Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] / பகுதி: 01
 
 
இன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது?
 
இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா?,
 
அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன ?
 
இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா? இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா?
 
ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம்?,
 
இப்படி பல பல கேள்விகள் எம்மில் இன்று எழுகின்றன. இவைகளுக்கு எம்மால் இயன்ற பதில்களைத் தேடி அலச முன்பு, நாம் இரண்டு விடயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒன்று சமுதாயம் என்றால் என்ன?,
 
வீழ்ச்சியடைகிறது அல்லது சீரழகிறது என்றால் என்ன?
 
ஒரு சமுதாயம் [Society / குமுகாயம்] என்பது தனிப்பட்ட ஒரு இனங்கள் ஒன்றாக வாழும் ஒழுங்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனலாம். உதாரணமாக உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உடல் அமைவது போல, ஒரு இனங்கள் பல சேர்ந்து உருவாகுவதே சமுதாயம் ஆகும். எனவே சமுதாய கட்டுக்கோப்பிற்குள் வாழ்க்கை நெறிகள் அல்லது ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இப்படி பல பல இருக்கும்.
 
அதேவேளை சமூகம் (Community] என்பது ஒரே இடத்தில் வாழும் ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது பொதுவான சிறப்பியல்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையோ குறிக்கும். என்றாலும் சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும் பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் அவை உண்மையில் வேறுபட்டவை. அதாவது சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்றும் சமூகவியலாளர் கூறுவர்.
 
இன்னும் ஒரு முக்கிய பன்பையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், அதாவது உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே ஒரு மாறிவரும் சமுதாயத்தில் [evolving societies] வாழக்கூடியது. ஏனென்றால் சுற்றுச்சூழல் நிலைமைகளின் மாற்றங்களுக்கு மட்டும் அல்ல, மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கும் [evolving economic conditions] ஏற்றவாறும் தனது சமுதாயத்தின் கட்டமைப்பை சரிபடுத்தக் கூடியது.
 
ஆதி மனித சமுதாயம் ஒரு வேட்டுவ உணவு திரட்டியாக [hunter-gatherer] இருந்தனர். தங்களை சுற்றி இருக்கும் நிலத்தில் கிடைக்கும் உணவிலேயே இவர்கள் தங்கி இருந்தனர். எனவே இவர்கள் அதிகமாக உறவினர்களை கொண்ட சிறிய குழுக்கள் குழுக்களாக [kinship group] இருந்தனர். தொழிலாளர் பிரிவு [Division of labour] இங்குதான் முதலில் ஏற்பட்டதாக நாம் கருதலாம். வேடையாடுதல் ஆண்களாலும், உணவு தயாரித்தல், ஆடை மற்றும் குழந்தை வளர்ப்பு பெண்களாலும் நடைமுறை படுத்தப் பட்டன.
 
விதைகளை நாட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு [seed planting and animal husbandry] அறிமுகம் செய்யப்பட்டதும், மனித சமுதாயத்தின் அமைப்பு மாறியது. அவர்கள் இப்ப, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு கிராம குடியிருப்புகளில் [village settlements] வாழத் தொடங்கினார்கள். இவைகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பான விவசாய சமுதாயம் [agricultural society], பல்வேறு வடிவங்களை இம்மாற்றங்களால் ஏற்படுத்திக் கொண்டது. இங்கும் தொழிலாளர் பிரிவு தொடர்ந்தது. உதாரணமாக ஆண்கள் நிலத்தை உழுது பயிர்கள் பயிரிட்டனர், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தனர்.
 
இவைகளை தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையிலான, தொடர்புகளின் தாக்கத்தால் நகர்ப்புற சமுதாயம் [urban society] ஒன்று எழுச்சி பெற்றது. இதனால் மேலும் பல தொழிலாளர் பிரிவு எற்பட்டது. அதுமட்டும் அல்ல மக்கள், முன்பு இருந்ததை விட, அளவு அல்லது தொகை கூடிய சமூகங்களில் /குழுக்களில் வாழ்த் தொடங்கினர். அதாவது பெரிய நகரங்கள் உருவாகின, ஆனால், அதன் உள்கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிப்பதற்கு, அந்த பெரிய நகரங்களுக்கு சிறப்பு நிர்வாக திறன்கள் மேலும் தேவைப் பட்டது. இது வர்க்கங்கள் [classes] உள்ளடக்கிய சமூக அடுக்குகளை [பாகுபாடுகளை / படிநிலைகளை /stratification] ஏற்படுத்தியது எனலாம்.
 
அத்துடன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு ஒரு வர்த்தக வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியது. என்றாலும் பல பல காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளில் ஆண்களே பெரும்பாலும் ஈடுபட்டு, செல்வங்களை / பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனவே நகர்ப்புற சமுதாய வளர்ச்சி, பெண்கள் ஆண்களில் பொருளாதாரத்திற்கு சார்ந்து இருக்கும் ஒரு நிலைமையை [economic dependence] அதிகரித்தது. அடிப்படை சமூக உறவான [Basic social relationship] திருமணம், செல்வத்தையும் பலத்தையும் அடைவதற்கான ஒரு கருவியாகவும் இங்கு பெருபாலும் மாறியது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும்
No photo description available. No photo description available.No photo description available.
 
 
 
 
  • Confused 1
  • நியானி changed the title to "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
  • கருத்துக்கள உறவுகள்
Posted
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 02
 
 
18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி, நகர்ப்புற சமூகத்தில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழில் மயமாக்கல் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய, அதிகமான மக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறவும் தொழிற்சாலைகளில் வேலை தேடுவதற்கும் தள்ளப்பட்டார்கள். இதனால் பெண்கள் முழுமையான பொருளாதாரத்திற்கு, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்களை மேலும் சார்ந்து இருக்க நேரிட்டது. அது மட்டும் அல்ல, தொழிற்துறை செயல்பாடுகளில் பங்கு பெறாத முதியவர்கள் [பழைய தலைமுறை /The older generations] குடும்பத்திற்கு ஒரு சுமையாகி விட்டது, இவர்களை "முதியோர் இல்லங்களுக்கு" அனுப்புதலும் அதிகரிக்கத் தொடங்கின.
 
20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மீண்டும் மாறியது. பெண்கள் வேலைக்கு போகத் தொடங்கியதும், மற்றும் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் [The development of modern capitalist technology] பெண்களின் சுதந்திரத்திற்கு - ஒரு உண்மையான சாத்தியத்திற்கு - வழிகோலியது. நவீன முதலாளித்துவம், குடும்பங்களை சிறிய சாத்தியமான உறவினர் அலகுகள் மட்டும் கொண்டவையாகவும் [smallest possible kinship units], உதாரணமாக ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் இரட்டை பெற்றோர் குடும்பங்கள் [single parent or both parents] போன்றவையாகவும், மற்றும் நிதி ரீதியாக சுயாதீன மானவையாகவும் மாறின. எனவே கூட்டு குடும்பம் [Joint family] இல்லாமல் அதிகமாக போய்விட்டது. எனவே அவர்கள் தமது குறைந்தபட்ச நாளாந்த மனவெழுச்சிகளுக்கு ஆதரவாக [emotional support] கைத் தொலை பேசி, கணனி போன்றவைகளை அதிகமாக பாவிக்க தொடங்கினர். இப்படித்தான் சமுதாயம் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம். ஆனால் இந்த சமுதாயம் ஒரு முழுமையடைந்து உள்ளதா என்பது எம் முன் தோன்றும் முக்கிய கேள்வியாக இன்று உள்ளது?
 
ஒரு சமுதாயம் முழுமை பெற வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் மனிதர்களாகிய நாம் சில பண்புகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் 'பண்பு' என்றால் என்ன ?, எந்த பண்புகளை நாம் வைத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகள் இயல்பாக எழும்.
 
பண்ணுவது , அதாவது ஒழுங்காகச் செய்வது என்கிற பண்படு என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பண்பாடு ஆகும். அதாவது உலக நடைமுறைக்கு ஏற்ப ஒத்து நடப்பதே பண்பாடு என்றும் வரையறுக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் தான் நம் முன்னோர் 'ஊரோடு ஒத்துப் போ' அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்' என்கிறார்கள். வேறு விதமாக சொல்வதென்றால், பிறர் நமக்கு என்ன செய்தால் நாம் மகிழ்ந்து இருப்போமோ அதையே பிறருக்குத் திரும்பச் செய்வதும் பழியின்றி வாழ்தலும் பண்பாடு எனலாம். இதை சங்க இலக்கியமான நற்றிணை மிக அழகாக, தெளிவாக சொல்கிறது.
 
"நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென் மன்னே,"
[நற்றிணை 160, அடிகள் 1 - 3]
 
யாவருக்கும் இனிமையாக நடத்தல், அன்புப் பாராட்டி நட்புடன் வாழுதல், பழியைக் கண்டும் தீமையைக் கண்டும் மனங்கூசுதல், மற்றவர்களுக்கு, அதாவது சமுதாயத்திற்கு பயன்பட வாழ்தல், பிற உயிர்கள் படும் துன்பங்களைப் போக்கி வாழுதல் ஆகிய செயல்களே பண்புகள் என 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த பாடல் எமக்கு அறிவுரை வழங்குகிறது. சுருக்கமாக அன்பு என்பது உயர்ந்த பண்பு என்றும் , அறன் என்பது உயர்ந்த வாழ்வின் சிறந்தப் பயன் என்றும் சொல்லுகிறது.
 
இந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயம் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைவதற்கு கட்டாயம் அவர்களுக்கு ஏதாவது தூண்டுகோல் இருந்திருக்கும். அவை சமூக நன்மைகளை தரும் தூண்டுகோல்களாகவோ, காரணிகளாகவோ அல்லது தீமைகளைத் தரும் காரணிகளாகவோ கூட இருக்கலாம்.
 
ஒரு விளக்கை சரியாக தூண்டும் போது அது பிரகாசமான ஒளியை தந்து இருளை போக்கும், அதே சமயம் அந்த விளக்கை தவறாக தூண்டினால் அந்த நெருப்பானது பெரும் அழிவைக் கூட ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 
நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள்தான், இப்போதெல்லாம் ஒரு தனி மனிதனை தூண்டி வழிநடத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே ஒரு சமுதாயத்தைத் தூண்டி சரியான வள்ர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் ஊடகங்கள் பங்கு இணையற்றது. எனவே மக்களுக்கு உற்சாகம், நம்பிக்கை கொடுக்க கூடிய செய்திகளை முன்னிலைப் படுத்தி செய்தி வெளியிடுங்கள். இதனால் மக்கள் மனம் உற்சாகபடும், ஒரு நம்பிக்கை பிறக்கும் சமுதாயம் சரியான பாதையில் கண்டிப்பாக தூண்டபடும் என்பது என் நம்பிக்கையாகும்.
 
அதே வேளையில் மக்களாகிய நாமும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இன்று நம் கையிலே எண்ணற்ற தகவல்கள், வாட்ஸ் அப், டுவிட்டர், முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் செய்திகளைப் பரப்புகிறது. ஆகவே உங்கள் மனதிற்க்கு ஒப்பாத ஓரு செய்தி அல்லது தகவலை அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது.... அன்னை வளர்ப்பிலே...” என்றான் ஒரு கவிஞன். ஆகவே மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயமும் அப்படியே என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அப்பத்தான் நாம் ஒரு அன்னை போல் இருந்து ஒரு வலிமையான சமுதாயத்தை கட்டமைக்க முடியும். அதன் வீழ்ச்சியில் இருந்து அல்லது சரிவில் இருந்து அதை நிமிர்த்த முடியும். அதுவே எம் முக்கிய இன்றைய கடமை என்று எண்ணுகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
74277088_10215272042297116_5834954895454633984_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9VikPloOi9kQ7kNvgFhunq7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD3SqkLVt4cf4oktGHygt6YhyLMbA0uGzZovSpeTS4Ibw&oe=66571CE0 73280056_10215272045737202_3069543835743813632_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SMjBUNWQ6dgQ7kNvgFsfy2Q&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDyyV4hLXArIG9L07-FgN2gsvjbqy5EH9Wu84QckkCxWQ&oe=66572D6A
74242370_10215272049457295_3284199639703617536_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6U547RdkRV0Q7kNvgE5GchN&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAn3z1o0RfWHJlZ4BLhOUqnLFvGVdGhRLBiw9ya3UR-1Q&oe=66573440 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03
 
 
இன்று சமுதாயத்தை பற்றி பேசும் எவரும், வீழ்ச்சி, சரிவு, சீரழிவு என்ற சொற்களை பெரும்பாலும் பாவிப்பதை காண்கிறோம். வீழ்ச்சியடைதல் என்றால் தாம் இன்று உள்ள நிலையில் இருந்து சரிதல் அல்லது கீழ்நோக்கி போவதாகும். சீரழித்தல் என்றால் இன்று இருக்கும் ஒழுங்கில் இருந்து குலைதல் அல்லது நிலைகெடுதல் ஆகும். உதாரணமாக. நிலைகெடுதல் என்ற அதே கருத்தில், திருவள்ளுவர் தனது குறள் 934 இல் "சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்" என்று சொல்லுவதை காண்க. அதாவது பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையில் ஆழ்த்தி ஒருவரை கெடுக்கும் தீமையான சீரழிக்கும் செயல் சூதாட்டம் என்று சொல்லுகிறார்.
 
எனவே சமுதாய சீரழிவு என்றால் எதை குறிக்கிறது என்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது. அதாவது நாம் பரம்பரை பரம்பரையாக கட்டி வளர்த்த அந்த சமுதாயம் என்ற உன்னத அமைப்பு ஆட்டம் காண்பதை சுட்டிக் காட்டுகிறது எனலாம். உதாரணமாக விண்ணைத் தொடும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள், விவாகரத்துக்கள், பதின்ம பருவ பாலியல்கள், அதனால் ஏற்படும் பிறப்புக்கள், ஒற்றை பெற்றோர் [single parent], போதைப்பொருள் துஷ்பிரயோகங்கள், போர், தனிப்பட்ட நன்னடத்தையில் ஏற்படும் சரிவு மற்றும் அதி தீவீர மத பக்தி [skyrocketing rates of crime, divorce, teenage sex, teenage births, single parent and drug abuse; war; and a general decline in personal morality and religiosity.] போன்றவையை கூறலாம்.
 
அத்துடன் இனவாதம் மற்றும் இன சமத்துவமின்மை [Racism and racial inequality], இனப் படுகொலைகள் மற்றும் ஏனைய சகல வன்முறைகளும் [genocides and other mayhem], நாம் அடைந்த எல்லா முன்னேற்றத்தையும் கவிழ்த்து விடும். எனவே சமூக சரிவு ஒரு சிக்கலான மனித சமூகத்தின் வீழ்ச்சி என நாம் கருதலாம்.
 
சுமேரியா [மெசொப்பொத்தேமியா], இந்திய, எகிப்திய, ரோம, மாயா போன்ற அதியுயர் கலாச்சார வடிவங்களும், அங்கு காணப்பட்ட வழி முறைகளும், சரிந்து சின்னா பின்னமாகத் தடயங்கள் அற்றுப் போனது போல், தற்போதைய நவீன உலக நாகரீகமும், சகல வழிமுறைகளும் சீரழிவதற்கான சூழல் காணப்படுவதாக இன்று பலர் உணர்கிறார்கள். இதனால் இன்று மக்கள் சில நேரம் 'உடைந்த சமுதாயத்தை' ['broken society'] பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
சமூக மாற்றம் மற்றும் கலாச்சார மாற்றத்தின் [social change and cultural change] ஒரு விளைவாக இதை நாம் காணலாம். எங்களுக்கு சமூக மாற்றம் இன்று பல நடைமுறைகளில், செயல்களில் இருந்து நன்றாக தெரிகிறது, சமுதாயம் என்பது ஒரு வார்த்தை மட்டும் தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் ஏற்படுத்திய இணைப்பின் மூலமே அந்த கட்டமைப்பு உருவாகிறது. எனவே தனி மனித மாற்றம் இல்லாமல் சமுதாயம் / சமூகம் மாற முடியாது.
 
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கியமான தொழில் நுட்ப முன்னேற்றமும் இறுதியாக சமூக உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடுகிறது. தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே, சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வந்ததுடன் இதுவே பொதுவாக அடிப்படை சமூக அலகாக [fundamental social unit] எல்லா சமூதாதயங்களிலும் இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக எந்தவித மாற்றிடும் செய்யாமல் அது இன்று சிதைக்கப் படுகிறது.
 
நாம் இன்று நமது நாகரிகத்திற்கு அடிப்படையாகக் கொண்ட மதிப்புகள் / விழுமியங்கள் பலவற்றை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. நாம் எதை நம்புகிறோம் என்றே எமக்கு இப்ப தெரியாது, நாம் குழம்பி இருக்கிறோம், அந்த குழப்பத்துடனேயே எம் பிள்ளைகளையும் இன்று வளர்க்கிறோம். சமூக நடத்தை விதிகளிலிருந்து விலகல், வன்முறை மற்றும் சமூக விரோத நடத்தை முதலியவற்றை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் ஒளிபரப்பி மகிழ்வாக கொண்டாடும் ஒரு விசித்திரமான கலாச்சாரத்தை இன்று நாம் உருவாக்கியுள்ளோம்.
 
நாகரிகம் நிச்சயமாக அழிந்து போகும் என்ற இன்றைய யோசனை ஒன்றும் புதியதல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்தே, முடிவும் நெருங்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு நாகரிகமும் எதோ ஒரு கட்டத்தில் வீழ்ச்சி அடையும். அதாவது நாகரிகம் மற்றும் சமூகங்கள் வந்து போகும், அவை என்றும் நிரந்தரம் அல்ல. எனவே எமது இன்றைய கேள்வி எப்பொழுது, ஏன் என்பதே ஆகும். நான் முன்பு ஒருமுறை எழுதிய, கீழே தரப்பட்ட எனது பாடல் ஒன்று இப்ப என் நினைவுக்கு வருகிறது.
 
"பொத்தானை அழுத்தி,மறு கரையில் காதலிப்போம்
ஜன்னளை திறந்து,புதியவானம் காண்போம் கண்ணே?
உலகம் சுருங்குதோ,எண்ணம் அப்படி தோன்றுதோ
தொழில் நுட்பம்,அப்படி மாற்றுதோ கண்ணே?"
 
