Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் மாவீரர் நாள் - சில நினைவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நா.யோகேந்திரநாதன் எழுதிய "முதல் மாவீரர் நாள் - சில நினைவுகள்"

1989 நவம்பர் -27

அது வன்னி மண் தன்னை ஒரு மகத்தான புனிதத்தால் அலங்கரித்துக் கொண்ட நாள். கோணாவில் பாடசாலை மைதானமெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் காற்றில் பறக்கின்றன. அலங்கார மேடை. அதன் பின் திரையில் பொறிக்கப்பட்ட புலிச்சின்னம். அதன் கீழே மாவீரர் தினம் 1989 எனப் பொறிக்கப்பட்ட பதாதை. ஒரு புனிதம் அந்த மைதானத்தில் மட்டுமல்ல அதன் சுற்றாடலிலும் கோலோச்சி வலம் வருகிறது.

ஆம். அங்கே முதல் மாவீரர் தினத்திற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலுள்ள அத்தனை வாடகைக் கார்களும், வேன்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. சகல மின்பிறப்பாக்கிகளும் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. எல்லா ஒலிபரப்பிகளும் வந்து குவிந்து விட்டன. அத்தனை வாகனங்களுக்கும், அத்தனை ஒலி பெருக்கி

களுக்கும், அத்தனை மின்பிறப்பாக்கிகளுக்கம் அங்கு என்ன தான் தேவை வந்து விட்டது?. உண்மையாகவே எல்லாமே பாவிக்க வேண்டிய அளவுக்கு தேவை எதுவுமே இல்லை.

சிலவே போதுமானவை. அங்கே ஒரு தந்திரோபாயம். ஒன்றிரண்டு வாகனங்கள் மின்பிறப்பாக்கிகள், ஒலிபெருக்கிகள் மட்டும் அந்த மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்டால் அதன் உரிமையாளர்கள் அடுத்த நாளே புலியென்று நையப்புடைக்கப்படலாம். கைது செய்யப்படலாம். சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம், கழுத்து வெட்டப்பட்டு வீதியிலும் வீசப்படலாம்!

அனைவருமே மாவீரர் தின நிகழ்வுக்கு தங்கள் வாகனங்களையும் சாதனங்களையும் கொண்டு வந்து விட்டால் எவரைப் பலியாக்குவது எவரைப்பிடிப்பது? எவரை அடிப்பது? எவரைக் கழுத்தறுப்பது.?

ஏறக்குறைய இரண்டு மணிக்கே வீதிகளில் நெடுந்தூரத்திற்கு வாகனங்கள் அணி வந்து நிற்கின்றன. ஒலி பெருக்கிகள் கார்களில் கட்டப்பட்டு விட்டன. மின் பிறப்பாக்கிகள் மேடையின் பின் அடுக்கப்பட்டு விட்டன.

அன்று காலையிலே இப்படி ஒரு விழா நடக்கவிருப்பதாக மக்களுக்கு வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு மூன்று மணிக்கே கால் நடையாகவும் சைக்கிள்களிலும் மக்கள் பெரும் திரளாக கூட ஆரம்பித்துவிட்டனர்.

நாலு மைல் தொலைவில் உருத்திரபுரத்தில் இந்தியப்படை முகாம். எதிர்ப்புறத்தில் ஆறுமைல் தொலைவில் அக்கராயனில் இந்தியப்படை முகாம். இன்னொரு புறத்தில் கிளிநொச்சி நகரில் ஆறு மைல் தொலைவில் இந்தியப்படை முகாம். ஈ.என்.டிஎல்.எவ் தேசதத்துரோகிகளின் முகாமும். மூன்று பக்கங்களிலும் ஆபத்து நாக்கை நீட்டிக்கொண்டு நிற்க நடுவே மாவீரர் நாள் விழா மெல்ல மெல்லப் பிரமாண்டமடைகிறது. இந்தியப்படையோ, ஈ.என்.டி.எல். எவ் குழுவோ வந்தால், அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடிக்கத் தயாராக விடுதலைப் புலிகளின் படையணி மறைவிடங்களில் காத்திருக்கிறது என்பதை மக்கள் எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் மாவீரர்களின் மகத்துவம் அவர்களை துணிச்சலுடன் அணிதிரள வைக்கிறது.

மலையாக மைதானமெங்கும் மின்சார ஒளி வெள்ளம் பாய்ந்தது. விழா மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் சிலர் காடுகளுக்குள் போய் விட்டனர். இன்னும் ஒரு பகுதியினர் கொழும்புக்கு தப்பியோடி விட்டனர். இப்படியான நெருக்கடியான நிலையிலும் வன்னி மண்ணிலேயே தலைமறைவாக இருந்து கொண்டு இயக்கப் பணிகளுக்குத் தோள்கொடுத்து வந்த ஆதரவாளர்களின் ஒத்துழைப்பில் இப்பிரமாண்டமான விழா அரங்கேறுகிறது.

