Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், பிரான்சிஸ் மாவோ, பெத்தனி பெல்
  • பதவி, பிபிசி நியூஸ்

ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பினர்.

இந்தப் பேரிடருக்காக மூன்று நாட்கள் ஸ்பெயினில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.

 

"பலர் காணாமல் போயுள்ளனர்" என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சுவதாக அரசு கூறுகிறது.

வலென்சியாவில் குறைந்தது 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு இறப்புகளும், மலாகாவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ள பாதிப்பு இது.

ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பிரதமர் சான்சேஸ் ஆற்றிய உரையில், குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், முழுமையாக மீள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

"ஒட்டுமொத்த ஸ்பெயினும் உங்களுடன் சேர்ந்து அழுகிறது... நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம்" என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் சான்சேஸ் கூறினார்.

வலென்சியாவுக்கு அருகிலுள்ள முதல் நகரங்களில் ஒன்றான ஷிவாவில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் தெரிவித்துள்ளது.

 

'சுனாமி போல வந்த வெள்ளம்'

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதன்கிழமை காலை ஸ்பெயின் ராணுவம் மற்றும் அவசரக்கால குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரைந்தபோது, பால்கனிகள் மற்றும் கார் கூரைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

வலென்சியாவில் தப்பிப் பிழைத்தவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளத்தின் கொடூரத்தை விவரித்தனர். திடீரென ஏற்பட்ட அலை வீதிகள் மற்றும் சாலைகளை ஆறுகளாக மாற்றியது எனவும், பல வாகன ஓட்டிகள் அதில் தெரியாமல் சிக்கிக்கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

வலென்சியாவுக்கு அருகிலுள்ள பைபோர்ட்டாவை சேர்ந்த 21 வயதான கில்லர்மோ செரானோ பெரெஸ், தண்ணீர் "சுனாமி போல" நெடுஞ்சாலையில் தங்களை நோக்கி வந்ததை நினைவு கூர்கிறார்.

அவரும் அவரது பெற்றோரும் தங்கள் காரைவிட்டு, உயிர் பிழைக்க ஒரு பாலத்தில் ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

 
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மற்றொருவர், “வெள்ளம் ஆக்ரோஷமாக நெருங்கி வருவதை உணர்ந்த வாகன ஓட்டிகள், சாலையின் தடுப்புகளுக்கு அருகில் மனித சங்கிலி உருவாக்கி கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றனர். நல்ல வேளையாக யாரும் கீழே விழவில்லை. விழுந்திருந்தால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” என்று 45 வயதான பாட்ரிசியா ரோட்ரிக்ஸ் எல் பைஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

லா டோரேவில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அவரது நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாகவும், செவ்வாய்க் கிழமை இரவு "தண்ணீரில் கார்கள் மிதப்பதையும்" அலைகள் "சில சுவர்களை உடைத்துக் கொண்டு செல்வதையும்" பார்த்ததாகக் கூறினார்.

இதற்கிடையில், வலென்சியாவுக்கு அருகிலுள்ள ஹார்னோ டி அல்செடோ நகரின் மேயர், சில நிமிடங்களில் நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக எவ்வாறு உயர்ந்தது என்று பிபிசி நியூஸ்ஹவரிடம் தெரிவித்தார்.

"வெள்ளப்பெருக்கு மிக விரைவாக இருந்தது - நாங்கள் அவசர சேவைகளை அழைத்தோம், அவர்கள் கழுத்து வரை தண்ணீருடன் இருந்த சிலரை மீட்கத் தொடங்கினர்" என்று கான்சுவேலோ தாராசோன் கூறினார்.

 

உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கப்பட்டதா?

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவசரக் காலங்களில், உரிய எச்சரிக்கைகள் இருந்தபோதும், பேரிடர் நிவாரண அதிகாரிகள் மிகவும் தொய்வாகச் செயல்பட்டதாகப் பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மக்கள் சாலைகளைப் பயன்படுத்தவோ, உயரமான இடத்திற்குச் செல்லவோ முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

செவ்வாய்க் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணி வரை, தேசிய பேரிடர் காலங்களில் பொறுப்பாக நியமிக்கப்படும், தி சிவில் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து வெள்ளம் குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக ஷிவா மற்றும் அதற்கு அருகில் இருந்த சில பகுதிகள் 2 மணிநேரமாக வெள்ளத்தில் தத்தளித்து வந்தன.

வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வலென்சியா அவசரக்கால பிரிவைத் தற்போதுள்ள அரசு நீக்கியிருந்தது. அந்த முடிவை நியாயப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தற்போது அரசுக்கு எழுந்துள்ளது.

 

'முன்னெப்போதும்' இல்லாத மழை

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதன்கிழமை மீட்புப் பணிகளில் ஈடுபட ஸ்பெயின் அரசு 1,000க்கும் மேற்பட்ட துருப்புகளை களத்தில் இறக்கியது. ஆனால் பல குழுக்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நகரங்களை நெருங்க முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஸ்பெயினின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைக்க உதவுவதற்காக அதன் கோப்பர்நிக்கஸ் செயற்கைக்கோள் அமைப்பு செயல்படத் தொடங்கியதாகக் கூறினார். மற்ற ஐரோப்பிய அண்டை நாடுகளும் கூடுதல் படைகளை அனுப்ப முன்வந்துள்ளன.

ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், இந்த வெள்ளம் "முன்னெப்போதுமே இல்லாத நிகழ்வு" என்று புதன்கிழமை கூறியிருந்தார்.

நாட்டின் மத்திய கிழக்கில் புதன்கிழமையன்று மழை தணிந்தது. ஆனால் மழை வடகிழக்கு நோக்கி கட்டலோனியா பிராந்தியத்திற்கு நகர்வதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, வெள்ளத்தை எதிர்கொள்ளவும் தஞ்சமடையவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் பல்வேறு காரணங்களால் உருவாகிறது. ஆனால் காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடையும்போது, அது தீவிர மழைப் பொழிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

தீவிர மழைக்கு முக்கியயக் காரணம் "கோட்டா ஃப்ரியா" என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இலையுதிர்க் காலத்திலும் குளிர்காலத்திலும் மத்தியதரைக் கடலில் சூடான நீரில் குளிர்ந்த காற்று இறங்கும்போது ஸ்பெயினை தாக்கும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு இது.

 

மழை வெடிப்புகளுக்கு காலநிலை மாற்றம் காரணமா?

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும், புவி வெப்பநிலை அதிகரிப்பது, மேகங்கள் அதிக மழையைக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"புதைபடிம எரிபொருள் உமிழ்வால் புவி வெப்பமடையும் ஒவ்வொரு முறையும் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்க முடியும். இது கனமழை வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடெரிக் ஓட்டோ கூறினார்.

"இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, இந்த மழை வெடிப்புகள் காலநிலை மாற்றத்தால்தான் தீவிரமடைந்தன" என்கிறார் ஓட்டோ.

தொழில்புரட்சி தொடங்கியதில் இருந்து உலகம் ஏற்கெனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. உலக நாடுகள், தங்கள் கரிம வெளியீட்டை விரைந்து குறைக்காவிட்டால், வெப்பநிலை மேலும் உயரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“சுனாமி போல வேகமாக வெள்ளநீர் வந்தது” – மழைவெள்ளத்தின் பயங்கரம் குறித்து ஸ்பெயின் மக்கள் - இதுவரை 95 பேர் பலி

image

நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தவேளை அது அலை போல வந்தது என்கின்றார் குயிலெர்மோ செரொனோ பெரெஸ் ( 21) .அது ஒரு சுனாமி என்கின்றார் அவர்.

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்கிழமை வாகனத்தில் தனது பெற்றோருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை இவர் வேகமாக அதிகரித்த வெள்ளத்தில் சிக்குண்டார்.

ql_Bt7w_.jpg

காரை நீரில் விட்டுவிட்டு பாலத்தில் ஏறி அவர்கள் உயிர்தப்பினார்கள்.

பல மணித்தியாலங்களாக கடும்  மழை பெய்ததால் இவர்களின் குடும்பத்தவர்கள் போல பலர் வெள்ளத்தின் வேகத்தை அறியாமல் சிக்குண்டனர்.

செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது.

மிகவும் அவதானமாகயிருங்கள் கடும் ஆபத்துள்ளது மிகவும் அவசரமான தேவையென்றால் மாத்திரம் போக்குவரத்தை மேற்கொள்ளுங்கள் என சமூக ஊடகத்தில் எச்சரித்திருந்த வானிலை அவதான நிலையம்  பின்னர் ஆகக்கூடிய சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.

அன்று முழுவதும் பல தடவைகள் எச்சரிக்கைகள் வெளியாகியிருந்தன, மக்கள் ஆறுகள் காணப்படும் பகுதியை நோக்கி செல்வதை  தடுக்கவேண்டும் என உள்ளுர் அதிகாரிகள் எச்சரிகப்பட்டார்கள்.

3 மணியளவில் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் லாபுளுன்டே உடில் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சிறிதுநேரத்தின் பின்னர் அந்த பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரிப்பதாகவும் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவநிலையம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால் பல இடங்களை பொறுத்தவரை அந்த அறிவிப்பு சற்று தாமதமாக வெளியானதாக காணப்பட்டது.

20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிவ்வா மழை வெள்ளத்தின் சீற்றத்தை முதலில் எதிர்கொண்டது .

கனமழை காரணமாக செவ்வாய்கிழமை முதல் அந்த நகரத்தின் ஊடாக செல்லும் பள்ளத்தாக்கு நீர் நிரம்பியதாக காணப்பட்டது.

ஆறு மணியளவில் அந்த நகரத்தின் வீதிகள் ஆறுகளாக மாறிவிட்டன, நீரின் வேகத்தில் கார்களும் வீதிவிளக்குளும் அடித்துச்செல்லப்பட்டன.

அந்த பகுதிக்கு உதவியை வழங்குவதற்கு அவசரசேவை பிரிவினர் விரைந்தனர். ஆனால் முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் வெள்ளம் வீதிகளில் சூழ்ந்துகொண்டது.

திடீரென கடும் மழை பொழிந்தது, ஒரு சில நிமிடங்களில் நீர் ஒரு மீற்றர் அளவிற்கு அதிகரித்தது என்கின்றார் நகரமேயர் ரிபா ரோஜா டி துரியா.

மழை வெள்ளத்தில் சிக்குண்டு மக்கள் காணாமல்போயுள்ள செய்திகள் அந்த பிராந்தியத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்தன.

எனினும் வலென்சியாவில் உள்ள மக்களிற்கு சிவில் பாதுகாப்பு பிரிவினர் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என எச்சரிக்கவில்லை - இரண்டு மணிநேரத்தின் பின்னரே இந்த எச்சரிக்கை வெளியானது.

ஸ்பெயினின் வானிலை அவதானநிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்து 12 மணித்தியாலங்களின் பின்னரே போக்குவரத்தினை மேற்கொள்ளவேண்டாம் என்ற அறிவிப்பு வெளியானது குறித்து பல பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

spain_flodds3.jpg

இந்த எச்சரிக்கை தாமதமாகவே வெளியானது அலுவலகங்களில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் சிக்கினர் என சிலர் தெரிவிக்கின்றனர்.

வலென்சியாவிலிருந்து பிக்காசென்டிற்கு  வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வீதிகளை விழுங்கிய மிகவேகமான வெள்ளத்தில் பகோ சிக்குண்டார்.

வெள்ளநீரின் வேகம் கற்பனை செய்ய முடியாததாக பைத்தியக்காரத்தனமானதாக காணப்பட்டது, அதுகார்களை இழுத்துச்சென்றது” என அவர் எல்முன்டோ செய்திதாளிற்கு தெரிவித்தார். “கடும் அழுத்தம் காணப்பட்டது நான் காரிலிருந்து ஒருவாறு வெளியே வந்தேன் வெள்ளநீர் என்னை வேலியை நோக்கி தள்ளியது நான் அதனை பிடித்துக்கொண்டேன் என்னால் நகரமுடியவில்லை” என அவர் குறிப்பிட்டார்.