"நாளாந்த வாழ்வில்,பல பல மாற்றங்கள்
ஒன்றாய் அனுபவிப்போம்,ஆனால் எந்த இழப்பில் கண்ணே?
ஆண்டாண்டு மாசுபடுத்தி,சூழலை கெடுத்து விட்டோம்
நெருக்கடி வந்தபின்பே,மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?"
 
"மதிநுட்ப சிந்தனையாளனா,நாம் மரத்துப்போனவனா
இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே?
கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா அல்லது
தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே?"
 
"இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ
நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே?
அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு
விட்டுப் போவது பெரும் இன்பமா துன்பமா கண்ணே?"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 04 தொடரும்
73364109_10215272079418044_1484083613640163328_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xbXu20w2l4wQ7kNvgECI2zm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCj8uJIbPjcBkTQfsrwh1r1cULAyjyoCJ4kkGpjpgEwlQ&oe=66586E26 76601254_10215272080858080_2220959977109979136_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4FAMGQwFDD0Q7kNvgHBxpxN&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA4jN-qLr09SHQRtKVii_jb_GJDjImc27utDWhkPDwc9g&oe=665894D9
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 04
 
 
சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு மலர்கள் ஒன்றிணைந்து ஒரு மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு ஒரு கூட்டமாய் வாழ்வதே சமுதாயம். அதாவது, தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆண் பெண் கூட்டு சேர்ந்து தம் சந்ததிகளை உருவாக்கிப், பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து, மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு அது வித்திட்டது எனலாம்.
 
சமூகங்கள் தோன்றுவதும், வாழ்வதும், அழிவதுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர்.
 
சங்க கால மக்கள் சமுதாயம் எப்படி இருந்தன என்பதை இலக்கியங்கள் பாடல்கள் மூலம் கூறுகின்றன. உதாரணமாக உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுதல் அவர்களின் சமுதாயத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதை காண்கிறோம்.
 
இன்றைய நவீன உலகில், மனிதநேயம் அருகிவருகிறது. அன்பு ,கருணை, இரக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது, இவைகளை போதிக்கவென்றே தோன்றிய சமயங்கள் கூட தமக்குள் மதம் கொண்டு மோதுகின்றன, ஏன் கொலை கூட செய்கின்றன?
 
உதாரணமாக 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' ,அதாவது, புத்தியால் பகுத்து ஆராய்ந்து, அதன் மூலம் அறியும் அறிவில் சரணடையுங்கள், அதே போல சத்தியத்தில் சரண் புகுங்கள், சங்கத்தின் பண்புகளை உங்களில் வளர்த்து, அந்த பண்புகளில் சரணடையுங்கள் என்கிறது. ஆனால் இலங்கையில் நடப்பது என்ன ? எத்தனை புத்த பிக்குகள் , அல்லது புத்தர் போதனையை பின்பருப்பவர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவார்கள் இதை உணர்ந்து உள்ளார்கள் ? இன்றைய மற்றும் கடந்த கால இலங்கை வரலாறு இதற்கு சான்று கூறும்.
 
அதேவேளை தமிழரின் சங்க இலக்கியம் அகநானுறு 4, அடி, 8 - 12 இல், அவன் குதிரை பூட்டிய தேரில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான், ஏனென்றால் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்கவாம் என,
 
"குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்"
 
என்று மனிதநேயத்தின் உச்ச நிலையாக அஃறிணைக்கும் துன்பப் படாது பாதுகாத்த செயலை காணும் பொழுது, இன்று எப்படி சமுதாயம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதை இலகுவாக காணக்கூடியதாக உள்ளது.
 
சங்க காலத்திலும் அதற்கு அடுத்த பிற்காலத்திலும் கல்வியும், கைத்தொழிலும், வணிகமும் மிகவும் சிறந்த நிலையில் தமிழர்கள் மத்தியில் இருந்ததை காண்கிறோம்.
 
புறநானூறு - 183 இல் “கற்றல் நன்றே.....” என்ற வரியை காண்கிறோம். தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு தான் ‘திருக்குறள்’ எனும் உலகப் பொது மறையும் , 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டும் அல்ல வாழ்க்கை நெறிகளால் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 'அன்பே சிவம்' என்றனர். பகையை வெல்லும் ஆற்றல், தீயோரை நல்லோராக்கும் வண்மை ஆகியவை அன்பால் இயலும் என்பதை, தங்கள் பண்பாட்டு நெறியாகத் தமிழர் போற்றினர். ஆனால் இன்று நடப்பது என்ன ?
 
ஔவையார் புறநானூறு 187 இல்
 
"நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!"
 
என்று கூறியது போல, அதாவது, நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம் என்பது போல, மனிதர்களின் கூட்டால் உண்டாக்கிய சமுதாயமும், மனிதர்கள் முறையாக அங்கு இருக்கிறார்களோ அந்த சமுதாயம் வாழ்வதற்கு உரிய நல்ல சமுதாயமாகிறது என்பது எனது திட நம்பிக்கை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 05 தொடரும்
73178723_10215272098978533_6972694231836000256_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qsBdXcoKxhcQ7kNvgF854PR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC1d9QhBzA9iK-Dh9lnVOikt-jy__99YvTAyvIiJGPwSQ&oe=6659BEA9 75279348_10215272100338567_9076462921013264384_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BoFlK7NHXEYQ7kNvgGr3L3k&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCKY8nGqM8fYsJ4Gd9Hli1c39lhnFJ034PFY0FAJSy-yw&oe=66599FBD 73226880_10215272101298591_6656020967342473216_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XcBuur9sdn8Q7kNvgFPEi-C&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCUKoFiDTHMCcDIKbub2vFpNE5xFb59dzvRcM1I1npZHw&oe=6659B712 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 05] 
 
 
கணியன் பூங்குன்றனார், 2300 ஆண்டுகளுக்கு முன் தன் புறநானூறு பாடல் 192 இல்
 
"நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியது மில்லை, வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு பெருகி வரும் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம் போல நமது வாழ்க்கை என்கிறார்.
 
அப்படித்தான் நமது வாழ்வும், இன்று பலவித கேடுதல்களை, தீமைகளை புரட்டிக் கொண்டு இன்னும் இந்த நவீன, நான்காவது தொழில்துறை புரட்சியாக பெருகி வரும் மின்னணு யுகத்தில் மிதந்து கொண்டு அதன் வழி போகிறோம். ஆனால் எவ்வளவு நாளுக்கு அது தனது பக்க விளைவாக விட்டு செல்லும் சீரழிவிற்கு இடையில் நாம் மிதந்து போக முடியும்? இது தான் இன்றய முதன்மை கேள்வியும் கூட.
 
மனித இனத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்கு உரியது. மாற்றத்திற்கு முக்கிய காரணம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. மாற்றங்களை பொதுவாக எவரும் விரும்புவர். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். ஆனால் அவை வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை தரக் கூடியவையாக இருக்கவேண்டும்.
 
இந்த உலகம் எப்படி இருந்தது என்று வரலாற்று ரீதியாக எவரும் கூறலாம், பெருமை படலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இன்று எமக்கு உள்ள பிரச்சனை.
 
"சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்" என்று திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக்க காண்கிறோம்.
 
சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் என்கிறது. அதாவது, சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
 
அதே போல பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான். நாமும் அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று இன்று வீட்டிலிருந்த படியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக வழி சமைத்தோம். இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது. இதனால், முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது.
 
இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞர்கள் வழி தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது. எனவே எதிர்காலத்தின் சிறப்பும் பெற்று, புதியதோர் உலகமும் பெற்றதோடு நிற்காமல் பக்க விளைவாக சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளையும் பெற்று விட்டோம் என்பதே இன்றைய உண்மையும் பலரின் குமுறலும் ஆகும்.
 
இன்றைய நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற மரத்தின் நுனியில் அதாவது அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் பண்பாடு போன்ற விடயங்களில் மிக மிக பின் தள்ளிக் காணப்படுகிறது. நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
 
இதனால் அதிகமாக, இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கி விட்டது மனித இனம்.
 
வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள், பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம், தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பாடசாலைகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர்.
 
"தெருவோர மதகில் இருந்து,
ஒருவெட்டி வேதாந்தம் பேசி,
உருப்படியாய் ஒன்றும் செய்யா,
கருங்காலி தறுதலை நான்~"
......
"ஊருக்கு கடவுள் நான்,
பாருக்கு வழிகாட்டி நான்,
பேருக்கு புகழ் நான்,
பெருமதிப்பு கொலையாளி நான்!"
......
"குருவிற்கு குரு நான்,
குருடருக்கு கண் நான்,
திருடருக்கு பங்காளி நான்,
கருவிழியார் மன்மதன் நான்!"
 
என ஒரு முறை நான் கவிதை எழுதியது ஞாபகம் வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. நற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் நல்ல கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம்.
 
விஷமா, அமிர்தமா? எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 06 தொடரும்
74232771_10215311127674226_3945095257158320128_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=00ZGvynmYqQQ7kNvgGj6XZy&_nc_oc=AdgdC3JVdHbWhxTyGzGJfLwHKWtn0cX2L5LqBs0XmL8YcTpSzeAFfSdi-JgagdpQM3uftvsY2TVyz2iDCpNIJjWE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDu34Sj60Z5LjBoDHMMJyx0WuRfR84OPZOZs-tfTx9Q1Q&oe=665A2A0A 74455579_10215311132194339_511304122738147328_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HF4pnPwE6TYQ7kNvgGMxSyG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDrwusHdXuOaB8GsrSN-ENFhXACytfrANJQd1gZZutzYQ&oe=665A357A 72912639_10215311130114287_231497654922641408_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eLrFZH9UoXQQ7kNvgEBCunh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBJvALQIRm2DQX-ycAMomWlsMOLuszcTcwd3FLkXZrzvg&oe=665A3B18 70184895_10215311133914382_7195295772538044416_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DqkFu6A8i30Q7kNvgEme1ip&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAqjCnlOqx_UMS22BPvhlfr_OVROzs0GxewjFeIpWK0ng&oe=665A4ACA 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 06
 
 
சமுதாய சீரழிவு குடும்ப சீரழிவு இவற்றுக்கு மூலகாரணம் ஒரு தனி மனிதன் தன் கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடான முறையற்ற வழியில் வாழ்வது ஆகும். கம்பராமாயணம்/ பால காண்டம்/ நாட்டுப் படலத்தில் பாடல் 38 இல்
 
"பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.",
 
அதாவது சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் என்கிறார் கம்பர். மேலும் 53 ஆம் பாடலில்
 
"உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்",
 
அதாவது பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்று கோசல நாட்டு சமூகத்தை புகழ்கிறார். என்றாலும் அந்த கோசல நாட்டு மன்னர் இராமன் தன், மனைவியை தீக்குளிக்க செய்ததும், மீண்டும் கர்ப்பணி மனைவியை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதும், அதன் பின் மீண்டும் ஒரு முறை தீயில் குளிக்க கட்டாயப் படுத்த அவள் பூமிக்குள் பாய்ந்து தற்கொலை செய்ததும் இந்த கோசல நாட்டில் தான்.
 
இங்கு நாம் ஆணாதிக்கத்தையும் ஒற்றை பெற்றோரையும் கூட காண்கிறோம். இங்கு அமிர்தத்தையும் காண்கிறோம், விஷத்தையும் [நஞ்சையும்] காண்கிறோம். ஒரு சமுதாயத்தில் குற்றங்கள் பொதுவாக குறைய வேண்டும் என்றால், அந்த சமுதாயத்தின் உறுப்பினர்களிடையில் பழிவாங்களை வெறுத்து அல்லது அஞ்சி வாழும் உறுப்பினர்கள் வேண்டும். அதே போல அவர்களை ஆட்சி செய்பவர்களும் இருக்க வேண்டும். உதாரணமாக, புறநானுறு 184,
 
"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே."
 
என்று பாடுகிறது. அதாவது, யானைக்கு, வாயளவு கொண்ட உணவாக, நெல்லை அறுத்து கொடுத்தால், ஒரு சிறு நிலத்தில் விளைந்த நெல் கூட பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், எந்த பெரிய வயல் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், தான் தின்பதை விட அதன் கால் பட்டு அழியும் நெல்லின் அளவு கூடுதலாகும். அது போலவே
 
ஆட்சியாளர், சரியான வரி திரட்டும் முறை தெரிந்து, அதன்படி மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அதைவிட்டு முறையற்று வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல், நாடும் [சமுதாயமும்] பயனற்று, சீரழிந்து போகும் என்கிறது.
 
ஆமாம், பல கலாச்சார மற்றும் சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்கள் காலப்போக்கில் இன்று பெருமளவு சிதைந்துவிட்டன, மேலும் மக்களின் இதயங்களில் இவைகளின் குடியிருப்பும் குறைந்து குறைந்து போகின்றன. நாம் நேர்மையாக சிந்தித்தால் அல்லது பார்த்தால், இதைப் பற்றி நிறைய உண்மைகளை நாம் காணமுடியும். இந்த குமுறல்கள் எம் சொந்த மனதில், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனதில் இன்று பெரிதாக ஒலிக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவைகளில் பல இன்று நேற்று எம்மத்தியில் தோன்றியவை இல்லை. இந்த மின்னணு [electronic] யுகத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளிற்கு அல்லது அதற்கும் முன்பே ஆரம்பித்து விட்டது.
 
இனி அந்த சீரழிவுகள் அல்லது குமுறல்கள் என்ன என்னவென்று விரிவாக பார்ப்போமா ? அதற்கு முன் நான் முன்பு எழுதிய பாடல் ஒன்றும் ஞாபகம் வருகிறது. அதை கீழே தருகிறேன்:
 
"பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை,வஞ்சகி
உனக்கு ஏனடி பாசாங்கு,ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை,பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!"
 
"அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா,பேரழிவை உண்டாக்கவா
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா,வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல,பெண்ணே! "
 
"உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல,ஒரு துளியே, வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது,வஞ்சகி?
உன் அறியாமை,நீ உண்மையில் குருடியே என்கிறது, பெண்ணே!"
 
"மனிதனின் இறுதித் தீர்ப்பு,நிலையற்ற இறப்பே,வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய்
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி, எதைசாதிப்பாய், வஞ்சகி ?
உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ, பெண்ணே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 07 தொடரும்
74480701_10215317610836301_5446657536562298880_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9N3FDNwI2soQ7kNvgFvAX3d&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBGd6BvDhAi24eZyFzVWP6AT0H3u5HKobf9W0VQWachmg&oe=665F7E51 75473948_10215317609556269_6979339529790423040_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qZBSSguU83IQ7kNvgEnNYRk&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDd_gzLX5Oxqt7MSQoFGLpeOWAKpIRNYsaxYxnG160JtA&oe=665F61C1 74693261_10215317612236336_635938576109928448_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YDBxsRvLpRIQ7kNvgG51_oK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCENztA9AymAaNTF5UX2rqtYSXXnUgp4AjD2j5j_J9_-g&oe=665F766B
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07
 
 
இன்றைய சமுதாயத்தின் சில அம்சங்களில், பெரும்பாலானவை இன்று அதிகமாக சீர்குலைகிறது அல்லது சரிகிறது என்பதை பலர் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது குறைந்தது அவையை கவனத்தில் எடுத்து ஒரு ஆய்வுக்காவது உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். எது எப்படியாயினும் விஞ்ஞானத்தை நாம் முழுக்க முழுக்க அறநெறி அல்லது வாழ்க்கைத் தரங்களில் [morality or living standards] இன்று உணரப்படும் சரிவுக்கு பொறுப்பு கூற முடியாது, அதே மாதிரி மக்கள் கூறும் இந்த சரிவுக்கு மதம் பொறுப்பு என்று முற்றிலும் கூறுவதற்கும் இல்லை.
 
இந்த "சரிவு", பொது மக்களிடையே, மதச்சார்பற்ற இடது சாரிகளால் மற்றும் மத சார்பான வலது சாரிகளால் [secular left and the religious right], மிகைப்படுத்தப் படும் பிரசாரம் போலவும் தெரிகிறது. மற்றும் ஊடகங்களின் கவர்ச்சியான கெட்ட செய்திகளால் வசப்படுத்தும் அல்லது வசீகரத்தைச் செய்யும் [media's fascination with bad news] செயலாகும் எனவும் நம்பத் தோன்றுகிறது. இது இன்று ஒரு வருந்தத்தக்க விளைவு ஆகும் என நாம் கட்டாயம் நம்பலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பொதுமக்களின் ஒட்டு மொத்த அறிவியல் மற்றும் கணித கல்வியறிவின்மையும் [overall scientific and mathematical illiteracy] இதற்கு ஒரு காரணம் ஆகும்.
 
உதாரணமாக சாக்ரடீஸ் [Socrates] அன்று, எழுத்துக்களின் எழுச்சியை விரும்பவில்லை, எதிர்கால தலைமுறையினருக்கு நினைவு கலை இதனால் அழிக்கப்படும் என அவர் வருத்தப் பட்டார். அவரைப் போன்ற கொள்கையுள்ள பலர் இன்றும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாம் நினைவில் வைத்துக்கொள்ள இந்த எழுத்து என்ற மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை, என்றும், ஆனால் அவை, எமக்கு நினைவூட்டிடவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது [You have not discovered a potion for remembering, but for reminding] என வாதாடினார் சாக்ரடீஸ். மேலும், அவர்கள் தங்கள் நினைவகத்தை பயன்படுத்தி பயிற்சி செய்ய மாட்டார்கள், மாறாக, அவர்கள் எழுத்தில் தங்கள் முழு நம்பிக்கையை வைப்பார்கள் என்றார். அதே மாதிரி, மனப்பான்மை கொண்ட 19 ஆம் நூற்றாண்டின் லுட்யைட்கள் [எந்திர உடைப்புக் கிளர்ச்சியாளர்/ Luddites] ஆரம்ப துணி [ஜவுளி] இயந்திரங்களை அழித்தனர்.
 
19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் சில உண்மைகளும் உண்டு என்பது போல சில நிகழ்வுகளையும் இன்று காண்கிறோம். அவைகள் பலவற்றை வேறு வடிவங்களில் இதிகாசம் புராணம் மற்றும் வரலாற்றிலும் முன்பே கண்டுள்ளோம். உதாரணமாக ஒரு உலகளாவிய வரலாற்று ஆய்வு, ஓரினச்சேர்க்கை [homosexuality] ஒன்றும் புதியது அல்ல என்கிறது. கி மு 385 இல் பிளாட்டோ ஆண்களுக்கு இடையிலான காதல் மிகவும் உயர்ந்த அன்பின் வடிவம் என்றும், பெண்களுடனான பாலியல் தொடர்பு ஒரு காமம் மற்றும் இனப்பெருக்கத்திற்கான வழி மட்டுமே என்றும் வாதாடுகிறார் [Plato argues that love between males is the highest form of love and that sex with women is lustful and only for means of reproduction].
 
