்கு நாஜி இனப்படுகொலையை பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்திய சியோனிஸ்டுகள், அமெரிக்காவில் அவர்களை மீள்குடியேற்றுவதை விட அவர்களின் இடமாற்றத்தை தாமதப்படுத்த விரும்பினர். போருக்கு முன்னர் சியோனிசத்தை எதிர்த்த அமெரிக்காவின் யூதர்கள் தொடர்பான அபிப்பிராயம், நாஜி இனப்படுகொலை காரணமாக கடினமாகி, பாலஸ்தீனத்தில் யூத தாயகத்திற்கு மிகவும் இணக்கமானது.

சுயாட்சி அல்லது பிரிவினை

பாலஸ்தீனக் கொள்கைக்காக அமெரிக்காவுடன் பகிரப்பட்ட பொறுப்பை நிலைநாட்டும் முயற்சியில் மற்றும் பாலஸ்தீனத்திற்குள் யூத குடியேற்றவாசிகளின் அதிகரித்த ஊடுருவலுக்கு அரேபிய எதிர்ப்பை எதிர்பார்த்து, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கூட்டு விசாரணையை முன்மொழிந்தது. இந்த விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கான அமெரிக்க தீர்மானம், நிலைமையை ஒரு பரந்த யூத அகதிகள் பிரச்சினையாக வடிவமைத்து அரசியல் சியோனிசத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படலாம்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆங்கில-அமெரிக்க விசாரணைக் குழு 1946 ஜனவரியில் வாஷிங்டனில் கூடியது. 

கட்டாய பாலஸ்தீனத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை ஆராய்வதுடன், பிராந்தியத்தில் வசிப்பவர்களின் நல்வாழ்வை மதிப்பீடு செய்தல், அரேபிய மற்றும் யூத சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ஈடுபடுதல் மற்றும் கையில் உள்ள சவால்களுக்கான இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீடித்த தீர்வுகள் ஆகிய இரண்டிற்கும் முக்கியமான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு அதன் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டன.

ஆங்கில-அமெரிக்க ஆணைக்குழு 100,000 யூத அகதிகளை உடனடியாக பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்க பரிந்துரைத்ததுடன், இதனை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் வரவேற்றார். எவ்வாறாயினும், அவர் யூதர்களோ அல்லது பாலஸ்தீனியர்களோ ஆதிக்கம் செலுத்தாத, ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுவது உள்ளிட்ட பிற பரிந்துரைகளை வரவேற்கவில்லை.

பிரிட்டிஷ் துணைப் பிரதம மந்திரி ஹெர்பர்ட் மோரிசன் மற்றும் அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி எஃப் கிரேடி ஆகியோர் அடங்கிய புதிய கூட்டுக் குழு, பரிந்துரைகள் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்தது. ஜூலை மாதம், அவர்கள் மாகாண சுயாட்சி திட்டம் என்று அழைக்கப்படுகின்ற மோரிசன்-கிரேடி திட்டத்தை அறிவித்ததுடன், இது ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட அறங்காவலரின் கீழான ஒரு சமஷ்டி பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கும், சுயாட்சியான யூத மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் மற்றும் ஜெருசலேம், பெத்லஹேம் மற்றும் நெகேவ் ஆகியவற்றுடன் அமைந்திருந்தது 

பாலஸ்தீனியர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர், அதற்கு பதிலாக யூத சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதி செய்யப்படும் ஓர் ஒற்றை பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர். சியோனிஸ்டுகள் அதை முற்றிலுமாக நிராகரித்து, பாலஸ்தீனத்தைப் பிரிவிடுவதற்கான புதிய திட்டத்தை விரும்பினர்.

