Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்

சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.

large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170

Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmen.

Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake  பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர்மெய்நிகர் பாலியல் வன்முறைஎன்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில்  ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறதுவிசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen  இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார்.

Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது.

படம்- நன்றி,விக்கிபீடியா

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தப்பட்டது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.