கி மு 326 இல் ஓரின / இருபால் இராணுவ தலைவர் அலெக்ஸாண்டர், பெரும் தலைவர் [Gay/bisexual military leader Alexander the Great], மில்லியன் கணக்கான மக்களை ஓரின நட்பு - "ஹெலனிஸ்டிக்" [gay-friendly Hellenistic culture] கலாச்சாரத்திற்கு மாற்றினார். கிரீக்கில் [Greek] ஆரம்பித்த இந்த கலாச்சாரம், ரோமன் ஆட்சியிலும் தொடர்ந்ததை வரலாறு காட்டுகிறது.
 
முக்கிய சமயங்களை நோக்கும் பொழுது, பிராமண இந்து புராணம் [mythology], கிருஷ்ணர் அரவான் என்ற மகாபாரத வீரனை மணந்ததாகவும், மற்றும் அய்யப்பா கடவுள் சிவபெருமான் மற்றும் கிருஷ்ணருக்கு பிறந்தார் என்றும் கூறுகிறது. எனவே இந்து புராணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளையும் [Homosexuals and transgenders] காண்கிறோம்.
 
மேலும், பொது காலத்திற்கு முன் 200 க்கும் பொது காலம் 300 க்கும் இடையில் அதிகமாக எழுதப் பட்ட, பழங்கால சமசுகிருத பிராமண இந்துச் சட்டமான மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதியில், அத்தியாயம் 11 இல் செய்யுள் 174 & 175 இல், அயோனி (Non-Vaginal sex) பாலியல் பற்றி கூறப்பட்டுள்ளது.
 
உதாரணமாக ஆணும் ஆணும் கூடினால், அந்தந்த சூழலை பொறுத்து, அதற்கு பரிகாரமாக ஒரு வித தவம் கடைபிடிக்க வேண்டும் அல்லது தனது உடையுடன் குளிக்க வேண்டும் என்கிறது .[If someone ejaculates his semen in a man, he should perform the Santapana penance [174] & If a twice-bom [the condition or rank of a Brahman] has sexual intercourse with a man, in an ox-cart, on water, he should bathe with his clothes on.] அதாவது அது அசுத்தமானது என்று கருதி அதற்கு ஒரு பரிகாரத்தை மட்டும் எடுத்து கூறுகிறது. மற்றும்படி ஓரினச்சேர்க்கை பெரிய விடயமாக அங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
லேவியராகமம், அதிகாரம் 18:22 இல் "பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது." என்றும் ஆதியாகமம் 1:27, 28 இல் "ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார்,பின் அவர்களிடம் 'நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்" என்கிறது பைபிள். எனவே ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்கிறது எனலாம்.
 
அவ்வாறே 27:55 இல், “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” என்றும் கூறினார் என்கிறது குர்ஆன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 
பகுதி: 08 தொடரும்
75258471_10215367622006549_7662846286042759168_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=AsUWHtRaCvYQ7kNvgFNAUoP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA2-dfsl6LBcRar3XnXnjvx9_ESWvnj6i0Sh62AW-uVLA&oe=6664441B 76685345_10215367624926622_5275096309169127424_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FIGn3Ow27GMQ7kNvgHLDnwY&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAvql9n1d2_-Cmdkun0UfbauHgg7_2-jsJFz70G5MfQpQ&oe=66642BF9 75593830_10215367628486711_918194794486824960_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jTzWEjeIaqwQ7kNvgHeAMvv&_nc_oc=AdhrT5gq2HFOBC53FTnq81TPgz_SqCl1kkKIdwSvlrRG1zixzarVZsIGOYkznoK-Vk-Td5AtNEBNJfCS7Unls7Kh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAnt0GCAXEtn-ol1RKVxHQL_mXgKaX3OVcD9GE_oRShaA&oe=66642402 75349157_10215367630966773_6020733980721020928_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SoPjX3eFre4Q7kNvgHBUgwl&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA3WgOKj08z9VMViX3lHUojuhCjmxd-M-VUQTmVLMCgJA&oe=666449B2
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 08
 
 
ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.
 
'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்
பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்'
(கலி.133)
 
உதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும், அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.
 
"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே."
 
கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றித் துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது.
 
"கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம்.
 
எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.
 
 
1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]
 
2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family]
 
3] இணைய கலாச்சாரம் [internet culture]
 
4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]
 
5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].
 
6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]
 
7] வரலாற்று அழிப்பு [Erasure Of History]
 
8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]
 
9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture]
 
10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
   
பகுதி: 09 தொடரும்
75231862_10215375181635535_6811636437159510016_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BLSkpJgrPgQQ7kNvgH2aVHc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBKrR2TAGliL1mpfSUB-CRlkpgt5uSfFtbblxtofOr3_Q&oe=66684278 75636023_10215375174995369_4995022917726109696_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Okr-fKuk3YkQ7kNvgEkSJGw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6IciMij8EYHiIitxbPIO48lcVwP307Cf9Nuanpof6pw&oe=66684589 76609881_10215375184235600_6217962710064168960_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zuLL50Bd18UQ7kNvgFKvtDS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBeqLDlFEG9rJd-bc7Frc6yjXuJHfNDPGeFN-IF5Eib0w&oe=66685CA1
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09
 
 
1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]
 
 
பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது.
 
எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது.
 
அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ, நிலைநாட்ட முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இதை உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் மூலம் இனப்பெருக்கத்தையும், மற்றும் சமூகம் மூலம் சமூகமயமாக்களையும் குடும்பங்கள் செய்கின்றன [biologically through procreation, and socially through socialization].
 
குடும்பம் சமூகத்தின் அடிப்படை சமூக அலகு என்பதால், ஒரு சமூகம், சமுதாயம் நிலைத்து, வலுவாக நிற்க, சில குறிப்பிட்ட இயல்புகளை கொண்ட தனிநபர்களினால் அமைக்கப்பட்ட வலுவான குடும்பங்கள் எமக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கில் நாம் பார்க்கும் பொழுது கட்டாயம் ஒரு தனிப்பட்ட ஆணாலும் ஒரு தனிப்பட்ட பெண்ணாலும் அமைக்கப்பட்ட குடும்பம் ஒரு சிறந்த அமைப்பாக தென்படுகிறது, ஏனென்றால்,
 
 
1] குழந்தை தனது இயல்பான, உயிரியல் [natural, Biological] தந்தை மற்றும் தாயின் செல்வாக்கின் கீழ் வளர்க்கப் படுகிறது,
 
2] குடும்பங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை என்றால் அல்லது ஒரு இனம், இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், அந்த குடும்பங்கள் அல்லது அந்த உயிர் இனங்கள் அழிந்து போகும் அல்லது இறந்து போகும், அதனுடன் அவர்களின் அல்லது அவைகளின் சமூகமும் அழிந்து போகும்.
 
 
கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து பூரணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார்.
 
"தண்டு ழாய்முடி யான்தனி நாயகற்
கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான்
உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ
கொண்ட வேடம் இனிதென்று கூறினான்." [1458]
 
அதற்கு பாடல் 33 இல், திருமால்,சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று,
 
"அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463]
 
என வினவினார். மேலும் கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான கவர்ச்சிமிகு எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை நிர்வாண சிலைகள், இந்தியாவின் பெரும்பாலான பழைய இந்து கோவில்களின் கோபுரங்களில் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கஜுராஹோ - மத்தியப் பிரதேசம், மார்க்கண்டேஸ்வரர் கோவில் - மகாராஸ்டிரா, படவலி கோவில் - மத்தியப் பிரதேசம், ரணக்பூர் ஜெயின் கோவில் - ராஜஸ்தான், சூரிய கோவில் - ஓடிஸா, சூரிய கோவில் - குஜராத், ஓசியான் - ராஜஸ்தான், விருபாக்ஷா கோயில் - கர்நாடகா போன்றவை ஆகும். இது ஓரினச்சேர்க்கை அன்று புராண கதைகளில், கடவுள் துதிகளில் காணப்பட்டதற்கு சாட்சி பகிர்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
 
சுமார் 400 மிருக இனங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish] போட்டியாளர்களை ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி ,உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
பகுதி: 05 தொடரும்
 77327831_10215423232476776_3714931352789843968_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wRLMGGkBDWoQ7kNvgH0Ml0j&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCVqu34TMaVCpE_DtWZfuqS33_PrMwpAdj_fda9AyfxtQ&oe=666D802B 75540266_10215423230916737_5987910221442318336_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=V5W0XREIchMQ7kNvgHuuvbK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDtkg26gLkcERiB0AOSN_YMqJmTVRD3x85LXtVAGukXlg&oe=666D50B2
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 10
 
 
'பாலியல் நோக்குநிலை [sexual orientation]' தொடர்கிறது ... 
 
 
தற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே [gay] என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் [lesbian] என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால் சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் பொதுவாக வாய்ப்புண்டு.
 
கே என்ற சொல், உகவை அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் பழைய ‘gai’ என்ற பிரஞ்சு சொல்லில் இருந்து பன்னிரெண்டாம் நூறாண்டில் பிறந்த சொல்லாகும். இது தொடக்கத்தில் “joyful”, “carefree” “full of mirth”, or “bright and showy” இப்படி குறித்தாலும், பிற்காலத்தில் ஆண் - ஆண் உறவை குறிக்கும் சொல்லாக மாறியது, ஆனால், லெஸ்பியன் என்னும் சொல் வித்தியாசமான வரலாற்றை கொண்டுள்ளது. கி.மு 600ல் லெஸ்பாஸ் [island of Lesbos] என்ற தீவைச் சேர்ந்த, ஓரின சேர்க்கையாளரான ஸாப்போ [சாஃபோ / Sappho] என்ற கிரேக்கப் பெண்ணின் காதல் கவிதைகள் மூலம் அவர் எதிர்பாலினத்தை விட, தன் பாலினத்தின் மீதே அதிகம் காதல் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. சாஃபோ-வின் கவிதைகளில் பெருமபன்மை யானவை இன்று அழிந்துபோயின. பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும் லெஸ்பியன் என்ற சொல் சாஃபோ - வைக் குறித்தே உருவாக்கப்பட்டது. லெஸ்போஸ் தீவை பிறப்பிடப்பிடமாகக் கொண்டதால் சாஃபோ லெஸ்பியன் என்று அழைக்கப்பட்டார். அதுவே பின் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் சொல்லாக வழங்கப்பட்டது ஆகும்.
 
விஞ்ஞானிகளிடையே எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை அல்லது வேறு பாலியல் நோக்குநிலை [heterosexual, bisexual, gay or lesbian orientation], எப்படி, ஒரு தனிப்பட்ட ஒருவரிடம் உருவாகுகின்றன என்பதற்கான, சரியான தனித்தன்மை வாய்ந்த காரணம் பற்றி இன்னும் ஒருமித்த கருத்து இல்லை. பலர் இயற்கையும் மற்றும் வளர்ப்பும் காரணம் என்கிறார்கள். என்றாலும் பொதுவாக, ஒரு ஒருபால் மரபணு [gay gene] ஒன்று இருக்கலாம் என்ற கருத்து இன்று நிலவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாக ஒருவர், வளர்ப்பு காரணம் இன்றி, இயற்கையாகவே அப்படியான பாலுணர்ச்சியுடன், பிறந்து இருந்தால் ?, அது அவர்களின் தேர்வு அல்ல, எனவே நாம் அவர்களும் இணைந்து குடும்பமாக வாழ வழிவிட வேண்டும், அதில் ஒரு தப்பில்லை. ஆனால் என்னை ஒரு கவலையும் வாட்டுகிறது, ஏனென்றால்
 
 
1] அடுத்த தலைமுறைக்கு எமது நாகரிகத்தை கொண்டு செல்ல அவர்களால் குழந்தைகளை உருவாக்கும் தகுதி இயற்கையாகவோ அல்லது வேறு வழியாகவோ இன்னும் இல்லை. என்றாலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என யாரும் வாதாடலாம், அது பிழையில்லை, இன்றைய சூழலில் ,உதாரணமாக 2010 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள பாலியல் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை பாணியிலான தேசிய ஆய்வு [The National Survey of Sexual Attitudes and Lifestyles (Natsal) in Britons], வயது வரம்பு 16 முதல் 74 வரை உள்ள பெண்களில் 1% மற்றும் ஆண்களில் 1.5% தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதுகின்றனர் என்கிறது. மேலும் பெண்களில் 1.4% மற்றும் ஆண்களில் 1% பேர் தங்களை இருபால் உறவு கொண்டவர்கள் என கருதுகின்றனர் என்கிறது. அது மட்டும் அல்ல, வயது வரம்பில் 16 முதல் 44 வயது வரை உள்ள பெண்களிலும் ஆண்களிலும், இப்படியான ஓரின பாலின அனுபவங்களைக் கொண்டிருக்கும் விகிதாசாரம் கடந்த 20 ஆண்டுகளில் வியத்தகு அளவு கூடியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
 
உதாரணமாக பெண்களில், 1990 ஆம் ஆண்டில் 4% இருந்து 2000 ல் 10% மற்றும் 2010 இல் 16% ஆக உயர்ந்து உள்ளது காணப்பட்டுள்ளது - இது ஒரு குறுகிய காலத்தில், ஒருபால் உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை சுடிக் காட்டுகிறது, எனவே இந்த விகிதத்தில் அல்லது ஒரு ஏற்றத்தில் இந்த பாலின நடவடிக்கைகள் கூடிக்கொண்டு போனால், ஒருவேளை, ஒருகட்டத்தில் தத்து எடுக்க குழந்தைகளும் இல்லாமல் போகலாம் ? அல்லது அடுத்த தலைமுறைக்கு நாகரிகம் கலாச்சாரம் கடத்தும் வாய்ப்பு குறைந்து அதனால் சமூகம் சமுதாயம் உடையத் தொடங்கலாம் ?
 
2] எச்.ஐ.வி[HIV] தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் [MSM] என்று அறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன. இது ஏனென்றால் ஆண்களுடன் பால் உறவு வைத்துள்ள ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலியல் செயல், பொதுவாக, குதவழிப் பாலுறவு [anal sex] ஆகும். இது இயற்கையான யோனி பால் உறவை [vaginal sex] விட எச்.ஐ. வி பரவ வாய்ப்பு அதிகமென புள்ளி விபரம் காட்டுகிறது.
 
உதாரணமாக அமெரிக்க புள்ளிவிபரம் / எச்.ஐ.வி.அரசாங்கம் [U.S. Statistics / HIV.gov] இல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய மதிப்பீடுகள் படி [According to the latest estimates from the Centers for Disease Control and Prevention (CDC)]: 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 38,700 பேர் எச்.ஐ. வி நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒருபால், இருபால், மற்றும் ஆண்களுடன் பால் உறவு வைத்த ஆண்கள் மிகவும் பாதிக்க பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அந்த 38,700 பேரில், 26,000 ஆக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது [Gay, bisexual, and other men who have sex with men bear the greatest burden by risk group, representing an estimated 26,000 of new HIV infections per year.]. அதேபோல, 2017 இல் :ஒருபால் மற்றும் இருபால் ஆண்கள், மொத்த எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் 66% ஆக இருந்ததுடன், மொத்த எச்.ஐ.வி ஆண்களில் 82% ஆக இருந்தனர் [Gay and bisexual men accounted for 66% of all HIV diagnoses and 82% of HIV diagnoses among males.] என்பது, இந்த பாலியலின் ஆபத்து தன்மையை வெளிக் காட்டுகிறது.
 
அமெரிக்க தரவுகளைப் பயன்படுத்தி 2009 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபால் திருமணத்தை அனுமதிப்பதன் மூலம் புள்ளி விவர ரீதியில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிகிறது. 2014 இல் மற்றொரு அமெரிக்க ஆய்வு, ஒரே பாலின ஜோடிகளை திருமணம் செய்வதற்கு அனுமதித்தது, எதிர் பாலின திருமண விகிதத்தை குறைத்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுடிக் காட்டுகிறது.
 
மேலும் ஒருபால் திருமணம் அனுமதிக்கப் பட்டு, சமூகத்தின் மேலான அதன் தாக்கத்தின் விளைவுகளை அல்லது பாரம்பரிய திருமணத்தின் சமூக நோக்கத்தை அது பலவீனப்படுத்துகிறதா என்பனவற்றை கண்காணிக்க ஒப்பீட்டளவில், எமக்கு ஒரு குறுகிய கால இடைவெளி மட்டுமே இருந்து உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சிகளில் இருந்து கிடைக்கப் பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முதல் கட்டம் என்பதால், அதன் முடிவுகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 11 தொடரும்
77230689_10215429686678127_8806265111082696704_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bVLBfyJSFwEQ7kNvgH1WFnh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAbGHLQYKq-nnz-uXRCyzXe8ZDSbIZrYCTTq7FNdxbeZA&oe=66755B5F 77255346_10215429690478222_6230685902138507264_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-ds55Td030gQ7kNvgF0h9B9&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAVwCwLfVZuIOsP6kwIKJIGf8T6xvkYuv-UTBJoGeq6Jw&oe=667559C2 75603919_10215429687718153_2637141882890616832_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Pv82qP8TlYsQ7kNvgGKY3FZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAJug5h3pXY-_DidUhaFlLSArGbRaA4io3OrLYBVbbeaw&oe=66756820
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடை கிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11
 
 
2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family]
 
 
எந்த நபரின் அல்லது எந்த ஒரு குழுவின் வாழ்வி லும் குடும்பமே அவரின் அல்லது அவர்களின் முதலாவது சமூக குழுமம் ஆகும் [social community]. இங்கு தான் தம்மை பிணைச்சு, கலாச்சாரத்தின் மதிப்புகளை புரிந்து கொள்ளுவதுடன், சமூக நடத்தை அனுபவத்தையும் [social behavior] பெறுகிறது. இந்த குடும்பத்தில் தான், தமது முதல் இன்பத்தையும் மற்றும் துன்பத்தையும் கண்டு அனுபவிக்கிறது. இவைகள் எல்லாம், பின் பரந்த உலகிற்கு முகம் கொடுக்க அந்த நபருக்கு உதவுகிறது. எனவே குடும்பம் என்பது, தனிநபர்கள் ஈடுபடும் வெறும் நடவடிக்கைகள் அல்ல, இது ஒரு சிக்கலான சமூக அமைப்பு ஆகும். இங்கு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தன்னேரில்லாத தனிச் சிறப்புப் பண்பு கொண்ட உறுப்பினராகவும் அந்த முழு குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
ஒரு சில தசாப்தங்களின் இடைப் பட்ட காலத்தில், பெற்றோர் பிள்ளைகளுடன் பாட்டி, தாத்தா, அத்தை, மாமாக்கள் என பாரம்பரிய நீட்டிக்கப் பட்ட குடும்பம் [traditional extended family] இருந்தது. இன்று அது சுருங்கி தனிக் குடும்பமாகவும் சிலவேளை ஒற்றை பெற்றோர் குடும்பமாகவும் குறைந்து விட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணம் செய்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் ஒரு குடும்பம் என பழைய வரையறை கூறுகிறது. அவர்களுடன் சில வேளை பாட்டன் பாட்டியும் அடங்கும். என்றாலும், அந்த வரையறை பல ஆண்டுகளுக்கு முன், அதிகமாக வழக்கொழிந்து விட்டது. இன்று காலத்தின் மாறுதலையும் கவனத்தில் கொண்டு குடும்பம் என்பதற்கு ஓரளவு விட்டுக் கொடுப்புகளுடன் புதிய வரையறை செய்யப் பட்டுள்ளது. அதாவது குடும்பம் என்பது எந்த பாலினத்தையும் கொண்ட, திருமணம் செய்த அல்லது செய்யாத இரு பெற்றோர்களை அல்லது சிலவேளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொண்டதாகவும், இருவருக்கும் அல்லது ஒருவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும், அல்லது அவர்களில் எவருக்கும் பிறக்காத தத்து எடுத்த பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.
 
