Jump to content

"என் உயிரோட்டமும் நீதானே"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"என் உயிரோட்டமும் நீதானே"

 

"மின்னல் இடை கண்ணைக் குத்த  
அன்ன நடை நெஞ்சை வருத்த 
கன்னி இவள் அருகில் வந்தாள் 
சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ 
கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!"


"அன்பே  ஆருயிரே அழகு தேவதையே  
இன்பம்  கொட்டும் வண்ணக் கிளியே 
துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே     
என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே   
என் உயிரோட்டமும் நீதானே இன்று!!"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

445174281_10225278558493767_204967356480688363_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=T851xk3D4DwQ7kNvgG-1Onv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBGI9gw8gad3pEt_Ny2-tXxhY2Kh7aA5O7AFQr-1Hm_7A&oe=6661395C 447206622_10225278557693747_5428827743638648041_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zcqtxCgDNJgQ7kNvgF3c7Iq&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBUPYRbTk_-6ZE9eh1vGKeHATfogRyHEOnGd4F3om73ig&oe=66613D94

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 ஜூன் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை. 13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது. போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாக கூறினார். தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட். இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது.   இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. விலங்குகள் வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியிடம் இருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொனால்டோவை பெற்றதாக பீட் கூறுகிறார். சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்த பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார். ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்திற்கு சென்றிருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்பு குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார். “உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்து வந்தேன். அங்கு நான் பார்த்த போது அந்த பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.” சில விலங்குகளில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக முதுகெலும்பில்லாத சில பூச்சிகள், துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இதுபோன்ற நடைமுறையின் போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது. அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cp6684e2e8po
    • அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்டப் பேரணி (படங்கள்) அதிபர், ஆசிரியர்களால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியையும், பொலிஸாரால் பேரணியில் சென்றவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் காணலாம். படப்பிடிப்பு – எஸ்.ரி.ரமேஷ்       https://thinakkural.lk/article/304621
    • இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று (25) மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://thinakkural.lk/article/304609
    • பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389828
    • கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க  வேண்டுமா?  யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும்.  தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள்.   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.