Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"பெண்ணை மதித்திடு"
 
 
கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” என்று. அது மட்டும் அல்ல, மகாவம்சம் என்ற பாளி காவியத்தின் படியும், சிங்கள இனம் என்று ஒன்று உலகில் தோன்றாத கி.மு. 3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய, மகாசேனனால் கோகர்ணம் (திருகோணமலை), எரகாவில்லை (ஏறாவூர் ?), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகியவற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக கூறுகிறது. மகாசேனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில்தான் இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் அங்கு சைவ தமிழர்கள் அல்லது நாகர்கள் கிருஸ்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததை உறுதிப்படுத்துகிறது.
 
அப்படி 2300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஒலித்த, தமிழர் வாழ்ந்த திருகோணமலையில், புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகத்தின் அண்மையில், உயர்ந்து நிற்கும் பிரபல சட்ட நிறுவனம், "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சிறப்பான திறனுக்கு இலங்கை முழுவது பெயர்பெற்று இருந்தது. அதன் சுவர்களுக்குள், தினசரி எண்ணற்ற கதைகள் வெளிப்பட்டன, ஆனால் பெண்களுக்கான மரியாதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை தழுவுவதற்கும், அதனால் பெண்ணை மதித்திடும் ஒரு நிலை அங்கு காண முடியவில்லை.
 
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்"
 
என்கிறார் மகாகவி பாரதியார். அவரின் வார்த்தைகளுக்கிணங்க இருபத்து ஓராம் நூற்றாண்டின் இணையில்லா ஆற்றலாக வலம் வருவது பெண்ணின் ஆற்றல். செய்யும் செயலில் நேர்மை, துணிவுடன் ஆற்றும் பணி, அளப்பரிய அறிவாற்றல் கொண்டு பெண்கள் பலர் வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து பெண்ணை மதித்திடு! ஆனால் இதற்கு எதிரானது தான் "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" கட்டிடத்துக்குள் நடந்து கொண்டு இருக்கிறது.
 
பெண்ணை மதிக்காது வளர்வதுதான் ஆண்மைக்கு அழகு என்பதை, எப்படியோ ஆண் குழந்தைகளின் மனதில் பதிய விட்டிருக்கிறோம். அது தான் நாம் விட்ட பெரும் தவறு. 'பொம்பிள்ளை பேச்சை கேட்க்காதே', 'அவா பொம்பிள்ளை தானே', 'ஒரு பொம்பிளைக்கு எவ்வளவு திமிரு பாரு' என்ற அன்றாட சொற்களை வீட்டில் வெளியில் கேட்டு கேட்டு வளர்ந்தவன், தான் பெரியவனாக மாறியதும் , அதையே கடைப்பிடிக்கிறான் என்பதே உண்மை.
 
நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரான ஆர்.நடராஜ் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவர் தனது கூர்மையான அறிவுத்திறன், ஈர்க்கக்கூடிய நீதிமன்றத்தின் இருப்பு மற்றும் மற்றவர்கள் சாத்தியமற்றதாகக் கருதும் வழக்குகளை திறனாக வாதாடக்கூடியவர். அவருக்கு தொழில் முறை திறமை இருந்த போதிலும், ஆர்.நடராஜ் ஒரு குறிப்பிடத்தக்க சிலவற்றில் பின்னடைவும் கொண்டு இருந்தார். அவர் தனது நிறுவனத்தில் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் திறனை அடிக்கடி அல்லது என்றும் கவனிக்கவில்லை.
 
பாலின வேறுபாடுகள் பற்றிய அவரது கருத்து பழமையானது, அது ஆண்கள் வழிநடத்தும் மற்றும் பெண்கள் பின்பற்றும் பாரம்பரிய வளர்ப்பால் வடிவமைக்கப்பட்டது. இந்த எண்ணம் அவரது அன்றாட உரையாடல்களில் எப்பொழுதும் பிரதிபலித்தது. அவர் ஒருபோதும் வெளிப்படையாக பெண்களை அல்லது தனது சக பெண் வழக்கறிஞர்களை அவமரியாதை செய்யவில்லை என்றாலும், அவரது மனதில் சிறு வயதில் இருந்தே பதித்திருந்த மறைமுகமான சார்பு அவரது முடிவுகளை பாதித்தது. கூட்டங்களின் போது அவர் பெண் சக ஊழியர்களை அடிக்கடி குறுக்கிட்டு, அவர்களின் வெற்றிகளுக்கு திறமையை விட அதிர்ஷ்டம் காரணம் என்று கூறினார், மேலும் அவர்களின் திறன்களுக்கு கீழே உள்ள பணிகளை மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கினார். அதனால் பெண் ஊழியர்கள் தங்கள் திறன்களைக் காட்ட , வெளிப்படுத்த அங்கு முடியவில்லை.
 
