Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   30 AUG, 2024 | 11:00 AM

image
 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு மிரட்டல் பொய்யான குற்றச்சாட்டுகள் வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர்.

Meenakshi-Ganguli-DPS-20-Oct-2011-8.jpg

ஆகஸ்ட் 29 2024 அன்று திருகோணமலையில் உள்ள நீதிமன்றம் ஆகஸ்ட் 30 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாட வேதனையை அனுபவிக்கிறார்கள். இதற்கு காரணமான அரச அமைப்புகள் அவர்களை மௌனமாக்க முயற்சி செய்கின்றன என 

 ”மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி" கூறினார். "நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள் மேலும் பலர் நீதியைப் பார்க்க அவர்கள் வாழ மாட்டார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்."என அவர் தெரிவித்தார்.

உலகில் அதிகளவானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று(இடதுசாரி  ஜேவிபி கிளர்ச்சி  (1987-89) மற்றும் அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (1983-2009) இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்கள்). இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர்

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சர்வதேச விசாரணைகளிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

missing_persons_sep.jpg

பத்திரிகையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், குறிப்பாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் செயற்படுபவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது  துன்புறுத்தப்படுவது குறித்து தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளுடன், இராஜதந்திரிகள் உட்பட சர்வதேச செயற்பாட்டாளர்களுடன் ஈடுபாட்டை கொண்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது குறித்து தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி உட்பட சமீபத்தில் பாதுகாப்பு படையினர் இழைத்த ஆட்கடத்தல், கண்மூடித்தனமான தடுத்துவைப்பு, சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்தும் மனித உரிமை ஆணையாளர் ஆராய்ந்தார்.

காணாமல்போகச் செய்யப்படல் போன்ற விடயங்களுக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆண்களே அனேகமாக இவ்வாறான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர்.

thumb_large_missing.jpg

மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை முழுவதும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்தது.

பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் அல்லது தாய்மார்கள். அவர்கள் தொடர்ந்து துஷ்பிரயோகங்களின் மாதிரியை விவரித்தனர். ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்ட பின்னர் பலர் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையின் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவர் உட்பட.

2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்த தனது கணவரின் கதி என்னவென்பதை அறிவதற்காக போராடும் பிரச்சாரம் செய்யும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதாக நம்புவதாகக் கூறினார்.   இராணுவம் தன்னைப் பற்றிய தகவல்களுக்கு அண்டை வீட்டாருக்கு பணம் கொடுக்க முன்வருவதாகவும் அவளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட தந்திரங்களில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தன்னை பற்றி தகவல்களை பெறுவதற்காக அண்டை வீட்டாரிற்கு இராணும் பணம் வழங்க முன்வந்ததாக தெரிவித்த அவர் தன்னை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவே இந்த நடவடிக்கை என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/192364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் மீறல்களில் ஈடுபடுகையில் ஐ.நா வும் ஏனைய நாடுகளும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பக்கம் நிற்கவேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Published By: VISHNU    30 AUG, 2024 | 08:56 PM

image

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நீதிக்கான தமது உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தமக்கான உரிமையைக்கோரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது. கண்காணிப்பு, ஒடுக்குமுறைகள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், வன்முறைகள் மற்றும் தன்னிச்சையான கைதுகள் என்பவற்றின் ஊடாக பாதுகாப்புத்தரப்பினர் அக்குடும்பங்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்திவருகின்றனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி (நேற்று) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருக்கும் பேரணிக்குத் தடைவிதிக்குமாறு ஓகஸ்ட் 29 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திடம் பொலிஸார்  கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நாளாந்தம் பெரும் துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். பெரும் எண்ணிக்கையான தாய்மார், மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாமலே உயிரிழந்திருப்பதுடன், மேலும் பலர் தமக்குரிய நீதி நிலைநாட்டப்படுவதைப் பார்க்காமலேயே தாம் உயிரிழந்துவிடுவோம் என அஞ்சுகின்றனர்.

1987 - 1989 வரையான காலப்பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் 1983 - 2009 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது.

இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதையோ அல்லது அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைத் தண்டிப்பதையோ இலங்கை அரசாங்கம் கடந்த சில தசாப்தங்களாக மறுத்துவந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இயங்கிவருபவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் நெருங்கிப்பணியாற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரிகள் கடந்த மேமாதம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை, குறிப்பாக தாய்மார் மற்றும் மனைவிமாரைச் சந்தித்ததனர். அதன்போது அவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் மீறல்கள் பற்றி விளக்கமளித்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களைத் தண்டித்தல், குற்றஞ்சாட்டப்பட்டிருப்போருக்கு எதிராகத் தடைகளை விதித்தல், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கும் ஆணையை மீளப்புதுப்பித்தல் ஆகிய பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், உறுப்புநாடுகளும், ஐ.நா முகவரமைப்புக்களும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய மீறல்களில் ஈடுபடும்போது மனித உரிமைகள் பேரவையும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/192434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.