Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான்  ஈழவன் .அவர்களை ஒன்றாக யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் .எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கை எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்ற சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது .அதில் ஒருவனாக ஈழவனும் பங்கு பற்றினான்.இச் சமரில் இவன் தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள்  பொறுப்பாளர்கள் மத்தியில் ஒருநல்ல சண்டைக்காரணாக இணங்காணப்பட்டான்

இம் மறிப்புச் சமரின் இரண்டாம் நாளில் இவனது  நண்பணான  லெப்ரினன் சர்மா வீரச்சாவடைகிறான்.இச் சமரின் இவனது திறமையான செயற்பாட்டை அவதானித்த பொறுப்பாளர்.இவனை கனரக ஆயுதப்பிரிவிற்க்கு அனுப்புகிறார்..அங்குபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில்  150 காவலரன் மீதான தாக்குதலிற்கான அணிகள் பிரிக்கப்படும் போது இவனது அணியும் தேர்வு செய்யப்பட்டு அச்சமரில்  பங்குபற்றியது.அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான பெரும்பாலான சமர்களில் பங்குகொண்ட ஈழவன்.மணலாறு மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதலிலும் பங்காற்றினான்.அதன் பின்னர் வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு பயிற்சிக்காக அணிகள் பிரிக்கப்பட்டு 

பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இராணுவத்தின் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் தனது அணியுடன் மிகவும் திறம்படசண்டையிட்டான்.சண்டைமுடிந்தவுடன் பழையபடி பயிற்சிகள் தொடர்ந்தன .அவர்கள் எடுத்த பயிற்சிக்கான அந்த நாளும் வந்தது அதுதான் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் அத்தாக்குதலிலும் பங்காற்றினான்.இதற்கிடையில் தன்னை கரும்புலிகளனிக்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தலைவர் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.அதற்கான பதிலும் வர யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்து கரும்புலிகள் அணிக்குச் சென்றான்.அதன் பின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு பின் புலமாக இயங்கும்  வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் கட்டளைமையங்கள்.மீது தாக்குதல் நடாத்தி எதிரியின் முன்னேற்ற நடவடிக்கையை திசைதிருப்புத்தாக்குதலை நடாத்துவதற்க்கு தலைவர் அவர்களால் கரும்புலிகளுக்கு வழங்கப்படுகிறது .கரும்புலிகளை இராணுவப் பிரதேசத்திற்குள் அனுப்பும் பொறுப்பு மூத்த தளபதி பானு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.அதற்கமைவாக அளவெட்டியில் அமைந்திருந்த காவலரன்களை தாக்கி அழித்து கரும்புலிகளை இராணுவப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள்.அங்கு சென்றவர்கள்.இவர்கள் உள் நுழைந்ததை அறிந்ததால்

 இராணுவம் பின் தொடர்ந்து சென்றதாலும் ஏற்பட்ட மோதலில் இராணுவத்திற்க்கு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்து போராடி வீரச்சாவடைகின்றனர். இருப்பினும் இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி தனது பிரதேசங்களில் தேடுதல் நடாத்தினான் .இவர்களது இம் முயற்சி முழுமையாக வெற்றி பெறாவிடினும் இவர்களது தியாகத்தால் இயக்கம் இராணுவ முன்னேற்றத்திற்க்கு எதிராக தமது நிலைகளை பலப்படுத்துவதற்க்கும் அணிகளை மீளொளுங்கு செய்வதற்க்கும். காலஅவகாசத்தை வழங்கியது.இத்தீரமிகு வெற்றிகரத் தாக்குதலில் கரும்புலி கப்டன் ஈழவன் உட்பட்ட பதினொரு கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர்.

 

எழுத்துருவாக்கம்...சு.குணா.

UL0sBs9ZzihdRFIpd1C3.jpg

http://irruppu.com/2021/01/31/கரும்புலி-கப்டன்-ஈழவன்-ஈ/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.