Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்

Published By: Vishnu

27 Feb, 2026 | 09:18 PM

image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_5473.jpeg

IMG_5475.jpeg

IMG_5474.jpeg

IMG_5472.jpeg

https://www.virakesari.lk/article/239755

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

Feb 28, 2026 - 08:01 AM

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28) நடைபெறுகிறது.

இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது.

புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர்.

இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்காக சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.

சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய தீவான கச்சத்தீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து வெகு தொலைவிலும் இந்தியாவுக்கு மிக அருகிலும் அமைந்துள்ள ஒரு தீவாகும்.

இதன் உரிமையை முன்னிறுத்தி கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் கூட ஏற்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகளுடன் கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியிலும் கூட, வருடாந்தம் இரண்டு நாட்கள் அத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களின் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmm5pffg20006356pewqn4cwu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Feb 27, 2026 - 10:19 PM

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில், புனித அந்தோனியாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கலந்துகொண்டு, திருவிழாக் கொடியினை ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு விசேட கூட்டுப் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடல் கடந்த பக்தர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திருவிழா, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.