நிறுவனத்தின் கூட்டாளிகளில் வாகைச்செல்வி ஒரு பிரகாசமான மற்றும் உறுதியான இளம் பெண் வழக்கறிஞர். வாகைச்செல்வி தனது அர்ப்பணிப்பு, வழக்கு விவரங்களுக்கு தக்க வழியில் எப்படி வாதாட முடியும் என்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் சிக்கலான சட்டப் புதிர்களை அவிழ்க்கும் வினோதமான திறனுக்காக அறியப்பட்டார். இருப்பினும், அவரது திறமைகள் பெரும்பாலும் ஆர்.நடராஜ் அவர்களால் வேண்டும் என்றே கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பது உண்மை, அவர் அவளை ஒரு வருங்காலத் தலைவராகக் அல்லது முன்னணி வழக்கறிஞர் ஆக காட்டிலும் விடாமுயற்சியுள்ள ஒரு தொழிலாளி தேனீயாகக் தான் கண்டார். அது தான் அவர் தெரிந்தும் தெரியாமலும் விடும் தவறு!!
 
வாகைச்செல்விக்கு அவளது ஆண் சகாக்கள், தன் திறனுக்கு குறைவாக அல்லது சமமாக தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் பெறுவதைப் பார்த்தபோது விரக்தி அதிகரித்தது. இருந்தபோதிலும், அவள், வாகைச்செல்வி, தொழில்முறையாக தனது கவனத்தை என்றும் தளர்த்தவில்லை. மற்றும் அவளது சிறந்த வேலையை வழங்குவதில் பின்வாங்கவும் இல்லை. அவளது உறுதியும் விடாமுயற்சியும் அவள் எதிர்கொண்ட சவாலுக்கு எதிராக மௌனத்தால் மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
 
தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் வாகைச்செல்வியின் வீடு இருந்தது. அலுவலகத்தில் மட்டும் அல்ல, இங்கேயும் அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த குந்தில் சாய்ந்து இருந்து வெளியே பார்த்துக்கொண்டு வாகைச்செல்வி இருந்தாள். அவள் அறிவில் கடலாக இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பழக்கவழக்கங்களில் பெண் என்பவள் இப்படித்தான் என எழுதி வைத்து விடார்களே?
 
முற்றத்தில் மாமரம். அதில் விளையாடுற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக துள்ளி குதித்து ஓடி விளையாடுகின்றன. அவற்றின் வாழ்க்கையில் வேறுபாடை அல்லது அணியாய இழைகளை அவள் காணவில்லை. அவளுக்கு சற்று தள்ளி துணி ஒன்று வளையில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. ‘அம்மாட பழஞ்சீலை அதனுள் அவளின் ஆறுமாச பெண் குழந்தை. அவள் இண்டைக்கு என்னமோ அழாமல் இருக்கிறது. அங்கே தவழ்கிற குளிர்ந்த காற்றிலே தூங்கிப்போய் விட்டதோ? அந்த அமைதியான சூழலிலும் வாகைச்செல்வி மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. அவள் தன்னை ஒருதரம் கண்ணாடியில் பார்த்தாள். இந்த அழகை அனுபவிக்க துடிக்கும் ஆண்கள், ஏன் பெண்ணை சமமாக மதிப்பத்தில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை?
 
"சினிமாவிலே வருகிறமாதிரி, பெண் விடுதலைக் கொடியை ஏந்திக் கொண்டு வெளிக்கிட முடியுமா? சினிமாத்தனங்களை ரசிக்கிற ஆண்களும். ஏதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ம். நியவாழ்வு என வருகையில் ‘வாழ்க்கைப் பிரச்சனை’ என்று சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறார்கள்" அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்.
 
