Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

  

ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் ஜே.வி.பியிடம் உரத்துச்சொல்ல வேண்டும் என்றும் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபையில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் வைக்கும் வைக்கும் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19) வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வல்வெட்டித்துறை மக்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்திலேயே நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கட்டித் திரைகடலோடித் திரவியம் தேடியவர்கள்.

இவர்களது கப்பல்கள்தான் இரண்டாம் உலக யுத்த காலத்தில் உணவுப் பொருட்களைச் சுமந்துவந்து இலங்கை மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றின. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றித் தலைமறைவாகத் தமிழகம் கொண்டுசென்று சேர்ப்பித்தன.

அன்னபூரணி அம்மாள் என்ற கப்பலின் கட்டுமான அழகில் மயங்கிய அமெரிக்கர்கள் அதனை வாங்கி வல்வை மண்ணின் மாலுமிகளின் உதவியோடு அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்கள்.

வல்வெட்டித்துறை மக்கள் தொன்றுதொட்டுத் தினந்தினம் கடல் அலைகளோடு போராடி வாழ்ந்தவர்கள். இதனால், இயல்பாகவே திடகாத்திரம் உள்ளவர்களாகவும், மரண பயம் அற்றவர்களாகவும், வீரம் செறிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

ஆயுதப் போராட்டம் முளைவிடுவதற்கு முன்பாகவே அத்துமீறிய சிங்களச் சிப்பாய்களை நையப்புடைத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே, வல்வை மண்ணில் இருந்து தனியாகக் கடற்படையொன்றை வைத்து ஆளும் அளவுக்கு தமிழினத்துக்கான தலைமை ஒன்று பரிணாமித்தது.

ஆனால், இந்த வரலாறுகள் எதுவும் தெரியாததாகவே எமது இளைய தலைமுறை உள்ளது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அது கருக்கொண்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே நீடிப்பதையும் எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் எமது அரசியல் தலைவர்கள் தவறிழைத்துவிட்டார்கள்.

இதனாலேயே, காலங்காலமாகத் தமிழின விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த ஜே.வி.பியினால் இலகுவில் இங்கு காலூன்ற முடிகிறது.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற ருசியில் இப்போது ஊரும் நமதே என்று வந்து நிற்கிறார்கள். ஆனால், ஊர் எங்களதுதான் என்ற தெளிவான பதிலைத் தமிழ் மக்கள் இம்முறை ஜே.வி.பிக்கு சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://seithy.com/breifNews.php?newsID=332335&category=TamilNews&language=tamil


  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடக்கினாலும் புல்லரித்துவிட்டது....................🤣.

கடல், கப்பல், வீரம்............. இப்படியே சொல்லிச் சொல்லி, கடைசியில் அந்த ஊரில் ஒரு ரோடு கூட போடவில்லை................ இவ்வளவு நாளும் மாறி மாறி வல்வை நகரசபையும், உடுப்பிட்டித் தொகுதியும் எங்களிடம் தானே இருந்தது................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்



Nadarajah Kuruparan 

“கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும்”

அனுரவுக்கு முன் – அநுரவுக்கு பின் இலங்கை அரசியல் பகுதி 4.

நடிகர் நெப்போலியனின் சினிமா வசனம் ஒன்று ஞாபகம் வருகிறது.

“கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும் எந்த இடமாயிருந்தாலும், மாலையும் மரியாதையும் எனக்கு தான் கிடைக்கனும்” என்ற சுயநல அரசியலில் சிக்கித் தவிக்கிறா்கள் தமிழ் மக்கள்…

அநுரகுமார திஸ்ஸநாயக்கா போன்று ஒரு கவர்ச்சிகரமான, ஆளுமையுள்ள வசீகரமான ஒரு தலைவர் (Charisma leadership) தமிழ் மக்களிடம் இருந்து, ஏன் உருவாக முடியவில்லை தெரியுமா? அவ்வாறு உருவாக முற்படுபவர்களை, உருவாகி வருபவர்களை நம்மவர்கள் இழுத்து விழுத்திவிடுவார்கள் என ஒரு நண்பர் சொன்னார்.