பொதுவாக, திருமணம் சார்ந்த குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடித்தளமாகும். இதை எமக்கு வரலாறு போதித்துள்ளது, உதாரணமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க காலத்திலேயே திருமணம் என்ற சடங்கு ஆரம்பித்து விட்டதாக தொல்காப்பியர் மூலம் அறிகிறோம். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான் றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர் என்று ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’ (பொருள் 143) என தொல்காப்பியர் கூறுகிறார். பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும்நிகழாவாம்.
 
ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஒன்றுதான் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நல்ல தருணம் என்றும், அதை பாரம்பரிய குடும்ப மாதிரி [traditional model of family] ஒன்றே இலகுவாக மிகத் திறமையாக கொடுக்கவல்லது என்றும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் ஆதரவு வழங்குகின்றன. சில குடும்ப சூழ்நிலைகள் துரதிருஷ்டவசமாக இதை நிர்வகிக்க முடியாது இருப்பதுடன், ஒற்றை பெற்றோர் [single parent] தங்களால் முடிந்தவரை சிறந்ததை செய்ய இன்று போராடுகிறார்கள். நல்ல திருமணம் மற்றும் நிலையான குடும்பங்கள் இல்லாமல், ஒரு வலுவான சமுதாயம் இருக்க முடியாது என்று வரலாறு எமக்கு பாடம் படிப்பிக்கிறது. எனவே தான், திருமணங்களுக்கு ஊக்கமளிக்கவும் பாதுகாக்கவும் சமுதாயம் சட்டங்கள் இயற்றி அவ்வற்றை நடைமுறைப்படுத்தின.
 
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெசொப்பொத்தேமியா பெண்களின் வாழ்க்கையை அங்கு காணப்பட்ட பெண் தெய்வம் குலாவிற்கான [goddes Gula] துதிப்பாடல் ஒன்று
 
"நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி"["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"]
 
என கூறுவதன் மூலம் தெரியப் படுத்துகிறது. எனவே பெண்கள் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை / முன் மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதைத் தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. இப்படிதான் அங்கு குடும்ப வாழ்க்கை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதையும், அங்கு அவை உறுதிசெய்யப்பட்ட ஒரு கல்யாணத்தில் முடிந்தது என்பதையும் காண்கிறோம்.
 
பொதுவாக ஒரு சமுதாயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து சம்மதத்துடன் வாழவேண்டும். அத்துடன் ஒவ்வொரு உறுப்பினரும் சட்டத்தை மதித்து பின்பற்றி, தமது பங்களிப்பை நல்ல முறையில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான உறவு கொண்டிருக்க வழிவகுக்க வேண்டும். இயன்றவரை மோதல்களை தவிர்த்து, தீர்மானங்கள் மூலம் அங்கு எமக்கு தேவையானவற்றை அடையாக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
 
மற்றும் தம்பதிகள் அங்கு ஒருவருக் கொருவர் விசுவாசமாக இருக்கும் ஒரு சந்தர்ப் பத்திலேயே அந்த சமுதாயம் ஒரு சிறந்த வெற்றிகரமான சமுதாயம் எனப் பொதுவாக அறியப் படும். ஏனென்றால் 'குடும்பம்' சமூகத்தின் மிக முக்கியமான சமூக அலகு ஆகும். எனவே குடும்பங்கள் வலுவாக இருக்கும்போது தான், சமூகம் வலுவாக இருக்கும் என்பது ஒரு அடிப்படை விதியாகும். ஆனால் இன்று நிலைமை அதிகமாக இவ்வற்றிற்கு முரணாக உள்ளது. உதாரணமாக, இன்றைய மன அழுத்தம் அதிகம் நிறைந்த உலகில், அனைத்து திருமணங்களில் குறிப்பிடத் தக்க ஒரு பங்கு விவாகரத்தில் பரவலாக பல சமுதாயத்தில் முடிவடைகின்றன. இது குடும்பங்களை பலவீனமாக்கி, சமூகங்கள் உடைய வழிவகுக்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 12 தொடரும்
77386699_10215498648962141_623714588084404224_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ql58E2i0ahoQ7kNvgE6CqfC&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDCesChB9ncpjqPLRH_4hzwHIDXqbGM_apBrqsqtKQscA&oe=667EADF6 78375051_10215498651602207_4568275667275218944_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DBqh0eU6EbkQ7kNvgG0zNrj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD4qWItBOqc4X26X1TPeotjEXnabhXBpyHwfEHpX4ya8w&oe=667EB24A
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 12
 
 
குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] இன் இரண்டாம் பாகம் தொடர்கிறது
 
 
எந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனெனில் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும்.
 
இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.
 
குடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.
 
அதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையத் தளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம் எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம்.
 
உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும்.
 
பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:
 
 
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."
 
 
அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.
 
ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட முடிவு செய்தது.
 
"யாது ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 13 தொடரும்
78060611_10215505749139641_2799837597705175040_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=D84gsk0HZ64Q7kNvgGqIeb2&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBsEcRdR1_K-75IA-3zjRkLNRB6-KJK-7pGR6PONvh9IA&oe=6681E257 79359890_10215505757219843_2078441073759223808_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=E1Rs69Gab-cQ7kNvgFkxnhf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCbjoBTm8Ms5ild_m9D2NcpwVb4NFHNWS1XgpTfe-gg-g&oe=66820B6B 78549608_10215505756139816_4423645323642011648_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3kc9pe_5D3QQ7kNvgEHchFj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAsLSRJF4FZ15JaGcrQwSjKkp9t_5BZoSonhY1_ffPlyQ&oe=6681E1B078490804_10215505759459899_4523313166481883136_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jPakFjbqxUUQ7kNvgF8Jv-8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBtXLTWU2HbgICpNWGknnkdDbA5og9ythFkBxUZ_rdTog&oe=668207B0
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 13

 

3] 'இணைய கலாச்சாரம் [internet culture]'
 
இணையம் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த, புதுமையான மற்றும் பிரபலமான கண்டு பிடிப்பு என்று நாம் எடுத்து கொள்ளலாம். 60-களில், இராணுவம் மற்றும் கல்வித் திட்டத்திற்காக ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து, இணையமானது விரைவாக முன்னேறி இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது.
 
உதாரணமாக, கடந்த நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பு, இணையத்தின் ஒளி அற்ற, அந்த பழைய பாடசாலை நாட்களில், நாம் மற்றவரினது குறிப்பேடுகளில் அல்லது காகித துண்டு ஒன்றில் எழுதுவதன் மூலம் ஒருவருக் கொருவர் இணைத்தோம். அது தான் எமது இணையத் தளம். இன்னும் எனக்கு பசுமையாக நினைவு இருக்கிறது, எப்படி நான் ஒரு சில பேனா நண்பர்களுடன் அன்று தொடர்பு கொண் டேன் என்பது. எனினும், அதன் பின் கால ஒட்டத்தில், அதையும் அந்த ஒன்று இரண்டு நண்பர்களையும் நான் முற்றாக மறந்தும் விட்டேன்.
 
ஆனால், இன்று இண்டர்நெட் எங்கள் இருப்பை தலைகீழாக மாற்றிவிட்டது. உதாரணமாக அன்று என்னுடன் முதல் முதல் இணைந்த பேனா நண்பர் எப்படியோ என்னை இணையத் தளத்தில் கண்டு பிடித்து இன்று அண்மையில் மீண்டும் நண்பராக வந்துள்ளார் என்பது ஆச்சிரியத்திற்கு உரியதே !
 
ஆமாம், இன்று தகவல் தொடர்புகளை இணையம் புரட்சிகரமாக மாற்றி உள்ளது. அது எமது அன்றாட வாழ்வுடன் ஒன்றி விட்டது. இன்று கிட்டத் தட்ட எல்லாவற்றிற்கும் நாம் இணையம் பயன்படுத்துகிறோம். இப்ப நான் உங்களுடன் என் கருத்தை பரிமாறுவது கூட இந்த இணையத்தின் உதவியாலேயே!. மேலும் சில உதாரணமாக, ஒரு பீஸ்ஸாவிற்கு [pizza] அனுப்பாணை [Ordering] செய்வது, ஒரு தொலைக்காட்சி வாங்குவது, ஒரு நண்பருடன் ஒரு கணம் பகிர்ந்து கொள்வது, உடனடி செய்தியுடன் ஒரு படத்தையம் இணைத்து அனுப்புவது, இப்படி பல வேலைகளுக்கு இணையத்தை பயன் படுத்துகிறோம். இணை யத்திற்கு முன்னைய காலத்தில், ஏதாவது உலக மற்றும் உள் நாட்டு செய்திகள் அறிய வேண்டும் என்றால், நீங்கள் பத்திரிகைக் கடைக்கு போய், பத்திரிகை கடை திறந்த பின் வாங்கி படிக்க வேண்டும். அல்லது நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஒரு கடிதம் போட்டால், அதற்கு மறுமொழி வரும் வரையும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு அழுத்துதலில் [click] உங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்கு உடன் அறிய முடியும்.
 
மிகப்பெரிய இதிகாசங்களுள் ஒன்று தான் மகாபாரதம். மகாபாரதமானது பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் மகன்களிடையே நடைபெற்ற பெரும் போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இதில், கண் பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்க்களத்தின் அருகே இல்லாமல், அரண் மனையில் இருந்தபடியே தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார் என இந்த இதிகாசம் கூறுகிறது. இது இன்றைய இணைய தளத்தை எமக்கு நினைவூட்டுகிறது.
 
மேலும் இன்று பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலை தளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும் அதிகமாக உள்ளன. உதாரணமாக முகநூல், ட்விட்டர், லிங்க்ட் இன், மை ஸ்பேஸ், கூகிள் +, யூடியூப் [Facebook, Twitter, Linked in, My space,Google+, Youtube], போன்றவை கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ (Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளன. தற்சமயம் ‘வாட்ஸ் அப்’ (Whats App) என்ற வலைதளம ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
 
இண்டர்நெட் நிச்சயமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதுடன், இணையத்தள மக்களின் பெரும் பான்மை இளைஞர்களாகவே காணப் படுகின் றனர். எல்லா நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் இது உண்மையாக இருப்பதுடன் தமிழ் மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாக நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் ஒருவரின் வாழ்க்கை. அது போலவே, எல்லா பொருள்களின் பயன்பாட்டிலும் கட்டாயம் நன்மையும் தீமையும் இருக்கும். எனவே தான் வள்ளுவர், குறள் :504 இல்,
 
”குணம் நாடி குற்றமும் நாடி மிகை நாடி மிக்க கொளல் ”
 
என்று அறிவுறுத்தி சென்றுள்ளார், அதாவது ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது பாடலின் பொருள், அப்படித்தான் பொருள்களையும் தேடவேண்டும். கணியன் பூங்குன்றனார் கூறியது போல, தீதும் நன்றும் பிறர்தர வாரா, நாம் பாவிக்கும் விதத்தில் தான் இருக்கிறது.
 
ஆகவே இணையமும் அவ்வாறே எனலாம். அங்கும் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு. சமுதாயத்திற்காக அது செய்தவை கணக்கிலடங்கா எனினும், அதுவும் நாம் பாவிக்கும் விதத்தைப் பொறுத்தது. எனவே தீமைகளை எமக்கு சொல்லிக் கொள்ளாமல், மௌனமாக செய்து கொண்டும் தான் இதுவும் இருக்கிறது.
 
கற்றலும் மற்றும் அறிவைப் பகிர்தலும் இணையத்தின் காரணமாக இன்று எளிதாக இருந்தாலும், அதன் மறு பக்கத்தையும் நாம் இன்று கட்டாயம் அலசவேண்டித்தான் உள்ளது. உதாரணமாக, கணினியில் ‘வைரஸ்‘ என்ற அபாயமும் உண்டு. மேலும் மின்னணுக் கருவிகளின் கழிவுகள் மறுசுழற்சி செய்ய இயலா குப்பைகளாக சேர்ந்துகொண்டு சுற்றுப் புறத்தை கேடு மிக்கதாக ஆக்கிக்கொண்டும் தான் இது தொழிற்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனை சோம்பேறியாக்குகிறது. அத்துடன் இன்று பல்வேறு விதமான தீமைகளுக்கும் இதை பயன்படுத்துகின்றனர்.
 
இந்த இணையம், உண்மையில் ஒரு மனிதனை அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ, மிகப்பெரிய கெடுதலான தாக்கமாக, தனக்கு அடிமை ஆக்குகிறது [addictive]. ஒருவர் தொடர்ச்சியாக மற்றும் வழக்கமாக இணையத்தை பலவிதமான பாவனைகளுக்கு உபயோகிக்கும் பொழுது, அதன் பழக்கத்திற்கு அடிமையாய் இல்லாமல் இருப்பது மிக மிக கடினம். இதை எல்லோரும் அறிவர், எனினும் கட்டுப்படுத்துவது தான் சிரமம். இதனால், ஒருவர் இணைய பழக்க அடிமைத்தன கோளாறு [Internet addiction disorder (IAD)] என்ற நோய் ஒன்றுக்கு உள்ளாகலாம்.
 
உடலளவிலும், உள்ளத்தளவிலும் சில பழக்கங்களில் தங்கியிருத்தலை பழக்க அடிமைத்தனம் என்று குறிப்பர். சில பழக்கங்கள் தீங்கு தரும் பின் விளைவுகளைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றினால் கிடைக்கும் திருப்தி காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மூளைச் சமநிலையற்ற தன்மை பழக்க அடிமைத்தனமாகும். இந்த பழக்க அடிமைத்தனம் ஒருவருடைய உடல் நலம், உள நலம், சமூக வாழ்க்கை போன்றவற்றைப் பாதிப்பதுடன், ஒரு நோய் நிலையாகக் கருதப்படக் கூடியதும் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 14 தொடரும்
82407485_10215866494718055_6182251268178706432_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_q7yLnLfCtoQ7kNvgGgRN_0&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAug2ce7xK81h40vOcH7q42ybyQPRpvgYMl8TAWv32ezQ&oe=66883034 82627196_10215866497118115_750230662333595648_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=dsodqh9WGlIQ7kNvgEgjAyE&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDUbDSuaXPiJbxtf2tl1_lPwaAwp_GV0klGBw0Zt8O7Jg&oe=66882706 83200653_10215866496638103_5589283135490621440_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=e5G9fQryevgQ7kNvgHAZ1DV&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAJeE_1u9SZHdtDaetUqWakvRgtqIQRcDyetswWbPf8kA&oe=66882EB7
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 14 [இணைய கலாச்சாரம் தொடர்கிறது]

 

 

இணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு, அது, பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [sedentary lifestyle] ஒருவரை உள்ளாக்குவது ஆகும். கிட்டத் தட்ட அனைத்தையும் ஓர் சில அழுத்தத்தின் [clicks] மூலம் கையாளலாம் என்றால். யார் தான் தமது உடலை அசைக்க [physical movement] விரும்புவர் ? இது தான், இந்த குறைபாட்டிற்கு காரணம்.
 
வைப்பிடுதல், வணிகம், வைத்தியசாலைக்கு முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் அல்லது உங்கள் கனவு வீட்டை தேடுதல் [banking, shopping, booking hospital, paying bills or searching your dream home] போன்ற அத்தனையையும் இணையத்தில் மிகவும் எளிதாக நாம் செய்யலாம். ஆனால் இது உண்மையில் இளைஞர்களை நோய்க்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே நாம் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் மனத் தளர்ச்சி [Obesity, Heart Ailments and depression] ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்.
 
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பல வழிகளில் அம்பலப்படுத்துவது, மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்தி திணிப்பது, மற்றும் முக்கிய அரசாங்கத் தகவல்களை திருடுவது போன்ற கெட்ட செயல்களுக்கும் இது உடந்தையாவது எம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
 
இவைகளுடன் குழந்தை பாலுணர்வு [ஆபாச] படைப்புக்கள், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு [Child Pornography, Recruitment for terrorism purposes] மற்றும் மக்களை தீவிரப்படுத்துதல் [radicalize people], துன்புறுத்தல் [Harassment] போன்ற செயகளுக்கும் இணையம் வழிவகுக்கிறது.
 
எனவே இணைய பாவனை ஒரு வழியில் ஒழுக்க சீர்கேடுகளையும் [moral decadence] சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது பாலுணர்வு [ஆபாச] படைப்புக்களாகும். மற்றது தவறான மற்றும் தப்பு வழியில் அழைத்துச் செல்லக்கூடிய [false and misleading] செய்திகளை, தகவல்களை பரப்புதலாகும். ஆகவே எம்மில் எழும் முக்கிய கேள்விகள்,
 
 
1] நிகழ்நிலை [online] யில் செலவழிக்கும் காலம் அவர்க ளின் நேரடியான சமூக இணைப்புகளை பாதிக்கிறதா [social connections] ?
 
