Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

"பூ பூக்கும் நேரம் இது"


"பூ பூக்கும் நேரம் இது
பூவையர் வரும் காலம் இது
பூரித்த காளையர் வண்டாய் மாறி
பூந்தேனை மொய்க்கும் நேரம் இது!"

"புன்னகை பூ முகத்தில் தவழ
புரியாத மோகத்தில் விழிகள் தேட
புதுமை அனுபவம் ஊசல் ஆட
புருவம் பேசும் காலம் இது!"

"தரிசு நிலத்திலும் பூ பூக்கும்
தருணம் வந்தால் காய் காய்க்கும்
தலைவி நெஞ்சிலும் இடம் கிடைக்கும்
தளிர் விட்டு காதல் மலரும்!"

"மல்லிகை வாசம் மனதை கவர
மகரத் தோடு அழகைத் தர
மஞ்சள் நிலா குளிர் பொழிய
மயக்கம் தரும் நேரம் இது!"

"காதோரம் கொஞ்சி கண்கள் பேசி
காரணம் இன்றி ஊடல் கொண்டு
காம பாணம் நெஞ்சைக் துளைக்க
காதல் மீண்டும் மலரும் நேரமிது!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

No photo description available.  No photo description available.  No photo description available.

 
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.