Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வேதனை தீரவில்லை" 
 
 
"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்"
 
என்று பாடிச் சென்றாள் மூதாட்டி அவ்வையார். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என இலங்கை அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பாவிக்க வேண்டும் என்று திடீரென மறுமலர்ச்சி என்று கூறி இரசாயனப் பசளை இறக்குமதிக்கு முற்றாக ஜூன் 2021 இல் தடை விதித்தது. இதை அடுத்து அங்கு இரசாயன உரம், கிருமி நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சேதனப்பசளையும் போதிய அளவு இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அதன் உபயோகமும் பயிற்றுவிக்கப் படவில்லை. அந்த இக்கட்டமான காலத்தில் தான் நானும் விடுதலையில் ஊர் திரும்பினேன்.
 
ஒளி வண்ண மலர்கள் கொண்ட எங்க ஊர் செடிகளில் என்றும் அழகு ஜொலிக்கும். மா மரத்தில் மாம்பழம் தொங்கும் கட்சி மனதை குளிர்விக்கும். இப்படியான எம் கிராமத்துக்கு தான், நான் புகையிரதத்தால் இறங்கி நடந்து போய்க்கொண்டு இருக்கிறேன்.
 
என் அப்பா விவசாயத்தில் மிகவும் வல்லுநர். எப்பேர்ப்பட்ட நிலையிலும் மனம் சோராது அதை எல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிவிடுவார். அவர் எல்லா கிராம மக்களுடனும் நன்றாக பழகி, அன்பாக அனுசரிப்பதுடன், எங்கள் கிராம தலைவர் கூட அவரே!
 
எங்கள் கிராமத்துக்குள் போகுமுன், நான் கிராமத்தின் எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்தை தாண்டித் தான் போகவேண்டும். இது எங்கள் கிராமத்துக்கு நீர்வழங்கும் குளக்கரையில் அமைந்து உள்ளது. நான் அந்த இடத்தை தாண்டும் பொழுது, கொஞ்சம் நின்று தலை உயர்த்தி ஒரு தரம் பார்த்தேன். என்னையே நம்பமுடியவில்லை, என் அப்பா, அந்த காவல் தெய்வத்திடம் எதோ முறையிட்டுக்கொண்டு இருந்தார். நான் மெதுவாக, சத்தம் வராதவாறு நடந்து கிட்ட போய், அவர் பின்னால் நின்றேன்.
 
" ஏன் இந்த அரசுக்கு அவ்வையார் பாடல் விளங்கவில்லை? நெல் உயர குடி உயரும் என்ற சிறு தத்துவமும் இவனுக்கு தெரியாதா ? குடி உயரவிட்டால், அங்கு கோனுக்கு [நாட்டை ஆள்பவனுக்கு] என்ன வேலை ?" என்று புலம்பிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டே விட்டேன். நான் மெல்ல பின்னோக்கி நடந்து, வயல் வெளி ஊடாக வீடு போகத் தொடங்கினேன். அங்கு நெற்கதிர்கள் பசுமை இழந்து பழுத்துப்போய் மஞ்சளாக பரவி இருப்பதை கண்டேன். அது மட்டும் அல்ல நேற்று பெய்த கடும் மழையாலும் காற்றாலும், நெற் கதிர்கள் சாய்ந்து இருப்பதுடன், வரம்புக்கு மேலால் நீர் வழிவதையும் கண்டேன்.
 
ஒரு சீரான மாற்றத்தை முறையாக அறிமுகப் படுத்த தவறிய அரசின் கொள்கையின் பிரதிபலிப்பை, அந்த வயல்களில் அல்லலுறும் மக்களின் முகத்தில் தெரிந்தது. நான் என்னை சரி படுத்திகொண்டு, அந்த வயல் வெளியில் நிற்கும் , எம் பக்கத்து வீட்டு செல்லப்பா மாமாவிடமும் செல்லாச்சி மாமியிடமும் அருகில் போனேன். " இந்த சீர்கெட்டுப் போன அரசு ஒழியட்டும் என" வசைபாடி என்னை வரவேற்றனர். இந்த அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு மாறி இருக்க வேண்டும், அதே நேரத்தில், இன்று சனத்தொகை கூடிய காலத்தில், இயற்கை , செயற்கை இரண்டு முறையிலும் விவசாயத்தை நடை முறை படுத்தி இருந்தால், இன்று நாம் பட்டினியை நோக்கி போய் இருக்க மாட்டோம் என்று ஒரு விவசாய பாடமே எமக்கு நடத்தினர். இன்று அவர்கள் கை நீட்டி கடனாக வாங்கும் உணவு எல்லாம் அதிகமாக செயற்கை விளைச்சலே!
 
