Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 1




பாகம் – 1 / “கடலின் உப்பில் கரைந்த வரலாறு”

உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இக்கிராம மக்கள் திரௌபதியைத் தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுவதுடன் நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத் திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி தமிழ் 'இயல் இசை, நாடகத்தை' போற்றி பாதுகாத்து வருகிறார்கள். வடமேல் மாகாணத்தில் கற்பிட்டி தொடக்கம் நீர்கொழும்பு வரை தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியாம். இப் பிரதேசங்கள் யாழ்பாண இராசதாணியின் கீழ் ஆட்சியில் இருந்தற்கு வரலாற்று ஆதாரங்கள் காணப்படுவதுடன் சரித்திர காலத்துக்கு முன்னே தமிழர்கள் வாழ்ந்த இடமாக உடப்பு காணப்படுகிறது. மேலும் கர்ண பரம்பரைக் கதைகளும் இங்கு காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களும் இதற்கு சான்றாகும்.

அப்படியான பெருமை கொண்ட உடப்பின் கடல் அன்று வழக்கத்தை விட அமைதியாக இருந்தது.

உடப்பு வாசியும், பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியருமான 'ஆதன்', காலையில் பள்ளிக்குச் செல்லும் முன், கடற்கரையில் நின்ற படியே தூரத்தில் தெரிந்த மீன்பிடி வலைகளைப் பார்த்தான். அந்த வலைகளில் இன்று மீன்களோடு சேர்ந்து, ஒரு தலைமுறையின் மொழியும் அடையாளமும் சிக்கிக்கொண்டது போல அவனுக்குத் தோன்றியது.

“கடல் எல்லோருக்கும் பொதுவானது… ஆனா வரலாறு சிலருக்கே தனிப்பட்ட சொந்தமாகி விட்டதே…” ["The sea belongs to everyone… but history has become the private property of only a few."] என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். மகாவம்சம் என்ற புத்த குருவின் புராணம், இன்று, புத்தரின் போதனைகளை மறந்த தொல்பொருள் திணைக்களத்தின் வேத நூலாக இருப்பது அவனுக்கு பெரும் ஆச்சரியம் கொடுக்கவில்லை.

அதைவிட அவனுக்கு வேதனை கொடுத்தது பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர் என்பது அண்மைய வரலாறாகும் [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese].

அவன் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தில், யாரோ ஒருவர் தன் பெயரைக் குறிக்காமல் எழுதியிருந்தார்:

“மொழி என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல... அது நினைவின் களஞ்சியம்.” ["Language is not just letters… it is a repository of memory."]

ஆதன் கற்பித்த அந்த உயர்நிலைப் பள்ளி, ஊரின் ஒரே ஒரு அரசுத் தமிழ்ப் பள்ளி ஆகும். ஆனால், அதிகாரிகளிடமிருந்து தினசரி சுற்றறிக்கைகள் சிங்களத்தில் அதிகளவில் வந்தன.

சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் இலங்கையின் அதிகாரப்பூர்வ தேசிய மொழிகளாக இருந்தாலும், 1956 ஆம் ஆண்டின் "சிங்களம் மட்டும் சட்டம்" என்ற வரலாற்று மரபு, அதிக எண்ணிக்கையிலான சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை மற்றும் இருமொழிக் கொள்கையின் தொடர்ச்சியான செயல்படுத்தல் சவால்கள் காரணமாக அரசாங்க அறிவிப்புகள் முதன்மையாக சிங்களத்தில் வருகின்றன என்பது யாரும் அறிந்ததே. ஆனால், "இருமொழி" என்பது மெதுவாக கலாச்சார அழிப்பதைக் குறிக்கும் ஒரு கண்ணியமான சொல் என்பதை ஆதன் தனது அனுபவத்தாலும் மற்றும் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்டு, பின் “பைபிளிலிருந்து தொடங்குங்கள்; அது தோல்வியுற்றால், வாளைப் பயன்படுத்துங்கள்.” - போர்த்துகீசிய மிஷனரி கொள்கை (காலனித்துவ பதிவுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது) - “Begin with the Bible; if that fails, apply the sword.” – Portuguese missionary policy (documented in colonial records) - என்ற, இலங்கை மகாவம்ச புத்த மதம் மாதிரி, மதம் தாண்டிய, மதத்துக்கு முற்றிலும் முரணான, தங்கள் கோட்பாட்டின் படி, கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் வரலாற்றாலும் உணர்ந்தான்.

