Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0000.jpg?resize=650%2C375&ssl=1

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1464739

#################### ############################

26-698fcb1e01821.jpg?resize=600%2C375&ss

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு.

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.

https://athavannews.com/2026/1464783

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-26-1.jpeg?resize=750%2C375&ssl

இரட்டை கொலை. சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 இலக்கத்தைக் கொண்ட கார் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனவே, நேற்று மாலை இப்பகுதிகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தமது வாகனக் கெமராக்களைச் சோதித்து, குறித்த கார் தொடர்பான காட்சிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அக்குரேகொட பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், காரினுள் இருந்த தம்பதியினர் மீது மற்றுமொரு காரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

மேல் மாகாண தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர்: 071 8598008

பணிப்பாளர் / மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு: 071 8592279

https://athavannews.com/2026/1464821

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

634050107_3779574842184714_8660125276606

கொழும்பை அண்மித்த அக்குரேகொடவில் துப்பாக்கி சூடு இளம் தம்பதி உயிரழப்பு..

தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும்

பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது.

பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

Rks Arulmolithevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Akuregoda-Fire2.jpg?resize=640%2C375&ssl

தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளதுடன் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டதாக குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லோகு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன் இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

https://athavannews.com/2026/1464893

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Akuregoda-Fire2.jpg?resize=640%2C375&ssl

அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1465140

  • கருத்துக்கள உறவுகள்

அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்!

Feb 16, 2026 - 09:58 PM

அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்!

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று பிற்பகல் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற "டுடூ" மற்றும் "மோதர நிபுண" ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது.


"சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்" என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.


கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர்.


இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 - 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே.


இக்கொலைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார்.


வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.


இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

https://adaderanatamil.lk/news/cmlpdxq310010356nmaiy04yq

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

635159948_938627445182845_43290799728360

#################### ##########################

1771253815-SL-Akuregoda-shooting-Sri-Lan

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது.

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொ*லைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது.

“சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்” என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர்.

இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 – 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே.

இக்கொ* லைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார்.

வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

https://athavannews.com/2026/1465213

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேகநபர் பத்தேகமவைச் சேர்ந்த 46 வயதானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.   

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் | Akkuregodda Shooting Incident Suspect  

நீதிமன்றில் முன்னிலை

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

அக்குரேகொட பகுதியில் காரில் வைத்து சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பாக்கிதாரி என கூறப்படும் சந்தேகநபர் அம்பலாங்கொடவில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/akkuregodda-shooting-incident-suspect-1771730111

  • கருத்துக்கள உறவுகள்

அக்குரேகொட இரட்டை கொலை சந்தேகநபர் வௌிப்படுத்திய தகவல்

Feb 23, 2026 - 06:33 AM

அக்குரேகொட இரட்டை கொலை சந்தேகநபர் வௌிப்படுத்திய தகவல்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் (21) மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சட்டத்தரணியை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டவர் இவரே என சந்தேகிக்கப்படுகிறது.

46 வயதான சுனில் ரஞ்சித் எனப்படும் இவர், 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்து, அதற்கு அருகிலுள்ள கருவாத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த போதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் ஆலோசனையின் பேரில், ஹோமாகம பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன லியனகேவின் மேற்பார்வையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, தாம் இந்த கொலையை செய்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலைக்குப் பின்னர் கொட்டாவ அருகே காரிலிருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் அம்பலாங்கொடைக்கு சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையான இவர், கரந்தெனிய சுத்தா என்பவருடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரந்தெனிய சுத்தா தொலைபேசி ஊடாக வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த கொலையைச் செய்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

கொலை செய்த பின்னர், கரந்தெனிய சுத்தா தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஹெரோயின் போதைப்பொருளையும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், இவர் கரந்தெனிய சுத்தாவின் குழுவினருடன் செயற்பட்டுள்ளாரா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், அவர் செய்த வேறு கொலைகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரையில் துப்பாக்கிதாரி உட்பட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmlyh1aav0001356pm4qqi6cj

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்!

அக்குரெகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள் இருவரையும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற கொட்டாவையைச் சேர்ந்த ஜனக என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் ‘மல்வானே டுடு’ என்ற குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நபரே துப்பாக்கிதாரிகளை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து வந்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.

‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமையான இவர், மல்வானே டுடுவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு துப்பாக்கிதாரி உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொட, தெல்துவ பகுதியில் உள்ள கறுவாத் தோட்ட காணி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சுனில் ரஞ்சித் என்ற துப்பாக்கிதாரி, விசாரணைகளின் போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தாம் இராணுவத்தில் இருந்த காலத்தில் கரந்தெனிய சுத்தாவை அடையாளம் கண்டதாக அவர் கூறியுள்ளார்.

அக்காலகட்டத்தில் கரந்தெனிய சுத்தாவும் இராணுவப் பயிற்சியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருந்தபோது, கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்த கரந்தெனிய சுத்தாவை மீண்டும் சந்தித்து நண்பராகியுள்ளார்.

இதன்போது, சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி இப்போது எனது வழக்குகளுக்காக ஆஜராவதில்லை, அவர் ‘லோகு பெட்டி’யின் வழக்குகளுக்கே ஆஜராகிறார். எனவே அவரை முடிக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தா தம்மிடம் கூறியதாக துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியை மாத்திரமன்றி அவரது மனைவியையும் கொலை செய்யுமாறு கரந்தெனிய சுத்தா தமக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்னரும் தாம் ஹெரோயின் உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

துப்பாக்கிதாரிகள் இருவரும் சாரதியும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் துப்பாக்கிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கொலைக்குப் பின்னர் கொட்டாவையிலிருந்து பேருந்தில் தெஹிவளைக்குச் சென்று, அங்கிருந்து அம்பலாங்கொடவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

தாம் எங்கு மறைந்திருக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தாவிடம் கேட்டபோது, சரியான இடம் இல்லை, எங்காவது ஓரிடத்தில் இரு என அவர் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்தே அவர் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.

சந்தேகநபரான துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

https://athavannews.com/2026/1465944

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.