Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"புண்ணியம்"
 
 
"புண்ணியம் என்று ஒன்றும் இல்லை
புரிந்த உணர்வுடன் உலகை அணுகு
பசித்த வயிறுக்கு உணவு கொடு
புலுடா மத கொள்கை நம்பாதே!"
 
"தவறு செய்யாதே பாவம் வரும்
தடுமாறி நீ நரகம் போவாய்
தருமம் செய் புண்ணியம் வரும்
தடை இன்றி சொர்க்கம் செல்வாய்!"
 
"புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று
புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான்
புற்றுநோய் போல் அது பரவி
புவியில் உள்ளோரை வலைக்குள் வீழ்த்திவிட்டது!"
 
"நீச செயல்களை என்றும் செய்யாது
நீதி செய்தால் உலகம் வரவேற்கும்
நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும்
நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்!"
 
"தவறு அறிந்து சரியாய் செய்
விளைவு இருக்கு புரிந்து செய்
அன்பு, அமைதி எங்கும் நிலவ
உண்மை, ஒற்றுமை நிலை நிறுத்து!"
 
"மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது
மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான்
மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது
மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!"
 
"பிறரை மதி ஒற்றுமை பேணு
கைம்மாறு இன்றி கடமையை செய்
பிச்சை போட்டு புண்ணியம் வராது
பிறந்தவர் எவருக்கும் மறுபிறப்பு இல்லை!"
 
"புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே
சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே
முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு
இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
நீசம் = இழிவு
337270681_760331065405555_8712191713812204046_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=pZ0wBAIy5j4Q7kNvgFNEXXJ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD7IDk7eg9L29ffTyjrHfdXbUoo_Z3v0_Sl4nBsi8vs8g&oe=66A857CD 337048547_204328305544372_2076252417541295115_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=HY0UhVtRz5gQ7kNvgFZTGDm&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCEqOliuBsjS3qIsl_EYeOQgNpNsEnBdi4SW5QufJDMtA&oe=66A85C84 337241196_626086499341509_6251775208539593889_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=r2QcG6ekOtQQ7kNvgGS8WBb&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAZ9r_foPqruAZ6gJWK4quJMaNUw7AuzbXBljN5MTtI9Q&oe=66A875B2
 
 
 
 
 
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.