அவளுக்கு அப்பொழுது கார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji ( 1866 – 1954) யின் நினைவுதான் வந்து. இவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகும். பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் காலத்திலேயே வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களுள் அவள் முதன்மையானவள். "பெண்களுக்கு எல்லாம் ஓர் முன்னோடி" அவள் தனக்குள் பேசிக்கொண்டாள்.
 
"ஏன் தான் இந்த ஆண்கள் இன்னும் அதை விளங்கிக்கொள்ளவில்லை. அதிலும் என் பாஸ் ஆர்.நடராஜ் இன்னும் பின்னோடி, காலம் வரும் , கோலம் புரிவான்" தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
 
அடுத்த நாள் வாகைச்செல்வி அலுவலகம் சென்ற போது, அங்கு பல பில்லியன் ருபாய் வழக்கை எதிர்கொள்ளும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு பிரதிநிதித்துவப்படுத்த அவளின் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது அறிந்தாள். அது தான் அவளுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அறிவுசார் சொத்துரிமை (இலங்கை வழக்கு - புலமைச் சொத்து) என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். இதற்கான சட்டம் சிக்கலான விவரங்களை உள்ளடக்கியது. ஆர்.நடராஜ், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, தனது நிர்வாகத்தில் இருந்த சிறந்த வழக்கறிஞர்கள் குழுவைக் கூட்ட முடிவு செய்தார். பலருக்கு ஆச்சரியமாக, திறமைமிக்க நடுத்தர அகவை கொண்ட வாகைச்செல்வி ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை.
 
இருப்பினும், தற்செயலாக ஒரு மூத்த பங்காளிகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது விதி தலையிட்டது, கடைசி நிமிட மாற்றாக வாகைச்செல்வி அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். ஆர்.நடராஜ் அவளின் திறமையில் எந்த நம்பிக்கையும் இல்லாத போதிலும், வாகைச்செல்வி, அதை தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்க எண்ணினாள்.
 
கார்னிலியா சொராப்ஜியாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேரத்துடித்தனர். கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது பெண்கள் யாரையும் இதுவரையில் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததில்லை அதனால் உங்களையும் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நிச்சயம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சபதமேற்கிறார் கார்னிலியா. அதை செய்தும் காட்டினார். அந்த வரலாறு வாகைச்செல்விக்கு புத்துணர்வு கொடுத்தது.
 
அந்த உற்சாகம் தந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் விரைவில் அவள் தனது உண்மையான தகுதியை நிரூபித்தாள். அவளுடைய நுண்ணறிவு இன்னும் இன்னும் கூர்மையாக இருந்தது, அவளது வாதங்கள் அழுத்தமானவை மட்டும் அல்ல சட்டத்தின் நுணுக்கங்களை எடுத்துரைத்தது. மேலும் தொடர்பில்லாத எதிர் கட்சியின் வாதங்களை முறியடிக்கும் அவளது திறன் ஒப்பிடமுடியாதது.
 
வழக்கு முன்னேறும்போது, ஆர்.நடராஜ், வாகைச்செல்வியின் விதிவிலக்கான திறமையைக் தெரிந்தும் தெரியாமலும் கவனிக்கத் தொடங்கினார். வெற்றி அலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றுவதில் அவளது பங்களிப்புகள் முக்கியமானவையாக இருந்தன. படிப்படியாக, ஆர்.நடராஜ்ஜனின் கருத்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அவர் வாகைச்செல்வியை ஒரு திறமையான வழக்கறிஞராக மட்டும் பார்க்காமல், நிறுவனத்தின் முக்கிய சொத்தாக பார்க்கத் தொடங்கினார்.
 
இந்த வழக்கின் உச்சக்கட்டம் பரபரப்பான விவாதமாக மாறி நீதிமன்றத்தை கலக்கியது. வாகைச்செல்வியின் புத்திகூர்மையான நுணுக்கமான வாதம் எல்லோரையும் அசத்தியது. எதிர்க்கட்சிகளின் வாதங்களை மிக நுணுக்கமாக நேரடியாக தகர்த்து, சட்டப்பூர்வ புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல, வழக்கின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழமான புரிதலையும் அவள் வெளிப்படுத்தினாள் . இதனால் அவளின் நிறுவனம் இந்த வழக்கை வென்றது, கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு இலகுவாக வெற்றியைப் பெற்றது. இது, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" இல் கடமை புரியும் எல்லோராலும் பரவலாக கொண்டாடப்பட்டது.
 
