Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 JAN, 2025 | 03:07 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியில் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி விருதுகள் சிலவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சமரி அத்தபத்து கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி  ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

2401_chamari_attapatth...jpg

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 6 விக்கட்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது.

பந்துவீச்சில் 9 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில்  சமரி அத்தபத்து  தற்போது முதலிடம் வகிக்கிறார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவியாக தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்)

ஸ்ம்ரித்தி மந்தனா (இந்தியா), லோரா வுல்வார்ட் (தலைவி - தென் ஆபிரிக்கா), சமரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), மாரிஸ்ஆன் கெப் (தென் ஆபிரிக்கா), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), அமி ஜோன்ஸ் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சொபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), கேட் க்ரொஸ் (இங்கிலாந்து)

2401_icc_women_odi_team_for_2024.png

https://www.virakesari.lk/article/204784

Edited by ஏராளன்
தலைப்பு மாற்றம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு சரித் அசலன்க தலைவர், அணியில் 4 இலங்கையர்கள்! 

24 JAN, 2025 | 03:25 PM
image
 

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சரித் அசலன்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த சிறப்பு அணியில் சரித் அசலன்கவுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்களும் இடம்பெறுகின்றனர்.

2401_charith_asalanka.png

சரித் அசலன்க கடந்த வருடம் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைச் சதங்களுடன் 605 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 50.2ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 97.1ஆகவும் அமைந்துள்ளது. ஸிம்பாப்வேக்கு எதிராக பெற்ற சதத்துடன் (101 ஓட்டங்கள்) கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை ஆரம்பித்தார்.

பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

2401_pathum_nissanka.jpg

பெத்தும் நிஸ்ஸன்க கடந்த வரும் 12 போட்டிகளில் ஓர் இரட்டைச் சதம் உட்பட 3 சதங்கள், ஒரு அரைச் சதத்துடன் 694 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது சராசரி 63.09ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 106.44ஆகவும் இருந்தது.

2401_kusal_mendis.jpg

குசல் மெண்டிஸ் 17 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைச் சதங்களுடன் 742 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 53.00ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 90.59ஆகவும் இருந்தது.

2401_wanindu_hasaranga.jpg

சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க 10 போட்டிகளில் 26 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியில் 3ஆம் இலக்க வீரராக பெத்தும் நிஸ்ஸன்கவும் 4ஆம் இலக்க வீரராக குசல் மெண்டிஸும் 5ஆம் இலக்க வீரராக சரித் அசலன்கவும் 8ஆம் இலக்க வீரராக வனிந்து ஹசரங்கவும் இடம்பெறுகின்றனர்.

இந்த அணியில் இந்தியர்கள், அவுஸ்திரேலியர்கள் எவருமே இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலா மூவர் இந்த அணியில் இடம்பெறுவதுடன் ஒரே ஒரு மேற்கிந்தியத் தீவுகள் வீரர் இடம்பெறுகிறார்.

சுருக்கமாக சொன்னால் இந்த அணி கிட்டத்தட்ட தெற்காசிய அணியாக காணப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்)

சய்ம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), சரித் அசலன்க (தலைவர் - இலங்கை), ஷேர்பேன் ரதபர்ட் (மே.தீவுகள்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஏ.எம். கஸன்பார் (ஆப்கானிஸ்தான்)

https://www.virakesari.lk/article/204787

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மெண்டிஸ்

24 JAN, 2025 | 05:21 PM
image
 

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பு அணியில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் 9  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 8 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டியிருந்தார்.

வருடத்தின் ஐசிசி டெஸ்ட கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் குழாம் (துடுப்பாடட வரிசையில்)

யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹெரி ப்றூக் (இங்கிலாந்து),கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜெமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), பெட் கமின்ஸ் (தலைவர் - அவுஸ்திரேலியா), மெட் ஹென்றி (நியூஸிலாந்து), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா).

