Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   24 DEC, 2024 | 06:18 PM

image

சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது.

சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள நத்தார்  வாழ்த்துச்செய்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து ஒருபோதும் ஏழை பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.

இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம்,  வர்க்க, பேதங்களை ஒதுக்கி மனிதநேயத்தின் பெயரால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.

 நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான, அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை   உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.

சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து  பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். 

அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர்  புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை  உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும்.

அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும்  வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும்  'வளமான நாடு-அழகான வாழ்க்கையை'  உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும்  கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக  பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.

வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான  உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க  இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்.

https://www.virakesari.lk/article/202072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை, நன்றியுணர்வு, சமாதானத்திற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சியுடன் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் - பிரதமரின் நத்தார் வாழ்த்து

Published By: DIGITAL DESK 3   25 DEC, 2024 | 09:55 AM

image

நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது. ஒற்றுமையுடன் செயற்படுதல், பகிர்ந்து வாழுதல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் ஊடாக எமது உறவுகளும் வலுவானதாக முன்னேற்றமடையும். ஆரோக்கியமான மக்கள் சமூகம் மற்றும் பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணியானது வீட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை இதுபோன்ற கூட்டு முயற்சிகள் எமக்கு நினைவூட்டும்.

உள்நாட்டில் உட்பட வெளிநாட்டில் சேவையாற்றுபவர்களையும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டிகை காலத்தில் தமது அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிட முடியாத அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூற வேண்டும். 

உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாக சிறுவர்களும் மரணிக்கும் துர்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது. 

அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடுவதில் அவதானத்துடன் இருக்க வேண்டும். நமக்கு மாத்திரமன்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு சரியான தெரிவுகளை மேற்கொள்ளுங்கள்.  

இந்த காலத்தில் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பவும், பொறுமையை வளர்த்துக்கொள்ளவும், ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

https://www.virakesari.lk/article/202094

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.