வெற்றிக்குப் பிறகு, ஆர்.நடராஜ் நீண்ட பயணத்தின் பின், தன்னை மாற்றி அமைத்துக் கொண்டார். தன் முன்னைய தவறுகளை உணர்ந்தார். மிக முக்கியமாக, அவர் தனது நிறுவனத்தில் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை அடிப்படையில் குறைபாடுடையது என்பதை அவர் புரிந்துகொண்டார். வாகைச்செல்வியின் வெற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் தன்னை அறியாமலே அவரின் வாய் முணுமுணுத்தது.
 
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே --அது
நல்லது ஆவதும் தீயது ஆவதும்
அன்னை [பெற்றோர்] வளர் ப்பினிலே ''
 
ஒரு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் அல்ல, அவளும் இந்த சமூகத்தின் பங்காளி, என்பதை சில பெண்களும் கூட மறந்து விடுகின்றனர் என்பதே உண்மை. இன்று வரை எத்தனையோ மாற்றங்கள், வளர்ச்சிகள் சமூகத்தில் உருவான பின்னும் இன்னமும் பெண்களை மதிக்காமை தொடர்கின்றன. பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நியாயமான மாற்றத்தை விரும்புகின்றதும் புரிந்து கொள்கின்றதுமான நிலைமை இழுபறியாகவே உள்ளது. என்றாலும் ஆர்.நடராஜ் இன்று பெண்களை மதிக்கத் தொடங்கியது, அவரது நிறுவனத்துக்கு பெருமை சேர்த்தது.
 
ஆர்.நடராஜ்ஜனின் மாற்றம் படிப்படியாக ஆனால் ஆழமானதாக இருந்தது. அவர் தனது பெண் சகாக்களின் கருத்துக்களை தீவிரமாகத் மதிக்கத் தொடங்கினார், அது மட்டும் அல்ல, அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து மதிப்பிடத் தொடங்கினார். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தினார். நிறுவனத்திற்குள் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வழிகாட்டல் திட்டங்கள் நிறுவப்பட்டன.
 
இந்த மாற்றத்தின் அடிப்படையில் வாகைச்செல்வி தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தார். அவள் ஒரு மூத்த பங்குதாரர் ஆனார், அவளது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்தது. ஆர்.நடராஜ்ஜுடனான அவளது உறவு, அவளது பங்கு ஒரு வழிகாட்டியாக மற்ற பெண் ஊழியர்களுக்கும் இருந்து, பரஸ்பர மரியாதை மற்றும் போற்றுதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமமானவர்களின் உறவாக அது உருவானது.
 
"ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் திருகோணமலையில் மட்டும் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள சட்ட சமூகங்களில் ஒரு அலை போல் அங்கும் தாக்கி மாற்றங்களை ஏற்படுத் தூண்டியது. இதனால் மெதுவாக, பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு பரந்த இயக்கம் வடிவம் பெறத் தொடங்கியது. வாகைச்செல்வியின் கதை பரவலாக எல்லா சமூக தளங்களிலும் பகிரப்பட்டது, இது விடாமுயற்சியின் சக்தி மற்றும் சமூக விதிமுறைகளை சவால் செய்வதன் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக மாறியது.
 
ஆர்.நடராஜ்ஜனின் இந்த மாற்றம் ஒரு வெற்றிகரமான பாலின சமத்துவத்திற்கான பயணமாக அமைந்தது. பணியிடத்தில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பதன் தாக்கத்தை இது எடுத்துக்காட்டியது எல்லா ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டது.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சட்ட வல்லமைக்காக மட்டுமல்ல, பன்முகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காகவும் அரசால் கௌரவிக்கப்பட்டது . பெண்களுக்கு உண்மையான மரியாதை என்பது வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றியது என்பதை தொடர்ந்து அது நினைவூட்டியது.
 
