Jump to content

அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள் விடுமுறையை அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம்.

இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்குப் போதுமான வருமானமின்றி நாம் ஒவ்வொருவரும் கடனாளிகளாக மாறியுள்ளோம்.

இந்நிலையில் தருவதாக உறுதியளித்த வேதனத்தையாவது தருமாறு இந்த அரசிடம் கேட்கிறோம்.

நீண்டகாலமாக மாணவர்களின் நலன்களிலும், அவர்களின் கல்வியிலும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாதவகையில் எமது அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செய்துவரும் சேவைக்கு மதிப்பளித்து, சம்பள அதிகரிப்பை வழங்குமாறு நாளை புதன்கிழமை (26) நடைபெறும் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் அனைவரும் கலந்துகொள்வோம். இது ஒவ்வொரு அதிபர், ஆசிரியரினதும் தனிப்பட்ட நியாயமான கோரிக்கை. இதனை நாம் அனைவரும் ஒருமித்து, ஒன்றுபட்டு அரசிற்கு எடுத்துரைப்போம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/304535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Published By: DIGITAL DESK 3

26 JUN, 2024 | 09:09 AM
image

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள்  இன்று 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள்,ஆ சிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (26) முற்பகல் 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/186987

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்டப் பேரணி (படங்கள்)

அதிபர், ஆசிரியர்களால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியையும், பொலிஸாரால் பேரணியில் சென்றவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் காணலாம்.

படப்பிடிப்பு – எஸ்.ரி.ரமேஷ்

IMG_6838-300x200.jpg IMG_6685-300x200.jpg IMG_6726-300x200.jpg DSC_3967-300x199.jpg DSC_3986-300x199.jpg IMG_6703-300x200.jpg

https://thinakkural.lk/article/304621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்தது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கோட்டைக்கு முன்பாகவுள்ள வீதி முற்றிலும் தடை
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/304605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது நாளாகவும் தொடரும் அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டம்

Published By: DIGITAL DESK 3

27 JUN, 2024 | 09:58 AM
image
 

அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும்  இன்று வியாழக்கிழமை (27) சுகயீன விடுப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவியரீதியில்  அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை  போராட்டத்தினால்  இன்றும்  பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

மாணவர்கள் வரவின்றி பாடசாலைகள் காணப்பட்டதுடன், பாடசாலைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சமூகமளிக்காமையால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

https://www.virakesari.lk/article/187070

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.