ஹரினி அமரசூரிய பிரதமராக தெரிவான பின்பு அது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சிங்கள சமூக வலைத் தளங்களில் அனல் பறந்தன. அந்தப் பொறுப்பு விஜதஹேரத் அல்லது பிமல் ரத்னாயக்காவுக்கே கிடைக்க வேண்டியது, அவர்களே JVP யின் நீண்டகால உறுப்பினர்கள் மட்டுமன்றி அக்கட்சிக்காக பல தியாகங்களை செய்தவர்கள் என JVP யின் விசுவாசிகள் பலர் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஆனால் JVP யினதும் NPPயினதும் உயர் மட்டங்களின் முடிந்த முடிவாக ஹரினி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனை விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களும் ஏகமனதாக ஏற்றார்கள்.

JVP யின் ஆரம்பகால உறுப்பினரும், அதன் தூண்களில் ஒருவர் என கருதப்படுபவரும், அக்கட்சியின் செயலாளருமான ரிவின் சில்வா தேர்தலில் போட்டியிடவோ, தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றில் பிரவேசித்து முக்கிய அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ முனையவில்லை.

அனுரவை விடவும் மூத்த பலமான உறுப்பினர்கள் இருந்தும் அவரையே கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் JVP முன்னிறுத்தியது.

3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த JVPயும், அதன் முன்னணியான NPPயும், முன்னைய ஜனாதிபதி தேர்தலில் 5 லட்சங்களுக்கு குறைவான வாக்குகளை பெற்ற அநுரவும், 55 லட்சங்களுக்கு மேற்பட்ட வாக்குகளையும், 159 நாடாளுமன்ற ஆசனங்களையும் எப்படி பெற முடிந்தது?

அவர்களின் இடதுசாரித்துவத்தினூடான தொடக்கமும், இடது மைய அரசியலின் ஊடான இன்றைய பயணமும், அதன் வழி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தியாகங்களும், சொந்த நலன்களை விட கட்சி நலனும், மக்கள் நலனும் என சிந்திக்கும் முறைமையுமே இமாலைய வெற்றிக்கு காரணமாயின.

அவர்கள் ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளை மிதிக்கிறார்கள், கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள், நீதிமன்ற சென்று வடகிழக்கை பிரித்தார்கள், சுனாமி நிதியக் கட்டமைப்பை உடைத்தார்கள், தையிட்டி விஹாரை சட்ட விரோதம் என்பதனை ஏற்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சா்டுகளை அடுக்கிச் செல்கிறோம் அந்த உண்மையை நான் உட்பட எவரும் மறுக்கமுடியாது.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தமிழ் தரப்பிடம் உள்ள அரசியல் என்ன? நடமுறை என்ன? மூலோபாயம் என்ன? தந்திரோபாயம் என்ன? சர்வதேசத்தை கையாள்வதற்கான பொறிமுறை என்ன?

தமிழ் மக்களை ஒன்று சேரச் சொல்வதற்கு முன் சுமந்திரனையும் சிறிதரனையும் ஒன்று சேருமாறு ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகிறார். அதனைச் சொல்ல அவருக்கு என்ன அருகதை என ஆதரவாளர்கள் முழங்கலாம்.

ஆனால் தமிழரசு, சுமந்திரன் – சிறிதரன் என இரண்டாக பிளந்திருக்கிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரகுமார் – மணிவண்ணன் என ஏற்கனவே உடைந்து நிற்கிறது.

புலிகள், மேதகு, தமிழ்த்தேசியம் என முழங்குபவர்கள், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சிதைத்து நிற்கிறார்கள்.

சரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதன் மூலம் அந்தஸ்த்து கௌரவம், வரப்பிரசாதங்களை அனுபவிக்கலாம் என குடுமிச் சண்டை பிடிக்கலாம்.

