Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்!

02 Apr, 2026 | 03:25 PM

image

( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் விளைவாக, வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காவிட்டால் அந்த நாட்டை “கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம்” என எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்காக ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், பொதுமக்கள் மீது ஈரானுக்கு எந்தவித எதிர்மறை அணுகுமுறையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஈரானை அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று உண்மைகளுடனோ தற்போதைய நிலவரங்களுடனோ பொருந்துவதில்லை. இது சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தவறான சித்தரிப்பு” என்று கூறியுள்ளார். மேலும், எதிரி இல்லாதபோது அதை உருவாக்கி அழுத்தம் செலுத்துவது, இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுத தொழில்துறையை தக்க வைத்துக்கொள்வது போன்ற நோக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளின் மக்களுடன் ஈரான் மக்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும், ஈரான் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் விரும்பும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது நாட்டின் மீது அமெரிக்கா சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் இராணுவத்தை திரட்டியுள்ளது என்றும், அந்தத் தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தாமல் இருக்காது. ஈரான் மேற்கொள்வது அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான பிரதிநிதியாக செயல்படுகிறது என்றும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து உலக கவனத்தைத் திருப்புவதற்காக ஈரான் அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், அசோசியேட் பிரஸ், வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புதிய ஆட்சி தலைவர் சமாதான ஒப்பந்தம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “அடிப்படையற்றது” என மறுத்துள்ளது.

மேலும், இந்த போர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உண்மையில் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் பெசெஷ்கியான் எழுப்பியுள்ளார். “தவறான தகவல் இயந்திரங்களை தாண்டி உண்மையைப் பாருங்கள்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மோதலை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போர், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்து வருகிறது.

https://www.virakesari.lk/article/242567

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.