இங்கு மதமாற்றம் தனிப்பட்ட சம்மதத்தின் அடிப்படையில் என்றும் நடக்கவில்லை. பதவி, பணம் , வசதிக்காகவும் மற்றும் அபராதம், உடல் தண்டனை, நிலம் பறிப்பு போன்ற பயத்தாலும் உருவாகியது என்பதே உண்மை. அதனால், தமிழ் பெயர், கிருஸ்துவ பெயராக மாற, சில பண்பாடுகள் மேலை நாட்டுடன் சேர, வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த பெரும்பாலான அந்த மக்களின் மொழியை மாற்றுவது இலகுவாகப் போனது என்பதே உண்மையாகும். இதை முதன்மையாக செய்தவரும் ஒரு கத்தோலிக்க மதகுருவே என்பது ஆச்சரியம் இல்லை, ஏனென்றால், மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

இது எந்த மதம் மேலும் உள்ள வெறுப்பால் அல்லது கோபத்தால், ஆதன், அப்படி நினைக்கவில்லை, ஆனால், வரலாற்றின் உண்மையை அவன் மனம் மீளாய்வு செய்தது. அவ்வளவுதான்!

அதே நேரம், சிங்கள சமூகத்துடன் முதன்மையாக 20 ஆம் நூற்றாண்டில் இணைந்த கத்தோலிக்க தமிழர்கள் குடும்பத்தின் தலைமுறையில் பிறந்த, சிலாபத்தை சேர்ந்த செவிலியர் சமந்தி [Samanthi], சிலாபம் அரசு மருத்துவமனையில், ஒரு வயதான பெண்மணியின் கையை பிடித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அமைதி, சாந்தம், மற்றும் மணம் மிக்க பூவைக் குறிக்கும் அவளின் பெயர், மிகவும் பொருத்தமாக இருந்தது.

“மகளே… நீங்களாவது தமிழில் பேசுங்க…” என்று அந்த மூதாட்டி கெஞ்சாமல் கெஞ்சிக் கொண்டு இருந்தாள். அந்த வார்த்தை சமந்தியின் மார்பில் குத்தியது.

அவள் சிங்களத்தில் படித்தவள், இங்கிலீஷில் பொதுவாக பேசக் கூடியவள். ஆனால் கனவில் பாட்டியின் தமிழ் தான் அடிக்கடி வரும். பாட்டி அவளுக்கு வைத்த பெயர் செந்தூரி. ஆனால் பதியப்பட்ட பெயர் சமந்தி.

உடப்புவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவள் மருத்துவமனைக்கு மீண்டும் அழைக்கப்பட்டாள் .

ஒரு மாணவனைக் காப்பாற்ற ஓடிய ஆசிரியர் ஆதன், தரையில் பலமாக விழுந்தான். மருத்துவமனை படுக்கையில் அவன் கண்களைத் திறந்தபோது, தமிழ் அரச மொழியாக இருந்த போதும், அவனிடம் முதலில் பேசப்பட்ட மொழி சிங்களம். அவன் முகத்தில் எள்ளலான சிரிப்பு: “எனக்கு வலியை விட … இந்த மொழித் திணிப்புத் தான் கொஞ்சம் அதிகமா குத்துதே…” என்றான்.

அந்தக் குரலைக் கேட்டவுடன் சமந்தி நின்ற இடத்திலேயே உறைந்து போனாள். ஏனெனில், அந்த உச்சரிப்பு அவள் பாட்டி பேசிய தமிழ். உண்மையில் அது வெறும் நினைவு திரும்புவது அல்ல. அவள் மறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவளுடைய சுயம் [self], இப்போது ஒரு காலத்தில் தன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட மொழியின் மூலம் திரும்பியது. அது வெறும் நினைவின் அதிர்ச்சி அல்ல; அது பறிக்கப்பட்ட சுயத்தின் திரும்புதல் - அழைப்பின்றி, மீண்டும் அவளைச் சந்தித்தது.

"சாட்சிகள் இல்லாமல் தமிழர்கள் எப்படி மாறினர்." என்பதை இது படம் பிடித்து காட்டியது, ஒரு சாட்சியாக. மொழி இழப்பு, கலாச்சார அழிப்பு மற்றும் முறையான அழுத்தம் ஆகியவை அடையாளத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், குரல் அல்லது மொழி போன்ற ஒரு சிறிய பகுதியை மீட்டெடுப்பது கூட ஒருவரை அவர்களின் உண்மையான சுயத்துடன் எவ்வாறு மீண்டும் இணைக்க முடியும் என்பதையும் தெளிவாகக் காட்டியது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பாகம்: 02 தொடரும்

துளி/DROP: 2043 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 1

https://www.facebook.com/groups/978753388866632/posts/33877615588553654/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.