Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்

October 3, 2025

83fb7884-ambika-satkunanathan.jpg

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்  ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா  புதன்கிழமை (01) கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்  ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வுக்கு “பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன.

அத்தோடு,  சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது “பாரம்பரியமான மனைவி ”(Traditional Wife) எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது.

இளம் பெண்கள், வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு  வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள்.

இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில்  74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர்.

பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு, “Women Shot AI” எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர். இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது.

இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு (content moderation) அவசியம் தான், ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவரின் வர்க்க நிலை அவருக்கு பாதுகாப்பையும் சிறப்பையும் தரலாம், ஆனால் அவரது மதம் அல்லது இனப்பெருக்கம் அவருக்கு அபாயத்தை உருவாக்கக்கூடும். பெண்கள் பல அடுக்குகளில்  ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள்.

வன்முறையை நாம் திடீரென்று நிகழும் நிகழ்வாகக் கருதுகிறோம், ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் ஓர் தொடர்ச்சி. பாலியல் வன்முறை மிக அதிகம் பேசப்படும், ஆனால் அது தனியே நிகழ்வல்ல; அன்றாட வன்முறையின் ஓர் பகுதி. ஆசிரியர் மாணவனை அடிப்பது, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை அடிப்பது, அலுவலக அதிகாரிகளின்  வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வது – இவை அனைத்தும் அன்றாட வன்முறைதான்.

கலாச்சார மதிப்புகள் பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் நடைமுறைகள், வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது சமூக பரிவு மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போரினால் கூட, மனிதாபிமானமற்ற கொடுமைகள் இயல்பானவை போலக் கருதப்படுகின்றன.

சட்டமும் நீதி மன்றங்களும்

சமூகமாக நாம் வன்முறைக்கு கடும் தண்டனைகளை (உதா: தூக்கு தண்டனை) கோருகிறோம். ஆனால், அத்தகைய தண்டனைகளுக்குப் பின்னரும் வன்முறை குறைவதில்லை. ஏனெனில் வேறுக்காரணம் – ஆண்மை பற்றிய சமூகக் கருத்தாக்கங்கள்  கவனிக்கப்படுவதில்லை.

சமூகத்தில் ஆண்களுக்கு வன்முறை, ஆணவம், ஆதிக்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. பெண்களை சம உரிமையுள்ள மனிதர்களாக பார்க்க மறுப்பதே, பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனப்போக்கையும், பாலியல் வன்முறையையும் உருவாக்குகிறது.

சட்டமும், நீதி மன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவற்றும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது, வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால், நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும்  வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது.

பொருளாதாரம், பெண்ணியம், சமூகக் கண்ணோட்டங்கள்

பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை மட்டும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யாது. ஏனெனில் அவை தற்போதைய சமத்துவமின்மைகளைப் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கும். உதாரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிந்தபின் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள், கடும் சுமைகளை ஏற்படுத்தின. பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர்.

பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்போது கூட, சமூக எதிர்பார்ப்புகள் அவர்களை “சமூகத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என நிர்பந்திக்கின்றன. “பெண்ணியம்” என்ற சொல்லையே பலர் பயன்படுத்த அச்சப்படுகிறார்கள். ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூட தன்னைப் பெண்ணியவாதி என்று சொல்லத் தயங்கினார்.

பெண்களின் கோபம் கூட “அவசியமற்றது” அல்லது “அதிகப்படுத்தல்” என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார்.

https://www.ilakku.org/women-are-being-erased-from-public-life-ambika-sarkunanathan/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.