Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்தின உரை உணர்த்துவதென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.இதயச்சந்திரன் எழுதிய '' மாவீரர்தின உரை உணர்த்துவதென்ன? ''

இலக்கு நோக்கிய பயணத்தை வழி நடத்தும் மூல, தந்திரோபாய உத்திகள், அரசியல் வடிவம் பெறும் உரையே மாவீரர் தினச் செய்தியாகும்.

எல்லைப் படை, துணைப்படை, விசேட அதிரடிப்படை உள்ளடங்கலான பெரும் படையணியுடன் நவீன போர்க்கலங்கள், அதியுயர் தொழில்நுட்ப வளங்களுடன் கூடிய இராணுவ வல்லாண்மையுடன், நவீன மயமான போரியல் உத்தியுடன் ஒட்டுமொத்த தாயக, புலம்பெயர் உறவுகளின் ஒன்றிணைந்த பலத்துடன் எதிரியை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என தமிழீழ விடுதலைப் புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறுவதை உன்னிப்பாக நோக்க வேண்டும்.

தேசிய இனக் கட்டமைப்பின் மொத்த உருவமாக அவர் தன்னை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துகிறார்.

உரையின் மொழி ஆளுகை, மிகவும் அவதானமாகக் கையாளப்பட்டு, தேசத்தின் தலைமைக் குரலாக, முதிர்ந்த இராஜதந்திர சொல்லாடல்கள், பொருத்தமாக வரையப்பட்டு முழுமை பெற்றுள்ளது.

ஆயினும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முதிர் நிலை அரசியல் வடிவத்தினைப் புரியக் கூடிய மனோநிலையில், புலம்பெயர் மக்கள் இல்லையென்கிற கருத்து நிலை பரவலாகக் காணப்படுகிறது.

விடியலை தேடும் அவசரமும், சமூக நிர்ப்பந்தங்களுமே அதனடிப்படைக் காரணிகளாகக் கொள்ளப்படலாம்.

எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள், செயலுருப் பெறும் பொழுதே, தமிழீழ விடுதலை எதிர்கொள்ளும் சகல தடைகளையும் உடைத்தெறிவோமென்கிற தேசியத் தலைவரின் உரையின் ஆழத்தை மக்கள் உணர்வார்கள்.

இந்த வருட மாவீரர் தின உரையில் குறிப்பிடப்பட்ட இரண்டு விடயங்களை மிக அவதானமாக நோக்க வேண்டும்.

முதலாவதாக, ""தமிழீழ விடுதலைக்கு அனைவரும் கிளர்ந்தெழுமாறு வேண்டுகிறேன்'' என்கிற அறை கூவலும், களயதார்த் தத்தை அடியொற்றி, ""எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, போர்த் திட்டங்களை வகுக்கிறோம்'' என்கிற இரண்டாவது விடயமுமே உரையின் சாரமாக அமைகிறது.அதிலும், ""எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து, மாவீரர்களின் நெஞ்சக் கனவினை நிறைவேற்ற, இறுதிவரை போராடுவோமென்கிற இறுதிச் செய்தியே முதன்மை பெறுகிறது.

இத்தகைய முடிவிற்கு வந்தடைந்தமைக்கான காரணிகளையும், பின் புலங்களையும் எடுத்து விளக்குகையில், சிங்கள தேசம், சர்வதேசம் போன்றவற்றின் உள்ளக் கிடக்கினை வெளிச்சமாக்கி, அவர்கள் மீதிருந்த சிறிதளவு நம்பிக்கையையும் தமிழ் மக்கள் இழந்து விட்டார்களென பிரபாகரன் தனது பார்வையினை முன்வைக்கிறார்.

ஒட்டு மொத்த மக்களின் ஒருமித்த கருத்தினை, பிறழ்வு அற்று, நேரடியாகச் சொல்வதே தலைமையின் தார்மீகக் கடமையாகும்.

அதிலிருந்து எவ்வகையிலும் இவ்வுரை விலகிச் செல்லவில்லை.

