Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-258.jpg?resize=750%2C375&ssl

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்‍டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் எழுந்து, வேகமாகப் பரவி, எரிபொருள் தொட்டி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த அனர்த்தத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக  கர்னூல் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The private travel bus that went up in flames after hitting a bike at Chinnatekur on the outskirts of Kurnool on the early hours on October 24, 2025.The private travel bus that went up in flames after hitting a bike at Chinnatekur on the outskirts of Kurnool on the early hours on October 24, 2025.New-Project-259.jpg?resize=600%2C338&ssl=1

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

https://athavannews.com/2025/1451016

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 19 உடல்கள் மீட்பு

ஆந்திரா, பேருந்து விபத்து,

பட மூலாதாரம், UGC

24 அக்டோபர் 2025, 02:31 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரது அடையாளம் மட்டும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கர்னூல் ரேஞ்ச் டி ஐ ஜி ப்ரவீன் கோயா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்னூலின் புறநகர்ப்பகுதியான கல்லூர் மண்டல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள்?

ஆந்திரா, பேருந்து விபத்து,

பட மூலாதாரம், UGC

பேருந்து தீப்பிடித்த போது அதில் 43 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணித்தோரின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு

பட மூலாதாரம், NCBN/X

பேருந்திலிருந்து உயிருடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா, பேருந்தின் டீசல் டேங்க் மீது பைக் ஒன்று மோதியதால் தீப்பற்றியதாக கூறினார்.

காயமடைந்த பயணிகளை கர்னூல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிரி (SIRI) சந்தித்த பிறகு பேசினார். அதன்பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், பேருந்தில் பயணம் செய்த 43 பேரில் 23 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.

"இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்கு இடையில் நடைபெற்றுள்ளது. பேருந்து மீது பைக் மோதியதில் பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்து, அதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், பேருந்து மீது பைக் மோதியவுடன் திடீரென தீப்பிடித்ததாக கூறினார். "பேருந்து மீது மோதிய பைக், பேருந்துக்கு அடியில் சென்று விட்டது. அப்போது பேருந்தின் என்ஜின் அருகே திடீரென தீப்பிடித்தது. எரிபொருள் டாங்கி தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன" என்று தெரிவித்தார்.

அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த விபத்து

அதிகாலையில் பேருந்து தீப்பிடித்த போது பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். தீப்பற்றியதை அறிந்த சில பயணிகள் கண்ணாடி சன்னலை உடைத்து வெளியேறி உள்ளனர்.

2 மாத மற்றும் 5 வயது குழந்தையுடன் பயணித்த தந்தை சன்னலை உடைத்துள்ளார். அவராலேயே பலரும் தப்பியுள்ளனர் என பேருந்தில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.

தீவிபத்தால் ஹைட்ராலிக் அமைப்பு எரிந்து சேதமடைந்தது, இதனால் கதவு திறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது என காவல் துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

மேலும், இதில் உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவலர்கள் தெரிவித்தனர் எனவும் பிடிஐ தெரிவித்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0qpn4q02k1o

  • கருத்துக்கள உறவுகள்

'20 பேர் பலியான விபத்தில் பேருந்தை கொழுந்து விட்டெரிய செய்த ஸ்மார்ட்போன்கள்' - புதிய தகவல்

பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களால் தீ மேலும் பரவியதாக தடயவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 40 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கட்டுரை தகவல்

  • சேஹர் அசாஃப்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களே தீ வேகமாக பரவக் காரணம் என்று தடயவியல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை, பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் எரிபொருள் டேங்க் உடைந்து, பின்னர் வெடிப்பு ஏற்பட்டதால் பேருந்து முழுவதும் தீப்பற்றியது.

பேருந்தின் உள்ளே சுமார் 40 பயணிகள் இருந்தனர். தீ வேகமாகப் பரவியதால் அவர்கள் தப்பிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், பேருந்துக்குள் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

"பேருந்தில் 234 செல்போன்கள் இருந்திருக்கின்றன. அவை சரக்குப் பெட்டகம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்திருக்கலாம்" என தடயவியல் அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

"பேருந்தில் இருந்த பேட்டரிகள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் செல்போன்கள் போன்றவை தீயை மேலும் பரவச் செய்து, இந்தத் துயரச் சம்பவத்துக்கு வழிவகுத்தன" என கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் படேல் தெரிவித்ததாக சிஎன்என் நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பி. வெங்கடராமன் கூறுகையில், "பேருந்தின் ஏர் கண்டிஷனிங் அமைப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மின் பேட்டரிகளும் வெடித்து தீயை மேலும் மோசமாக்கியது" என்றார்.

இதுகுறித்துப் பேசியபோது, "உருகிய இரும்பு ஷீட் வழியே எலும்புகளும் சாம்பலும் விழுவதை நாங்கள் கண்டோம்," என்று அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ. 4.6 மில்லியன் (சுமார் 39,000 யூரோ அல்லது 52,000 டாலர்) மதிப்புடையவை என்றும், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் என்டிடிவி செய்தி கூறுகிறது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. அவை சேதமடைந்தால் தீப்பற்றும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம், அவை கட்டுப்படுத்த முடியாத வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இது ஒரு பேட்டரியிலிருந்து அருகிலுள்ள பிற பேட்டரிகளுக்கும் பரவும். இதனை வழக்கமான தீயணைப்பு முறைகளால் நிறுத்துவதும் கடினம்.

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது விபத்துக்குக் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இறந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3xv4e6l97o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.