Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"ராசாத்தி மனசுல"
 
 
காதல் !! ஏழை பணக்காரன் , சாதி மதம் , நிறம் குணம் இவை எதையும் பார்த்து வருவது அல்ல, சொல்லமுடியாத இன்பத்தையும் தாங்க முடியாத துன்பத்தையும் கொடுப்பது தான் காதல் !! என் மனதில் அவள் மேல் காதல் இன்னும் இருக்கிறது. ஆனால் அவள், ராசாத்தி மனசுல ?
கீதையில் கிருஷ்ணன்
 
चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः ... (अध्याय ४ - श्लोक १३)
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ் ... (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13)
 
குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலைத்துவிட்டது. அது இன்று குறைந்து கொண்டு வந்தாலும், அது முற்றிலும் மாறியதாக இல்லை என்பதே உண்மை.
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏‏
 
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் என்கிறது குரான் வசனம்.
 
குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.
இனி நான் இதைப்பற்றி அலசுவதிலோ அல்லது தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று பார்பதற்கோ இனி எனக்கு நேரம் இல்லை. நான் மரணத்தின் இறுதியில் இருக்கிறேன்.
 
அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனுடைய இடையெங்கும் பாய்ந்து குருதியொழுகச் செய்து கொண்டிருந்தன. கர்ணனுடைய இதயமே அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிரிவுக்குத் தயாராகிவிட்டது. அப்பொழுது, கண்ணன் தேரிலிருந்து இறங்கி ஒரு வயதான கிழவனைப் போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றான். "நீ எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது!” என்று மாய வேதியனாகிய கண்ணன் நடிப்புக்காக வரவழைத்துக் கொண்ட கிழட்டுக் குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான். ஒரு பாவமுமறியாத கர்ணன் அந்த வேதியனுக்காக மனம் இரங்கி "இதோ என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும்” என்று கூறிக் கொண்டு கொடுக்க, அதை வாங்கி கர்ணனின் உயிரைப் பறித்தான். அந்த நிலையில் தான் நான் இப்ப.
 
என்னைச் சுற்றி ஒரு கூட்டம் பொல்லுகளுடனும் கத்திகளுடனும் நிற்கிறது. அது ராசாத்தியின் தந்தை சுப்பிரமணியத்தின் ஆட்கள். நான் அவர்கள் ஏற்கனவே எழுதிவைத்த ' நான் உன்னை உண்மையில் விரும்பவில்லை, காதலை விட காமமே எனக்குள். நீ நல்லவள். உன்னை கெடுக்க நான் விரும்பவில்லை. என்னை மறந்து, நீ யாரையாவது திருமணம் செய்து மகிழ்வாக வாழு!" என்ற கடிதத்தில் கையொப்பம் வாங்க. ஆனால் நான் மறுத்ததால் தான், இன்னும் கொஞ்ச நேரத்தால் மரணிக்கப் போகிறேன்! ஆனால் ஒரு வேறுபாடு, கர்ணன் கொடை மேல் கொண்ட காதலால் இறந்தான், நான் ராசாத்தி கொண்ட காதலால் இறக்கப்போகிறேன்.
 
நான் நன்றாகப் படித்தவன், நல்ல உயர் பதவியில் இருக்கிறேன். உலகம், சமுதாயம் பற்றி ஆர்வம் உள்ளவன். ஆனால் நாலாவது வர்ணம் என்று சிலரால், பலரால் கூறப்படும் ஒரு கட்டமைப்புக்குள் பிறந்தவன். என் அப்பா ஒரு நேர்மையான கூலித்தொழிலாளி. என்றுமே சமுதாய நீதிக்கு எதிராக தன் வாழ்க்கையை அமைக்காதவர். அதைப் பார்த்து அதன் வழியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவன்.
 
நான் கொழும்பில் இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியல் விரிவுரையாளராக இருந்தேன். அப்பொழுது தான் ராசாத்தி அங்கே என்னுடைய ஸ்டெனோ தட்டச்சு செய்பவராக பதவியேற்றார். முதல் நாள் சந்திப்பை நான் இன்னும் மறக்க வில்லை.
 
தந்தை சுப்பிரமணியத்துடன் ராசாத்தி முதல் நாள் பதவி ஏற்க வந்திருந்தாள். ஒரு தமிழ் அதிகாரிக்கு கிழே மகள் வேலை செய்யப்போகிறார் என்ற பெருமிதத்தில் புன்னகைத் தவழ, "சார் இது மகளின் முதல் வேலை, அனுபவம் இல்லை, அவளை கண்காணித்து வேலையை முறையாக கற்க உதவுங்கள்" காலில் விழாக் குறையாக கெஞ்சாமல் கெஞ்சினார். எங்கே போனது இந்த சாதி வெறி அன்று? ஐயா என்று கை எடுத்து கடவுளை வணங்குவது போல, இரு கை கூப்பி கெஞ்சி வரம் கேட்டாரே? ஐயோ இவர்கள் தான் சமுதாயத்தின் பெருங்குடி மக்கள்?? அது போகட்டும். அவள் தந்தையின் பக்கத்தில் ஒரு அழகிய பொம்மையாட்டம் மௌனமாக குறும் சிரிப்புடன் அந்த அவளின் விழி அழகு அப்படியே என்னைக் கவ்விக்கொண்டது.
 
"கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்
காவியை கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாழை வெண் ர்ரவுநீன் டகன்று
கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்
குமிழையும் குழைyaiயும் சீறி
விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை
வேலினும் கூறிய விழியால்"
 
ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை நான் அவளிடம் கண்டேன். அதில் நான் என்னை பறிகொடுத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்த சாதி வெறியை [தந்தையின் அல்லது குடும்பத்தின்] ராசாத்தி மனதுக்குள் வைத்திருக்காமல் கூறியிருந்தால், நான் கட்டாயம் ஒதுங்கி இருப்பேன். அவளும் சொல்லவில்லை. பின் தான் தெரிந்தது அவளுக்கும் அதில் நம்பிக்கை இல்லை என்று.
 