அட உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஆவது, ஒரு பொதுவான பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் செய்திருக்கலாம் அல்லவா. நாடு அநுரவோடு ஊர் நம்மோடு என்பதனை அவர்களுக்கு அடித்துச் சொல்லியிருக்க முடியும் அல்லவா. முடிந்ததா? முடியவில்லையே…

ஆயின் எப்படி ஊர் உங்களோடு நிற்கும், மக்கள் உங்களோடு நிற்பார்கள்? அவர்கள் எப்படி உங்களை நம்புவார்கள்? நீங்கள் கதைப்பதெல்லாம் போலித் தமிழ்த் தேசியம் என்றல்லோ கருதுகிறார்கள்…

யாழ்ப்பாணத்தில் அனுரவுக்கு கைகொடுக்க காத்திருந்த பலரும், 90களிற்கு 2000 ஆண்டுகளுக்கு பின் பிறந்த படித்த, இளந் தலைமுறையினர் எனபதனை தமிழ்த்தேசிய போலிக் காவலர்கள் பார்க்கவில்லையா?

1983ன் பின் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கிய முக்கிய மையம் யாழ் பல்கலைக்கழகம். வரலாற்று சிறப்பு மிக்க ஜனநாயகப் போராட்டங்கள் பலவற்றை, யாழ் பல்கலைக்கழகம் முன்னின்று நடத்தியிருக்கிறது. அதன் மாணவர் ஒன்றியங்களுக்கு விசேட சிறப்புகள் இருந்தன.

ஆனால் இப்போ அந்தப் பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகள், மாணவர்கள், கல்விசாரா ஊழிய்கள் பலர் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் நிற்கின்றனர். ஏன் அவ்வாறு நிற்கின்றனர்? இவை பற்றி தமிழ் தேசியம் பேசும் போலிகள் உணரவில்லையா?

JVPயும் பலமுறை உடைவுகளுக்கு உள்ளானது. றோகனவுக்கு பின் சோமவன்ச அமரசிங்க, ரில்வின் தலைமையில் கட்சி முன்னோக்கிச் நகர்ந்தது.

ஆனாலும் கட்சியில் பலமாக இருந்த விமல் வீரவன்ச, நந்தன குணத்திலக, குமார் குணரட்ணம், மாலன், போன்ற பலர் உதிரிகளாகவும், கூட்டாகவும் பிரிந்து சென்று புதிய கட்சிகளை புதிய கூட்டுகளை உருவாக்கினர் அவர்களால் நிலைக்க முடிந்ததா?

காரணம் ரில்வின், விஜிதஹேரத், லால்காந்த, அனுர, சுனில் ஹந்தும் நெத்தி, பிமல் ரட்ணயாக்கா, வசந்தசமரசிங்க போன்ற தளம்பலற்ற தலைவர்கள் கட்சியின் கட்டமைப்பை சிதைவடையாமல் காத்தனர்.

அதற்கு கிரமங்களில், அடிநிலை மக்களிடையே JVPயின் ஊடறுப்பும், இறுக்கான அடித்தளங்களை கொண்டு இருந்தமையும் காரணமாயின. தென்னாசியாவில், பலமான தொழிற்சங்கங்களை, வெகுஜன அமைப்புகளை, பொதுக் கட்டமைப்புகளை கொண்ட முக்கிய கட்சியாக JVP அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விடுதலைப் போராட்ட இயங்கங்களின் அழிவுகளுக்கு பின் ஜனநாயக வழிக்குள் பிரவேசித்த இயக்கங்களுக்கோ, அன்றி பாரம்பரிய தமிழ் கட்சிகளுக்கோ இத்தகைய வெகுஜன கட்டமைப்புகள் உண்டா? கட்டுக்கோப்பான கட்சிகள் உண்டா?

யுத்தத்திற்கு பின்னான தமிழ்த்தேசிய அலை பல தேர்தல்களில் தமிழ் கட்சிகளை காப்பாற்றியிருந்தன. ஆனால் தமிழத் தேசியத்தை பேசுகிறவர்கள், முன்னெடுப்பவர்கள், அதற்கு தலைமை தாங்குபவர்கள் பலர் போலிகள் சுயநலம் மிக்கவர்கள் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய போது அக்ட்சிகளின் வாங்கு வங்கிகள் வீழத் தொடங்கின.

ஏற்கனவே ஆட்சி செய்த தென்னிலங்கை பேரினவாத கட்சிகளை விட அதன் தலைவர்களை விடவும், தமிழ் கட்சிகளை விடவும் அநுரவும், NPPயும் தேறலாம் என மக்கள் சிந்திக்கத் தொடங்கியதன் விளைவே அநுர சுனாமியில் தமிழ் அரசியல் அள்ளுண்டு போகக் காரணம்.

