Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அருந்ததி ராய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 ஜூன் 2024

டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை துணைநிலை ஆளுநர் எடுத்திருக்கிறார்.

தொடர்புடைய சம்பவத்தில் சுஷில் பண்டிட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 28.10.2010 அன்று வழக்குத் தொடரப்படப்பட்டது. முன்னதாக, 2023 அக்டோபரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A / 153B மற்றும் 505-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக இருவர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு (சி.ஆர்.பி.சி) 196-இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.  
அருந்ததி ராய்

பட மூலாதாரம்,X/ALL INDIA RADIO NEWS

என்ன சம்பவம்?

புதுடெல்லியில் எல்.டி.ஜி அரங்கில், 21.10.2010 அன்று 'ஆசாதி - தி ஒன்லி வே' (‘சுதந்திரம் தான் ஒரே வழி’) என தலைப்பிடப்பட்ட மாநாடு ஒன்றில் அருந்ததி ராய் மற்றும் ஷேய்க் ஹுசைன் இருவரும் 'அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்' பேசியதாகப் புகார் எழுந்தது.

இந்த மாநாட்டில், 'இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் வகையில்' பிரசாரம் செய்யும் விதமாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்த மாநாட்டில் சையது அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர்.கிலானி (மாநாட்டைத் தொகுத்து வழங்கியவர் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்), அருந்ததி ராய், முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மற்றும் மாவோயிஸ்ட் ஆதரவாளர் வர வர ராவ், ஆகியோர் உரையாற்றினர்.

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை' என்றும் 'இந்திய ஆயுதப் படையால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும்', 'இந்திய அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' எனவும் கிலானி மற்றும் அருந்ததி ராய் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பேச்சுக்களின் பதிவுகளும் புகார் அளித்தவரால் வழங்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த, சுஷில் பண்டிட் சி.ஆர்.பி.சி பிரிவு 156 (3)-இன் கீழ், டெல்லி எம்.எம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, 27.11.2010 அன்று தேதியிட்ட உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான வழிமுறைகளுடன் இந்தப் புகாரை நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

 
அருந்ததி ராய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அருந்ததி ராய், 1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார்

யார் இந்த அருந்ததி ராய்?

நாவலாசிரியரும், கட்டுரையாளருமான அருந்ததி ராய், தன்னுடைய ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (சிறிய விஷயங்களின் கடவுள்) என்ற நாவலுக்காக, 1997-ஆம் ஆண்டு ஆங்கில நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புக்கர் பரிசை’ வென்றார்.

சூழலியல் ஆர்வலராக அறியப்படும் அருந்ததி ராய், சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். தொடர்ந்து, மாவோயிசம், காஷ்மீர் பிரச்னை ஆகிய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார். எனினும், 2015-ஆம் ஆண்டில், “மதச் சகிப்புத்தன்மை மற்றும் இந்தியாவில் வலதுசாரி குழுக்களால் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,” அவர் அந்த விருதைத் திருப்பி அளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cz448xje5qyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

15 JUN, 2024 | 12:30 PM
image

டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்,  ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’  பேசியதாக,  அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய்,  முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் கடந்த 2010, அக். 21-இல் ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய்,  காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.  இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சுஷில் பண்டிட்,  டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா்.  இதையடுத்து, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய 2010,  நவ.27-இல் உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த மனுவை ரத்து செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  அருந்ததி ராய்,  ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட்டித்தின்கீழ் விசாரிக்க துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக,  இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்களுக்கு எதிராக விசாரணையை நடத்த துணைநிலை ஆளுநா் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் தெரிவித்திருந்தாா்.

https://www.virakesari.lk/article/186128

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததிராயிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளபெறவேண்டும் - 200க்கும் மேற்பட்ட இந்திய கல்விமான்கள் பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: RAJEEBAN  25 JUN, 2024 | 11:27 AM

image
 

எழுத்தாளர் அருந்ததி ராயிற்கு எதிராக வழக்குதொடருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெறவேண்டும் என 200க்கும் இந்திய கல்விமான்களும் பத்திரிகையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் கடந்த வாரம் நாட்டின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அருந்ததி ராயிற்க்கு எதிராக வழக்கு தொடர்வதற் கு அனுமதிவழங்கியிருந்தது.

இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம், எங்கள் நாடு தொடர்பான எந்த விடயம் குறித்தும் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசாங்கத்திற்கும் நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளிற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என கல்விமான்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர்வது என்ற முடிவை நியாயப்படுத்த முடியாது என இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள  வரலாற்று பேராசிரியர் அஜய் டன்டேகர் தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசமைப்பு உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள அவர் இந்தியா ஒரு அரசமைப்பு ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயிற்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் அமைப்பொன்றும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது, புதுடில்லி பெங்களுரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அருந்ததி ராயிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை கடந்த வாரம புதுடில்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா வழங்கியிருந்தார்.

2010 இல் கருத்தரங்கொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காகவே அருந்ததி ராயிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்கு தாக்கல் செய்வதற்கு புதுடில்லி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

காஸ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாகயிருந்ததில்லை என அருந்ததி ராய் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/186914

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.