Jump to content

"மண்டைதீவுச் சமர்" எவ்வாறு நடைபெற்றது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார்.

ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள், உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக் கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார்.

அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன . போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை
வாகனத்தருகே சென்றார்.

அங்கே தலைவரைக் கண்டவுடன் ”அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா?” எனக் கேட்க தலைவரோ “ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பார்க்க” எனக் கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார். சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர்.

28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது. இத்தாக்குதலை, உள்நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார்.

இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது. இச்சமர் முடந்தவுடன் அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைப் பாராட்டியதுடன் தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை. தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்ற சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச்சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

– எழுத்துருவாக்கம் சு.குணா.

http://irruppu.com/2022/06/27/மண்டைதீவுச்-சமர்-எவ்வாறு/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள்  இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
    • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;   https://thinakkural.lk/article/311839
    • அதே. இது ஒரு இடியாப்ப சிக்கல். எந்த ஒரு தனி நபரோ நாடோ தனி முடிவுகளை எடுத்து தள்ளி நிற்க முடியாது. கூட்டு முயற்சியை விட்டு தனித்தலின் மறுபக்கம் அவர்களையே புதைத்து விடும்.  நேட்டோவில் கூட அவ்வாறு தான். 
    • நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1407540
    • இது சரி தான்    சின்ன மேளம்      மேளத்தை குறிக்காது     இளம்பெண்கள் நடனத்தைக் குறிக்கும்   உதாரணமாக சினிமாவில் குத்தாட்டம் போடுறது போல்   தனியாக இரண்டு இளம்பெண்கள் ஆடுவார்கள்   1970. ஆம் ஆண்டு பார்த்து உள்ளேன்    கைதடியில்.  ஒரு திருமண நிகழ்வில்   நாலாவது சடங்கு அன்று   மணமக்கள் முன்னிலையில் ஆடினார்கள்.   முல்லைத்தீவு சேர்ந்த சின்ன மேளக் கோஸ்டி 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.