வாகைச்செல்வியின் உருவப்படம் நிறுவனத்தின் புகழ் மண்டபத்தில் தொங்கியது, திறமை அங்கீகரிக்கப்பட்டு பாரபட்சமின்றி வளர்க்கப்பட்டால் என்ன என்ன சாதிக்க முடியும் என்பதன் அடையாளமாக அது எல்லோருக்கும் நினைவூட்டியது . மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு "பவுத்தர்களது [பவுத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதப்பட்டது போல, தங்களது ஒவ்வொரு சந்திப்பிலும், அதன் முடிவில் , "பெண்ணை மதிக்கவும்" என்ற நெறிமுறை அங்கு எதிரொலித்தது!!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
452232976_10225606369848846_751165468638223745_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=hqKgDo1NbPMQ7kNvgHGKzyB&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBni1LG_rXEbF1pD68Z--nS7vn2cOI_3C8yR1NQJ465Rw&oe=66A1378E  452097961_10225606369528838_3930444428636306105_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Hu3OR6q7Q1cQ7kNvgHgUcWA&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAMD17vjxQeLgdXvhYkXjLs9D4s0FlaL6GhNdFVRlHi4g&oe=66A140D2  451980773_10225606369888847_192839046830577528_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=iB2pzcx1M7QQ7kNvgG-okQ_&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDmaXsgGAUSenYwCAXoQKtuzJ5sxgj7469-YZa6UTxwqQ&oe=66A12CA7
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kandiah Thillaivinayagalingam said:
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சட்ட வல்லமைக்காக மட்டுமல்ல, பன்முகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காகவும் அரசால் கௌரவிக்கப்பட்டது . பெண்களுக்கு உண்மையான மரியாதை என்பது வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றியது என்பதை தொடர்ந்து அது நினைவூட்டியது.
 

தில்லை ஐயா, இது உண்மையிலேயே நடந்த சம்பவமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

தில்லை ஐயா, இது உண்மையிலேயே நடந்த சம்பவமா?

என்னுடைய சில கருத்துக்களை அல்லது இலங்கை  வரலாற்று நிகழ்வுகளை சூழ்ந்த, கற்பனைக் கதைகளே கூடுதலானவை. அதில் இதுவும் ஒன்று  

நன்றி 

 

கூடுதலான உண்மையும், அல்லது முழு உண்மையும்  சில பொய்களும் அல்லது பொய்கள் இல்லாமலும் கலந்த கதைகளில் சிலவற்றின் லிங்க் கீழே தருகிறேன் 

ஓரளவு உண்மைக் கதைகளில் சில இதுவே !!


சிறுகதை - 3  / "உள்ளம் கவர்ந்த கள்வன்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7146236552118254/?

சிறு கதை - 6 / "நினைவில் நின்றவள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7214613928613849/?

சிறு கதை - 9 / "அறம் பேசுமா?"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7296183263790248/?

சிறு கதை - 15  / "உயர்ந்த மனிதர்கள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7385664131508827/?

சிறு கதை - 16  / "மர்மம் விலகியது"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7405763156165591/?

சிறு கதை - 18 / "ஒரு தாயின் கண்ணீர்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7446216112120295/?

சிறு கதை - 22 / "நிழலாக ஆடும் நினைவுகள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7547151945360044/?

சிறு கதை - 26 / "தந்தை எனும் தாய்")
https://www.facebook.com/groups/978753388866632/posts/7692124627529441/?

சிறு கதை - 32 / "சத்தம் போடாதே"
https://www.facebook.com/groups/978753388866632/posts/7889422104466358/?

சிறு கதை - 39 / "அப்பாவின் பேனா..!"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8062796290462271/?

சிறு கதை - 42 / "கூட்டுக்குடும்பம்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8126263057448927/?

சிறு கதை - 48 / "நிம்மதியைத் தேடுகிறேன்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8227714400637125/?

சிறு கதை - 108 / "கனகம்மா"
https://www.facebook.com/groups/978753388866632/posts/24162380043410639/?

சிறு கதை - 129 / "இளங்கவியும்'ஏடிஎச்டி' யும் [ADHD]"
https://www.facebook.com/groups/978753388866632/posts/25097762409872393/?

 

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.