Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பாகிஸ்தானின் புதிய ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஏவுகணை, தெற்காசியாவை தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்தான் இதனை வைத்து என்ன செய்ய திட்டமிடுகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் கூறுகிறார்.

"பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை பார்க்க முடியாது" என்று கானகி எண்டவ்மேன்ட் பார் இண்டர்நேஷ்னல் பீஸ் எனும் சிந்தனைக்குழு கூட்டத்தில் ஜான் ஃபின்னர் கூறினார்.

 

''நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. இதில் நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் முதல் பெரிய ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்யும் திறன் கொண்ட சாதனங்கள் வரை அடங்கும். ஒரு சில நாடுகளிடம் மட்டுமே அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் இருக்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவை ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆகும்'' என ஃபின்னர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாகிஸ்தானின் புதிய ஏவுகணை திட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது. (கோப்புப்படம்)

புதிய தடைகள்

பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தால் கூடுதல் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது.

ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பான திட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு நிறுவனங்கள் ஈடுபட்டதாக இதற்கு முன்பு அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக ஏவுகனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது.

பாகிஸ்தானின் நான்கு நிறுவனங்கள் அமெரிக்காவின் 'நிர்வாக ஆணை' (EO) 13382 இன் கீழ் தடைகள் விதிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை உருவாக்குதல் மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

"அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு திறன் கொண்ட ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் இருக்கலாம் என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏன் தடைகளை விதித்தது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது", என்று வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் சிந்தனைக் குழுவான வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டதாக கூறி சீனாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேலும் பல நிறுவனங்கள் மீதும் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா தடைகளை விதித்தது.

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு பாகிஸ்தான் எப்படி எதிர்வினையாற்றியது?

"அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருக்க முற்படுவோம். அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும்போது, நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம். இந்தியா ஒரு புதிய வித விளையாட்டை விளையாடி வருகிறது. அது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் உடனும் நெருக்கமாக இருக்கிறது", என்று பாகிஸ்தானின் சாமா தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நஜம் சேத்தி கூறினார்.

எவ்வாறாயினும், குவாடர் துறைமுகம் மற்றும் CPEC (China Pakistan Economic Corridor) போன்ற சில பிரச்னைகளால் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. மறுபுறம், இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பட்டு வருகின்றன என்று நஜம் சேத்தி கூறுகிறார்.

"அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் இரான் மீது இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது அங்கு ஆட்சி மாற்றம் மற்றும் இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் தொடர்புடையது. இதுவே அவர்களின் இலக்கு'' என்றும் நஜம் கூறினார்.

"அவ்வாறு நடந்தால், 2026-ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் பாகிஸ்தான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மீது இருக்கும்."

"சீனா பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய உதவி நாடாக இருக்கிறது, இதனை அமெரிக்காவால் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பைடன் அரசாங்கத்தின் பல கொள்கைகளில் பெரிய மாற்றங்களை டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்

டிரம்ப் அதிபரான பிறகு என்ன நடக்கும்?

சமீபத்தில், பாகிஸ்தான் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பாக, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இக்கட்சி அமெரிக்காவிடம் லாபி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து நஜம் சேத்தி கூறுகையில், "இதற்கு முன்பு பலமுறை பாகிஸ்தான் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. 1971-ஆம் ஆண்டு போர் நடந்த போதிலும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தடை விதித்தது".

''1977 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்த போதும் அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருந்தது.''

இது நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், பாகிஸ்தான் முன்பு செய்ததையே மீண்டும் தொடரும் என்றும் நஜம் சேத்தி குறிப்பிட்டார். ''இரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது ஆனால் இரான் தனது பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்திவிட்டதா?'' என்கிறார் நஜம்

"பைடன் நிர்வாகம் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தின் மீது 6 அல்லது 7 முறை தடைகளை விதித்திருக்கிறது. எனவே இது ஒரு புதிய விஷயம் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே, பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை குறைக்க, தடுக்க அல்லது மெதுவாக்க அமெரிக்கா முயன்று வந்தது", என்று சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான மலீஹா லோதி கூறினார்.

"சீனா மீது, அமெரிக்காவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அது பாகிஸ்தானுக்கு தன்னம்பிக்கையை மட்டுமே அளிக்கிறது. ஆனால் இந்த முறை விதிக்கப்பட்டுள்ள தடைகள் எங்கள் திட்டத்தை பாதிக்காது" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.