2401_icc_test_team_of_the_year.jpg

https://www.virakesari.lk/article/204811

  • ஏராளன் changed the title to 2024க்கான ஐசிசி தெரிவு அணிகள் மற்றும் சிறந்த ஐசிசி வீரர்கள் விபரம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ரி20 சிறப்பு அணியில் இலங்கையின் வனிந்து

25 JAN, 2025 | 04:43 PM
image
 

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 சிறப்பு  அணியில்  இலங்கையின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.

அதிரடி வீரர்களும் அசாத்திய சகலதுறை திறமை உடையவர்களும் இந்த அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியிலும் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் 20 ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹசரங்க, 38 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியிருந்தார்.

ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்ரங்கில் அவர் பதிவுசெய்து 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற பந்துவீச்சுப் பெறுதியே கடந்த வருடம் அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது  .

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறப்பு அணியின்  தலைவராக கடந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறிப்பு அணி (துடுப்பாட்ட வரிசையில்): ரோஹித் ஷர்மா (தலைவர் - இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), பில் சோல்ட் (இங்கிலாந்து), பாபர் அஸாம் (பாகிஸ்தான்), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பளாளர் - மேற்கிந்தியத் தீவுகள்), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), ஹார்திக் பாண்டியா (இந்தியா), ராஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

2501_icc_men_s_t20_team.png

https://www.virakesari.lk/article/204869

2024ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரர்  இந்திய வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் 

25 JAN, 2025 | 06:57 PM
image
 

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியவர்களில்  அர்ஷ்தீப்  சிங்கும் ஒருவராவார்.

பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அசாத்திய திறமையுடன் பந்துவீசி அனைவரினதும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

ரி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் கடந்த வருடம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டர்.

தான் பங்குபற்றிய சகல போட்டிகளிலும் டெத் ஓவர்களில் மிகத் திறமையாக பந்துவீசியதுடன் விக்கெட்களையும் தாராளமாக வீழ்த்தியிருந்தார்.

கடந்த வருடம் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 15.31 ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் 10.80ஆகும். அவரது எக்கொனொமிக் ரேட் 7.49 ஆக இருந்தது.

https://www.virakesari.lk/article/204890

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரர்  இந்திய வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் 

25 JAN, 2025 | 06:57 PM
image
 

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியவர்களில்  அர்ஷ்தீப்  சிங்கும் ஒருவராவார்.

பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அசாத்திய திறமையுடன் பந்துவீசி அனைவரினதும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

ரி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் கடந்த வருடம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டர்.

தான் பங்குபற்றிய சகல போட்டிகளிலும் டெத் ஓவர்களில் மிகத் திறமையாக பந்துவீசியதுடன் விக்கெட்களையும் தாராளமாக வீழ்த்தியிருந்தார்.

கடந்த வருடம் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 15.31 ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் 10.80ஆகும். அவரது எக்கொனொமிக் ரேட் 7.49 ஆக இருந்தது.

https://www.virakesari.lk/article/204890

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண ஹீரோ அமேலியா கேர் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி  மகளிர் ரி20 கிரிக்கெட் வீராங்கனையானார்

25 JAN, 2025 | 07:02 PM
image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்ட நாயகியாகவும் தொடர் நாயகியாகவும் தெரிவான நியூஸிலாந்தின் அமேலியா கேர், 2024ஆம் ஆண்டுக்கான அதிசிறந்ந ஐசிசி ரி20 கிரிக்கெட் வீராங்கனையானார்.

இந்த விருதை வென்றெடுத்த இரண்டாவது நியூஸிலாந்து வீராங்கனை அமேலியா கேர் ஆவார். 9 வருடங்களுக்கு முன்னர் இந்த விருதை சுசி பேட்ஸ் வென்றிருந்தார்.

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நொக் அவுட் சுற்றில் நியூஸிலாந்து வெற்றிபெறுவதில் மிக முக்கிய பங்காற்றி இருந்தவர் 24 வயதான அமேலியா கேர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 43 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர், பந்துவீச்சில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி நியூஸிலாந்து உலக சம்பியனாக்கி இருந்தார்.

