Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 NOV, 2024 | 07:16 PM

image
 

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

IMG-20241120-WA0007.jpg

அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

IMG-20241120-WA0006.jpg

அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

IMG-20241120-WA0005.jpg

பருத்தித்துளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஜே/403 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

IMG-20241120-WA0003.jpg

அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199269

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!

image
 

யாழ்ப்பாணம் - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அண்ணளவாக 60 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது வெள்ள நீர் வடிந்தோடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

VideoCapture_20241120-142617.jpg

VideoCapture_20241120-142538.jpg

VideoCapture_20241120-142442.jpg

VideoCapture_20241120-142429.jpg

VideoCapture_20241120-142404.jpg

VideoCapture_20241120-142419.jpg

VideoCapture_20241120-142319.jpg

VideoCapture_20241120-142341.jpg

https://www.virakesari.lk/article/199234

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீதிகள், தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!  

image
 

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. 

மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

IMG_20241121_134929742.jpg

IMG_20241121_132330993.jpg

IMG_20241121_133202301_HDR.jpg

IMG_20241121_133806398.jpg

IMG_20241121_133836059_HDR.jpg

IMG_20241121_134840948.jpg

IMG_20241121_134922082.jpg

https://www.virakesari.lk/article/199342

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம் நாளை

image

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வட மாகாண பிரதம செயலர், மாவட்டச் செயலர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை மின்சார சபையின் பிராந்திய முகாமையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், வட மாகாண மூத்த பிரதி பொலிஸ் மாஅதிபர், இராணுவக் கட்டளைத்தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.

வட மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/199343

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு!

image

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

IMG-20241121-WA0002.jpg

அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

IMG-20241121-WA0004.jpg

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களை சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களை சேர்ந்த 641 பேர் வெள்ள அணுத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது வீடு ஒன்றும் பகுதியளவில் செய்த அடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடை மழை காரணமாக 2,294 பேர் பாதிப்பு! 

அடை மழை காரணமாக 2,294 பேர் பாதிப்பு!   

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196257

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் ஏதாவது.............. யாராவது பூர்த்தி செய்தார்களா.....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் ஏதாவது.............. யாராவது பூர்த்தி செய்தார்களா.....?

சமைத்த உணவு அரசாங்கம் வழங்குகிறது அக்கா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.