Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்

Published By: VISHNU

02 MAR, 2026 | 08:50 AM

"லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரால் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா குறித்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/239935

  • கருத்துக்கள உறவுகள்

லெபனானின் 50 கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவு!

02 Mar, 2026 | 10:12 AM

image

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் கமேனியின் மறைவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

லெபனானின் தென்பகுதி மற்றும் பெய்ரூட் புறநகர் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்படவுள்ள இலக்குகளில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தொலைவிற்கு அப்பால் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் கமேனியின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது. இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் தற்போது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பு, "தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரியும் அதற்கான விலையைத் தீர்மானமாகச் செலுத்தவேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் இந்த யுத்தச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/239939

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.