Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்

05 Mar, 2026 | 12:36 PM

image

நேபாளத்தில் இன்று (5) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி முதலான கட்சிகள் களமிறங்கியுள்ளன. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும் 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் அரசியல் மாற்றம்: தேர்தலில் முன்னிலை பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி – பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு

07 Mar, 2026 | 03:41 PM

image

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதங்களில் நேபாளம் கடுமையான அரசியல் பதற்றத்தை எதிர்கொண்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் நிலைமை கட்டுக்குள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்த கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை தற்காலிகமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக இடைக்கால நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகராகவும் சமூக ஊடகங்களில் பிரபலமானவராகவும் அறியப்படும் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற இளைஞர் போராட்டங்களில் இந்தக் கட்சி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவதுடன், 110 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், தேர்தலில் வெற்றி பெற்று பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

நேபாளத்தில் அரசியல் மாற்றம்: தேர்தலில் முன்னிலை பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி – பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர ஷாவின் கட்சி வெற்றி 

Published By: Digital Desk 3

13 Mar, 2026 | 09:00 AM

image

நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

பாராளுமன்னறத்தின் கீழவையில் 182 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் 2 இடங்களே குறைவாக உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களில் நேபாளத்தில் ஒரு தனி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

தேர்தலின் முக்கிய முடிவுகள்

ராஷ்டிரிய சுதந்திர கட்சி : 182 இடங்கள்

நேபாளி காங்கிரஸ்: 38 இடங்கள்

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : 25 இடங்கள்

1 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக ரெப் பாடகரும்  காத்மண்டு மாநகர மேயருமான பாலேந்திர ஷா பதவியேற்கவுள்ளார்.

2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இளம் கட்சி, நேபாளத்தின் அரசியலமைப்பு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'விகிதாசார பிரதிநிதித்துவ' முறையையும் மீறி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது உலக அரசியலையே வியக்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது சொந்தக் கோட்டையான ஜாப்பா 5 தொகுதியில் பாலேந்திர ஷாவினால் படுதோல்வியைச் சந்தித்தார். அதேபோல், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாப்பாவும் தனது ஆசனத்தை வேட்பாளரிடம் இழந்துள்ளார்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வாரிசுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் போராட்டமே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 77 பேரின் உயிர்த்தியாகத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, நேபாளத்தின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.

அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாலேந்திர ஷா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/240849

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.