Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேல்டெக் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா 07/02/2026 அன்று காலை 10.30 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவைக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் கர்னல் டாக்டர் வேல் ஸ்ரீ ஆர்.ரங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.வி.கே.சாந்தி அவர்கள் வரவேற்புரை நல்கிக் கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.

அவர் பேசும்பொழுது, “கல்லூரி என்பது உலகின் “கல்லூரி என்பது உலகின் முன்னேற்றத்தோடு தனிநபர் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் மாபெரும் இடமாக இருக்கிறது. அதனை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

கல்லூரித் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் அவர்கள் மற்றும் வேல்டெக் கல்விக் குழுமத்தின் துணை இயக்குநர் Ms.எஸ்கந்த கிஷோர் வேல் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்.

சென்னை டி சி எஸ் நிறுவனத்தின் வணிக அலகு துறையின் பொதுமேலாளர் மற்றும் தலைவர் திரு.தீபக்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, பட்டமளிப்பு தினச் சிறப்புரை ஆற்றி, பட்டதாரிகளுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கித் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும் பொழுது, “மாணவர்கள், ஸ்மார்ட் ஃபோனைப் போல காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.“ என்றார்.

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 389 பேர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

கணினியியல் துறை மாணவர்கள் 85 பேர்களுக்கும், கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவர்கள் 113 மாணவர்களுக்கும், வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் 43 பேர்களுக்கும், வணிகவியல் துறை மாணவர்கள் 132 பேர்களுக்கும் இளங்கலைப் பட்டங்கள் வழங்கப் பெற்றன.

முதுகலை வணிகவியல் துறை மாணவர்கள் 16 பேர்களுக்கு முதுகலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.

பேராசிரியர் டாக்டர் S.தீர்த்தமலை அவர்களும் பேராசிரியை டாக்டர் D.ஹேமலதா அவர்களும் பட்டமளிப்பு விழாவினை ஒருங்கிணைப்புச் செய்தனர்.

Edited by பாரதிசந்திரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.