Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2   04 FEB, 2025 | 01:16 PM

image

யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_7335.jpeg

IMG_7350.jpeg

IMG_7319.jpeg

IMG_7434.jpegIMG_7398.jpegIMG_7374.jpegIMG_7371.jpegIMG_7425.jpeg

https://www.virakesari.lk/article/205778

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கரி நாள் போராட்டத்தில் பிரகடனம் வாசிப்பு

04 FEB, 2025 | 02:23 PM
image
 

இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (4) பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது.  

அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்!

ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். 

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பல முறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாங்கள் இங்கு திரண்டுள்ளோம்.

தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பான்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத் தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளுக்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்காவின் மாறி மாறி வரும் அரசுகள் அனைத்துமே தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்துக்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி முலாமிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசும் விதிவிலக்கல்ல!

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு 1977ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போராட்டம் கருக்கொண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இன அழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கி நிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்படாமல், தமிழர் தேசம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்படாமல் தமிழ் மக்களின் இறைமை இந்த நிலத்தில் உறுதி செய்யப்படமாட்டாது. சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமே ஆகும். பெறப்பட்ட சுதந்திரத்தின் இறைமை தமிழ் மக்களுடன் பகிரப்பட்டதாகக் கொள்ள முடியாது. 

தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளினுள் தமிழர் தேசத்தின் இறைமைக்கான அரசியலை முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த இறைமையுள்ள தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகிறோம். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும் தமிழ் மக்களைச் சூழும் சதிக்கோட்பாடுகள் மற்றும் சமகால அடிப்படை சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

1. தமிழ் மக்களின் தீர்வு முயற்சிகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினுள்ளும் ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு சதிவலைக்குள்ளும் தமிழ் மக்களின் இறைமைக்கான அரசியலை முடக்குவதற்கு எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். 

2. எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை முன்னரே சிறிலங்காவின் நடப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னரே வாக்களித்தது போன்று இவற்றை மீளப்பெற முன்வர வேண்டும். 

3. தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. தேசிய மக்கள் சக்தியினால் தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

7. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

8. பிராந்திய – பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியா பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமாகக் கொண்டு செயற்படுவதையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.

9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC), அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.

10. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறுவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய இன பிரச்சினையில் மரபு வழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். 

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது. 

https://www.virakesari.lk/article/205784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை ஏற்றியதற்கு யாழ். பல்கலை நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் - சரத் வீரசேகர 

06 FEB, 2025 | 07:11 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். அதேபோன்று உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியொன்று ஏற்றப்பட்டது. இது நாட்டுக்கு ஏற்படும் அவமரியாதை மாத்திரமல்ல. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காகவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தெற்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் சுதந்திர தினத்தை நாட்டின் அனைத்து மக்களும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வடக்கில் மாத்திரம் கறுப்புக்கொடி ஏற்றுவது என்பது தெற்கில் உள்ள மக்களின் உணர்வை தூண்டுவதாக அமையும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/205998

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.