2] இணையம் சமூக நெறி முறைகளின் வலுவை அல்லது பிடியின் செறிவை குறைக்க [dilution of social norms] பங்களிப்புச் செய்கிறதா ?
 
இணையம் பொதுவாக மக்களை, மக்களுடனான நேரடி தொடர்பில் இருந்து [in-person contact] தூக்கி எறிந்து, அந்நியப்படுத்துவதுடன், நிஜ உலகத்துடனான தொடர்புகளுக்கான வாய்ப்புகளை துண்டிக்க ஊக்கு விப்பது, இன்று ஒரு பரவலான கவலையாக உள்ளது. இணையம் மக்களை வசப்படுத்தி, இயங்கலையில் [online] பல மணிநேரம் செலவழிக்க தூண்டுகிறது. அதனால், அவர்கள் கணனி திரைக்கு முன், வெளியே அயலவருடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் கூடிப் பேசாமல், கதிரையில் இருந்து காலம் கழிக்கிறார்கள். இப்படி எதுவாகினும் உங்கள் நேரத்தில் கூடிய பங்கை எடுப்பது, உங்கள் ஆரோக்கியத்தை, கட்டாயம் எதோ ஒரு வழியில் பாதிக்கும்.
 
மேலே கூறியவாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருக்கும் மக்கள் ஒரு எதிர்மறையான பக்க விளைவுகளை அதிகமாக சந்திக்கலாம். உதாரணமாக, கண்கள் சோர்வு அடைதல், சமூகத்தில் இருந்து ஒதுங்குதல், அல்லது தூக்கம் இல்லாமை போன்றவை [eye strain, social withdrawal or lack of sleep.] வரக்கூடும். அது மட்டும் அல்ல, கணனியில் ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் அல்லது மக்களுடன் பலமணிநேரம் வாதிடுபவர்களும் கூட இதே நிலையைத்தான் பெறுவார்கள். என்றாலும் சமூக ஊடகத்தில் அடிமையாகிறதே எல்லாவற்றையும் விட கொடுமையானது.
 
இன்று இந்த நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற இணைய சாதனங்களை [smartphones and other devices] பலர் தம்முடன் எடுத்து செல்வதால், இணையத்தில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினமாகும். மேலும் அவர்கள் இந்த வசதிகளால் கூடுதலான நேரம் தம்மை அறியாமலே முகநூல், கீச்சகம் மற்றும் படவரி [Facebook, Twitter and Instagram ] போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலான நேரம் செலவளிக்கிறார்கள். இந்த தளங்களுக்கு பழக்க அடிமையாகி விடக்கூடியவர்களுக்கு, இது அவர்களின் வாழ்க்கையிலும், அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கட்டாயம் ஒரு தீங்கு விளைவிக்கும்.
 
உதாரணமாக, வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு மற்றும் முகத்திற்கு முகம் சந்திக்கும் உறவு போன்றவற்றை குறைத்து விடும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் நடுநிலையானவை, அவைகள், உதாரணமாக கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது, போன்றவை இன்றைய உலகில் சில சில விடயங்களுக்கு தேவையானவை, ஆனால் மற்றவைகள், உதாரணமாக, ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் , ஒன்லைன் உறவுகள், போன்றவை வலுவான உணர்ச்சிகளை, அதனால் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை.
 
நாம் வாழும் இன்றைய நூற்றாண்டு நம் கையை விட்டு நழுவி பெரும்பாலும் இணையத்தின் பிடியில் அகப்பட்டுள்ளது. இந்த இணையம் என்ற தளமும் பிற தளங்களை போன்று மக்களை காக்கவும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது.
 
இணையத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இன்று அழிந்தார்கள் என்பது கூடிக்கொண்டு போகிறது. உதாரணமாக, இணையத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் 14 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. அத்துடன் இவர்கள் அதிகமாக, தினமும் பயன்படுத்தும் சூழலையும் காண்கிறோம். இன்றைய இணையத்தில் பெருவாரியான ஆபாச செயல்கள் பயன்படுத்தப் படுகிறது என்று ஒரு கணிப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைய சமுதாயம் ஆபாசமயமாகி வளர சந்தர்ப்பம் அதிகமாகிறது. இப்படியான ஆபாசத்தின் விளைவுகள், உதாரணமாக, சுயஇன்பம், விபச்சாரம், ஓரினசேர்க்கை, என்று பல வித பாதிப்புக்களை இந்த சமூகத்தில் உருவாக்கி உள்ளது.
 
இன்றைய காலக் கட்டத்தில் கைத்தொலை பேசி, நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் பகுதி ஆகிவிட்டது. உதாரணமாக கைத்தொலை பேசியின் திரையில், பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றார்கள். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய கைத்தொலை பேசி, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால். கணனியில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இன்று கொண்டு உள்ளது.
 
ஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணி நேரம் செலவிடுகின்றீர்கள்? செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்குமெனில் உங்களைப் பற்றி கவலையடையத் தேவயில்லை.
 
யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். எனவே, இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும்.
 
இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம் என எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே காணப்படுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 15 தொடரும்
82777556_10215919914933527_1534644711678017536_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZFSIofEPGdYQ7kNvgHQ9gk9&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCsgyj0Gl4cbeKHDRYI2lX6zQbbP8CBOfoMkac7pyffaA&oe=668F8A1D 83094600_10215919918093606_3225055783964114944_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PWIHEM57QagQ7kNvgH_6-4E&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBhHdWBaTvEixhKqNfxNLr8X0BpRv64yWOI4ngUg84kFQ&oe=668F8E06 82953417_10215919917453590_7375253742599274496_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zzUy_e4eUUwQ7kNvgGXEGRD&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBESvID-ybuUlxs1GeAFeIBLptrSSttG79RyUEO1Gngnw&oe=668F9A2F
 
 
 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
 
 
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 08
 
 
4] தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]
 
 
மீவுமனிதர் [Transhuman] என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அல்லது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செலுத்த போகும் உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே.
 
மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வு கூறுகின்றனர். இதன் அடிப்படையில், 2017, இல் ,தானாக இயங்கி செலுத்தும் மோட்டார்க் காரை உருவாக்கிய முன்னைய கூகிள் விஞ்ஞானி [former Google self-driving car developer Anthony Levandowski], அந்தோணி லெவண்டோவ்ஸ்கி, "எதிர்காலத்தின் வழி" ["Way of the Future"] என்ற ஒரு புதிய மத அமைப்பை உருவாக்கினார். இந்த புதிய "தேவாலயம்" செயற்கை நுண்ணறிவு [artificial intelligence] மனிதனை விட உயர்ந்த ஒரு சத்தியென புகழ்ந்து, நம்மை அது எதிர்காலத்தில் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள அதை வணங்க வேண்டும் என போதிக்கிறது.
 
செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டியிணைத்தல் அல்லது ஒன்று சேர்த்தாலே அவரின் இறுதி இலக்கு ஆகும். இப்படி வேறு சிலரும் முன்னின்று செயல்படுகிறார்கள். கூகிளின் பொறியியல் இயக்குனர், ரே குறவெய்ல் [Ray Kurzweil], 21 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன், ஒரு நுட்பியல் ஒற்றைப்புள்ளி [technological Singularity] ஏற்படும், அதாவது தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது.
 
இம்மாற்றம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக எதிர்கூறமுடியாது, ஆனால் குமுகம் (சமூகம்), அரசியல், சூழல், பொருளியல் என அனைத்து தளங்களிலும் இந்த மாற்றம் இருக்கலாம், அத்துடன் மனித இருப்பின் பொருள் அல்லது தன்மையைக் கூட இந்த நிகழ்வு மாற்றி அமைக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. சுருக்கமாக ஒரு இயந்திரங்கள் மற்றும் கணினிகளின் தொகுதி, மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் என்கிறார்.
 
மேலும் இன்றைய மேற்கத்திய நாகரிகம் [Western civilization] இந்த கொடூரமான சம்பவத்தால் வாழ முடியாமால் போகலாம் என்று ஊகம் கூறுகிறார்.
இன்று உலகின் உயர்ந்த உயிரினமாக மனிதன் காணப்படுகிறான். அவன் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தில் பாரிய வளர்ச்சி அடைந்து, நினைக்கும் எதையும் செய்து முடிக்கும் வல்லமை படைத்தவனாக விளங்குகிறான். உலகில் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு உயிரணுவில் உருவான உயிரியல், பரிணாமம் அடைந்து, இன்று மனிதனாக இருக்கிறான். ஆனால் அதனினும் வியப்பு, இது முற்றுப்பெறாத மாற்றமாக, பரிணாமமாக இன்னும் தொடரும் என்ற ஊகம் தான். அதன் விளைவைத்தான் மீவுமனிதத்துவம் [Transhumanism] என்ற மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில் நுட்ப துறைகளுக்கு ஆதரவான இந்த இயக்கம் ஆகும். உதாரணமாக, ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த இயக்கம் முயல்கிறது. மீவுமனிதர் என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் ஒரு உயிரினம் என்ற ஒரு கருதுகோள் ஆகும்.
 
கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [“Gilgamesh Epic”/ written c. 2150 - 1400 BCE] முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க வழி தேட தூண்டும் ஒரு உந்தலை காண்கிறோம். உதாரணமாக, இந்த இதிகாசத்தில், ஒரு கட்டத்தில், என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசியும் உற்ற நண்பரும் தனது சாவைப் பற்றிய கவலையை கில்கமெஷிடம் தெரிவிக்கிறான். அதற்கு கில்கமெஷ் இவ்வுலகில் எவருமே நிரந்தரமாக இருப்பதில்லை, நம் வாழ்வு குறுகியது, முகில் போலக் கலைந்து போகும்; என சிரித்து அதை நிராகரிக்கிறான். என்றாலும், என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, இறப்பு அற்ற நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடி, மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறிய முயற்சிக்கும் கில்கமெஷின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. கில்கமெஷ் அழியாத வாழ்வை பெறாவிட்டாலும், 126 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும் [the Sumerian King List records his reign as 126 years] மிகப்பெரிய வலிமை கொண்டவனாகவும் இருந்தான் என்கிறது.
 
அதே போல மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி, பாற்கடலை கடைந்து அங்கு திரண்டெழும் (சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தை அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆனால் பின் மகாவிஷ்ணுவின் உதவியுடன் ஏமாற்றி, தேவர்கள் மட்டும் குடிக்கும் ஒரு "பால் கடல் கடைதல்" என்ற புராண கதையை இந்து புராணத்திலும் காண்கிறோம். இவையும் சாகா உயிரை அல்லது மனிதனை உண்டாகும் ஒரு பண்டைய கற்பனை முயற்சியே எனலாம்?
 
ஆனால் ஒரு உண்மையான முயற்சி ஒன்றை, கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் யிங் ஷெங் [Ying Zheng] என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் ,கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, [Qin Shi Huang, 'First Emperor of Qin, 18 February 259 BC – 10 September 210 BC ] என்பவர், தான் பெற்ற அதிகாரத்தையும் வலிமையையும் நிரந்தரமாக பாதுகாக்க, என்றென்றும் இறைவா வாழும் யோசனை ஒன்றை கொண்டிருந்தார். தனது கடைசி காலத்தில், புராணத்தில் கூறப்பட்டிருந்த, அனைத்து நோய் நிவாரணியான அமுதம் ஒன்றை [mythical elixir of life] இறைவா மருந்தாக அருந்த பாடுபட்டார். ஆனால் அவர் பாதரச மாத்திரைகளை [mercury pills] அந்த முயற்சியில் சாப்பிட்டு தன் உயிர் நீத்தார் என வரலாறு கூறுகிறது.
 
என்றாலும் அவரின் சாவிற்கு பின்பும் அவர் ஆரம்பித்த முயற்சி நிற்கவில்லை. ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டில், சீன துறவிகள், அப்படி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் கண்டு பிடித்தது தான், உடனடி இறப்பை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்க வழிசமைத்த வெடிமருந்து [gunpowder] ஆகும். தேச ஆராய்ச்சிக்காரன், பொன்சே டி லியோன் [Spanish explorer Ponce de Leon,1474 – July 1521] என்பவர், பூர்வீக கரீபியன் தீவுவாசிகள் [native Caribbean islanders] மூலம் அறிந்த ஒரு கதை, அவரை பிமினி [an island known as Bimini] என்ற ஓர் தீவில் உள்ளதாக நம்பப்படும் ஒரு மாயாஜால நீரின் நீர் என்று அழைக்கப்படும் இளைஞனின் நீரூற்று [“fountain of youth”] ஒன்றை தேட தூண்டிவிட்டது.
 
நவீன உலகில் முதிர்ச்சியடைதல் பெரிய குறைபாடாகிறது. வலுவான, உறுதியான உடல்கள், மென்மையான, சுருக்கம் இல்லாத தோற்றம், விரைவான சிந்தனை மூளை, அவர்களில் இளைஞர்களைப் போன்ற சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் பொது ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கான வழிகளை மக்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். இவரும் அப்படியான நம்பிக்கையில், அதாவது அந்த நீரூற்றில் நீந்தினால் ஆயுளை அல்லது உயிர் ஆற்றலை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கையில், தனது தேடுதலை தொடங்கினார். அந்த தேடுதலில் அவர் கண்டு பிடிச்சது தான் புளோரிடா மாநிலம் [state of Florida]. ஆனால், அவரால் அப்படி ஒரு நீரூற்று ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 16 தொடரும்
84444810_10215984383265195_7922105076263419904_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=E2YZE4NqHV4Q7kNvgEaoVZh&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDWleaLgSG6UEPIuQlU2hc7hVqNi-pgl5w7QX9TOn4DTw&oe=6692B269 84471332_10215978719563606_1045794403085451264_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gZzOBpwhMS8Q7kNvgHZpeE5&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBZz0vYoQwZIYOQf3FKJbmUouklO3IWOVRQHjXUW7O1Sg&oe=6692B073 No photo description available. No photo description available.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 16 [தொழில்நுட்பத்துடன் இணைத்தல் தொடர்கிறது]

 

"பால் கடல் கடைதல்" என்ற புராணத்தில், அங்கு கடைந்து எடுத்தது ஒரு இறப்பில்லா வாழ்வு தரும் அமுதம் என்பதால் தேவர்கள், தங்களுடன் சேர்ந்து கடைந்த மற்றவர்களை ஏமாற்றி தாம் மட்டும் உண்டதற்கு மாறாக,
 
'ஒரு மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும்' என்கிறது தமிழரின் கொன்றை வேந்தன்.
 
அது மட்டுமல்ல புறநானுறு 91 இல், பெரிய மலையிடத்து மிகவும் இடருக்குப் பின் பெற்ற அரிய நெல்லிக்கனியை உனக்கென்று கொள்ளாமல், அதன் சிறப்பை எனக்குச் சொல்லாமல், ஈந்து எனக்கு இறப்பில்லா வாழ்வு ஈந்தனையே என்று அதியமான் நெடுமான் அஞ்சியை, அவ்வையார்;
 
 
"பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"
 
 
என்று வாழ்த்திப் பாடுகிறார். இது தான் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு. இன்றைய தொழில் நுட்பத்தில் மனிதன் இறைவா தன்மையை [Human immortality] அடைதல் சாத்தியமாக தெரியவில்லை. என்றாலும் உயிரியல் ரீதியாக [biologically] நித்திய ஜீவன் [eternal life] ஒன்றை அடையாக கூடிய சாத்தியக் கூறுகளை, இறப்பில்லா உயிரி என அழைக்கப்படும், ஒரு இன ஜெல்லிமீன் அல்லது இழுது மீன் [one species of jellyfish, Turritopsis dohrnii] ஒன்றில் காண்கிறோம்.
 
அந்த குறிப்பிட்ட ஜெல்லிமீனின் வாழ்க்கை வட்டம், 'பொலிப்' (Polyp) என்ற குழந்தை பருவத்தில் ஆரம்பித்து, 'மெடுசா' (Medusa) என்ற முதிர்ந்த பருவத்தை அடைகிறது, அதன் பின் அது இறப்பதற்குப் பதிலாக மீண்டும் குழந்தை பருவமான 'பொலிப்' பிறகு திரும்பி வந்து மீண்டும் தனது வாழ்க்கை வட்டத்தை அழிவில்லாமல் தொடர்கிறது. இது மனிதனுக்கு ஒரு தெம்பு தரும் சான்றாகும்.
 
ரஷ்ய இணைய முக்கியஸ்தரான டிமிட்ரி இட்ஸ்கொவ் [Russian Internet mogul Dmitry Itskov] இப்படியான நம்பிக்கையை, அவரின் புதிய முயற்சி 2045 [2045 Initiative] மூலம் அடையலாம் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த முயற்சியை பெப்ரவரி 2011 இல் ஆரம்பித்து, ரஷ்ய வல்லுநர்கள் பலருடன் இணைந்தது, இன்று செயலாற்றுகிறார். ஆனால் இது முற்றிலும் ஒரு உயிரியல் முயற்சி அல்ல. இது மனிதனையும் இயந்திரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். அதனால் ஒரு மீவு மனிதனை பரிணாம படுத்துதல் ஆகும்.
 
மீவு மனிதன் என்பது "Humanoide" எனப்படும் எந்திர மனிதன் ஆகும். மீவு மனிதன் இயற்கையாக பரிணாமம் அடைந்து தோன்றினால், அதனால் பெரிதாக கெடுதல் ஒன்றும் ஆகாது. ஆனால் மனித இனத்தின் மீது செயற்கையாய் திணிக்கும் முயற்சி அப்படி இல்லை. மீவுமனிதத்துவதுக்கு உட்பட்ட மனிதனை "Post-Human" என்றும் அழைக்கலாம். இந்த சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மனிதர்கள் இயல்பாகவே குறைபாடு [inherently flawed] உள்ளவர்கள் என்றும் அதை தொழில் நுட்ப படைப்புகளால் மீட்கலாம் என்றும் நம்புகிறார்கள்.
 
மெய்மை அல்லது ஒன்றின் உண்மையான நிலை [reality] யை இவர்கள் ஒரு சிறைச்சாலையாக பார்ப்பதுடன், ஒரு மாய உலகிற்கு [virtual world] தப்பித்து போக முயலுகிறார்கள். அத்துடன் இவர்கள் மரணத்தை இல்லாமல் ஒழிக்கவும், அறிவை மேம்படுத்தவும், மனிதத் தெய்வத்தன்மை அடைவதற்கும் [to cheat death, enhance intelligence, and achieve human godhood], இவர்கள் மனிதனை இயந்திரங்களுடன் இணைக்க முயல்கிறார்கள். இது தான் இன்றைய மனித சமுதாயத்தின் பெரும் கேள்வியாக உள்ளது.
 
