Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    25 APR, 2024 | 03:44 PM

image

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது. 

விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி  இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு ஏக்கர் காணிகள்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது.

மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள்  2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள். 

அபகரிக்கப்பட்ட காணிகளில் சில இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதாவது வெலிஓயா என்று சொல்லக்கூடிய 28,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிங்கள குடியேற்றத்தை ஏற்றி தனி ஒரு சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கி இன்று எங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மக்கள் தொகையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன

இது தவிர 2009 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு இலட்சத்தி 67 ஆயிரத்தி 484 ஏக்கர் 30.37 வீதமான முல்லைத்தீவின் காணிகளை அபகரித்து வன இலாகா மட்டும் வைத்திருக்கின்றது. இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 2 இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் காணிகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு வன இலாகாவினால் மட்டும் அபகரிக்கப்பட்டு எல்லைக்கல்லினை நாட்டி தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 

விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் , வன இலாகா, தொல்லியல்  திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள்.

நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் காதர் மஸ்தானின் அறிக்கை ஒன்றில் ஏற்கனவே உள்ள இரண்டு ஜனாதிபதி அவர்களும் பிழைதான் விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்தையும் ஏற்றுகொண்டு அதாவது, இந்த காணிகள் பறிக்கப்பட்டதில் பிழை நடந்திருக்கின்றது என்ற கருத்தை கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களூடாக காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களிலுமாக தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதும், தங்களுடைய திணைக்களங்களூடாக அபகரித்து வைத்து கொண்டிருப்பதும் தான், அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கப்பட வேண்டும். 

இதே ஒரு நிலைமையில் ஆறுகள் உள்ள நீர் பரப்புகளாக சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் ஆகியன கிட்டத்தட்ட 69401 ஒரு ஏக்கர் நிலம் நீர்நிலைகளோடு சேர்ந்த நிலங்களாக முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்தினுடைய புள்ளிவிவரத்தின் ஊடாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

29401 ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய வழக்கு தவணையிடப்பட்டு எதிர்வரும் வைகாசி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அறுநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களுடைய நிலங்களை இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுடைய காணிகள் தான் இவை. இந்த காணிகளை கூட வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய பறவைகள் சரணாலயம் என்ற பகுதிக்குள் இணைத்து அவர்களுடைய காணிகளையும் பறித்து வைத்திருக்கிறார்கள்.

மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்கு மக்கள் அல்ல. அரசாங்கத்துக்கு மக்கள் என்ற நிலையில் அரசு இயங்கக்கூடாது. மக்களுடைய காணிகளை மக்களுக்கு விடுவித்து அந்த காணிகளின் ஊடாக மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கையை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக கொண்டு நாட்டுக்கு உதவக்கூடிய நிலையில் தான் மக்களை அரசாங்கம் பாவிக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? மஸ்தான் அவர்கள் கூறிய கருத்தானது உண்மையை ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கின்றது. அதேநேரம் இன்னும் காணிகள் விடுவிப்பதாகவும் இருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் சேர்க்கப்பட்டால் நல்லது என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/181947

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.