அவள் உவமை இல்லா அழகு என்றாலும், அந்த அழகுதான் என்னை முதலில் கவர்ந்தது என்றாலும் சமூக பார்வையில் நானும் ராசாத்தியும் ஒரே பார்வையில் இருந்ததும், இனிமையான அவளின் பேச்சும் நல்ல புரிந்துணர்வும் தான் கொஞ்சம் கொஞ்சமாக எம்மை நெருக்கமாக இணைத்தது.
 
"சிலம்பரியர்ப்ப வவிரொளியிழையமைப்பை
கொடிஎன்ன மின்னென வணங்க்கென்ன யாதொன்றுந்த்
தெரிகல்லா விடையின் கண் கண் கவர் பொருங்கோட"
 
அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய , துடக்கதான் கொடியென கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை கண்கள் அதனால் நாடிச் சென்றது என்னவோ உண்மைதான். ஒரு நாள் அழகான மாலை நேரம், வேலை முடிந்த பின் காலிமுகத்திடலுக்கு இருவரும் கொஞ்ச நேரம் தனியாக கதைப்போம் என்று போனோம். இது வரை, மனதுக்குள் என்ன தான் இருந்தாலும், வேலைத்தளத்தில் இரு ஊழியராக மட்டுமே பழகினோம். ஒரு சில தனிப்பட்ட வார்த்தைகள், அசைவுகள் தவிர. அவள் என்னை சார் என்று தான் கூப்பிடுவாள். என்றாலும் என் மேல் ஒரு காதல் இருப்பதை அவளால் சில சந்தர்ப்பங்களில் மறைக்க முடியவில்லை. நான் அதை தெரிந்தும் தெரியாததுமாக வரவேற்றதும் உண்டு.
 
நாம் இருவரும் அங்கு இருந்த வாங்கு ஒன்றில் அருகருகே இருந்தோம் , என்றாலும் நான் கொஞ்சம் இடைவெளிவிட்டே இருந்தேன். ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவள் அதை விரும்பவில்லை, என்னுடன் கைகளை பிடித்து ஒட்டி இருக்க முனைந்தாள். நான் கொஞ்சம் விலகி "நீ என்னைக் காதலிப்பதை உன் குடும்பம் ஏற்குமா ? அல்லது ஏதாவது தடை இருக்கா?" அதை முதலில் சொல் என்றேன். எதோ ஒன்று அவளின் வாயை திறக்க விடாமல் கட்டிபோட்டுக்கொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தால் அவள் நேரடியாக சொன்னாள் "என் குடும்பம் உயர் சாதி என்ற மாயைக்குள் வாழ்கிறது. ஆனால் நான் அதில் அக்கறை இல்லை. என் இன்றைய உலகில், எனக்கு நம்பிக்கையானவர் நீங்கள் ஒருவரே, நீங்கள் எனக்கு வேண்டும்!", நான் பதில் சொல்லமுன், என்னைக் கட்டிப்பிடித்து தோளில் சாய்ந்தாள்.
 
ஒரு ஆறு மாதத்தின் பின், முதல் முதல் விடுதலையில் யாழ்ப்பாணம் தான் போகப்போவதாக கூறி, இருவரும் ஒன்றாகப் போவோம் என்றாள். நானும் அவளின் ஆசைக்கு இணங்கி, ஒரு வெள்ளி இரவு கொழும்பு - யாழ்ப்பாணம் தபால் தொடர வண்டியில் ஒன்றாகப் போனோம். அது தான் என் கடைசி பயணம் என்று அப்போது தெரியாது.
 
"சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப
அலந்தனென்; வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு
செலவு, அயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!"
 
நாம் இருவரும் ஒன்றாக யாழ்ப்பாண தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்குவதைக் கண்ட சில பெண்கள், மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டு சிலரும் பலருமாகக் கூடிக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு சாடைமாடையாக அம்பல் பேசித் தூற்றத் தொடங்கினர். ராசாத்தியின் தாய் சிறிய கோலைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட ஓட அடித்தாள் . இதனால் அவள் நொந்து, அவளை பார்க்க அங்கு வந்த தோழியிடம் , இதைக் கேள். நள்ளிரவில் அவர் வருவார். அவருடன் நான் சென்றுவிடுவேன். இந்த ஊர் அலர் பேசிப் பேசி அழுது தொலையட்டும் என்றாள் என்பது, அவள் தோழி சொல்லித் எனக்கு தெரிய வந்தது. ஆனால் நள்ளிரவுக்கு முதல், நான் இங்கு மரணத்தின் விளிம்பில் படுத்து இருக்கிறேன். ஒன்று மட்டும் உண்மை 'ராசாத்தி மனசுல' இன்னும் நான் இருக்கிறேன்! அந்த நினைப்புடன் இந்த உலக வாழ்வை விட்டு இன்னும் ஒரு சில நிமிடத்தில் நிரந்தரமாக மகிழ்வாக போய்விடுவேன், ஆனால் என் மனசுல உள்ள கடைசி ஆசை அவள் வாழவேண்டும், இந்த மனித பிறப்பு வேறுபாடுகளுக்கு அவள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!!
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
417707131_10224519713363113_5027796746222009616_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BkkpXGJCltIQ7kNvgEpMKRo&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AkDKpVhIrAOUwS3CnsDIIze&oh=00_AYBstid7B1W6j9Ycuehbj64KUwpCCxwVHDWK9-ss1K84Jg&oe=6786BDEB  No photo description available.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.