Jump to content

ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

anura-2.jpg?resize=750,375&ssl=1

ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை செய்யவில்லை.

இன்று அவர் தேர்தல் தோல்விக்கு அஞ்சி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். மக்கள் பெரும்பான்மை தமக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார்.
ரணிலும் சஜித்தும் இன்று வெவ்வேறாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இருவரும் தனித்து போட்டியிடுவதனால் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிவார்கள். எனவே தற்போது ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிணைவது தொடர்பாக ரணிலும் சஜித்தும் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நாட்டு மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது.

நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோருகின்றோம். நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்காதவர்களுக்கு மக்கள் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398027

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?
    • வடக்கில் அனேகமான தொகுதிகளில் நாலாவதாக தான் வருவார். கிழக்கில் பல இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்காவதாகவும் வருவார் என நினைக்கிறேன். சமூக நீதி எனும் முகமூடியை போட்டு கொண்டு வரும் இனவாத ஜேவிபி யின் சனாதிபதி கனவு வடக்கு கிழக்கு மக்களால் முறியடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.
    • தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்குழு கூட்டம்  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது. இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும். இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். எடுக்கப்பட்ட முடிவு நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன். இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம். சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு. எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன். இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726405952
    • வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.
    • 15 SEP, 2024 | 09:38 PM (இராஜதுரை ஹஷான்) தேசியம், பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது,  யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு  தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினேன்.  2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது  பொருளாதார நிலைமை 15 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர் கையிறுப்புடன் அரசாங்கத்தை ஒப்படைத்தேன்.   ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியது.   2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மை ஊழல்வாதிகளாக சித்தரித்து அதிகாரத்தை கோரியவர்கள் இம்முறையும் அதிகாரத்தை கோருகிறார்கள்.   வெறுப்பினை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. சூழ்ச்சிகளினால் தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டோம். அந்த சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது.  ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் நாமல் ராஜபக்ஷவை தவிர்த்து எவரும் தேசியம் மற்றும் பௌத்தம் பற்றி பேசுவதில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம். தேசியத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/193789
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.