Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

Feb 23, 2026 - 12:29 PM

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கரீதியான வாதங்கள் மூலம் அணுகுவதும் சமூகத்திற்கு முக்கியமானது என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு அழைப்பு விடுத்தமைக்காக இரு சங்கங்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் சங்கம் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், புத்திசாலித்தனமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களுக்கு முன்னிலையில் கடினமான கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்றும், தமது கருத்துக்களைப் பாதுகாப்பதோடு மாற்றுக் கருத்துக்களுடன் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழுமியங்களுக்கு மதிப்பளித்தே தாம் இந்த அழைப்பை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தத்திற்குரியது. இடையூறு விளைவிப்பதை விட கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை முன்வைப்பதும், அச்சுறுத்தல் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கம் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் சமூகத்திற்கு மிக முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.

பயனுள்ள நல்லிணக்கமும் முன்னேற்றமும் திறந்த உரையாடல்கள் மூலம் வெவ்வேறு பார்வைகள் சந்திக்கும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே, எனது கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உட்பட அனைத்து விமர்சகர்களையும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன். இத்தகைய தொடர்புகளையும் வாய்ப்புகளையும் நிராகரிப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. விவாதம் இன்றி பிளவுகள் மூலம் உறவுகளைக் கையாள்வது பலவீனமான செயலாகும்.

இரு சங்கங்களும் விடுத்த அழைப்பிற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எதிர்காலத்தில் உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன். நாமல் ராஜபக்‌ஷ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlytrmar0007356py8sjusxx

  • கருத்துக்கள உறவுகள்

640391681_2767673256908357_5997222714405

போர் குற்றவாளிகளுக்கும், கள்வர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை

Published By: Digital Desk 1

23 Feb, 2026 | 12:44 PM

image

அழுத்தங்கள் காரணமாக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரையாடல் அமர்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தில் கருத்துக்களை அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த இந்தத் தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டயஸ்போரா சவால்களுக்கு மத்தியிலும் நாமல் லண்டன் பயணம்: அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தினார் இந்திக அனுருத்த

23 Feb, 2026 | 04:39 PM

image

நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து விஜயத்தின் போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த உரைகள், அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டமையானது இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இன்றைய தினம் பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்ஷ சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர் என்றும், எதிர்ப்புகள் எழும் என்று தெரிந்தே அந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் அவர் அங்கு சென்றார் என்றும் குறிப்பிட்டார்.

இத்தகைய எதிர்ப்புக்கள் எமது தரப்புக்கு புதியவை அல்ல என்றும், இதனை விமர்சிக்கும் 'சுத்திகரிப்புப் படையினர்' முதலில் தங்களது அரசாங்கத்தின் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் சாடினார்.

தற்போதைய அரசாங்கம் குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அடிமட்டம் முதல் அமைச்சரவை வரை பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.

அண்மையில் மீரிகம பிரதேச சபை தவிசாளர், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் இன்று தொழில்துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

பழைய விநியோகஸ்தர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் நெருங்கிய சகாக்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால், தற்போது நிர்மாணிக்கப்படும் வீதிகள் தரமற்று இருப்பதாகவும் அவை குழிவிழுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த மோசடியைப் பாதுகாப்பதாகத் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரியை விலைக் குறைவு என்ற போர்வையில் இறக்கிக் கொண்டுவருவது மின் உற்பத்தி நிலையத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் உணரவில்லை என்றும், இந்தத் தவறை மறைக்க முயல்வோர் எதிர்காலத்தில் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசாங்கத்திற்கு நிதி வழங்கிய பெரும் வர்த்தகர்களின் பிடியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சிக்கியுள்ளதால், அரிசி மாஃபியா மற்றும் கொள்கலன் மோசடிகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ளதால், தங்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஊழல் தடுப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடி ஆகியன தற்போதைய அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/239392

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.