நாம் என்ன யோசனையை தழுவியிருந்தால், மனிதகுலத்தின் நலனுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக, இடைஞ்சலாக இருந்து இருக்கும்? என்று யாராவது கேட்டால், இன்றைய காலகட்டத்தில், கட்டாயம் அது மீவுமனிதத்துவம் [Transhumanism] என்றே கூறலாம். ஏன் என்றால் அது மனித இனத்தை, அதன் உயிரியல் கட்டுப்பாடுகளிலிருந்து [biological constraints] விடுவிப்பதை நோக்கமாக கொண்டது. அதனால் வரும் விளைவு, நன்மையா தீமையா இன்னும் சரியான பதில் இல்லை?
 
ஒரு மட்டத்தில் இயக்கத்தின் இலக்குகள் தீங்கற்றதாகத் தோன்றினாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனித பரிணாமத்தை மிக தீவிரமாக்கி, முடிவில் இன்றைய மனிதனை அது இல்லாமல் செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. அதன் பின் ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் ஆட்க்கொள்ளும் மனிதர் [posthuman] தோன்றுமாம் ?
 
இன்று செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டிஇணைப்பதாலும் [fuse human civilization with artificial intelligence], மற்றும் ஒவ்வொரு புது கண்டு பிடிப்புகளாலும், நாம் சமுதாயத்துடனான எம் தொடர்பை மேலும் மேலும் துண்டிப்பதை அல்லது குறைப்பதை காண்கிறோம். என்றாலும், இவையை அளவோடு நாம் கடைப்பிடிக்கும் பொழுது, இவை பெரிதாக எம்மை, எம் சமுதாயத்தை பாதிக்கப் போவதில்லை, அதை பொறுத்தவரையில் சந்தோசம். ஆனால், எதுவும் எல்லை மீறினால் பிரச்சனை தானே? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நம்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 17 தொடரும்
84163443_10216035670307339_4620486883158261760_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hWCnbNHsbdUQ7kNvgHGdPIB&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCZQj3qlvdpyw0Qi4U0ALc_aUlrHPkae34p_-HKlp6yhA&oe=6699FC64 No photo description available. 84521545_10216035670827352_6275285826087682048_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QHQPAOycVCUQ7kNvgHKN6Hx&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDaU_jb7ES7rjGTrtKaY6P6ADZFdkaRLR_zNn9xZRWbYQ&oe=669A0C59 84442084_10216035671667373_4782715361365590016_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wZzWWE_jMVIQ7kNvgEQEzXl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCT0cwJadGPxgDvFIU5q9gI0b3Ia93fro4z_a62RBQrhA&oe=669A0108 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 17

 

 

5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture]
 
 
இன்பவியல் [Hedonism] என்பது இன்பமே மதிப்புப் பெற்ற ஒரே இலக்கு என்ற கோட்பாடு ஆகும், சிலர் இன்று அதற்க்கே அடிமையாகிறார்கள். அது எப்படி தம்மை கெடுக்கும் என்று எள்ளளவும் கவலைப் படுவதில்லை. உதாரணமாக, ஒரு உணவு எனக்கு உருசி என்றால், அந்த "உணவு" கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்றவற்றை கொடுக்கும் என்றாலும் எந்த கவலையும் இன்றி இப்ப இன்பமே அதை விட எனக்கு பெரிது என்று சாப்பிட்டு மகிழ்வதை குறிக்கலாம்.
 
வாழ்வு சலிப்பாக உள்ளதா? வாழ்க்கை எம்மை மூழ்கடிக்கிறதா? "ஓ, நான், நாள் முழுவதும் வீடியோ விளையாட்டு [video games] விளையாடுவேன். எனக்கு இந்த உண்மையான உலகம் தேவையில்லை" என்று எந்த மக்களுடனும் சமுதாயத்துடனும் பெரிதாக பங்கு பற்றாமல் இருந்த இடத்தில் சந்தோசம் என்று களித்து உடல் பருமனையும் நோயையும் வரவழைப்பதையும் மேலும் ஒரு உதாரணமாக கூறலாம்.
 
அதாவது ஒரு பரந்த அடிப்படையில், மகிழ்ச்சியை மட்டும் தனக்கு அதிகரிக்க முயற்சித்து, அதன் மூலம் தனது வலியை குறைக்க முயலும் ஒரு செயல் என்றும் கூறலாம். ஆனால் இந்த அவர்களின் கட்டாய கலாச்சாரத்தால், புத்திசாலித்தனமான, பொறுப்பான வாழும் வழியை [sensible, responsible way to live] அவர்கள் நிராகரிப்பதை காண்கிறோம். இது தான் எமக்கும் சமுதாயத்திற்கும் கவலை தரும் விடயம்.
 
ஒரு மனிதனுக்கு காதலனின் அல்லது காதலியின் சீராட்டு மகிழ்ச்சியை தருகிறது, அதே போல, ஒருவருக்கு ஒரு இசை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களித்தல், அல்லது வெறுமனே ஒரு தீவிரமான நாளின் பின், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்குதல் போன்றவை கட்டாயம் அவனுக்கு அல்லது அவளுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நடவடிக்கைகள் உண்மையில் நல்லவையே, அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.
 
என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல, ஒரு மனிதன் முற்றும் முழுதாக ஒன்றில் சார்ந்திருத்தல், ஒரு பழக்கத்திற்கு அடிமையாதல், அளவுக்கு மீறி உண்ணுதல் அல்லது குடித்தல், மற்றும் கட்டாய நுகர்வு [Dependence, addiction, bingeing and compulsive consumption] போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
 
முன்னர் மகிழ்ச்சியைத் தந்த நடவடிக்கைகள் அல்லது பழக்கங்கள், எந்த கட்டத்தில் சிக்கல் நிறைந்ததாக மாறும் என்று நாம் சரியாக குறித்துக் காட்ட முடியாது. என்றாலும், உதாரணமாக, எப்போதாவது ஒரு போதை பானம் பியர் [Beer/ஒரு வகைச் சாராயம்] அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு காலை படுக்கையிலிருந்து எழும்பும் போது ஏதாவது ஒரு போதை பானம் தேவை என்ற நிலைக்கும், இடையில் இந்த பிரச்சினைக்கு உரிய நிலையை நாம் கடந்து இருப்போம் என்று கூறலாம்.
 
பென்தாம் (Bentham) என்பவர் கூறும் இன்பவியல் கோட்பாடு ஆண்டாளுக்கு முற்றிலும் பொருந்தும், எல்லா நேரங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு நோக்கத்தின்பால், நடத்தைக்கு உட்படுகிறான். அந்த நோக்க வெற்றியின் இறுதியில் கிட்டும் மகிழ்ச்சியைச் சுவைப் பதற்க்கே ஒருவன் அவ்வாறான நடத்தைக்கு உட்படுகிறான் என்கிறார்.
 
உதாரணமாக, நாணம் மிகுதியால் நிந்திப்பது போல் மீண்டும் மீண்டும் நினைத்து திருமாலைப் பற்றி பேசுவதும் மற்றும் இது போன்ற ஆண்டாளின் செயல்களும், அவள் பெருமானையே நினைக்கும் நோக்கில், அவள் உண்மையில் சுவைக்கும் இன்ப நிகழ்ச்சிகளைக் நாம் காணலாம். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் என கருதப்படும் ஆண்டாள், பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்து, திருமாலைக் காதலிப்பதாகவும் – அத்திருமாலையே மணமுடிக்க வேண்டு மென்று துடிப்பதாகவும் அவரின் பாடல்கள் அமைந்தன எனலாம் . இதில் அவள் தன்னில் எழும் காதல் உணர்ச்சியையும் – காம வேட்கையையும் தீர்த்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். இதனால் அவள் நடத்தை, - இன்று சிலர் முற்றும் முழுதாக ஒன்றில் அடிமையாவது போல, உதாரணமாக பாலியல் வீடியோ- அப்படி மாறி, அதில் அவள் இன்பம் துய்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். உதாரணமாக திருப்பாவை, பாடல்-19 இல் அவளின் இன்ப ரசனையை மிக தெளிவாக காணலாம்.
 
 
“குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...”
 
 
இதன் அர்த்தம், படுக்கை அறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பலவாறு சுகம் கண்டவன், அவளது கொங்கைகளை தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்று கேட்கிறாள் என்கிறது.
 
இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது.
 
எழுத்து கண்டுபிடிக்கப் பட்ட பின், கி மு 2100 அளவில் எழுதப்பட்ட மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh], சிடூரி [ Siduri] என்பவர்,
 
"உங்கள் வயிற்றை நிரப்புங்கள், பகலும் இரவும் மகிழ்ச்சியாகட்டும், நாட்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கட்டும், பகலும் இரவும் நடனமாடி இசை முழங்குங்கள்..... இந்த விடயங்கள் மட்டுமே மனிதர்களின் [ஆண்களின்] அக்கறையாகட்டும்" [Fill your belly. Day and night make merry. Let days be full of joy. Dance and make music day and night ... These things alone are the concern of men]
 
என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு வகையில் பார்த்தால், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இன்பவியல் வாதத்தை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனலாம். அதே போல, "ஆசை செழிக்கட்டும், உங்களுக்கான துடிப்புகளை இதயம் மறக்கட்டும், நீ வாழும் வரை உமது விருப்பத்தைப் பின்பற்றுங்கள் [Let thy desire flourish, In order to let thy heart forget the beatifications for thee.Follow thy desire, as long as thou shalt live.], என்ற கி மு 2030 க்கும் கி மு 1640 க்கும் இடைப்பட்ட பண்டைய எகிப்தின் ஹார்ப்பரின் பாடல் [Harper's Songs] ஒன்றும் இன்பவியல் வாதத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 18 தொடரும்
86346370_10216087070352308_1925106377605251072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=m81wsY1TmSoQ7kNvgFtM3ez&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCZaUkWJ_o1It1hLxteiE0tiW0n3UVE9c7HCWEeFXcMYA&oe=669D284B 84306029_10216087070792319_5948253809145806848_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Nm3PcA6Lda0Q7kNvgEJ2JRh&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBbbsia0o3yd6KwKL74ACMBThX7YrBWrMriiNvPzL6C8w&oe=669D4DE6 83316367_10216087071632340_7125850399084380160_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-73Wm9eP2pQQ7kNvgGVaLIQ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAaPfsGX1KDLb0jtkIrl1PBwOyzD_Wf8bL0dqbNJIFvfA&oe=669D3038 84480884_10216087072432360_6847478970036781056_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XIEQfsyp8vgQ7kNvgE7GP2A&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDa_0WvyunG7eEkwyeM55Q3Df3Vx9uFpQCi4VHSBPKqBQ&oe=669D3FD6
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 18

 

5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture] தொடர்கிறது

 

இன்பம் என்றால் என்ன ? உண்மையில் இன்பம் என்பது நம் இயல்பே ஆகும். உதாரணமாக சர்க்கரை இனிப்பானது என்றாலும், அதன் இனிப்பை ஒருவன் நுகர ஆயத்தமாக உள்ள அளவே, அது ஆனந்தம் தருகிறது. எனவே இன்பதுன்ப நுகர்ச்சிக்கு மனப்பான்மையே பொதுவாக காரணமாகிறது.

பொதுவாக எல்லா உயிர்களும் சுவையான பண்டங்களைப் புசித்து வாழ்வதுதான் இயல்பு. அப்பொருளில் உள்ள சுவையை ரசித்து உண்ணும் பொழுது ஆனந்தம் அடைவதையே இன்பம் என்கிறோம். இப்படி சுவைத்துப் பழகியவர்களுக்கு அது கிடைகாகாத பொழுது துன்பம் என்கிற உணர்வு ஏற்படுகின்றது. எனவே இந்த இன்ப துன்ப நுகர்வுகளில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும் அல்லது அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பொறிவாயில் ஐந்தையும் கையாளவும் கட்டுப்படுத்தவும் பழக வேண்டும்.

சுவை என்கிற பொழுது நாவடக்கம் என்கிற புலனடக்கம் தேவைப்படுகிறது. இப்படி ஒவ்வொரு புலன்கள் மூலம் நுகரும் இன்ப நுகர்வுகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதற்கு அடிமையாகி விடுவதைத் தவிர்ப்பதற்கே புலனடக்கம் தேவைப்படுகிறது. இயல்பாய் ஒருவரை இரு என்றால், அது புலனடக்கம் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது. புலன் இச்சை வழி சென்று, அளவு முறையின்றி, இயங்குவது உங்கள் இயல்பல்ல. அதை நீங்கள் புரிய வேண்டும் . பொதுவாக தன் மனதை வென்றுவன் உலகையே வென்றவனாவான் என்பது கோட்பாடு.

 

இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருளை அடைவதற்கான அல்லது ஒரு உணர்வைத் தீர்ப்பதற்கான, ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஒரு உளவியல் சக்தியாகும். [Lust is a psychological force producing intense wanting or longing for an object, or circumstance fulfilling the emotion].
 
இச்சை என்பது பாலியல், போதை, பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். சாதாரணமாக உணவின் மீதான இச்சை என்பது தேவைக்கான உணவைத் தேடுவதிலிருந்து வேறுபட்டதாகும். உதாரணமாக தொல்காப்பியத்தில் இன்பவியல் கோட்பாட்டில், 'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு' [காமத்துப்பால், 1103] என்ற பாடல் “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை விட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது என கூறுகிறது.
 
இங்கு ஒரு அன்புக்கான ஒரு துணையின் தேடுதலை காண்கிறோம், இது கட்டாயம் "தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன், தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்றும் "பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்மதன் போல் லீலை செய்தான் தாலேலோ" என்பதில் இருந்தும் வேறுபட்டது. வாழ்வது ஒரு முறை வாழுங்கள் கவர்ச்சியாய் என்று சிலவேளை விளம்பரங்களை, குறிப்பாக ஆடை விளம்பரங்களைக் காண்கிறோம். அதே போலத்தான் இதுவும், வாழ்வது ஒருமுறை , எனவே எமக்கு பிடித்ததில் விடாமல் தொடர்ந்து இன்பமாக களிப்போம் என்கிறது. ஆனால் அதனால் வரும் கேடுகளை அது கவனிப்பதில்லை.
 
ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் அவை துன்பத்தில் முடிவடைகின்றன. அதனைக் கவனியாமல், அதில் பழக்கமாகி, ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் பொதுவாக.
 
மேலும் ஏன் அவர்கள் இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதற்கான சரியான காரணத்தை அல்லது விளக்கத்தை கொடுத்து, அதற்கான பயிற்சிகளை கொடுத்தாலும், அவர்கள் தமது பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெறவும் முடிவதில்லை. இது தான் இன்று கவலைக்குரிய விடயமாகும். எனினும் நேரத்துடன் இவையை உணர்ந்து செயல் பட்டால், அவை சாத்தியமாகும்.
 
கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவரான எபிகியூரசு [Epicurus /341 கிமு – 270 கிமு], "சாப்பிடுகையில், மிகுதியாக ஒருவர் சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அது பின்னர் அதிருப்திக்கு வழிவகுக்கும், இதனால் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சுவையான உணவை வாங்க விருப்பம் இல்லாத ஒரு கடுமையான உணர்வை பெறுகிறார்" என்று வாதிடுகிறார்.
 
எனவே அவர் "புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் நியாயமானதாகவும் வாழாமல், ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ முடியாது, அதேபோல, ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழாமல், அவர் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் நியாயமானதாகவும் வாழமுடியாது" [“It is impossible to live a pleasant life without living wisely, honorably, and justly, and it is impossible to live wisely, honorably and justly without living pleasantly.”] என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்.
 
அவரை அடிக்கடி இன்பவுணர்ச்சி அனுபவிப்போன் அல்லது சுகக்காரன் அல்லது ஸுகி [hedonist] என்று குற்றஞ்சாட்டினாலும், இது உண்மையில் அப்படி இல்லை என்பதைக் காட்டுகிறது. இவ்வுலகில் தோன்றிய உயிரினங்கள் யாவற்றிற்கும் இன்பம் தோன்றுவது இயற்கையே எனினும் அது மனம் பொருந்தியவழி மட்டும் இன்பமுள தாகும் என 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரும் “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.”[தொல்.பொருளதிகாரம்-219] என கூறுகிறார்.
 
இந்தியாவில் கி மு 600 இல் தோன்றிய சாவகம் [Charvaka / சார்வாகம்] என அழைக்கப்படும் உலகாயதம், வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதை தாழ்மையுறச் செய்ய, மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் எனப் பெயரிடப்பட்டது என சில அறிஞர் கூறுவார்.
 
இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் இன்று நேற்று தோன்றியது அல்ல, உதாரணமாக, கி.பி. 37லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்த, மிகப் பெரிய சுக போஜன சிற்றின்பப்பிரியரான காலிகுலா [Caligula] ஒரு பித்துப்பிடித்த அரசராக வரலாறு சித்தரிப்பதுடன், கி.பி.41 இல் இவரது மெய்க்காவல் படை, அமைச்சர்கள் மற்றும் அரசவையினர் சேர்ந்து செய்த கூட்டுச்சதியில் இவர் தனது 29 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார்.
 
அதே போல இன்றைய நவீன உலகில், எர்ரோல் பிளின் [Errol Flynn] என்ற ஒரு ஹாலிவுட் நட்சத்திர நடிகர், அவருடைய "அனைத்தையும் முயற்சி செய்" தத்துவம் அவரை ஹெராயின் மற்றும் கோகோயின் [heroin and cocaine] உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, அவரை 50 வயதில் இவ்வுலகத்தை விட்டு மறையச் செய்துவிட்டது. அவரின் வாழ்வு மகிழ்ச்சியின் போலித்தனத்தை எடுத்துரைக்கிறது.
 
எல்விஸ் பிரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், விட்னி ஹூஸ்டன் [Elvis Presley, Michael Jackson, Whitney Houston] மற்றும் பல பிரபலங்கள் இப்படித்தான் வாழ்வை முடித்தார்கள். தற்போதைய நேரத்தில் ஒரு "நல்ல இன்ப நேரம்" முழுக்க முழுக்க இருக்க வேண்டும் என்று அனுபவிப்பது உண்மையில் நல்வாழ்வின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று உளவியலாளர்கள் இன்று நிறுவியுள்ளனர்.
 