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் 6 போட்டிகளில் 135 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர், 15 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

கடந்த வருடம் 18 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடடிய அமேலியா கேர், 24.18 என்ற சராசரியுடன் 387 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் 29 விக்கெட்களை வீழ்த்தி சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

https://www.virakesari.lk/article/204891

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி வளர்ந்துவரும் வீரர் விருதை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த கமிந்து மெண்டிஸ்

26 JAN, 2025 | 05:05 PM
image
 

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளில் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றெடுத்த கமிந்து மெண்டிஸ், தனது தாய்நாடாம் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

26 வயதான கமிந்து மென்டிஸ், 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட், சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட், சர்வதேச ரி20 கிரிக்கெட் ஆகிய மூன்ற வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 50.03 என்ற சராசரியுடன் மொத்தமாக 1451 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

download.png

எவ்வாறாயினும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் அவர் வெளிப்படுத்திய சாதனைமிகு ஆற்றல் வெளிப்பாடுகளே அவருக்கு இந்த விருதை வென்றுகொடுத்தது.

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சய்ம்  அயூப், மேற்கிந்தியத் தீவுகளின்  ஷமர் ஜோசப் ஆகியோரைவிட சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்ததால் கமிந்து மெண்டிஸுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததன் மூலம் விரைவாக 1000 டெஸ்ட ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமப்படுத்திய பெருமையையும்  கமிந்து மெண்டிஸ்  பெற்றுக்கொண்டார்.  

இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் விளையாடிய 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 16 தடவைகள் துடுப்பெடுத்தாடி 1049 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது சராசரி வியத்தகு 74.92ஆக இருந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2022இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், கடந்த வருடமே இலங்கை டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தார்.

இதில் 5 சதங்கள் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷுக்குக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்  இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அரிய மைல்கல்லை கமிந்து மெண்டிஸ் எட்டியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக மென்செஸ்டர் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம்  இரண்டாவது இன்னிங்ஸில் அவர்  குவித்த சதமும், கியா ஓவல் விளையாட்டரங்கில் செப்டெம்பர் மாதம் அவர் பெற்ற அரைச் சதமும் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களாகும்.

கியா விளையாட்டரங்கில் அவர் குவித்த அரைச் சதம் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களின் பின்னர் இலங்கையை வெற்றி கொள்ள வைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில்  கமிந்து மெண்டிஸ்   267 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார்.

தொடர்ந்து காலியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 114 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

கடந்த வருடம் வருடம் 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 104 ஓட்டங்களையும் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 305 ஓட்டங்களையும் பெற்றார்.

கடந்து வருடத்திற்கான ஐசிசி டெஸ்ட் சிறப்பு அணியிலும் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஆற்றல்களை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் இரண்டு தடவைகள் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் விருதை வென்றிருந்தார்.

download.jpg

நேற்று வரை 2024க்கான ஏனைய ஐசிசி விருதுகளை வென்றவர்கள்

வருடத்தின் சிறந்த ரி20 கிரிக்கெட் வீரர்: அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

வருடத்தின் சிறந்த ரி20 கிரிக்கெட் வீராங்கனை: அமேலியா கேர் (நியூஸிலாந்து)

வருடத்தின் சிறந்த மத்தியஸ்தர்: ரிச்சர்ட் இலிங்வேர்த் (இங்கிலாந்து)

இணை அங்கத்துவ நாடுகளில் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் (நைஜீரியா)

இணை அங்கத்துவ நாடுகளில் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: ஈஷா ஓஸா (ஐக்கிய அரபு இராச்சியம்)

வருடத்தின் சிறந்த ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனை: ஆன்ரீ டேர்க்சன் (தென் ஆபிரிக்கா)

https://www.virakesari.lk/article/204953

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதை வென்றெடுத்தார் அமேலியா கேர்

Published By: DIGITAL DESK 2   28 JAN, 2025 | 12:20 PM

image
 

(என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்படும் ஐசிசி உயர்விருதுகளில் ஒன்றான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதை நியூஸிலாந்தின் ரி20 மகளிர் உலகக் கிண்ண நாயகி அமேலியா கேர் வென்றெடுத்துள்ளார்.

