Jump to content

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kalu.jpg?resize=750,375&ssl=1

வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது!

களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1388218

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்! யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார்.   யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகின்றன. இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்படை வீரர் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை. இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையைத்  தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம். அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1389598
    • கேரளா இனி கேரளம் ஆகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல துறை இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டதால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. “மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் உருவான  தினம் நவம்பர் முதலாம் திகதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும்” கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1389536
    • நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்! நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389372
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.