Jump to content

இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் - ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 JUN, 2024 | 01:12 PM
image
 

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.     

வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 31 ஆவது ‘அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் – 2024’, இந்தியாவின் KPMG மற்றும் இலங்கையின் KPMG ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட இந்திய பங்காளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Yezdi Nagporawalla மற்றும் KPMG இலங்கை முகாமையாளர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினர். 

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க :

‘’இலங்கையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவையும் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. 

கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள்  குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். 

அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன். 

ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம். 

மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன். 

ஒரு அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தவுடன், அடுத்து வரும் அரசாங்கம் நிச்சயமாக அந்தக் கொள்கையை மாற்றியமைக்கின்றது. அப்போது நாம் ஒரு நாடாக முன்னேற முடியாது. நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்ற சட்ட மூலம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.  

நாங்கள் தயாரித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டு சபையின் செயல்பாடுகளுடன் முழுமையான முதலீட்டு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொருளாதார ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்களும் இந்த சட்டத்தின் மூலம் நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு வலயங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு தனியான முகவர் நிறுவனம், நமது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம், உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும். 

இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட இலங்கைக்கு வருகை தந்தார்.

எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும்.

  அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். 

இந்தத் திட்டம் எங்கள் வலுசக்திக் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைவதோடு, மேலும் காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கான பாக்கு நீரிணையை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான பாரிய அளவிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, யாழ் குடாநாட்டின் பிரதான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது. 

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம்  விரிவாகக் கலந்துரையாடினோம். 

திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஸ்டி நாக்போரேவெல்லா, 

‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை மக்களின் நலனுக்கான இடைவிடாத அர்ப்பணிப்பும் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும். சிறந்த தலைமைத்துவம் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளதை நாம் கண்டோம். 

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை மக்களிடம் மட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இலங்கை நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.’’ என்று அவர் தெரிவித்தார்.

KPMG குளோபல் நெட்வேக்கின் ஏனைய உறுப்பு நிறுவனங்களின் பல பங்காளர்களும், முன்னணி இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2024-06-22_at_12.40.14.jp

WhatsApp_Image_2024-06-22_at_12.40.15.jp

WhatsApp_Image_2024-06-22_at_12.40.15__1

WhatsApp_Image_2024-06-22_at_12.40.16.jp

WhatsApp_Image_2024-06-22_at_12.40.17.jp

WhatsApp_Image_2024-06-22_at_12.40.18.jp

WhatsApp_Image_2024-06-22_at_12.40.19.jp

https://www.virakesari.lk/article/186693

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.     
    • அதெப்படி ?? அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா??? மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது  உதாரணமாக   புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.  அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.  "கறந்தபால் முலைப்புகா,  கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,  இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"  அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா"  என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள்  சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும்  மேலும் சில உதாரணம் கீழே  இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது  "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று."     அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும்  ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ????
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.