கடந்த வருடத்திற்கான சிறந்த ஐசிசி ரி20 கிரிக்கெட் வீராங்கனை விருதையும் வென்ற மெலி என செல்லமாக அழைக்கப்படும் அமேலியா கேர் ஒரே வருடத்தில் வென்றெடுத்த இரண்டாவது ஐசிசி விருது இதுவாகும்.

ரஷேல் ஹேஹோ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து, தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட், அவுஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லண்ட் ஆகியோரைவிட சகலதுறைகளிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதால் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை விருதை அமேலியா கேர் தனதாக்கிக்கொண்டார்.

2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரஷேல் ஹேஹோ விருதை அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இந்தியாவின் ஸ்ம்ரித்தி மந்தனா, இங்கிலாந்தின் நெட் சிவர்-ப்ரன்ட் ஆகிய மூவரே இதுவரை மாறிமாறி வென்றெடுத்துள்ளனர்.

நியூஸிலாந்து வீராங்கனை ஒருவர் இந்த உயர் விருதை வென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த வருடம் இரண்டு வகை மகளிர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைககளிலும் அமேலியா கேர் பிரகாசித்திருந்தார்.

2024இல் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் 267 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர் 14 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

ஆனால், மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் அமேலியா கேர் வெளிப்படுத்திய அபரிமிதமான சகலதுறை ஆற்றல்கள், மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள் என்பனவே அவருக்கு இந்த உயரிய விருதை வென்றுகொடுத்தது.

கடந்த வருடம் 18 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்த அமேலியா கேர், 24.18 என்ற சராசரியுடன் 387 ஓட்டங்களைப் பெற்றதுடன் 29 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

இது நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட்டுக்கான தேசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் இறுதி ஆட்டநாயகியாகவும் தொடர்நாயகியாவும் அமேலியா கேர் தெரிவாகியிருந்தார்.

2801_ameilia_kerr.jpg

https://www.virakesari.lk/article/205117

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசியின் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை பும்ரா வென்றார்

Published By: VISHNU   28 JAN, 2025 | 07:33 PM

image

(நெவில் அன்தனி)

ஐசிசியன் வருடத்தின் (2024) அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்தியாவின் வேகபந்துவீச்சு நட்சத்திரம் ஜஸ்ப்ரிட் பும்ரா வென்றெடுத்தார்.

2701_a_jasprit_bumra.png

வருடத்தின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தெரிவாகி ஒரு நாள் ஆன நிலையில் இந்த பிரதான விருதையும் பும்ரா தனதாக்கிக்கொண்டார்.

கடந்த வருடம் டெஸ்ட் அரங்கிலும் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலும் தனது அதிவேகப் பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களைத் திக்குமுக்காட செய்து அந்த இரண்டு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 21 போட்டிகளில் 86 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

13 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்களையும் 8 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 15 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் பதிவு செய்த 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே அவரது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த வருடம் அமைந்திருந்தது.

அது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இந்தியர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின், அணில் கும்ப்ளே, கபில் தேவ் ஆகியோருடன் நான்காவது வீரராக பும்ரா இணைந்துகொண்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களை சிதறடிக்கும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களான ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களை எல்லாம் பின்தள்ளி வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பும்ரா தனதாக்கிக்கொண்டார்.

ராகுல் ட்ராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஷ்வின் (2016), விராத் கோஹ்லி (2017, 2018) ஆகியோரைத் தொடரந்;து இந்த விருதை வென்றெடுத்த ஐந்தாவது இந்தியர் பும்ரா ஆவார்.

https://www.virakesari.lk/article/205164

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.