:அது என்னை விடவில்லை எனது ஆடைகளை கிழித்தது” என அவர் குறிப்பிட்டார்.

spain_flodds1.jpg

பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செடாவியை சேர்ந்த பட்ரிசியா ரொட்டிகேசும் மழை வெள்ளத்தில் சிக்குண்டார். “பைபோட்டாவில் நான் வாகன நெரிசலில் நின்றிருந்தவேளை வெள்ள நீர் மட்டம் அதிகரிக்க தொடங்கியது என அவர் தெரிவித்தார். கார்கள் மிதக்க தொடங்கின” என்றார் அவர்.

“ஆறுகள் பெருக்கெடுக்கப்போகின்றன என அஞ்சினோம் மற்றுமொரு வாகனச்சாரதியின் உதவியுடன் வாகனத்தை விட்டுவிட்டு நடந்து வந்தேன் புதிதாக பிறந்த குழந்தையை நபர் ஒருவர் பாதுகாப்பாக கொண்டு செல்வதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197558

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இதுவரை 95 பேர் பலி

இதுவரை 155 பேர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலரைக் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின்: 50 ஆண்டுகளில் கண்டிராத பெருமழையின் பாதிப்பைக் காட்டும் படங்கள்

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று கிழக்கு ஸ்பெயினின் வலென்சியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் டி லா டோரே பகுதியில், வெள்ளத்தால், குவியலாகக் கிடக்கும் கார்கள்
  • எழுதியவர், மட் மெக்கிராத்
  • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தைத் தற்போது சந்தித்து வருகிறது.

அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 150 பேர் இறந்தனர், மேலும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்பெயினின் வலென்சியா நகரில் குழந்தையை மீட்ட மீட்புப்படையைச் சேர்ந்தவர்
ஸ்பெயின் வெள்ளம்
படக்குறிப்பு, லெடூர் பகுதியில் வெள்ளத்தால் காயமடைந்தவரை மீட்கும் மீட்புப்படையினர்
பைபோர்ட்டா நகராட்சியில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பைபோர்ட்டா நகராட்சியில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

காலநிலை மாற்றம் காரணமா?

எந்தவொரு அதீத காலநிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக குறிப்பிடுவதில் விஞ்ஞானிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வெப்பநிலை உயர்வின் பங்கு குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“இந்தப் பெருமழை, காலநிலை மாற்றத்தால் தான் தீவிரமடைந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என காலநிலை நிகழ்வுகளில் வெப்பமயமாதலின் பங்கு குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவை வழிநடத்திய, லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார்.

ஸ்பெயின் வெள்ளம்
படக்குறிப்பு, லெடூர் நகராட்சியில் தன் நாயுடன் வெள்ளச் சேதத்திலிருந்து தப்பிக்கும் ஒரு நபர்
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வலென்சியாவில் வெள்ள பாதிப்புகளால் அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவஒருவர்

புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதல்

“புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதலின் ஒவ்வொரு பகுதியிலும், வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைப்பதன் விளைவாக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது,” என்று ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார்.

ஸ்பெயினில் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் இயற்கையாக ஏற்படும் வானிலை நிகழ்வு இந்தப் பெருமழைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெள்ளத்திற்கு பிறகு சாலையில் சேதமடைந்து கிடக்கும் கார்கள்
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தால் சில பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன
ஸ்பெயின் வெள்ளம்
படக்குறிப்பு, வலென்சியா நகரில் உள்ள பைபோர்ட்டா பகுதியில் தனது கடையில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையுடும் உருமையாளர் மிகுவெல்

'ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு 7% அதிக மழை'

இத்தகைய வானிலை நிகழ்வு ‘கோட்டா ஃப்ரியா’ (gota fría) அல்லது ‘கோல்ட் டிராப்’ (cold drop) என அழைக்கப்படுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக அதீத வெப்பநிலையைச் சந்தித்துவரும் மத்திய தரைக்கடலில், குளிர்காற்று வெப்பமான நீரை நோக்கிக் கீழிறங்குகிறது.

இதனால் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் வெப்பமான ஈரக்காற்று உயர்ந்து, அதிஉயர் மேகங்களை உருவாக்கி அவை பெருமழையை ஏற்படுத்துகின்றன.