மைதானம் நிறைந்த மக்களின் வெள்ளம். உணர்வு பூர்வமான ஒரு சூழல் எங்கும் பரவி ஒரு உன்னதத்தைச் சொரிய வைக்கிறது. அங்கே மாவீரர் துயிலும் இல்லம் இல்லை. ஆனால், மாவீரர்களின் தியாகத்தால் விம்மிப்புடைத்த இதயங்கள் இருந்தன. அங்கே தாயகத்திற்காக உயிர் தந்த தியாகிகளின் கல்லறைகள் இல்லை. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் காலம் காலமாக நெஞ்சில் நிறுத்தும் நினைவுகள் இருந்தன. நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. மாவீரர் நினைவான பாடசாலை மாணவ மாணவிகளின் ஆடல்கள் பாடல்கள் அரங்கேறுகின்றன.

அடுத்து ‘வானம் பூமியானது. பூமி வானமானது...’ என்ற ஆசிரியர் கணேசனின் பாடல் பாடகர் சாந்தனின் குரலில் செவிகளை நிறைக்கிறது. அடுத்து இந்தியப்படையின் கொடுமைகளை, தேசத்துரோகிகளின் நயவஞ்சகத்தை விளக்கும் சில உரையாடல்கள், தாளலயம் வில்லுப்பாட்டு என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இறுதி நிகழ்ச்சியாக நா.யோகேந்திரநாதனின் நாடகம் மேடையேற்றப்படுகிறது. இதில் சிங்கள அரசு எவ்வாறு இந்தியாவைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்பதையும், இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டு விரட்டப்படும் என்பதையும் தேசத்துரோகிகளும் துரத்தப்படுவார்கள் என்பதையும் வெளிப்படுத்திய ஒரு நவீன பாணியில் அமைந்த படைப்பாக விளங்கியது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து நடத்தப்பட்ட இந்த முதல் நினைவு விழா, பிரமாண்டமான முறையில் அமைந்திருந்ததோடு மக்களுக்கு உணர்வூட்டி எழுச்சிபெற வைத்த ஒரு அரங்காக அமைந்தது. மறுநாள் கிளிநொச்சி நகரில் சிலரை பிடித்து வைத்து “நீ நேற்று கோணாவில் போனனீ தானே?” என்று கேட்டு கோழைத்தனமாக அடித்து துன்புறுத்தினர். ஒரு சில வாரங்களிலே அவர்கள் இந்தியப்படையினரின் பின்னே துண்டைக்கானோம் துணியைக்காணோம் என்று ஓடியதுதான் வரலாறு. மூன்று புறமும் இந்தியப் படையும் தேசத்துரோகிகளும் சூழ்ந்து நிற்க, எந்தக் கொடுமைகளையும் அவர்கள் எந்த நேரத்திலும் செய்யலாம் என்ற நிலை நிலவ இப்படிப் பெருந்தொகையான மக்கள் எப்படி இந்த நிகழ்வில் அணிதிரள முடிந்தது? இவ்வளவு பெரும் துணிச்சல் எப்படி வந்தது? இங்கு தான் மக்கள் சக்தி என்ற அற்புதம் முளைவிட்டு கிளைபரப்பி பெரும் விருட்சமாகிறது.

மக்கள் உணர்வு கொண்டு எழுச்சி பெறும்போது அதை எந்தச் சக்தியாலும் அச்சுறுத்த முடியாது, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது, எந்த சக்தியாலும் அழித்துவிடமுடியாது. இது காலாதி காலமாக உலகம் கண்ட யதார்த்தம். இந்தியப் படையின் அச்சுறுத்தல்களோ மிரட்டல்களோ தியாகி திலீபனின் உண்ணா விரதத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வதைத் தடுக்க முடியவில்லை. வெஞ்சினம் கொண்டு விடுதலைக்காக உயிரையும் கொடுப்போம் என்று சபதமிட்டதை தடுத்து விட முடியவில்லை.

இவ்வாறே கோணாவில் முதல் மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உணர்வெழுச்சியில் சங்கமமானதை எந்தக் கொடியவர்களாலும் தடுக்க முடியவில்லை.

இது மட்டுமல்ல, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றபோது சிறீலங்கா வான்படையின் கிபிர் மிக் விமானங்கள் தொடர்ந்து வட்டமிட்டன. தாழப்பறந்து பயங்கர ஒலி எழுப்பி மிரட்டின. ஆனால் ஒரு குழந்தை கூட அந்த இடத்தை விட்டு அகலவில்லை எந்த ஒருவரும் அஞ்சி ஓடவில்லை. ஆம், வீரச்சாவுகள் எங்கள் மக்களை துயரத்தில் தோய வைக்கின்றன. ஆனால், துவண்டு போக வைக்கவில்லை. துணிச்சல் ஊட்டுகின்றன இதயங்களுக்கு உரமூட்டி எழுச்சி பெற வைக்கின்றன. அவை அச்சத்தைத் தூக்கியெறிந்து ஆக்கிரோசத்தை உருவாக்கின்றன. மக்கள் இதய பூர்வமாக எழுச்சி பெறும்போது அவர்கள் எந்தப் பயங்கரத்துக்கும் துணிச்சலாக முகம் கொடுப்பார்கள் என்பதற்கு வன்னியில் இடம் பெற்ற முதல் மாவீரர் தினம் ஒரு நல்ல உதாரணமாகும்.

நா.யோகேந்திரநாதன்

- பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.