Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை

Mar 26, 2026 - 09:03 PM

ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இப்புதிய கொள்கையின்படி, 

எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவுகளில் பங்கேற்கும் தகுதியானது, உயிரியல் ரீதியான பெண்கள் (Biological females) என்ற அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும். 

இதனை உறுதிப்படுத்த, ஆண் உயிரியல் பாலினத்தைக் கண்டறியும் மரபணுச் சோதனை போன்ற வைத்திய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். 

திருநங்கை தடகள வீரர்களின் பங்கேற்பு குறித்து இதற்கு முன்னர் உலகளாவிய தரம் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அணுகுமுறையில் இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. 

அமெரிக்காவின் தற்போதைய நிறைவேற்று வழிகாட்டல்களுடன் தொடர்புடைய இக்கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், சர்வதேச அளவிலான மகளிர் போட்டிகளுக்கு ஒரு நிலையான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க சர்வதேச ஒலிம்பிக் குழு இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmn7msp3k0003356p6z0q1gyl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கைகளுக்கு LA28 ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை; பெண்கள் பாதுகாப்பு குறித்த கொள்கையை IOC அறிவித்தது

27 Mar, 2026 | 01:24 PM

image

(நெவில் அன்தனி)

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெணகள் (மகளிர்) பிரிவின் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கான வழிகாட்டி கரிசனைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய கொள்கைக்கு அமைய லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அதற்கு பின்னரான விளையாட்டு விழாக்களிலும் திருநங்கைகளுக்கு பங்குபற்ற தடை விதிக்கப்படவுள்ளது.

IOC_Hq.png

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் இந்தக் கொள்கைக்கு வியாழனன்று (26) ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அது நடைமுறைக்கு வருவதுடன்  முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்றி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்ற பின்னர், தனது முதலாவது மிக முக்கிய மற்றும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முடிவாக 'பெண்கள் பிரிவின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான இந்தக் கொள்கையை வெளியிட்டார்.

இதற்கு அமைய பாலின வளர்ச்சி குறைபாடுகள் (SRY) உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும்.

தனிப்பட்ட மற்றும் குழுநிலை போட்டி நிகழ்ச்சிகள் உட்பட ஒலிம்பிக் விளையாட்டு விழாக்கள் அல்லது வெறு எந்த சரவ்தேச ஒலிம்பிக் குழு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் பிரிவுகளில் பாலினத்தை உறுதிசெய்யும் மரபணு (SRY) பரிசோதனையின் மூலம் உயிரியல் ரீதியாக பெண்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பங்குபற்ற முடியும் என இந்தக் கொள்கை விளக்குகிறது.

சான்றுகளின் அடிப்படையிலும் நிபுணர்களின் ஆலோசனைகளின்   பேரிலும் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை லொஸ் ஏஞ்சலிஸ் (LA28) ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அமுலுக்கு வரும். இது மகளிர் பிரிவில் நியாயம், பாதுகாப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை நிலைநிறுத்துகிறது.

இது முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது என்பதுடன் எந்தவொரு அடிமட்ட அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுத் திட்டங்களுக்கு இது பொருந்தாது.

IOC_president.jpg

'இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் உயிரியல் ரீதியாக ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது,' என உலக விளையாட்டின் உயர் பதவியை வகிக்கும் முதலாவது ஆபிரிக்கரும் பெண் தலைவருமான கிறிஸ்டி கொவென்ட்றி, வியாழக்கிழமை ஒரு காணொளிச் செய்தியில் கூறினார்.

அந்த செய்தியில், 'இனிமேல் பெண்கள் பிரிவில் போட்டியிட விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களும், அவர்களின் சரியான உயிரியல் பாலினத்தைத் தீர்மானிப்பதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் பாலின நிர்ணயப் பகுதி மரபணுப் பரிசோதனைக்கு ( Sex Determining Region Y) உட்படுத்தப்படுவார்கள் என அவர் விளக்கினார்.

'ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் மிகச் சிறிய வித்தியாசங்கள் கூட வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வேறுபாடாக அமையலாம். எனவே, அது நியாயமானதாக இருக்காது என்பது முற்றிலும் தெளிவாகிறது. மேலும், சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பானதாக இருக்காது' என நிறைவேற்றுச் சபை கூட்டத்திற்குப் பின்னர் கோவென்ட்றி விளக்கினார்.

அதேவேளை, தனிநபர் அல்லது குழுநிலை விளையாட்டுக்கள் உட்பட ஒலிம்பிக்கிலோ அல்லது வேறு எந்த பெண் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறுவது, இனி உயிரியல் ரீதியாகப் பெண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது.

IOC_president_kirsty_coventry.png

'ஒரு முன்னாள் தடகள வீராங்கனையாக, நியாயமான முறையில் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து ஒலிம்பிக் வீரர்களின் உரிமைகளையும் நான் உணர்வுபூர்மாக நம்புகிறேன். நாங்கள் அறிவித்துள்ள இந்தக் கொள்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் மருத்துவ நிபுணர்களின் தலைமையிலும் வழிகாட்டல்களிலும் தயாரிக்கபட்டுள்ளது' என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றி மேலும் தெளிவுபடுத்தினார்.

'ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த செயல்முறை தொடர்பாக நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையுடன் தெளிவான கல்வி மற்றும் அறிவுரைகள் கிடைக்க வேண்டும்.'

கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களின் உரிமைகளை மீறுவதாகக் கருதியதால், கட்டாயப் பாலினப் பரிசோதனையை நீண்ட காலமாக எதிர்த்து வந்த சர்வதேச ஒலிம்பிக் குழு, இப்போது இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புதிய கொள்கையை பெண் தலைமையில் துணிந்து வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/242076

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.