Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 JUL, 2024 | 10:42 AM
image

அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றியுள்ள அதேவேளை வோசிங்டன் டிசியில்  கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

04bdb900-7c0b-4d01-bf10-aca98f1ec094.jpg

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியையும் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உருவப்பொம்மையையும் எரித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

83aea3c8-1a73-429a-a59e-355cebee50f8.jpg

ஹமாஸ் கமிங் என்ற வாசகத்தை எழுதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பசின் சிலைமீது ஏறியுள்ளனர்.

f0fa5897-67dc-4d23-ad23-3e8958ffea17.jpg

வோசிங்டனின் பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால்  பாலஸ்தீன கொடிகள் ஏற்றப்பட்டதாகவும்,நெட்டன்யாகுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

c538d957-25ac-4450-99b4-88d214371603.jpg

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/189324

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக இருக்கப்போவதில்லை’ - காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன?

26 JUL, 2024 | 01:23 PM
image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் நிலவும் மனித துயரத்தின் வீச்சு பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இதில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை” என்று கூறினார்.

இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஹமாஸ் அமைப்பினை ஈவிரக்கமற்ற யுத்தத்தினை தூண்டிய பயங்கரமான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட அமைப்பு என வர்ணித்துள்ளார்.

எனினும் இஸ்ரேல் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்கின்றது என்பது முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் காசாவில் இந்த துயரங்கள் நிகழும்போது நாங்கள் அதனை அலட்சியம் செய்ய முடியாது, என குறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் குறித்து நாம் உணர்ச்சியற்றவர்களாகயிருக்க முடியாது, நான் மௌனமாகயிருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை ஏற்படுத்தவேண்டும் என கமலா ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமலா இதனைத் தெரிவித்தபோது அவர் குரலில் இருந்த உறுதியும் கெடுபிடியும் இஸ்ரேல் பிரச்சினையில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு பைடனுடையதிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும் என்ற விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் போருக்கு பைடன் அரசு முழு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இஸ்ரேல் பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் “இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருதரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.

அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகு வருகையை ஒட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலில் தற்போதைய ஜனாதிபதி  ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் நாடு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/189429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் வேட்பாளராகும் முன்பே இஸ்ரேலிடம் கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ் - காரணம் என்ன?

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 ஜூலை 2024

இஸ்ரேல் பிரதமருடன் ''வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான'' என அவர் அழைக்கும் பேச்சுவார்த்தையை நடத்தியதாக அமெரிக்கத் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படுபவருமான கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேஸ்- காஸா விவகாரத்தில் பைடனை விட கடுமையான தொனியில் பேசிய கமலா ஹாரிஸ், காஸாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தனது "கவலைகளை" தெளிவுபடுத்தியதாகக் கூறினார். மேலும் நெதன்யாகுவிடம், இஸ்ரேல் தன்னை எவ்வாறு பாதுகாத்தது என்பதும் முக்கியமானது என்று கூறியதாகத் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு, "இந்தப் போர் முடிவடையும் நேரம் இது," என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

'இரு நாடுகள் தீர்வு'க்கான அவசியத்தையும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.

 

இதற்கு முன்னதாக, அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடனை நெதன்யாகு சந்தித்தார்.

அமெரிக்கக் காங்கிரஸ் சபையில், நெதன்யாகு உரையை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஹமாஸுக்கு எதிராக "முழு வெற்றி'க்கு உறுதி பூண்டுள்ளதாக காங்கிரஸ் சபையில் நெதன்யாகு கூறினார். அவர் உரை நிகழ்த்தியபோது ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவாளர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இஸ்ரேல்- காஸா போர் ஒன்பது மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெதன்யாகு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.

பைடன் இஸ்ரேலுக்கு அளித்த உறுதியான ஆதரவு பல இடதுசாரி ஆர்வலர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் ஜனநாயகக் கட்சியினருக்கு அவர்களின் ஆதரவு தேவைப்படலாம்.

அதிபர் தேர்தலில் பைடனுக்கு மாற்று வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் கருதப்படும் நிலையில், இஸ்ரேல் குறித்து அவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றி பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

நெதன்யாகு உடனான சுமார் 40 நிமிடங்கள் சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேல் மீது தனக்கு "அசையாத அர்ப்பணிப்பு" இருப்பதாகவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் கூறினார்.

கமலா ஹாரிஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம்,BRANDON DRENON/BBC NEWS

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு மோதல் தொடங்கியதாக கூறிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல் நாட்டின் கணக்கின்படி இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 39 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

''இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. அது எப்படி தற்காத்துக்கொள்கிறது என்பதும் முக்கியமானது,” என்று ஹாரிஸ் கூறினார். மேலும் காஸாவில் உள்ள "மோசமான மனிதாபிமான நிலைமை" குறித்து கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

"துன்பத்தை பார்த்து உணர்வற்றவர்களாக இருக்க நாம் நம்மை அனுமதிக்க முடியாது. நான் அமைதியாக இருக்க மாட்டேன்," என்று அவர் கூறினார்.

''போரை முடிவுக்குக் கொண்டுவரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவோம். பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டு வருவோம்'' என்றார் அவர்.

குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, நெதன்யாகு வெள்ளிக்கிழமையன்று சந்திக்க உள்ளார்.

முன்னதாக பைடனை சந்தித்தபோது, அவரை 40 ஆண்டுகளாகத் தெரியும் என்று பிரதமர் நெதன்யாகு கூறினார்.

அடுத்த சில மாதங்களில் ''பெரிய பிரச்சனைகள்" குறித்து பைடனுடம் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cpd9lx22ev9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.