ஒப்பீட்டளவில், சரி பிழை, விமர்சனங்களுக்கு அப்பால் EPRLFல் இருந்து பிரிந்து சென்ற EPDP கிரமங்களில், அடிநிலை மக்கள் மத்தியில் தனக்கான வாக்குவங்கியை தக்க வைத்திருந்தது. மக்கள் சார்ந்த அமைப்புகள் சிலவற்றுடன் இறுக்காமன தொடர்பை கொண்டிருந்தது. கடந்த 3 தசாப்தத்திற்கும் மேலாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்த தோல்வி அடையாத நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானமைக்கு அடிநிலை மக்களுடன் அவருக்கும் கட்சிக்கும் இருந்த உறவே காரணமானது. தமிழ்த் தேசியக் கட்சிகளால் அவரை தோற்கடிக்க முடியவில்லை.

ஆனால் ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியலை முன்னெடுக்கலாம் என்ற அடிப்படையை தவிர கோட்பாட்டு ரீதியான அரசியல் இன்மையால் (மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசத்தை தவிர) கடந்த தேர்தலில் அவரது வாக்கு வங்கியும் உடைந்து போனது.

அவர் ஆதரித்த தென்னிலங்கை அரசியல் கூட்டுக்களின் சிதைவு, மக்களின் நிராகரிப்பு, அவர் ஆகர்சித்த அரசியல் தலைவர்களின் தோல்விகள், அவரது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருந்தன. அதனால் இனி ஆளும் அரசாங்கங்களுடன் பேச இடைத்தரகர் தேவையில்லை என மக்கள் உணர்ந்த போது டக்ளசின் - EPDPயின் அபிவிருத்தி அரசியலை அநுரவும், NPPயும் கையில் எடுத்த போது அவரது வாக்கு வங்கி சிதறிப் போனது.

மறுபுறம் காணி, ஆலயங்கள் வீதி விடுவிப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகள், ஈஸ்டர் குண்டு்தாக்குதல் விவகாரம் என்ற மக்களை கவரும் விடயங்களையும் NPP கையில் எடுத்திருக்கிறது.

இவற்றுடன், வடக்கில் இயங்காதிருக்கும் தொழிற்சாலைகளை இயங்க வைத்தல், பாலாலி விமானநிலையத்தை குறுகியகாலத்துள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், மன்னார் ராமேஸ்வரம் படகுச்சேவையை ஆரம்பித்தல், காங்கேசன் துறை துறைமுகத்தினூடான கப்பற் சேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி அரசியலையும் கையில் எடுத்திருக்கிறது. இவற்றின் மூலம் தமிழ் தேசிய அரசியலையும் NPP ஆட்டம் காண வைத்திருக்கிறது.

ஆக JVP – NPPயின் அரசியலை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு பலமான அரசியல் செல்நெறியை – பலமான முன்னணியை தமிழ் அரசியல் கொண்டிருக்க வேண்டும்.

போலித்தனங்களை, பித்தலாட்டங்களை கடந்து, முள்ளிவாய்காகல் பேரவலத்தை, கடந்த கால போராட்டத்தை, போரியல் வரலாற்றை, போரியல் விழுமியங்களை நினைவில் கொள்ளும் அதே நேரம்,

அந்தக் கடந்தகாலத்தின் துயர் சார் அனுபவங்களை படிப்பினைகளாக்கி நிகழ் காலத்தை செப்பனிட்டு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.

“கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும் எந்த இடமாயிருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்கு தான் கிடைக்கனும்” என்ற சுயலாப சுகபோக அரசியலையும் துறக்க வேண்டும்… தவறினால் மகாண சபையும் JVP – NPPயின் வசம் செல்வதனை கடவுளாலும் தடுத்து நிறுத்த முடியாது.

காலத்துக்கு ஏற்ப நான் அரசியல் பேசுவதாக, கண்ணீர் வடிக்கும் தமிழ்தேசிய பற்றாளர்களும், எனக்கு அரசியல் சாயம் பூச துடிப்பவர்களும் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். #ஞாபகங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.