Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"எனது பார்வையில் சிவன் உறையும் கைலாய மலை"
 
 
[படம் 1 & 2: சிந்து வெளியில் கண்டு எடுக்கப் பட்ட பசுபதி [சிவனின் முன்னைய வடிவம்] யும் சிவலிங்கமும். படம் 3 : சீனாவில் குவன்சௌ (Quanzhou) என்னும் துறைமுக நகரில் உள்ள இந்து ஆலய செதுக்கப்பட்ட சிவன் சிற்பம்] 
 
 
சிவனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து வெளி நாகரிகத்தில் மேற்கொள்ளப் பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் சிவ வழிபாட்டின் மூலத்தை அல்லது ஆரம்பத்தை அங்கு கண்ட சிவலிங்கம் மற்றும் பசுபதி முத்திரை [Shiva Lingam.& The Pashupati Seal] போன்ற சாட்சிகளுடன் நிறுவியுள்ளனர். இந்த நாகரிகம் சிந்து நதியின் கரையோரம் காணப்படுகிறது. இந்த நதி, இமய மலைத் தொடரில், கைலை மலை என்ற ஒரு மலை முடியில் இருந்து உற்பத்தியாகி அங்கு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவாவை வழிபடும் சிந்து வெளி நாகரிகம் இன்றைய வட கிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானி லும் மற்றும் வட மேற்கு இந்தியாவிலும் உள்ளது [northeast Afghanistan,Pakistan and northwest India ]. இதில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இரண்டிலும் இன்று இந்து அல்லது சைவ சமயம் இல்லை என்றே சொல்லலாம் ?. காரணம் புத்தமதம், இஸ்லாம், கிறித்துவம் [Buddhism, Islam, Christianity] போன்றவை அதன் பின் தோன்றி பரவியதாலாகும். அவை சில சில இடங்களில் முன்னைய மதத்தை அழித்து காலூன்றி இன்று அங்கு நிலைத்து விட்டன. அதே போல இன்றைய எல்லைகளும் பிற்காலத்தில் வகுக்கப் பட்டவையே ஆகும் ?
 
வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களில் ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் [ஆரிய மக்கள்] ஈரான் வழியாக இந்தியாவை கி மு 2200-1500 அளவில் வந்தடைந் தனர் என்றும் இன்று அறிகிறோம். இவர்கள் கி மு 2700-2400 ஆண்டு அளவில் உச்சத்தில் இருந்த திராவிட [தமிழ்] மக்களின் சிந்து வெளி நாகரிகத்தை வென்றதால் அல்லது கால நிலை மாற்றத்தால் திராவிட [தமிழ்] மக்கள் தென் இந்தியா நோக்கி புலம்பெயர்ந்தவர்கள். பின் ஆரிய மக்கள் கங்கை நதி கரையோரம் தமது இந்து மத [வைதீக மதம்] நாகரிகத்தை கட்டி எழுப்பினர்கள். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். இவர்கள் வேதங்களில் காணப்பட்ட உருத்திரன் என்பவரை சிவனுடன் இணைத்து மற்றும் சில மாற்றங்கள் செய்து தமிழரின் ஆதி சைவ மதத்தை தமது இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள் என்கிறது வரலாறு. அது மட்டும் அல்ல தமது வேத நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த கங்கையை சிவனின் முடியில் வைத்து அந்த கங்கை நதியை பெருமை படுத்தினார்கள்.
 
ஆறும், அதன் நீரும் மக்களிடம் கொண்டுள்ள உறவை, தொடர்பை, பண்பாட்டை, பொதுவாக எல்லா நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக "உழவர் ஓதை, மதகோதை,உடைநீர் ஓதை தண்பதங் கொள் விழவர் ஓதை, சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவிரி!" என்று சிலப்பதிகாரம் போற்றுகிறது. அது மட்டும் அல்ல காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது. ஆகவே ஆரம்ப சிவா வழிபாடடை தந்த சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்க, அமைக்க முக்கிய காரணமாக இருந்த, சிந்து நதி உற்பத்தியாகும் கைலாய மலையை தமது கடவுளான சிவனின் உறைவிடமாக கருதி அதற்கு ஒரு பெருமை சேர்த்திருக்கலாம் என ஏன் நாம் கருதக்கூடாது ?
 
மேலும் இன்றைய நவீன பிரதான சீனாவில் [modern mainland China] சிவ வழிபாடோ அல்லது இந்து மதமோ அல்லது சைவ மதமோ இல்லா விட்டாலும், தொல்பொருள் ஆதாரங்கள் அதற்கு மாறாக இடைக்கால சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் [different provinces of medieval China] அவை வழமையில் இருந்ததை உறுதிப் படுத்துகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.