ஜனாதிபதி ட்ரூமன் ஆரம்பத்தில் வெளியுறவுத் திணைக்களம் ஆதரவளித்த இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் சியோனிச உரையாடல் அதற்கு எதிராக ஒரு ஆவேசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. ட்ரூமன் மோரிசன்-கிரேடி தீர்வைத் தான் விரும்புவதாக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டாலும், அவர் சியோனிச உரையாடலை எதிர்த்துப் போராடுவதை வெளியுறவுத் திணைக்களத்திற்கு விட்டுட்டு பாலஸ்தீனப் பிரச்சினையிலிருந்து பின்வாங்கினார்.

அவரது நிலைப்பாட்டை பாதித்த ஒரு பிரச்சினை வளர்ந்து வரும் பனிப்போரின் மத்தியில், அமெரிக்கா ஐரோப்பிய பாதுகாப்பில் கவனம் செலுத்தியதுடன், பாலஸ்தீனத்திற்காக பணத்தை செலவிடலாம் ஆனால் படையினரை அல்ல என்ற புவிசார் அரசியலில் இருந்து உருவாகியிருந்தது. மோரிசன்-கிரேடி தீர்வுக்கு பாலஸ்தீனியர்களோ அல்லது சியோனிஸ்டுகளோ உடன்பட மாட்டார்கள் என்பதால், படையினரே அதனைச் செயற்படுத்த வேண்டும், குறிப்பாக சியோனிச பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்.

பிரிவிடல்

இப்போது பிரிட்டன் சியோனிசப் படைகளுடனான மோதலில் இருந்து படையினரை அகற்றுவதற்கு வசதியாக பாலஸ்தீனப் பிரச்சினையை ஐ.நா.வுக்கு இடம்மாற்றுவதற்கு முயன்றது. அமெரிக்க அரசாங்கம் ஓர் பிரிவிடல் திட்டத்தை ஆதரித்ததுடன், 181 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா உறுப்பினர்களை வற்புறுத்தியது, இது குடித்தொகையில் 31%ஆக இருந்த யூதர்களுக்கு  55% பாலஸ்தீனத்தை வழங்கியது.

மே 14, 1948 இல், ட்ரூமன் அதன் சுதந்திரப் பிரகடனத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். சியோனிச அரசு பாலஸ்தீனத்தின் மேலும் 22% பகுதியை இணைத்துக்கொண்டு, 750,000 பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்த போதிலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் யூத நிறவெறி அரசை தொடர்ந்து ஆதரித்தன.

அந்த நேரத்தில், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் USD 323 மில்லியனாகும் (இன்று 4.0 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமனானது). புதிய அரசாங்கம் பாலஸ்தீனியப் பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலமும், பாலஸ்தீனியச் சொத்துக்களை அபகரித்ததன் மூலமும் கணிசமான செல்வத்தைப் பெற்றது. 2008 இல், McMaster பல்கலைக்கழகத்தின் அதிஃப் கபுர்சி, பாலஸ்தீனியர்களிடம் இஸ்ரேல் கொள்ளையடித்த்த 1948 மதிப்பில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 2008 மதிப்பில் கிட்டத்தட்ட 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிட்டார்.

ஆயினும்கூட, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 135 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இன்று 1.684 பில்லியன் டொலர்களுக்கு சமனானது) மூன்று ஆண்டுகளுக்கு உதவியாக வழங்குவதற்கு உத்தரவாதமளித்தது. இது வாஷிங்டனில் இருந்து டெல் அவிவ் வரை பாய்ந்த பண உதவி வெள்ளத்தில் முதல் துளிகள் என்பதை நிரூபித்தது. அடுத்த 72 ஆண்டுகளில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு 318 பில்லியன் அமெரிக்க டொலர்களை (பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டது) உதவியாக வழங்கியது. 2023 ஆம் ஆண்டளவில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவியாக வழங்குகிறது.

இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அமெரிக்க ஆதரவு பின்ணனி இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டது. உடைக்கப்படாத அமெரிக்க பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவு அதன் இருப்புக்கும், அதன் இராணுவ சாகசங்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, அத்துடன் சிரிய மற்றும் லெபனான் பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

https://www.virakesari.lk/article/173761

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.