Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தவறான தீர்ப்பு"
 
 
அக்டோபர் / நவம்பர் 2022  இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எட்டாவது ரி 20 உலகக்கோப்பை தொடரில், 06/11/2022  அன்று  பாகிஸ்தான் பங்களாதேஷ் துடுப்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. யார் வெல்லுகிறார்களோ அவர்கள் அரை இறுதி ஆட்டத்துக்குப் போக தகுதி அடைவார்கள். இந்த சூழ்நிலையில் தான் பங்களாதேஷ் அணித் தலைவரும் சிறந்த துடுப்டி வீரருமான சகிப் அல் ஹசன் மைதானத்துக்குள் சென்றார். அப்பொழுது, பங்களாதேஷ் நல்ல நிலையிலும் இருந்தது. அவர் முதல் பந்தை தடுத்த பொழுது, பந்து மட்டையில் பட்டு காலில் பட்டது. அதை சரியாக கவனிக்காமல், மூன்றாவது நடுவர் கூட  தவறான தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புத்தான் பாகிஸ்தானை அரை இறுதிக்கு இட்டுச்சென்றது. 
 
இதை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது.  
 
அன்று நான் என் நண்பியுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு போய்க் கொண்டு இருந்தேன். நாம் சென்ற பேரூந்து முழுதாக நிரம்பி இருந்தது. அது அனுராதபுர பேரூந்து நிலையத்தில்  சிறு ஓய்வுக்காக தரித்து நின்றது. என்னுடன் வந்த நண்பி நல்ல நித்திரை. எனவே அவரை எழுப்பாமல், கீழே போய் தண்ணீர் போத்தலை நிரப்பி வருவம் என்று எழும்பும் தருவாயில், திருநங்கை ஒருவர் பேரூந்தில் ஏறி, ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக் கொண்டு இருந்தார். எனக்கு எனோ அவர்களைப் பிடிப்பதில்லை. அவர்கள் பொதுவாக வியாபாரமாக பாலியலில் ஈடுபடுவதாலும், மற்றும் அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு அருவருப்பை கொடுத்தது. என் நண்பி நித்திரை குழப்ப வேண்டாம் என்று சொல்லி, ஒரு நாற்பது ரூபாயை அவளிடம் கொடுத்து விட்டு, நான் தண்ணீர் எடுக்க பேரூந்தில் இருந்து இறங்கி போய்விட்டேன் 
 
தண்ணீர் எடுக்க பெரிய வரிசை நின்றதால், நான் வர பேருந்தும் வெளிக்கிட்டு போகத் தொடங்கி விட்டது. என்னால் அதை நிற்பாட்ட  முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, என் பெட்டி, காசு எல்லாம் அங்கேதான். நான் உடனடியாக என் நண்பிக்கு தொலைபேசி அழைப்பு போட்டேன், ஆனால் ஒரு பதிலும் இல்லை, அவர் நித்திரையில் இருப்பதால், மௌனத்தில் விட்டு விட்டார் போலும். என் நண்பி கட்டாயம் எழும்பினதும் என்னை காணவில்லை என்று எனக்கு அழைப்பு விடுவார். மற்றும் என் பெட்டி காசு பத்திரமாக எடுத்து வருவார் , அதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை எப்படி இங்கிருந்து கொழும்பு போவது. என்னிடம் ஒரு பணமும் இல்லை. குறைந்தது நானுறு ரூபாயாவது வேண்டும்!
 
நான் அப்படியே செய்வதறியாது, பேரூந்து நிலையத்தில் இருந்த ஒரு தூணுடன் சாய்ந்து நின்றேன். பின் சற்று சுற்றிவர பார்த்தேன். இது சாமம் என்பதால் , பெரிதாக ஒருவரும் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயணத்துக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கிடையில், அந்த திருநங்கை என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். பின் அவர் அங்கிருந்து என்னிடம் வந்தார், ஐயா என்ன நடந்தது?, உங்க பேரூந்து போய் விட்டதே? என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். பின் சிங்களத்தில் அங்கிருந்த நேர அட்டவணையை பார்த்து விட்டு, உங்களுக்கு இன்னும் அரைமணித்தியாலத்தில் அனுராதபுர - கொழும்பு கடுகதி பேரூந்து இருக்கு, அது நீங்க தவறவிட்ட பேரூந்துவை கட்டாயம் கொழும்பில் பிடித்து விடும், அதில் நீங்கள் போகலாம் என்கிறார். அப்ப தான் நான் அவளுக்கு என் பிரச்னையைச் சொன்னேன்.   
 
அவள் இதற்கு ஏன் கலங்குகிறீர்கள் என்று சொல்லிவிட்டு, தன் சில தோழிகளை கூப்பிட்டு, நானுறு ரூபாய் சேர்த்து, தானே  டிக்கெட் கவுண்டரில் [சீட்டு முகப்பில்] பற்றுச் சீட்டும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. உங்க ங்கி கணக்கு தந்தால், நான் கொழும்பு போனதும் போட்டு விடுவேன் என்றேன். ஐயா எமக்கு எங்கே ங்கி கணக்கு என்று சிரித்துக் கொண்டு சொன்னார். ஐயா கவலை வேண்டும், இன்னும் ஒரு நேரம் யாராவது கஷ்டத்தில் இருப்பதை கண்டால் உதவுங்கள், அது காணும் என்று கூறிவிட்டு, அவள் அங்கிருந்து உடனே தன் தோழிகளுடன் போய்விட்டார்.
 
அப்பத்தான் என் தவறான தீர்ப்பு எனக்குப் புரிந்தது. என்னை மாதிரி, அவர்கள் மேல் வெறுப்பும் அருவருப்பும் கொண்டு, எல்லோரும்  புறக்கணித்தால், வேலை வாய்ப்பு கொடுக்கா விட்டால், அவர்கள் தான் என்ன செய்வார்கள். அதன் பின் நான் அவர்களை வெறுப்பதும் இல்லை, அருவருப்பு படுவதும் இல்லை. அவர்களுக்கு என்னால் இயன்ற நேர்மையான உதவிகள் செய்வதுடன், அவர்களுடன் மனம் திறந்து கதைக்கவும் தொடங்கினேன்!             
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 316410539_10222056192496631_993292781142997701_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=amDJjUmQxvAQ7kNvgGzg_JP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBz2mArVnF83IeeF_pwBS-9F-LuhWbzcCZAQQY0SaGLDA&oe=663CA50C 316319800_10222056191936617_4826801193284030515_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4kqwruNm6ogQ7kNvgH_baMC&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCL_K2ECpgDVQ_HubBi8hsbGsgsSfvwyHnxXv9pWNclxg&oe=663C8AC8
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.