அத்தோடு இப்பூமிப் பந்தில் பழைமையான, தொன்மைவாய்ந்த பூர்வீக தேசிய இனமானது, இறையாண்மை பொருந்திய ஆட்சியுரிமையினை மீளப் பெறுவதற்கு சகல உரித்துக்களையும் உடையதென்பதை வரலாற்றுத் தளத்திலிருந்து விளக்குகிறார்.

முடிவில்லாமல் சுழலும் மனிதகுல வரலாற்றுக் சக்கரத்தில், ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளில், ஸ்ரீலங்கா தேசமே ஏனையவற்றை விட மிகவும் பின் தங்கிய நிலை நோக்கிய அழிவுப் பாதையில் செல்கிறது.

அதாவது ஆசியா வளர்ந்து விரிந்தாலும், சர்வதேசத்தின் பார்வை இக் கண்டத்தை நோக்கித் திரும்பினாலும் பேரினவாதச் சாக்கடையில் உழலும் சிங்கள தேசம் சிதைவுப் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பற்றி மேலும் குறிப்பிடுகையில், உலகமயமாதலின் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளாமல், வன்முறைப் பாதையில் பயணித்து, சர்வதேசத்தை தனது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சீரழிந்த போது, எவருமே வாய் திறக்கவில்லை.

சமாதானம் பேசிய சு.ப. தமிழ்ச்செல்வனை சாகடித்த போது சர்வதேசம் மௌனித்திருந்தது. ஆகவே சிங்களத்திற்கான ஆயுத உதவிகளை நிறுத்தி தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும்படி சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வுரையில் "சமாதானம்' குறித்து பூடகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது விடுதலைப் புலிகளின் இராணுவ வல்லாண்மை மேலோங்கிய நிலையில் சமாதானம் பேச வந்தது ஸ்ரீலங்கா அரசு.

அதேபோன்றதொரு படைவலு நிலை மீள உருவாகும் பொழுதே, சமாதானத்திற்கான சாத்தியப்பாடுகள் ஏற்படலாமென்பதை கிழக்குப் பின்நகர்வு, ஜெயசிக்குறு சமர் போன்றவற்றை இணைத்து சில நிலைப்பாடுகள் இவ்வுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயசிக்குறு சமரில் ஏற்பட்ட பின் விளைவுகளை, கிழக்கிலும் அரசு முகங்கொடுக்குமென்பதே புரிதலிற்குரிய விடயமாகும்.

படைவலுச் சமநிலை என்பதற்கும் அப்பால், இராணுவ மேலாண்மை உருக்கொள்ளும் வேளையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலமைந்த சமாதானக் கருத்து நிலையே சர்வதேசத் தலையீட்டின் அடுத்த கட்ட தளமாக அமையும்.

இந்த இராணுவ மேலாண்மை நிறுவுதலை கருத்தில் கொண்டே, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, போர்த் திட்டங்களை வகுப்போம்' என்கிற சொல்லாடல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

சமாதõன புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி, நில ஆக்கிரமிப்பினையும், அழிவுகளையும் மேற்கொள்ளும் சிங்களப் பேரினவாதத்திற்கு துணை புரியும் சர்வதேசத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தே கணிப்பீடு இல்லாமல் போர்த் திட்டங்களை வகுக்க முடியாதென்பதும் புலப்படுகிறது.

இம்மாவீரர் தின உரையின் நுண்ணரசியலை தென்னிலங்கை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

சமாதானம் பற்றி இவ்வுரையில் குறிப்பிடப்படவில்லையென்கிற ஆதங்கமே அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை புரிந்து கொண்ட சிங்கள அரசியல்வாதிகள் எவருமில்லையென ஆதங்கப்படுகிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர்.

போர் வெறி கொண்டலையும் சிங்களத்துடன் சமாதானம் பற்றி பேசுவதற்கு எவ்வகையான வலுவான காரணிகளும் கிடையாதென்பதே இதன் பொருளாகும்.

35 ஆண்டுகால வீரவரலாற்றுப் பட்டறிவினூடாக, நவீன வளர்ச்சியுடனும் நவீன போரியல் உத்தியுடனும் முப்படைகளும் எழுந்துள்ளதென்பதே சிங்கள தேசத்திற்கான செய்தி.

