Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
 
 
முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம்.
 
1] lowliness of mind, humility, பணிவு
2] inferiority of rank ; கீழ்மை
3] poverty, எளிமை
 
ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம்.
 
‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.
தாழ்மையைப் பற்றி சமயங்கள் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்:
 
'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' - இஸ்லாம்.
 
'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' - அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம்.
 
'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' -பகவத் கீதை.
 
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)
 
'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்'- சமண மதம்.
 
 
இப்படி எல்லா சமயங்களும் கற்பிக்கும் தாழ்மை, எமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற எல்லா தடைகளையும் குறைகளையும் இலகுவாக வென்று விடலாம் என்பதே உண்மை.
 
 
“மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய”
என்பது தொல்காப்பிய நூற்பா.(தொல். பொருளியல். 31)
 
 
இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும் [தாழ்தலும்], அவன் அவ்வாறு பணிந்த [தாழ்ந்த] போது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை [தாழ்தலை] ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
14021491_10207166510063876_966143595232408343_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YmOeVzk9yPAQ7kNvgEjd4o-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDTAwx0i6BiZpn2gxxkoDDuGJK0ztzai5TEqkRvj34ERA&oe=6675941E 443715224_10225223693602179_3911908116574566930_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UsujGEkK4vwQ7kNvgFvIXJc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYALDrGbjtIk7rIfbUqRqEOIXZmbfGfdTkLKWV2B4qUy-Q&oe=6653E1FF 436491124_10225223698202294_9174644769008288690_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ElieR2EHHboQ7kNvgHtBAS3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCPyKrM8ytotoH3XOkLHKYes6sfoF53eHgPDErwzkeQ0A&oe=6653E8EA
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2024 at 18:07, kandiah Thillaivinayagalingam said:

தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..!

நல்லதொரு கருத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.