Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ

11 Jan, 2026 | 12:30 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுவதுடன், 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனது இரண்டு நாள் பயணத்தின் போது, வோங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக நீடிக்கிறது. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்கு இந்தக் கப்பல் விவகாரமே பிரதான காரணமாகக் கருதப்படும் நிலையில், வோங் யீயின் வருகையின் போது இவ்விடயம் குறித்து எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/235736

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ : நிதி உதவி, முதலீடுகள் குறித்து எதிர்பார்ப்பு

12 Jan, 2026 | 09:49 AM

image

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, திங்கட்கிழமை (12) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை நிறைவு செய்த பின்னரே அவர் கொழும்புக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சீனாவால் விசேட நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக தொடர்கின்றன.

புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்குக் காரணமாக இந்த ஆய்வுக் கப்பல் விவகாரம் பார்க்கப்படுகிறது.

வோங் யீயின் விஜயத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில் எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையகத்திற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ, இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 12 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் சீன வெளியுறவு அமைச்சின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் ஒரே விமானத்தில் குழுவாக வந்தனர்.

அவர்கள் இன்று அதிகாலை 01.05 மணிக்கு சீன நிறுவனமான பெய்ஜிங் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் தென்னாபிரிக்காவின் டேர்பனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர்  ஜெனரல்  சாவித்ரி பனபோக்கே ஆகியோர் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர்.

சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று  திங்கட்கிழமை (12) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

34dcd410-3345-4096-a712-2ca645008344.jpg

af232bce-e146-4412-bef7-d71a930bd5d4.jpg

e0d71a39-a827-4dfe-aeed-0a2fb569064f.jpg

fc94fe3f-7de7-4f92-b409-ae707fe3a03c.jpg

6e28c630-4538-434b-bfc0-9acf13b51429.jpg

https://www.virakesari.lk/article/235805

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - சீன வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Jan 12, 2026 - 01:06 PM

இலங்கை - சீன வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

டித்வா புயலுக்கு பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதும், சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்து அறிவிப்பதும் இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. 

தென்னாப்பிரிக்காவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் சீனா செல்லும் வழியில், சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை இலங்கை வந்தனர். 

எவ்வாறாயினும், குறித்த குழுவினர் தமது விஜயத்தை நிறைவு செய்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmkaumlq103szo29nut5gik7y

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.