Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/

 

27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலில்  வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக  பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது.


( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி  தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின்னர் அணிகளை ஒன்றாக்கி அதே போல காவலரனையோ முகாமையோ மாதிரி செய்து கடுமையான வேகமான பயிற்சிகள் முடித்து தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு அதன் பின்பே தாக்குதல் நடக்கும். )

அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல. மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் அதுவும் ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பழிவாங்குவதென்பதென்றால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும். இவையிரண்டும் இல்லாவிடில் அது பழிவாங்குத் தாக்குதல் ஆகாது.

அதுவும் பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய ஒருவீரன் கிட்டண்ணா யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து  பல் வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகளின் மனதில் இடம் பிடித்த ஒருவீரன்.

பல் வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய  ஒரு தளபதியின் வீரச்சாவிற்கு பழிவாங்குவதென்றால். அதுவும் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நாட்களுக்குள் அவ் வேவுத்தகவல்களின் அடிப்படையில் இத்தளபதியின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் நடாத்துவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது.

அதுதான் வெற்றிலைக்கேணி பெரிய மண்டலாய். வழமையான பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் அவசரஅவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் போரளிகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது அணிகளுடன் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன் களையும் காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார்.

தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்குமணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பழிவாங்கு வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

எழுத்துருவாக்கம்….சு.குணா.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அதன் பின்பு....சீனாவிலுள்ள உங்கள் தொழிற்சாலைகளை மூடியுது போல இதையும் மூடிவிடுவீர்கள் ...இந்தியா வல்லரசாக வருகின்றது என்ற பயத்தில்...
    • பார்க்கலாம்….பாலா அண்ணையை தவிர உலக ராஜதந்திரிகளிடம் பெரிய பெயர் எடுத்தவர் எண்டு எவரும் இல்லை. சுமந்திரன் தன் இராஜதந்திர தொடர்பை அப்படி வெளிகாட்டி இருந்தால் - நம் இனம் ஒரு படியாவது முன் நோக்கி போயிருக்கும். ஓட்டாவா பாராளுமன்றத்துக்கு வெளியே நிண்டு போட்டோ போட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது. அடிக்கடி போனதால் குலம் தெரிந்திருக்கும்தான். ஆனால் தேர்தலில் தோற்றால் அதை இன்னொருவர் பிரதியிடுவார் என்பது இராஜதந்திரிகள் வழமையாக  எதிர்பார்ப்பதுதான். நமது நிலைப்பாட்டை ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல, கஜனும், சாணாக்ஸும் போதும்.
    • பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கூறியது என்ன?     Freelancer   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 11:06 - 0      - 18 எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அதேநேரம், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  R Tamilmirror Online || பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கூறியது என்ன?
    • அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார்.  உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் புதன்கிழமை (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.  ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்காலத்திலும் அவ்வண்ணமே முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.   அதேபோல் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம், கிராமிய வறுமையை ஒழித்தலுக்கான திட்டங்கள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்துக்கு இணையான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக முகம்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது.  இந்நாட்டில் விவசாயம், மீன்பிடித்துறை, சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதார துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.  அரசாங்கத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முதற்கட்டமாக, இந்நாட்டு ஆலோசனைக் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரசாங்கத்தின் Clean Sri Lanka  வேலைத்திட்டத்துக்கும் பாராட்டு தெரிவித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த,நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர். ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு | Virakesari.lk
    • எல்லாம் பாரின் சரக்கின் மாயாஜாலம்!😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.