ஒருவர் தனக்கு வேண்டிய மகிழ்ச்சியை, முழுக்க முழுக்க இன்பவியல் [Hedonism] மூலம் மட்டுமே கண்டு எடுக்க முயல்வது, ஒரு நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்காது, அது உங்களை ஒரு அர்த்தமற்ற தன்மைக்கும். வெறுமைக்கும் [sense of meaninglessness and emptiness] இட்டு செல்ல வழிவகுக்கிறது எனலாம்.
 
மறுதலையாக, வாழ்வில் முழு ஈடுபாடும், பொது நலப்பண்பும் மற்றும் சுய-வளர்ச்சியும் இருப்பின், அல்லது அவையின் அடிப்படையில் அமைத்தால், கவனமாக பயிரிடப்பட்ட ஒரு தோட்டம், எப்படி வளமான மற்றும் ஏராளமானதாக மாறுமோ அப்படியே இதுவும் வாழ்விற்கு உயர்ந்த கருத்தை, மகிழ்வை கொடுத்து நிறைவேற்றுகிறது எனலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 19 தொடரும்
87468594_10216140879617506_3375578474835083264_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fGyz6HMaxUEQ7kNvgHSW9qj&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDGCUzOQ9zI0U8NUKUdveMHVVN8skpr6h3AzS-_BL9VEA&oe=66A0B0A9 No photo description available.No photo description available.  No photo description available.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 19 


6] பிரபலங்களை வழிபடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]


நமக்கு உதவி செய்தவர்களை நாம் பொதுவாக மதிக்கிறோம், வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். உதாரணமாக, பிச்சைக்காரர்கள், தமக்கு சோறு இட்டவரை கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம் -செடி - கொடி - புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர், வாழ்த்தினர். அவை இருக்கும் இடத்தில் ஏதோ ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்ததாலும், நம்பியதாலும், அப் பழக்கம் நாளடைவில் ஒரு கடவுள் வழி பாடாக மாறியது.

 

இற்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் “கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”, அதாவது கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி என்ற வரியைக் காண்கிறோம். மேலும் சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள் “திங்களைப் போற்றுதும் - ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று கூறுவதையும் காண்கிறோம். இவை எல்லாம் அங்கு எதோ ஒரு சத்தி, வல்லமை, ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஏற்பட்ட வழிபாடாகும். அதை ஒற்றித்தான் நடுகல் வழிபாடும், பின் குலதெய்வ வழிபாடும் வந்தன. அதன் பரிணாம வளர்ச்சியில், இன்று தம்மை கவர்ந்த தமது ஹீரோக்களையும் வழிபடத் தொடங்கினார்கள் எனலாம். 


ஒரு வகையில் ஏற்ற, சிறந்த நபரை, ஒரு முன் மாதிரியான நபரை அல்லது ஒரு பிரபலமான நபரை வியந்து பாராட்டுதலை, போற்றுதலை ஹீரோ அல்லது தனி நபர் அல்லது கதாநாயகன், கதாநாயகி அல்லது வீரன், வீராங்கனை வழிபாடு என்று இன்று கூறப்படுகிறது. என்றாலும், இந்த வழிபாடு ஒரு அடிப்படை தேவைகளையும், அதாவது அவரை மாதிரி அல்லது அவரை பின்பற்றி தாமும் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஒரு தேவையையும் உள்ளடக்கி இருப்பதால், இதன் மூலத்தை நாம் பல பண்டைய நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கி.மு. 1900 ஆண்டை சேர்ந்த பபிலோனியன் [Babylonian], தமது வாழ்வில் எதோ ஒரு வகையில் சிறந்து விளங்கிய சிலரை புராண ஹீரோக்களாக [mythic heroes] தரம் உயர்த்தியதை அவர்களின் கல்வெட்டில் இருந்து காண்கிறோம், அதே போல தமிழகத்தில் பெருங்கற்காலமான கி.மு.1000 - 300 இலும், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்'  என வள்ளுவர் கூற்றின் படி, வீரச் சாவு அடைந்த வீரர்களைப் போற்றி வீரக்கல், நடுகல் வைத்து, தமக்கும் அவனை மாதிரி ஒரு வீரம் அல்லது நல்ல குணம் வேண்டி, வழிபடும் கலாசாரம் தமிழர்கள் மத்தியில் தோன்றியது.


"இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்"


[புறநானூறு 329]


வீட்டிலே காய்ச்சிய கள்ளை அந்தச் சிற்றூரில் உள்ள குடும்பத்தினர் கூட்டமாகச் சென்று முன்னோரின் நடுகல்லுக்கு பகல் பொழுதில் படையல் செய்வர். அப்போது நடுகல்லை நாராட்டுவர். நெய்யிட்டு விளக்கேற்றி வைப்பர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டான புகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப் பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. எனவே, தங்கள் திறமை மற்றும் நல்லொழுக்கங்களில் சிறந்த, வெற்றிகரமான மக்களை, அவர்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வும் அல்லது அவர்களை பார்த்து தாம் ஒரு உத்வேகம் பெறவும், அந்த வெற்றியாளர்களை வழி படுவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும், பாராட்டுகள் அதிகப்படியாக ஒரு எல்லையை தாண்டும் பொழுது, துன்புறுத்தக் கூடிய அல்லது அசாதாரணமாக இருக்கும்போது, அந்த ஹீரோ வழிபாட்டிலும் பிரச்சினைகள் எழுகின்றன என்பது இன்று நாம் காணும் உண்மையாகும்.


ஒரு உண்மையான, திறமையான ,பெருமைப்படக் கூடிய ஒரு திரைக் கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ அவர்களிடம் உள்ள திறமையை மட்டும்  போற்றி பாராட்ட வேண்டுமே ஒழிய, அதை விடுத்து அவரையே கொண்டாடி, பெரிய கடவுள் நிலைக்கு உயர்த்தி தனி மனித துதி அல்லது ஹீரோ வொர்ஷிப் செய்வது, குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து உள்ளது.

 

அவர்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்களே, தமிழகத்தில் நடிகர்களின் அபிமானிகள், அவர்களின் விருப்ப நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைப்பது மட்டுமல்ல, நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி, தனி மனித துதி பாடுவது, பால் அபிஷேகம் செய்வதுடன், மன்றங்களுக்கு இடையில் போட்டா போட்டியும், சண்டையும் கூட நடை பெறுகின்றன. அது மட்டும் அல்ல, அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அலுவலகங்கள் வரை தனி மனித வழிபாடுகள் தலைவிரித் தாடுகின்றன.

 

காலில் விழுவதில் காட்டுகிற அக்கறையைக் கருத்துச் சொல்வதில் காட்டுவார்களா? இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட கணியன் பூங்குன்றனாரின் புறநானுறு 192 , தக்கோர் [அறிஞர்] ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை, பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை என 'முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று பாடினார்.

 

எனவே பிறரை அளவுக்கு அதிகமாக புகழ்பவர், தன்னைத் தானே தாழ்த்தி கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இந்த ஒரு மனோபாவத்தால் எந்த ஒரு சமுதாயமும் பெற்றதை விட இழந்ததே அதிகம் ஆகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!!

 


கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்


பகுதி: 20 தொடரும்

85165648_10216198925428615_3890492607779831808_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=pUhFkeLYvKwQ7kNvgEbucua&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDLnc7ex3N2qUM83U0q7SpmiECDrCi3-6bqu9-Qspy0pQ&oe=66A5F390 87496548_10216198934428840_7445453114741620736_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=BywrQmHH3VAQ7kNvgGzeNbS&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAwC6sJQ20SQTInqR4XLecQ00D5Ixab04iQnPrZqfXCqQ&oe=66A5DD88 87536042_10216198935748873_514392002360508416_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=7pC-OnkhHHgQ7kNvgGf7MJC&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDWvcg0VOQEXVptopygCH8sI63UVlzBdWsb1M1NCrL9UA&oe=66A5E31C 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 20
 
 
 
6] பிரபலங்களை வழிபடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture] தொடர்கிறது 
 
 
பல நாடுகளில், பிரபலமடைந்தவர்கள் ஒருவர் மேல் ஏற்படுத்தும் ஆட்டிப் படைப்பும் அதனால் ஏற்படும் அந்த ஒருவரின் மனப் போக்கும் மற்றும் பிரபலமடைந்தவர்கள் மேல் வைக்கும் கண் மூடித்தனமான அன்பும் அல்லது மையலும், ஒரு பெரிய சமூக மற்றும் உளவியல் பிரச்சனையாக இன்று குறிப்பாக இளைஞர்களிடம் காணப்படுகிறது.
 
இந்தியாவும் இலங்கையும் கூட இன்று இந்த பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதுடன், இது பலரின், நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடிய, ஆற்றல் மற்றும் வளங்களை, திசை திருப்பி வீணடிக்கிறது. இந்த பிரபல வழிபாடு, கைக்கிளை போல் ஒரு ஒருதலைப்பட்ச உறவு மட்டுமே, ஆனால், அவர்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான மெச்சுதல் இதை அவர்களுக்கு மறைத்து விடுகிறது. இதை எவ்வளவு நேரத்துடன் அவர்கள் உணர்கிறார்களோ, அது அவர்களின் வருங்காலத்திற்கு நல்லது. ஏன் மக்கள் பிரபலங்களை பாராட்டு கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள், வழிபடுகிறார்கள் அல்லது அவர்கள் மேல் வெறி பிடித்து அலைகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
 
அவர்களின் வெற்றி வாழ்வும் அவர்களின் ஆட்கவர்ச்சியும் அதிகமாக ரசிகர்களிடம் உந்துகிறது எனலாம். தங்களது வாழ்வின் தோல்விகளை, பிரச்சனைகளை மற்றும் ஏக்கங்களை மறக்கவும் மற்றும் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் வெற்றி மற்றும் புகழில் இருந்து ஒரு இன்பத்தை தமக்கு ஈர்க்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. பிரபலங்கள் மற்றும் வெற்றிகரமானவர்களில் மேல் ஒரு விருப்பம் அல்லது பாராட்டைக் கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல, இது ஒரு இயற்கையான, சாதாரண மனித நடத்தையே ! என்றாலும், பிரபலங்களுடன் அளவுக்கு அதிகமாக அன்பு கொள்ளுவதும், மன சார்பு [mental dependence] ஒன்றை அவர்கள் மேல் வளர்ப்பதும் ஒரு உளவியல் சிக்கலாகிறது இன்று.
 
நாம் எம்மையும் எமது முயற்சிகளையும் முன்னேற்றி, சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கு அவர்களிடம் இருந்து பாடங்கள் படிக்கலாம். அதைத்தான் எம் முன்னோர்கள் அன்று செய்தனர். ஆனால் இன்று அதற்கு எதிராக அதிகமாக இருக்கிறது. சில மதம் மற்றும் இன குழுக்கள் போல, வெறித்தனமும் [fanaticism] அத்தகைய பிரபலங்கள் வழிபாட்டில் இன்று பரவி இருப்பதை, உதாரணமாக தமிழ் நாட்டிலும் காண்கிறோம்.
 
தமிழ் நாட்டில் நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது ஒரு சாதாரண நிகழ்வாக இன்று வளர்ந்து விட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து என்ன நல்லவற்றை அவர்கள் பெறுவார்கள் பெறறார்கள் என்பது பெரும்பாலும் ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது.
 
இப்படித்தான் ஹீரோ வழிபாடுகள் இன்று இருக்கின்றன. ஒரு பிரமுகர் மற்றும் ரசிகர் உறவில் [a celebrity vs. fan relationship], ரசிகர்கள் தான் வழக்கமாக தோல்விகளைப் பெறுகிறார்கள். ஏனென்றால், ரசிகர்கள் ஓர் சில பாடங்களை மட்டுமே அந்த பிரமுகரிடம் இருந்து பெற்றிருந்தாலும், அந்த பிரமுகர் தமது வெற்றியினை பணமாகவும், புகழாகவும் ரசிகர்கள் மூலம் பெறுவதுடன் தமது ரசிகர் தளத்தின் மீது செல்வாக்கும் செலுத்துகின்றனர்.
 
எங்கள் நேரத்தையும் வளத்தையும் தனிப்பட்ட பிரபலங்களில் வீணடிக்காமல், எமது வாழ்வில் முக்கியமான நபர்களில் எம் பார்வையை திருப்பி, அவர்களுக்கு அன்பு செலுத்தி, அவர்களை கவனித்து, அவர்களுடனான எமது உறவை பலப் படுத்துவது எவ்வளவோ மேல்.
 
எவரும் பூரணமானவர் என்று இல்லை. எம்மிடம் பலமும் உண்டு, தளர்வும் உண்டு. எமது பலவீனத்தை எமது விருப்பமான சிந்தனை மூலமோ அல்லது ஒரு பிரபலமான நபரை போற்றுவது மூலமோ போக்கடிக்க முடியாது. நாம், எம்மை முதலில் அறிய வேண்டும். மற்றவர்களுடைய நற்பண்புகளைக் கண்டு மனம் குழைய வேண்டும். ஆனால் நாம் எம்முடைய தேவையை நிறை வேற்றுதலுடன், எமக்கான சமாதானம் மற்றும் மகிழ்ச்சி தேடலில் ஈடுபடவேண்டும். வாழ்க்கையில் ஒருவருக்கு முக்கியம் தேவையானது பகுத்தறிதல் அல்லது அறிவுக்கூர்மை, அதாவது புத்தி வேண்டும். அது உங்களிடம் இருக்குமாயின் , நீங்கள் கட்டாயம் மிக இலகுவாக ஒரு மாயத்தோற்றத்திற்கு பலியாக மாட்டீர்கள்??
 
பிரபலங்கள் வழிபாடு, ஒரு மனதை துன்புறுத்தும் - பழக்க அடிமைக் கோளாறு [“an obsessive-addictive disorder] என்று கூறலாம், ஏனென்றால் அங்கு தனிப்பட்ட நபர் அதிக ஈடுபாடும் மற்றும் அக்கறையுடன், தான் போற்றும் பிரபலங்களின் தனிப் பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விபரத்தையும் காண முயல்கிறார். ஆனால் முக்கியமான பிரச்சனை, இது இன்று மிகவும் ஆபத்தான பாதிப்பை சிறுவர்களிடம் ஏற்படுத்துவது ஆகும்.
 
அது மட்டும் அல்ல, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் காட்டும் பிரபலங்களின், பொதுவாக பெண்களின் அழகு எப்படி இருக்க வேண்டும் என்ற, அவர்களின் உருவ சித்தரிப்பு [celebrity image], இளம் பெண்களில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த உடல் வடிவம் உண்மையில் யதார்த்தமல்ல, ஏனென்றால் பெரும்பாலான புகைப்படங்கள் டிஜிட்டலில் திருத்திய அல்லது மாற்றப்பட்ட [digitally edited or altered photograph] படங்கள் [Photoshoped போட்டோஷாப்] அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட உடல் அமைப்பாகும். எனவே இப்படி எம் உடலும் மாறவேண்டும் அழகு பொழியவேண்டும் என்ற அவா, நாளடைவில் அப்படி அடைய முடியாமல் அவர்கள் மேல் பெரும்பாலும் மன அழுத்தங்களை [depression] ஏற்படுத்திவிடுகிறது. எனவே நாம் புத்திசாலித்தனமாக இவைகளில் இருந்து விளக்குவதே ஒரு நன்மை பயக்கும் செயலாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 21 தொடரும்
83881643_10216253009540684_8462865974503145472_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=WpdKe9OG_kQQ7kNvgHd6Syc&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYD2kFN_t3Oblt7FZ63BEW-F5sqxeJlnGp6BG3HnKRD3Cw&oe=66A87232 89278377_10216253013100773_4368576979549552640_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=EEVrl-TUdcwQ7kNvgGRrCVE&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDHoRjGJQcnGl_2ajAIeFZ6qbVf4zoFFmqEz0644ENI0Q&oe=66A891A0 89105037_10216253012700763_2416802849355726848_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Yr9KuElhDx4Q7kNvgFHjbOa&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYClDt2RJC4gwVF59BZTfdhh2PvGd2HBNbP_Ahp-KiL_jg&oe=66A88D1D
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 21
 
 
7] வரலாறு அழிப்பு [Erasure of History]
 
 
ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் [George Santayana], "முன்னைய தவறுத்தல்கள் மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும் இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால், அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக, தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும் உயர்வை பொறுக்க முடியாமல், உண்மையான வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதைக் காண்கிறோம்.
 
அப்படியானவற்றில் ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம்.
 
தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட, வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!!
 
“இலங்கை சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில் அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம், புத்த மதகுருமார் வரை சொல்லுவதை எழுதுவதைக் காண்கிறோம். ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள் தமிழ் வரலாற்றுக்குச் இதுவரை செய்த தொண்டாகும்.
 
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா, மற்றது புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் கூட வரவில்லை.
 
மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும் மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.
 
மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும்.
 
இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர்.
 
இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.
 
இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
 
உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது, கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ் பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே" "த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை].
 
அதை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும் பொ. இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்] பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும்.
 
என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும் இன்னும் 2019 ஆண்டு நடுப்பகுதியை தாண்டியும் தொடர்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 22 தொடரும்
89780123_10216302905188044_8904499761990598656_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=K37e1j8aAz8Q7kNvgFNgkwl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBB_tMPMfvtlU1VSBNJm0zI_fwOyg1SE4OsV1LCyzv2Dg&oe=66AD03D2 89646995_10216302909508152_1320936849950113792_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Vbt9Lr3FWNIQ7kNvgGf7wuL&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBOdbjLloAybm4SUrEnMdbOHS-W3FaP-VekKg712eI5Qg&oe=66AD0283
 
 
 
89635954_10216302910428175_7222674204775153664_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=hKJKQj_r2OUQ7kNvgFlTW_I&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYD4APmwZ5oA4sK1zVOg0faaSgR5ha9imyFlvmS8IfLkug&oe=66ACFAAD 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 22
 
 
உலக அளவில் நாம் பார்க்கும் பொழுது, இன்று சிரியாவில் ஐஎஸ் ஐஎஸ் [ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு / ISIS] அமைப்பினர், ஈராக் நாட்டில் மிகப் பழைமையான, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் (Tigris) ஆற்றின் கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம் ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன அசிரியன் [Assyrian] நகரான நிம்ருட்டை [Nimrud] ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப் பொருட்கள, அழித்தும் எரித்தும் வரலாற்றை இன்று அழிப்பதை காண்கிறோம்.
 
