Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பூமிக்கு வரும் இரண்டாம் நிலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், மேடி மோலோய்
  • பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.

இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

தற்காலிக 'நிலா'

இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது.

அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன.

ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.

இந்த நிகழ்வு, இந்த வார இறுதியில் தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும்.

வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

"2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.

 
சிறுகோள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமிக்கு அருகில் ஒரு சிறுகோள் (மாதிரிப் படம்)

எப்படிப் பார்ப்பது?

2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. இது தோராயமாக 3,474கி.மீ விட்டம் கொண்டது.

இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது.

"நல்ல தொழில்முறைத் தொலைநோக்கிகளால் இதனைப் பார்க்க முடியும். எனவே, நீங்கள் இந்தச் சிறிய புள்ளி போன்று இருக்கும் அற்புதமான சிறுகோளைப் பார்க்க முடியும். இணையத்தில் வெளியாகும் படங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்," என்று முனைவர் மில்லார்ட் கூறினார்.

இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. மேலும், பல சிறுகோள்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது.

எனவே, இம்முறை நீங்கள் சிறிய நிலவைப் பார்க்கமுடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். விஞ்ஞானிகள் ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று கணித்துள்ளனர்.

"இந்தச் சிறுகோளின் கண்டுப்பிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,” என்கிறார் முனைவர் மில்லார்ட்.

"நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான வானியல் அற்புதங்கள் உள்ளன, எனவே நம் இரவு வானத்தைத் தொடர்ந்து கண்காணித்து இந்த வான்பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்," என்கிறார் முனைவர் மில்லார்ட்.

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் யூடுப்பில் சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌த்தில் எழுதின‌தை த‌மிழில் மொழி பெய‌ர்த்து வாசித்தேன் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாக‌ தான் எழுதி இருந்தின‌ம்.....................
    • தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களை விதைப்பதை தவிர வேறு என்ன வேண்டும் சகோ.... நன்றி. 
    • நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர். அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽
    • b யும் d யும்  சேர்ந்து வந்த போது . ..........!  😁
    • மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது..  சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள்,  அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை).. 🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன்,  தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்.. 🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார்.  🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை 🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை. 🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை ..  ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள்.   ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள். ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது. அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது.   2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000 2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000   எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.