இந்த மேகங்கள் உருவாக்கும் மழையின் அளவில், காலநிலை மாற்றம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் 7% மழை அதிகரிப்பதாக கூறுகின்றனர்.

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அக்டோபர் 30 அன்று ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள செடாவி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு கார்கள் தெருவில் குப்பைகளைப்போலக் குவிந்துள்ளன
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட கார்கள் இவை. இவற்றை சுத்தம் செய்யும் வேலையை மக்கள் கவனிக்க வேண்டியுள்ளது

மண்ணில் வெப்பத்தன்மை அதிகரிப்பு

இதனால், மழை பெய்யத் துவங்கும்போது, அது அதீத தீவிரத்துடன் நிலத்தில் விழுகிறது. இவ்வளவு அதிகமான நீரை உறிஞ்சும் தன்மை மண்ணுக்கு இல்லை.

“அதீத மழைப்பொழிவு நிகழ்வுகளுடன், அதிக வெப்பமான கோடைக்காலத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைகிறது,” என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஸ்மித் கூறுகிறார்.

“அதிகமான நீர் ஆறுகளில் கலப்பதால், அதீத மழையின் உடனடி விளைவுகள் தீவிரமடைகின்றன,” என்கிறார் அவர்.

வெப்பநிலை உயர்வு இத்தகைய புயல்களை மெதுவாக நகர்பவையக மாற்றி, அதனால் மழைப்பொழிவை அதிகமாக்குவதாக, விஞ்ஞானிகளுக்கு இடையே விவாதங்கள் நடைபெறுகின்றன.

ஸ்பெயின் வெள்ளம்
படக்குறிப்பு, வியாழக்கிழமை வலென்சியாவுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளத்தின் சேதக் காட்சிகளை காட்டும் கழுகுப்பார்வை புகைப்படம்
ஸ்பெயின் வெள்ளம்
படக்குறிப்பு, வலென்சியாவில் மால் ஒன்றின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கானோர் அதற்குள் சிக்கியுள்ளனர்

அதிகரிக்கும் புயல்கள்

இவ்வித புயல்களையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த ஆண்டு நாம் கண்டோம்.

மத்திய ஐரோப்பாவில் கடந்த செப்டம்பர் மாதம் போரிஸ் புயல் உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளும் மத்திய தரைக்கடலின் அதீத வெப்பத்தால் அதிகரித்தன.

இத்தகைய மெதுவாக நகரும் பேரழிவை காலநிலை மாற்றம் இரட்டிப்பாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்பெயினில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,MATTHIAS BACHLER

படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் இந்த வெள்ளம் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,DANIEL ROSS

படக்குறிப்பு, வலென்சியா பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,DARNA ANIMAL RESCUE

படக்குறிப்பு, ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாய்கள்
ஸ்பெயின் வெள்ளம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இந்த வெள்ளத்தால் லெடூர் நகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

ஆனால், வேகமாக நகரும், தீவிரமான இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிப்பது சிக்கலான பணி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“வெள்ளத்திற்கு முன்னதாக, உயர்வான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு உதவுவதிலும் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கைகள் உயிர்காக்கும் அம்சமாக விளங்குகின்றது. ஆனால், தற்போது நாம் ஸ்பெயினில் பார்த்தது போன்ற தீவிர, இடியுடன் கூடிய மழைக்கு முன்னெச்சரிக்கை விடுப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், எங்கு கனமழை பொழியும் என்பதை பெரும்பாலும் முன்கூட்டியே அறிய முடியாது.” என்கிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டார் லிண்டா ஸ்பெயிட்.

“வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இந்தச் சாவலை எதிர்கொள்வதற்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இது எளிமையான ஒன்றாக இருக்கப் போவதில்லை,” என்கிறார் அவர்.

அதீத வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன் நவீன உட்கட்டமைப்புகளுக்கு இல்லை என்பதை ஸ்பெயின் வெள்ளம் சுட்டிக்காட்டுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல நமது சாலைகள், பாலங்கள், தெருக்கள் ஆகியவை கடந்த நூற்றாண்டின் காலநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை, மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவை அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.