Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பாய்ப் படகு'

ஒரு நாகரிகம் அதனின் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் தழைத்து ஓங்குகிறது. இதற்கு மெசொப்பொத்தேமியா விதி விலக்கல்ல. அவர்கள் தமக்கு அருகில் உள்ள நகரங்களுடனும் நாடுகளுடனும் வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்த விரும்பினார்கள். இது போக்கு வரத்துக்கான வீதி பாதைகள் அமைக்கப்பட முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுவாக நில பாதை மிகவும் கடினமாகவும் இடர்ப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இதனால் சுமேரியர்கள் வேறு ஒரு மாற்று போக்குவரத்து வசதியை பொருட்கள் மற்றும் மக்களை கொண்டு செல்ல கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அது, அந்த மாற்று வழி, நீர் போக்கு வரத்தாக வடிவம் பெற்றது. அதாவது முதலாவது படகு சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு மிக எளிமையான மரப் படகாக அமைந்தது. ஓவியன் ஒருவனின் சுமேரிய பாய்ப் படகின் உருவிளக்க படம் இங்கு தரப்பட்டுள்ளது. இதில், கொடிக்கம்பத்தில் எங்கு பாய் தொங்க விடப்படும் என்பதை கயிறு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இரு முன்னைய பாய் படகின் படங்கள் படகோட்டிகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. அந்த சுமேரிய படகின் பாய் [sails] சதுரமாக துணியால் செய்யப்பட்டதாக இருந்தது. அனால் அதன் கோணத்தையோ திசையையோ மாற்ற முடியவில்லை. உதாரணமாக படகு போக வேண்டிய திசையில் காற்று வீசினால், பயணம் நன்றாக அமைந்தது. ஆனால் அப்படி இல்லை என்றால், அவர்கள் தங்களுக்கு சாதகமாக காற்று அடிக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டி இருந்தது. அதாவது இந்த நீர் போக்கு வரத்து சாதகமான காற்று வீசலில் தங்கி இருந்தது. இந்த படகுகள் பழமையான வடி வமைபாக primitive in design] இருந்தது. எப்படியாயினும் இந்த பாய்ப் படகுகள் மெசொப்பொத்தேமியா மக்களுக்கு வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு உதவி செய்தது. அது மட்டும் அல்ல நீர்பாசனத்திற்கும் மீன் பிடித்தலுக்கும் கூட இது உதவி செய்தது. உதாரணமாக நீர் ஓட்டத்துடன் அதன் திசையில் [downstream] பாய்ப் படகில் சென்று தமது வலைகளை வீசுகிறார்கள். அதன் பின் அங்கு தங்கி காத்து இருந்து தமது பிடித்த மீன்களுடன் கரை திரும்புகிறார்கள். அவர்களால் ஒரு அளவிற்கு அதிகமாக பொருட் களையோ அல்லது மக்களையோ கையாள முடியா விட்டாலும், அந்த அவர்களின் படகு அமைப்பு [boat design] வருங்கால படகின் வளர்ச்சிக்கு, ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட , இன்னும் மூல /அடிப்படை கருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்க்கும் போது புறநானூறு - பாடல் 66 நினைவிற்கு வருகிறது. இங்கு வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து, காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டு கிறார். அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர்களின் காலத்திலேயே காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ!" ஆகும்.

(முக்கியச் சொற்களின் பொருள்: வளி -காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!''

என்று உரையாசிரியர்கள் இப்பாடல் வரிகளுக்கு பொருள் எழுதி வைத்துள்ளனர். அந்த தமிழர்களின் முனோர்களே இந்த சுமேரியர்கள் ஆகும் !

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

465796309_10227025659410198_889367013207

466128502_10227025659690205_300079355692

465774646_10227025659570202_777760613344

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.