Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் எங்கெல்லாம்  கனமழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Images

24 நவம்பர் 2025, 01:51 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்:

அந்தமான் கடல் பகுதி

நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.

அரபிக்கடல் பகுதிகள்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா.

மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார்.

மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி,

நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்.

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RAIN ALERT

பட மூலாதாரம், Getty Images

எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் கனமழை

நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர்.

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை?

மழை

பட மூலாதாரம், Getty Images

25 நவம்பர் 2025, 01:56 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இன்று (25/11/25) அதிகாலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றோடொன்று செயல்படும் மூன்று சுழற்சிகள்

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நேற்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்த தகவல்களை அளித்தார்.

அப்போது, மூன்று வெவ்வேறு சுழற்சிகள் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தமான் கடல் பகுதி: நவம்பர் 23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 24ம் தேதி (நேற்று) நிலவரப்படி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடல் பகுதி: நவம்பர் 23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.

அரபிக்கடல் பகுதி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றைய (நவம்பர் 24-ஆம் தேதி) நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதுகுறித்துப் பேசிய அமுதா, "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

மழை

பட மூலாதாரம், Getty Images

அடுத்த சில நாள்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்?

நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 27: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

"ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்" என்று கூறிய அமுதா, தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்" என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgl6403wz6ko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சென்யார்' புயல் உருவானது - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

வங்கக்கடலில் புயல் உருவாகிறதா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD

26 நவம்பர் 2025, 02:20 GMT

புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, 'சென்யார்' புயலாக தீவிரமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

"நவம்பர் 26, 2025 காலை 05:30 மணி நிலவரப்படி, 'சென்யார்' புயல் நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு - தென்கிழக்கே 600 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார் தீவுகள்) தென்கிழக்கே 740 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது."

மேலும், "அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்யார் புயலின் தீவிரம் குறையாது, பின்னர் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது. அது இன்று (நவம்பர் 26) காலையில் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியா கடற்கரையைக் கடக்கும். அதன் பிறகு, அது மேற்கு - தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி திரும்பும்" எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மற்றொரு சுழற்சி

இது தவிர, ''நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது''. என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் உருவாகிறதா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நவம்பர் 24 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்த இரு சுழற்சிகளாலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்?

வானிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

நவம்பர் 26: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 27: தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 29: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,

இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

'ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், 'தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்' என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் என்ன நிலை?

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை (கோப்புப் படம்)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், ஏனைய பகுதிகளில் இடைக்கிடை 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பகுதியில் கடந்த 21ம் தேதி பாரிய கல்லொன்று சரிந்து ஏற்பட்ட மண்சரிவில் 6 பேர் உயிரிழந்திருந்ததுடன், மாவனெல்ல பகுதியில் 23ம் தேதி முச்சக்கரவண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, பதுனை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, ஹங்குரங்கெத்த ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை எச்சரிக்கைகளே விடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக மழையுடனான வானிலை நிலவிவந்த போதிலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிகளவான மழையுடனான வானிலை நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyl4zdd5wvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்யார் புயல்: புயல்களுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி? முடிவு செய்வது யார்?

புயல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், புயல் பெயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. (கோப்புப்படம்)

26 நவம்பர் 2025

(கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது)

மலேசியா மற்றும் இந்தோனீசியா அருகே உருவான 'சென்யார்' புயல் இன்று காலை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமானால் புயலாகவும் மாறலாம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோலக் கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகின்ற போதும் அதன் பெயர் பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் இதன் பின்னுள்ள வழிமுறை மிகவும் சுவாரஸ்யமானது.

புயல்களுக்கு இப்படிப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புயலுக்குப் பெயரிடும் நாடுகள் எவை?

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புயல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், புயல் பெயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. (கோப்புப் படம்)

பிராந்திய அளவில் ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது.

உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவு, மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளங்குகிறது.

டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.

புயல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், புயல் பெயர்

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, புயல்களுக்குப் பெயரிடும் இந்த வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது.

எதற்காக புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது?

வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. அவை,

  • அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக் கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காண்பது

  • அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது

  • ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது

  • ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது

  • மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளைத் துரிதமாக வழங்குவது

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை 13 உறுப்பு நாடுகள் இணைந்துதான் வைக்கின்றன.

சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

புயலுக்கு பெயர் வைக்க உள்ள நிபந்தனைகள்

இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

  • புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது.

  • உலக அளவில் வாழும் மக்களில் எவருடைய உணர்வையும் காயப்படுத்தும்படி பெயர் இருக்கக்கூடாது

  • மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக்கூடாது

  • சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையிலும் பெயர் இருக்க வேண்டும்

  • பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்

  • பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்

  • பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு

  • பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாகக்கூட அதை மறு ஆய்வுக்கு உள்படுத்த அந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.

புயல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், புயல் பெயர்

பட மூலாதாரம், RSMC

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.

அந்த வரிசையில் சென்யாரை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் அடுத்த புயலுக்கு திட்வா (Ditwah) எனப் பெயர் வைக்கப்பட உள்ளது. இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்துள்ளது.

பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது.

வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c865wq24ld5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? - சமீபத்திய தகவல்கள்

திட்வா புயல்

பட மூலாதாரம், Getty Images

28 நவம்பர் 2025, 08:03 GMT

புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா (ditwah) புயல் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

அந்த ஆய்வு மையம் வழங்கிய தகவலின்படி, கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் திட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

இன்று (நவம்பர் 28) அதிகாலை சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ தொலைவிலும் இருந்த திட்வா புயல் தமிழகத்தை நோக்கி மேலும் நகர்ந்துள்ளது.

இன்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திட்வா புயல் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து இலங்கை திரிகோணமலையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவிலும், காரைக்காலின் தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 530 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கரைகளை வரும் 30ம் தேதி அதிகாலை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்நிலையில், திட்வா புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் அமைந்துள்ள ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சென்னையைப் பொருத்தவரை, இன்று (நவம்பர் 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 29: வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 30: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டையின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 1: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 2 முதல் 4 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நவம்பர் 28–30 தேதிகளில் வட மற்றும் தென் தமிழகம், புதுச்சேரி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரம், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு–மாலத்தீவு பகுதிகளில் 35 முதல் 90 கி.மீ/மணி வரை பலத்த சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், "டிசம்பர் 1–2 தேதிகளில் காற்றின் வேகம் 45–75 கி.மீ/மணி வரை குறையும். எனவே ஆழ்கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறும், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திட்வா புயல்

வெள்ளத்தில் மூழ்கிய வாழை... படகில் சென்று அறுவடை செய்த விவசாயிகள்

அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், படகுகளில் சென்று அவற்றை அறுவடை செய்து வந்துள்ளனர் திருச்செந்தூர் அருகே உள்ள விவசாயிகள்.

திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு அதிகமான நீர் வந்தது. அது அங்கிருந்த வாழைத் தோட்டங்களில் நுழைந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

எனவே, விவசாயிகள் படகுகள் எடுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்று, வாழையை அறுவடை செய்து, படகுகளில் வைத்து கொண்டு வந்தனர்.

திருவாரூர் வந்த பேரிடர் மீட்புப் படையினர்

இலங்கை கடல் பகுதியில் உள்ள திட்வா புயல் 30ம்தேதி அதிகாலை தமிழக கடலோர பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் திருவாரூரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி, ஆவடி பட்டாலியனை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் திருவாரூருக்கு சென்றுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரங்களில் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை காட்சிப்படுத்தினர். மாவட்டத்தில் எங்கெல்லாம் மீட்புப் பணிகளுக்கான அவசியம் இருக்கிறது என்று கருதப்படுகிறதோ, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகு, அப்பகுதிகளுக்கு தனித்தனி குழுக்களாக பேரிடர் மீட்புப் படையினர் செல்வார்கள்.

திட்வா புயல்

திட்வா புயல் : புதுச்சேரியில் கடல் சீற்றம்

திட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே, அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவில் திட்வா புயல் நிலை கொண்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்வா புயல்

மேலும் கடலில் பொதுமக்கள் யாரும் இறங்காதவாறு, போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட 60 பேர் கொண்ட 2‌ கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd0kjej1g4zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை நெருங்கும் திட்வா புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

திட்வா புயல், தமிழ்நாடு, இலங்கை, இந்தியா

பட மூலாதாரம்,IMD

படக்குறிப்பு,திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

29 நவம்பர் 2025, 01:51 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல் இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே 430 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மைய அறிக்கைப்படி, இது கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையோரத்தை நாளை (நவ.30) அதிகாலை அடையக்கூடும்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 29:

தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும்.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நவம்பர் 30:

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 1:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

இவைதவிர்த்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

பலத்த காற்று வீச வாய்ப்பு

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 29:

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 30:

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்றின் வேகம் நவம்பர் 29 காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தையும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தை அடையும் என்றும், அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும்.

நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும்.

தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது (நவம்பர் 29 அதிகாலை 5.30 நிலவரப்படி). இது அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்தக் காற்றின் வேகம் நவம்பர் 30 வரை மணிக்கு 60-70 கி.மீ ஆக நீடிக்கலாம். அவ்வப்போது அது மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் வீசலாம்.

நவம்பர் 30 நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் மெல்ல முன்னேற்றம் காணப்படும்.

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதன் வேகம் அதிகரித்து, மணிக்கு 70-80 கி.மீ ஆக அதிகரித்து (அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொடும்) நவம்பர் 30 காலை வரை நீடிக்கும். இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும்.

நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும்.

மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் இன்று (நவம்பர் 29) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

  • திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

  • திருச்சியில் இன்று (நவ.29 சனிக்கிழமை) காலையும், மாலையும் நடக்க இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்துள்ளார்.

  • புதுவை மத்திய பல்கலைக் கழகத்திற்கும் இன்று (நவ.29 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் விமான சேவை ரத்து

திட்வா புயல் காரணமாக கனமழை பெய்வதால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யபட்டுள்ளன.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தினசரி 6 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னைக்கு 5 விமான சேவைகளும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சேவையும் இயக்கப்படுகின்றன.

புயல் காரணமாக ஆறு விமான சேவைகளும் இன்று (29-11-25) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விமான சேவை இருக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e01d21w4go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.