Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை  இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி கொள்பவன் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்கிறான். Winner takes it all.


தொலைந்தவனை தேடும் தாயின் கண்ணீர் நிலம் முழுக்க நனைகிறது. யுத்தம் முடிந்து பல வருடம் ஆகிறது பதின் மூன்றுக்கு மேல் (13th plass amendment) தருவோம் என்றார்கள் அதில் பாதி கூடி தரவில்லை. இன்று வரையில் எந்த அதிகாரப் பகிர்வையும் ( Devolution of power) செய்ய முயலவில்லை .அரசியல் கைதியாக அவர்கள் படும் துன்பம் வேறு. தாய் வேறு பிள்ளை வேறாய் தமிழன் துயர் தொடர்கின்றது. தானாகவே வந்து சிங்களம் தமிழனுக்கு தருவதற்கு என்ற ஒன்றும் இல்லை. அன்று ஒரு நாள் அந்த கிழவன் கேட்ட சமஸ்டியை (Federal state ) கொடுத்து இருந்தால் இத்தனை அழிவு இலங்கையில் இருந்திருக்குமா, அன்று தொடக்கம் அரசியல் தலைவர்கள் விதைத்த இனவாதம், மதவாதம், இன்று எல்லா இன மக்களையும் பிரித்து இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க அமைதியையும், சமாதானத்தையும் , அன்பையும் , போதித்த புத்த பகவானின் சிந்தனையில் இருந்து விலகி இன்று இலங்கையின் பௌத்த தேரர்கள் முழுமையான இனவாதத்தை பேசி இலங்கையின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் விளைவிப்பதோடு மட்டும் அன்றி சகல இனங்களுக்கு இடையிலான பிளவை ஏற்படுத்தி மேலும் இனங்களுக்கு இடையிலான மோதலை வன்முறையை வளர்த்து வருகின்றனர்.
இலங்கையின் சிங்கள  அரசியல் தலைவர்கள் உண்மையான  பெளத்தர்களாக இருந்து இருந்தால் நாம் துப்பாக்கி ஏந்தி இருக்க மாட்டோம். if jayawardana was real buddhist we would not be carrying a gun. என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் (India today) இந்தியா ருடே என்ற இதழுக்கு பேட்டி கொடுக்கும் போது கூறியது இன்று எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று தெரிகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குடும்ப ஆட்சியில் இருந்த கட்சிகளும் அதன் தலைவர்களும் இன்று வரை எமக்கு தந்த துன்பம் எழுத்தில் அடங்காது. தமது மண்ணை விட்டு ஓடினார்கள் அகதியானார்கள. கல்வியே வாழ்வு என்று இருந்த தமிழன் வாழ்வை தீ இட்டு எரித்தது இன்னும் ஒரு இனவாத அரச பயங்கரவாதம். தமிழனின் வாழ்வும் வளமும் அடையாளமும் அழித்து ஒழித்த வரலாறு அந்த மண்ணுக்குள் சிவப்பாக சிதறிக் கிடக்கிறது. வட கிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்து அங்கெல்லாம் புத்தர் சிலையை கொண்டு வந்தார்கள். எழுதுவதும் ஏமாற்றுவதும் கிழிப்பதுமாய் எத்தனை ஒப்பந்தங்கள். அரசியல் தீர்வு ரீதியாக நாங்கள் ஏமாற்றபட்ட (Political duplicity) வரலாறுகளே அதிகம் . இதே போல் இன்று வரை பல சகாப்தமாக மலையக தமிழர் இன்று வரை தொடரும் துன்பம் இன்னும் ஒரு கறை படித்த அத்தியாயம்.

 எல்லா குடும்ப ஆட்சியாளரின் கையில் ஈழ தமிழனின் இரத்த கறைகள் பதிந்துள்ளன. இப்படி இருக்கையில் ஜனாதிபதி தெரிவு நடக்கவிருக்கிறது எவரை தெரிவு செய்வது என்ற பெரும் குழப்பம் தமிழர்களிடையே நிலவுகின்றது. எந்த ஜனாதிபதி வேட்ப்பாளர்களிடமும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தீர்வுக்கான முழுமையான எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. வேறு எந்த தெரிவும் இல்லாத தமிழ் மக்கள் முள்ளி வாய்க்காலின் பின் தம் பலத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்கள் என்ன தெரிவை மேற்கொள்ள போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் விட்டு சில பிழைகளையும் படிப்பினையாக கொண்டு என்ன முடிவை எடுப்பதென்பது அந்த மக்களின் நீண்ட கால அரசியல் விடுதலைக்கு வித்து இடுவதாக அமைய வேண்டும்.

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசதில் அபிவிருத்தி எதுகும் இல்லை. அரசியலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே. அரசியல் தீர்வு ஒன்று அடிப்படையாக அமையும் இடத்து அவிவிருத்தி பாதைக்கு இது வழி சமைக்கிறது. இன்றும் கூட சர்வதேச நாடுகளினால் ஒரு பாரிய அவிவிரித்தி பணி செய்ய முடியாமைக்கு அங்கு ஓர் அடிப்படை அரசியல் தீர்வு ஒன்று இல்லாமல் இருப்பது தான். அரசியல் ஸ்திரத்தன்மை( Political stability) இல்லாமல் செய்யும் எந்த அபிவிரித்தியும் உதவிகளும் அந்த மக்களுக்கு போய் சேர முடியாது மாறாகவே ஊழ அரசியல் வாதிகளின் கைகளுக்குகே போய் சேருகின்றன.  

 ஒரு காலம் ஒற்றுமையோடு இருந்த ஈழத் தமிழர் இனம் இன்று ஒற்றுமை இன்றி சிதைந்து கிடக்கிறது. ஒரு பொது தெளிவான இலக்கின் அடிப்படையிலேனும் இவர்களால் ஒன்று பட முடியவில்லை. ஜனநாயக சூழலுக்கு ஏற்ப பல கட்சி அமைப்பு இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் சார்பில் ஒற்றுமையாக குரல் கொடுக்க முடியாதவர்களாகிப் போனார்கள். இன்று 70 வருடங்களுக்கு மேல் தீர்வு தருவார்கள் என மாறி மாறி சிங்கள அரசை நம்பி பேச்சுவார்த்தைள் நடத்தியும் இவர்களுக்கு ஆதரவு வழங்கியும் இதுவரை எதுவுமே தராத எந்த சிங்கள தலைமைகளையும் இனி நம்பி பிரியோசனம் இல்லை என்று தெரிந்து இன்று தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தமது எதிர்காலம் கருதி தமிழ் மக்கள் நிதானமாக அறிவு பூர்பமாக சிந்திப்பார்கள் என நம்புவோம்.

பா.உதயன் ✍️

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.