Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03

[காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்]

 
இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள் இரண்டையும் கிழே பார்ப்போம்.
 
 
”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?”
 
 
வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?
தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்
துதைது – அடுத்த பூவுக்குச் சென்று
அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்
தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?
 
 
"காக்கைகா காகூகை,
கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக்
கொக்கொக்க — கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
 
 
காக்கைக்கு -காக்காவிற்கு
ஆகா கூகை -ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது.
கோக்கு -கோ என்றால் அரசன்.
கூ -பூமி, அவன் நாடு,
காக்கை - காப்பது அரசாள்வது
கொக்கொக்க -கொக்கைப் போன்று
கைக் கை - விரோதிகளை வென்று
கா - காப்பது.
 
 
இதை ஒரு ஒழுங்கில் சொன்னால், காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. இரண்டிற்கும் நட்பு கிடையாது. காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும்.
 
ஒரு அரசனுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும். மீன்களை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து, அவனை வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்பது இதன் பொருள் ஆகும்.
 
12508783_10205719445688171_5315318433470947322_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=O2gpsQDATMIQ7kNvgHtwZvS&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAH9XHbz8-y3PJImQKR8nRMyfvHKiyzDqkcguyKYEmdLQ&oe=66B1F4A1 12417937_10205719446328187_1282743645162673041_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=D-FzdaY0a1cQ7kNvgHiMXK7&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC4ny1TsXIut0_-3NwielpsdikSIVn9srK4VUPluLKhRg&oe=66B1D335 12604911_10205719446608194_8893894296936693275_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=9sLNbq8rHcEQ7kNvgEoSWsH&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBSBhxrVSehV1I7bJSNXsKVNWXePZDn2-Z_wa-Tf7eYAQ&oe=66B1D8E4 12495039_10205719447048205_2337323901688310321_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=3asZRWWuMjQQ7kNvgHedi9U&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCppCJ_oWi1MOi2EzdnKGlHtRmN9X7UMI7EA3AJZDkHuw&oe=66B1F534

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.