இப்படி எத்தனையோ வரலாற்று அழைப்புகள் இந்தியா உட்பட இன்று நடை பெறுகின்றன. உண்மையான வரலாற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அது திருப்ப திருப்ப நினைவூட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமலும் அவதியுறும் ஒரு இனத்தின், ஒரு குழுவின் செயல் பாடு இதுவாகும். எமது அரசியல் மற்றும் சமூக போராட்டம், கட்டாயம் வரலாற்றை அழிக்கக் கூடாது, அது நல்லதோ கூடாதோ அவை வரலாறே, நாம் அவ்வாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டுமே ஒழிய அவ்வற்றை அழித்து வரலாற்றை மாற்றி தமக்கு சார்பாக பொய்யாக ,உண்மைக்கு புறம்பாக எழுதக் கூடாது.
 
ஆனால் இதைத் தான் இலங்கை, இந்தியா அரசு தமிழருக்கு எதிராக செய்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக, ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக் கட்டை அல்லது இழுத் தடிப்பு செய்யும் இந்தியா மத்திய அரசின் செயலைக் கூறலாம்.
 
இராணுவ வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு ஒரு படையெடுப்பாளர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது ஒரு பெருமப்பான்மையாளர்களைக் கொண்ட அரசாங்கம், மற்றவர்களின் அல்லது சிறுபான்மையாளர்களின் உண்மையான வரலாற்றை மாற்றுகிறார்கள் அல்லது அழிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்கள்.
 
தார்மீக நோக்கத்திற்காக [some sense of moral purpose] நாம் பண்டைய நாகரிகம் மற்றும் இராச்சியம் இவைகளின் வரலாற்று சாட்சிகளாக மட்டும் இன்றி, கலாச்சார சாதனைகளாகவும் இருந்தவற்றை அழிக்கிறோம் என்று பெருமையுடன் உரிமை கோரும் அமைப்புகளில், ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசசை [ஐஎஸ்ஐஎஸ் / ISIS.], முதல் தீவிர குழு [radical group] என்று நாம் கூறமுடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் / தலிபான் தீவிரவாதிகள் [Taleban], ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த உலகப் புகழ் பெற்ற 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 100 அடி உயரமுள்ள பாமியன் புத்தர் சிலைகளை [Buddhas of Bamyan] இதே காரணங்களுக்காக உடைத்து தள்ளினார்கள்.
 
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வுவான கீழடி அகழாய்வின் அகழ்ந்த கலைப்பொருட்கள் ஏன் தமிழ் நாட்டை விட்டு வெளியே பெங்களூருக்கு கொண்டு போனார்கள் என்பது இன்று ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இதனால், அவர்கள் தமிழ் நாட்டு வரலாற்றை அழிக்க முயல்கிறார்களா என்று கேட்கவும் தோன்றுகிறது.
 
மேலும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
அரசியல் காரணமே இவைக்கு காரணம் போல் தெரிகிறது. உதாரணமாக,கண்டு பிடிப்புகளை வெளியிடாமையும், அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கலை பொருட்கள் வெளியிடாத தகவல்களை வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக கிடைத்த தகவலும், மற்றும் எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை உண்மையில் எழுதவேண்டும், ஆனால் அதை மாற்றுவதும் அரசியல் காரணம் இருப்பதை எடுத்து காட்டுகிறது. எது எவ்வாறாயினும் அதைக் கண்டு பிடித்த தொல்துறை ஆய்வாளர் திரு அமரநாத் ராமதிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கே மாற்றி கீழடிப் பணியை தொடர மதுரை உயர் நீதி மன்ற அண்மைய அறிவிப்பு, நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
 
அது மட்டும் அல்ல இன்று " கீழடி நம் தாய்மடி ", என சிகாகோ வில் ஜூலை 2019 நடந்த 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் முழங்கியதும் குறிப்பிடத் தக்கது. எப்படி சுமேரியாவிலோ அல்லது சிந்து வெளியிலேயே நதி நெடுகிலும் ஆற்றங்கரையில் பெரியதும் சிறிதுமாக நகரங்களை உருவாக்கிய அதே பாணியிலேயே வைகை நதியெங்கும் நகரங்களை இது உருவாக்கியது இன்று வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
 
இலங்கை, இந்தியா பெரும்பான்மையாளர்களின் ஆட்சியில் உள்ளது எனவே அங்கு சிறுபான்மையினரின் வரலாற்று பெருமைகளை ஏற்பதில் அவர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. சிறுபான்மையினர் அங்கு தமது தொன்மையை சாட்சிகளுடன் கட்டுவது அவர்களின் நோக்கங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. அதனால் அவர்கள் இதை விரும்ப வில்லை. எந்த மொழியும் கலாச்சாரமும், பெரும்பாலானோர் பேசும் மொழியிலும் அவர்களின் வரலாற்றிலும் தொன்மையாக [antiquity] காணப்பட்டு அவர்களுக்கு சவால் விடுவது அவர்களால் பொறுக்கமுடியாது. எனவே படிப்படியாக அதை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இவைதான் வரலாற்று அழிப்பிற்கான முதன்மை காரணமாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 23 தொடரும்
90294353_10216365422230931_6354076580226007040_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=u734FzIy6QYQ7kNvgFgm6FP&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCfXddyaanSSWO2Db4CGb37AqIKbudQzPsQvEBk_Nr5Jw&oe=66B1B51C 90145313_10216365434351234_3007493902052622336_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=2bo_UiUE_-kQ7kNvgHnuWFG&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCoEyF5e5oHAOmJ_aW3METaZ7Fj9C_ZmEYujYCf-IVBXg&oe=66B1C088 90019038_10216365431471162_7439607342129217536_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=z8vfd8JuWxEQ7kNvgFf0NrI&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD6IlHNIoCcYmtJhnMfrnrUnsQmqoWKFFWYNl1hLniB0w&oe=66B1DE44 No photo description available.
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 23
 
 
8] போதைப்பொருள் துஷ்பிரயோகம் [Drug Abuse]
 
 
சாராயம் மற்றும் போதை மருந்துகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், அது உங்களை போதை மயக்கத்தில் (intoxication) ஆழ்த்தி உங்களுடைய விழிப்புணர்வைத் தொலைப்பது மட்டுமின்றி உடல் நலத்தைக் கெடுத்து, உங்களை அழித்துவிடுகிறது. ஒருவேளை இந்த மருந்துகள் உங்களுக்கு மயக்கத்தைத் தந்து, அதே நேரத்தில் உங்களை மிகுந்த விழிப்புடனும் கெட்டிக்காரத்தனமாகவும் ஆக்கி உங்கள் உடல் நலத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும் என்றால், நாம் அனைவருமே அதில் முழுதாக மூழ்கி இருப்போம்.
 
உதாரணமாக சந்திரன் நம்மீது அல்லது காதலர் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஒரு அமைதியான இன்பகரமானது, அது உங்களை மயக்கி கற்பனையில் மிதக்க வைக்கும், புலவர்களுக்கு கவிகளை அள்ளிக்கொடுக்கும், காதலர்களுக்கு இன்ப மழை கொட்டும், தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு அமைதியைக் கொடுக்கும். அது வரவேற்கத்தக்க போதை.
 
ஆனால் இது அப்படி அல்ல, போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச் செயல்களில் கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும் போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
 
ஏன், எப்படி மக்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள் என்பதை பலர் பொதுவாக புரிந்து கொள்ளுவதில்லை. அது மட்டும் அல்ல,போதை பொருட்ககளை, பாவிப்பவர்களை மட்டுமே அது பாதிக்கிறது எனவும் கருதுகிறார்கள். அதனால் தான், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட [addicts], இதை ஒரு சாக்காக எடுப்பதால், தொடர்ந்து முறை கேடாக நடக்க அவர்களுக்கு வழி வகுக்கிறது எனலாம்.
 
இவர்கள் தாம் தம்மையே பாதிப்பதாகவும், வேறு எவரையும் இல்லை, எனவே, தங்களது அன்புக் குரியவர்கள் ஏன் இதனை, தமது நடத்தையை பெரிதாக, சிக்கலாக கருதுகிறார்கள் என அடிக்கடி குழம்புகிறார்கள். உண்மையில், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர், தம்மை மட்டும் அல்ல, மற்றவர்களையும் பாதிக்கிறார்கள். எனவே இது ஒரு சமூகப் பிரச்சனையாகவும் உள்ளது. அது மட்டும் அல்ல, தார்மீக கோட்பாடுகள் அல்லது மன உறுதி இல்லாதவர்கள் இவர்கள் என தவறுதலாக எடைபோடுகிறார்கள். எனவே இவர்கள் நினைத்தால் நிறுத்த முடியும், வேண்டுமென்றே அப்படி செய்யாமல் இருக்கிறார்கள் என இவர்களை திட்டுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை.
 
போதைப் பொருளுக்கு அடிமையாவது ஒரு சிக்கலான வியாதி, அதை கைவிடுவது, பொதுவாக நல்ல நோக்கங்கள் அல்லது ஒரு வலுவான விருப்பத்தை விட மேலானதும் கடினமானதும் ஆகும். போதைப்பொருள் அவர்களின் மூளையை மாற்றி விடுவதால், அவர்கள் நினைத்தாலும் கைவிடுவது கடினமாகிறது என்பதே உண்மை நிலையாகும்.
 
உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் தொடக்கம் எல்லா நாடுகளிலும் மற்றும் எல்லா சமூகங்களிலும் இந்த போதைப் பொருள் பிரச்சினை இன்று காணப்படுகிறது. அதனால் தான் ஒரு விழிப்பை சமூகத்தில் மற்றும் தனி மனிதர்களில் ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக [International Drug Abuse Day] உலகம் முழுதும் கடைப்பிடிக்கப் படுகிறது.
 
போதை என்றால் அது மது மற்றும் புகையிலைத் தொடர்பானவையாக பொதுவாக கருதினாலும், உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருளாக கஞ்சா [Cannabis], அபின் [Opium], கோகைன் [Cocaine], பிரவுன் சுகர் [Brown sugar (an adulterated form of heroin) மற்றும் ஒயிட்னர் [Whitener], சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் காணப்படுகின்றன. இவை பவிப்பவர்களின் மனம், உடல் இரண்டையும் கெடுத்து பாவிக்கும் அந்த நபருக்கும், அவரின் குடும்பத்திற்கும், ஆகவே சமுதாயத்திற்கும் பெரும் கெடுதலை விளைவிக்கிறது. நாளடைவில் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து, போதைப் பொருளுக்கு அடிமையாகி விடுகின்றனர்.
 
உலகில் மட்டும் இன்றி, இலங்கையிலும் போதைப் பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதாக தேசிய போதைத் தடுப்பு சபை அண்மையில் எச்சரித்துள்ளது. பொதுவாக இலங்கையில் ஹெரோயின் [heroin], கஞ்சா [Cannabis], அபின் [Opium], மர்ஜுவானா[Marijuana / ஒரு வகை கஞ்சா] ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே அதிகம் பாவனையில் உள்ளவை.
 
மேலும் இலங்கையில் அவை இளைஞர்களிடையே சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் ஒரு சில மணி நேரங்களுக்கே பொதுவாக நீடிக்கும். அதன் பிறகு அவர்களுக்கு குறிப்பாக மன அழுத்தம், எளிதில் கோபமடைதல், நினைவாற்றலில் குறைபாடு போன்றவற்றுடன் பசியின்மை, உடல் நிறை குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு, கண் பார்வை குறைதல், நரம்பு உணர்ச்சி குறைதல், உதடு கறுத்தல், ஆண்மை குறைவு போன்ற பல வியாதிகளும் ஏற்படுகின்றன.
 
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்களை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் பாவனைகளை ஊக்குவித்து வருவதாகவும் மேலும் தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தை முடித்து பிரிந்து செல்வதனால், பிள்ளைகள் தனிமையாகி, அவர்களில் பலர் போதை பொருளுக்கு அடிமையாவதுடன் அந்த வியாபாரத்திலும் ஈடுபடுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது.
 
இவைகளுக்கு சான்று பகிர்வது போல, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் 2018 ஆண்டு நடுப்பகுதியில், வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப் பொருளிற்கு அடிமையானவர் களாக இருக்கின்றார்கள் எனவும், இந்த நாட்டிலே போதைப்பொருள் அதிகம் இருக்கின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
 
பகுதி: 24 தொடரும்
91020342_10216433169284565_9195626341964185600_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=o_Cv_aRGPrYQ7kNvgGLLba5&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC8Hnsd9NwKsqIXsPfR43SMLXXU3wYA9DRy-w8fP8xIiQ&oe=66B47D55 90998254_10216433167164512_846427188050788352_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=xGKOXMdFXMkQ7kNvgEAQKYz&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD6jYZiP9gOxCIc09Pmyos2WJ0hoQJEP2657k_hK_KGTQ&oe=66B47921 
 
90999705_10216433172084635_5111773670863273984_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=qz9rBNoSEvkQ7kNvgG37vtp&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCBQH79EhDSDEVXubCQFhH2aHRjPxO-Xuvtz67pIG7bhQ&oe=66B47DEF 90966285_10216433168444544_7982064653666615296_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=0ehz8f1uNw0Q7kNvgGIQP4J&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBfG2PRY6lhpFJbtCYbGvF3UvQJuaQY1hKQq6xsH5MV2g&oe=66B48104  
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 24
 
 
வரலாற்று ரீதியாக போதைப் பொருள் பாவனை பண்டைய காலத்தில் இருந்தே வந்துள்ளதை நாம், இலக்கியங்கள், இதிகாசங்கள் மூலம் அறிய முடிகிறது. உதாரணமாக, கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று "மது" பெண் தெய்வமான, வாய் நிரப்பும் பெண்மணி என போற்றப்படும் நின்காசியையும் [Ninkasi] பியர் மது பானம் [அல்லது பீர் / Beer] வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் பாராட்டுகிறது. உதாரணமாக, கடைசி இரண்டு வரியில்:
 
"நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் -அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்"
"நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியைத்  தருகிறது - நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [ large collector vat] சரியாக வைக்கிறாய்" என்கிறது.
 
மேலும் "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்"
 
என நின்காசியை புகழ்வதையும் காண்கிறோம். அடுத்ததாக, ரிக் வேதம் [1500-1000 கி மு] சோம பானத்தைப் பற்றி பாடுகிறது. உதாரணமாக, ரிக்வேதத்தில் ”,
 
சோம, நீ வரும் வழியில், இனிமையானதும் மகிழ்வுண்டாக்கும் வெள்ளம் தூய்மையாக பாய்கிறது, அதை இந்திரனின் பானத்திற்காக அமுக்கு " [ In sweetest and most gladdening stream flow pure, O Soma, on thy way, Pressed out for Indra, for his drink.]
 
என புத்தகம் [Rig-Veda, Book 9] 9 இல் பாடல் [HYMN I. Soma Pavamana] 1.1 இல் பாடுகிறது. மேலும் மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கம்பராமாயணம் / பால காண்டம் / உண்டாட்டுப் படலத்தில், கட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அது கள்ளைப் போல் இனித்தது என கம்பர்
 
"கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய்"
 
என்கிறார். இன்னும் ஒரு இடத்தில், வாள் போன்று ஒளி பொருந்திய நெற்றியுடையாள் ஒருத்தி தன்னை போலே அழகின் பெருமையை ஒத்திருக்கும் தனது நிழலை பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள மதுவுண்ணும் கிண்ணத்தில் கண்டு தோழியே! என்னோடு சேர்ந்து நீயும் இம்மதுவை உண்ணுவாய்! என்று வேண்டினாள் என கம்பர்
 
"வாள் நுதல் ஒருத்தி காணா தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி! என்றாள்" என்கிறார்.
 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர்.
 
அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண் பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார்.
 
கள் என்ற இந்த பானத்தை அதன் செய் முறையின் அடிப்படையில் பிழி, தேறல், அரியல், நறவு, மட்டு என்றும் அழைப்பர். மேலும் சங்க இலக்கியத்தில், ஆண் பெண் இரு பாலாரிடமும், மது பானம் ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல்,
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்"
 
என கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிரையும் காணலாம். மேலும் சித்தர் இலக்கியத்தில் கஞ்சா, அபின் போன்ற இன்றைய போதைப் பொருள்களும் பதிவு செய்யப் பட்டுள்ளதைக்  காண்கிறோம்.
 
 
"அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ"
[அழுகணிச் சித்தர் பாடல் 27]
 
 
கஞ்சா வெறியனடி என்ற வரி மூலம் ஒரு குறிப்பிட்ட மக்களால் சர்வ சாதாரணமாக பாவிக்கப்பட்டு வந்ததை நாம் அறிகிறோம். சமுதாயத்தில் ஏற்படும் ஓர் சில குற்றங்களுக்கும் போதை பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இணைப்பு உள்ளதும் தெரியவருகிறது, உதாரணமாக, சிறைச்சாலை கம்பிகளுக்கு பின் அடிக்கடி இருப்பவர்கள், அதிகமாக குற்றங்களை செய்யும் போது போதையில் இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. மற்றும் சிலர் தங்கள் பழக்கங்களுக்கு, போதை பொருள் வாங்குவதற்க்காக, திருடுகிறார்கள் அல்லது வழி பறிப்பு செய்கிறார்கள். போதை பாவனையின் பக்க விளைவாக பெரும்பாலும் கடைகளில் தொடர்ந்து பணம் செலுத்தாமல் சாமான்களை தூக்கி செல்வது [shoplifting] காணப் படுகிறது. எனவே போதை பொருள் பாவனை, தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டும் இன்றி சமுதாயத்தையும் பாதிக்கிறது என நாம் கட்டாயம் கூறலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 25 தொடரும்
92380365_10216505919983287_8018664685630914560_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=TiL5dms0Z8kQ7kNvgGo8ufS&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDcIrHn0XwlWLCgY7pbtN4SwXuduqh1pBBJKz8MHdRFSA&oe=66BDE4D0 91639906_10216505918583252_7252523158035496960_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=HDiZ-zEUcA0Q7kNvgH6Axyd&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCZHeoT_xfqbBrUlQm4pWLjCXXstyZuygGa1nZsJ_jZew&oe=66BDC933 91871761_10216505921303320_3525338598557614080_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=rNInvDT2H0QQ7kNvgEodOua&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYB7fkTQ4GKVbCa3VtsE6wiHbpTpJAPZq7fNVK1Rt1mLYQ&oe=66BDEC5E 
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.