சகல வளங்கள் கூடிய இராணுவ வல்லாண்மைத் திரட்சியுடன் தமிழர் தேசம் நிமிர்ந்து நின்றவாறு, பேரினவாதத்தின் இன அழிப்புப் போரினை முகங் கொள்ளத் தயாராகியுள்ளது என்பதே இதற்கான விளக்கமாகும்.

உலகத்தை தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, அமைதி முயற்சிக்கு ஆப்பு வைத்து, அரசின் பக்கமாக சர்வதேசத்தைத் திருப்பிய சிங்கள தேசத்திற்கு, போர் முகத்தையே இவ்வுரை காட்டியுள்ளது.

தமிழீழ தலைநகரமாகும் திருமலை சிதைக்கப்பட்டது. தொன்மை நகரமாம் மட்டக்களப்பு அகதி முகாமாகி, கலாசாரத் தலைநகராம் யாழ்ப்பாணம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்டு, பேரவலத்தை தமிழ் மக்கள் மீது திணித்திருக்கும் சிங்கள தேசம் மீது கடுமையான சொற்பதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிரதேசம் தமது கட்டுப்பாட்டில் உள்ளதெனக் கருதுகிறது அரசு. அதாவது கிழக்கு மாகாணம் குறித்து அழுத்தமான பார்வை இவ்வுரையில் விழுந்துள்ளது.

கிழக்கின் தந்திரோபாயப் பின்நகர்வை விடுதலைப் புலிகளின் பலவீனமாகக் கருதும் சர்வதேசத்தை நோக்கி, அதற்கான பதிலடி கொடுக்கப்படுமென்பதனூடாக செய்தியொன்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேசத்தின் பிராந்திய கேந்திர, பொருளாதார நலனை மறுதலிக்காது, தமது மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும்படி இவ்வுரையில் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நடுநிலையற்று, அரசு சார்பாக நிலை எடுத்ததனை, பேச்சுவார்த்தைக்கான ஆப்பினை சர்வதேசம் செருகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் தவறுகளையும் அதனால் உருவான மக்களின் நம்பிக்கையீனங்களையும் தெளிவாக முன்வைத்து, புலம்பெயர் தாயக உறவினை சிதைக்க, சில சர்வதேச நாடுகள் துணை புரிவதையும் இவ்வுரை அம்பலமாக்கியுள்ளது. இங்கு இந்தியாவிற்கு சொல்லப்பட்ட செய்தி மிகவும் சுருக்கமாக அமைந்துள்ளது.

பண்டா செல்வா ஒப்பந்தத்தில் உள்ள சிறிய எலும்புத் துண்டுகளையும், உள்ளடக்காத அரை குறைத் தீர்வினை இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.

இந்தியா இழைத்த தவறினை இன்று சர்வதேசமும் கடைப்பிடிக்கிறதென்ற ஒப்பீட்டாய்வும் இவ்வுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த மாவீரர் தின உரையின் சாராம்சமானது இந்தியா தவிர்ந்த ஏனைய சர்வதேச நாடுகளை நோக்கிக் கூறப்பட்ட இறுதிச் செய்தியாகவே கருத வேண்டும்.

இனப்பிரச்சினை குறித்த தெளிவான நிலைப்பாட்டினை இந்தியா மேற்கொள்ளும்வரை காத்திருப்பதோ அல்லது விடுமுறையில் சென்றிருக்கும் சிங்கள சர்வகட்சிக் கூட்டத்தின் முடிவினை எதிர்பார்த்து விழித்திருப்பதோ, தமிழ் மக்களின் இருப்பினை அழித்திடவே உதவும்.

இரட்டை வேடமிடாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே தீர்விற்கான ஒரே வழியென சர்வதேசத்திற்கு சொல்லப்பட்ட இறுதிச் செய்தியே இவ்வுரையாகும்.

இன அழிவினைத் தடுத்து நிறுத்தி, மாவீரர்களின் நெஞ்சக் கனவினை நிதர்சனமாக்க, சகல தமிழ் மக்களையும் அணிதிரளச் சொல்வதே இவ்வருட மாவீரர் தின உரை.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.