இப்படியே போனால், இங்கு வருங்காலத்தில் விவசாயியே இருக்கமாட்டான் என்று பற்றாக் குறைக்கு தம் எரிச்சலை கொட்டி தள்ளினர்.
அந்த நேரம் பார்த்து, அவசரம் அவசரமாக பதைபதைத்துக் கொண்டு என் அப்பாவும் ஓட்டமும் நடையுமாக அங்கு திரும்பி வந்தார். எங்கள் கணபதி மளிகை சாமான்கள் வாங்க என்று போனவர், தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டு விட்டார் என கண்ணீரும் கம்பலையுமாக கூறினார். ஆனால் அதற்கு முதல் தன் செத்த வீட்டுக்கு தேவையான வற்றையும் வாங்கி வைத்துள்ளார். அவ்வற்றை வயலில் இருந்த தனது அப்பாவின் கல்லறை மேல் வைத்துவிட்டு தான் தனது உயிரை மாய்த்தார் என்று கூறினார்.
 
அங்கு அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதை நாம் அங்கு போய் பார்க்கும் பொழுது கண்டோம். அதில், அரசை மட்டும் சொல்லி குற்றமில்லை, அரசிடம் சுளை சுளையாக பணம் கறந்து ஆலோசனை கூறும் பேராசிரியார்களையும் முதல் குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று இருந்தது.
 
இரசாயனப் பசளை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டு விவசாயத் துறையை சூழலுக்கு உகந்த விவசாயத் துறையாக மாற்றியமைக்க முடியும் என பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கூறியதும், மற்றும் ஒரு பேராசிரியர் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக கூறியதும் ஞாபகம் வந்தது. ஆனால் நாம் வளர்ச்சி அடைந்த நாடா ? அவர்கள் வளர்ச்சி அடைய, உற்பத்தியை பெருக்க, மலிவாக உணவு பொருட்களை தாராளமாக வழங்க, ஏறுமதி செய்து செல்வம் ஈட்ட, உண்மையில் என்ன செய்தார்கள் - என் மனதில் கேள்வியாக எழும்பின.
 
அதே நேரத்தில் அங்கு எல்லா விவசாயிகளும் சேர்ந்து இறந்தவரின் படத்தை கையில் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டங்களிலும் குதித்தனர். நானும் அவர்களுடன் ஒன்று சேர , என் விடுதலையை (Holiday) பொருட்படுத்தாமல் அங்கு அப்பாவுடன் சென்றேன்! வேதனை தீரும் என்ற ஒரு நம்பிக்கையில் !! என்றாலும் இன்னும் தீரவில்லை. அது ஜூலை ஒன்பது, 2022 தாண்டியும் நீள்வதை காண்கிறேன்!
 
மாறும் மக்களின் மனநிலை, குறிப்பாக மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நிரந்தரமாக , விடிவாக வருமா ?? 1948 இல் கிடைக்காத உண்மையான சுதந்திரம் வருமா ?? தமிழர் , தமிழ் பேசும் மக்களின் கொடுமையான , பரிதாப நிலை மாறுமா ?? தொலைத்த சம உரிமை வருமா ?? அல்லது இது இன்னும் ஒரு நாடகமா ??
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
293116681_10221316524805401_8465074122517372635_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=C1KXU25WE00Ab77UH-c&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD2-F3ELI2s4SAgq3FOEEaT654UtBxuW8F2TNGteyiOww&oe=6623444C 293200604_10221316525405416_7770267421772758873_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fdBHOvMaYHYAb6NBtPE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBhIOhJ2zRt2p1hLAK36xBHiwafQ94aQDKKqvEU4kc1Nw&oe=662320C5
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.